நகைச்சுவை

निष्प्रेषणं
ஆம்ராணி க்வா க³தாநி? [आम्राणि क्वा गतानि?]
மாம்பழங்கள் எங்கே போய்விட்டன?

அமேரிகாபு⁴வம் [अमेरिकाभुवं] |
அமெரிக்காவுக்கு

காஜுக³ரா:? [काजुगरा:?] முந்திரி?
க்வாந்யதா? [क्वान्यता?] வேறெங்கே… (அதுவும் அங்கேதான்)

து³ர்த⁴ஷம்  கத³லீப²லம்! [दुर्धषं  कदलीफलं!]
வாழைப்பழங்களையும் காணமுடியவில்லை…

தத³கி²லம் ரஷ்யா நிஷ்ப்ரேஷிதம் [तदखिलं रष्या निष्प्रेषितं |]
அது அத்தனையும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டன.

தந்நோ’பி ப்ரஹிணோது ஸா²ஸநபத³ம் யத்ராஸ்தி ஸர்வம் க³தம் |[तन्नोऽपि प्रहिणोतु शासनपदं यत्रास्ति सर्वम् गतम् |]
இதெல்லாம் எங்கே போயிற்றோ அங்கேயே தயவு செய்து அரசாங்கம் நம்மையும் அனுப்பி வைக்குமா?

***********************************

चितां प्रज्वलितां दृष्ट्वा वैद्यो विस्मयमागतः ।
नाहं गतः न मे भ्राता कस्यैदं हस्तलाघवं ॥

சிதாம் ப்ரஜ்வலிதாம் த்³ருஷ்ட்வா வைத்³யோ விஸ்மயமாக³த​: |
நாஹம் க³த​: ந மே ப்⁴ராதா கஸ்யைத³ம் ஹஸ்தலாக⁴வம் ||

சிதை எரிவதை பார்த்த வைத்தியர் சொல்கிறார், இதற்கு நான் காரணம் அல்ல, என் சகோதரனும் காரணம் அல்ல,  வேறு யாருடைய கை வேலையாக இருக்கும்?

***********************************

कमले ब्रह्मा शेते हरः शेते हिमालये ।
क्षीराब्धौ च हरिः शेते मन्ये मत्कुणशन्कय ॥

கமலே ப்³ரஹ்மா ஸே²தே ஹர​: ஸே²தே ஹிமாலயே |
க்ஷீராப்³தௌ⁴ ச ஹரி​: ஸே²தே மந்யே மத்குணஸ²ந்கய ||

பிரம்மா தாமரையில் தூங்குகிறார், சிவன் இமய மலையில் தூங்குகிறார், விஷ்ணு பாற்கடலில் தூங்குகிறார், இதெல்லாம் படுக்கைகளில் இருக்கும் (மூட்டை) பூச்சிகளுக்கு பயந்து தானோ.

***********************************

भो दारिद्र्यं नमस्तुभ्यं सिद्धोऽहं तत्प्रसादातः ।
पश्याम्यहं जगत् सर्वं न मां पश्यति कश्चन ॥

போ⁴ தா³ரித்³ர்யம் நமஸ்துப்⁴யம் ஸித்³தோ⁴’ஹம் தத்ப்ரஸாதா³த​: |
பஸ்²யாம்யஹம் ஜக³த் ஸர்வம் ந மாம் பஸ்²யதி கஸ்²சந ||

ஒ ஏழ்மையே.. உனக்கு நமஸ்காரம். உன்னால் எனக்கு பெரிய சித்தி (சக்தி) கிட்டி இருக்கிறது.  என்னால் இப்போது உலகத்தை நன்றாக பார்க்க முடிகிறது. ஆனால் ஒருவர் கண்ணுக்கும் நான் தெரிவதில்லை.

***********************************

उत्तमा: आत्मना ख्याता: पितु: ख्याता च मध्यमा: |
अधमा: मातुलात् ख्याता: श्वसुरात् च अधमाधमा:  ||

உத்தமா: ஆத்மநா க்²யாதா: பிது: க்²யாதா ச மத்⁴யமா: |
அத⁴மா: மாதுலாத் க்²யாதா: ஸ்²வஸுராத் ச அத⁴மாத⁴மா:  ||

தன் முயற்சியாலே புகழ் அடைவது உத்தமம்.  தன்னுடைய தகப்பனாரால் புகழ் அடைவது மத்திமம். உறவினர் (தாய் மாமன்) தயவில் கிடைக்கும் புகழ் அதமம். இதையெல்லாம் விட அதமத்திலும் அதம பட்சமானது தனது மனைவியின் தந்தை மாமனாரால் புகழ் அடைவது.

15 Comments நகைச்சுவை

  1. ஜடாயு

    அருமையான சுலோகங்கள் ஸ்ரீகாந்த்.. எடுத்து வழங்குவதற்கு நன்றி.

    // ஒ ஏழ்மையே.. உனக்கு நமஸ்காரம். //

    இந்த சுலோகத்தில் அருமையான அங்கதம்/அவலம் இருக்கிறது. இது சாதாரண நகைச்சுவை மட்டுமல்ல..

  2. Shankar

    நகைச்சுவை என்று சொல்வதோடு நிறுத்தாமல் ஆழ்ந்த கருத்தையும் நோக்கினால் எவ்வளவு பெருமை பட்டாலும் தகும்

  3. Rajaganapathy Sarma

    Namaskarams, I saw your site and it is impressed a very lot. Being a layman in Sanskrit, it certainly helps to know a lot of words in that holy language. May I request you people to send mail regularly by introducing some words in sanskrit. Rajaganapathy Sarma

  4. Pingback: Sanskrit Documents Learning Tools Learning Sanskrit | Life is Sublime

  5. ramakrishnan

    dear sir , please bring more lessons in tamil. It is very easy to understand the meaning of sanskrit words through tamil.
    regards

    hrk

  6. KSS Rajan

    சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் அருமையான ந்கைச்சுவைதிரட்டு

  7. vasanthasyamalam

    மிகவும் அருமையாக இருக்கிறது. சமஸ்க்ரிதத்தில் புதிர்கள் போடமுடியுமா? தவிர நான் அஷ்டாத்யாயி படிக்கிறேன் கொஞ்சம் கஷ்டமாக இருகிறது. அதன் விளக்கம் தமிழில் தர முடியுமா? இப்பொழுது ஒரு சந்தேகம் கேட்கிறேன். சார்வதாதுக ப்ரத்யய் ஆர்த்த தாதுக ப்ரத்யய் இதனை உதரணத்துடன் விளக்க முடியுமா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)