லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)

மிகவும் எளிமையாக சம்ஸ்க்ருத இலக்கணம் கற்க, அறிஞர்கள் அஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களுள் முக்கியமானது இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல். பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. லகு சித்தாந்த கௌமுதியை எளிய தமிழில் உதாரணங்களுடன் ஆடியோ வீடியோ பதிவுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிஜி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)

தமிழ்நாட்டில் நடந்த சுரபாரதி அமைப்பின் விழாவில் ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களின் உரை.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,
மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.
இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு
செய்திருக்கிறார்.

மேலும் படிக்க