கொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்!

தமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை… மேலும் படிக்க

மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில்)

சுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்! என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன:! ஸமாஸ்வசிது!” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

பைபிள் போன்ற சமய நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் எந்த சமயமும் சாராத பொது மறையாக திகழும் திருக்குறள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது அதன் சிறப்புகளில் ஒன்று. தமிழர்கள் பெருமைப் படக் கூடிய விஷயமும் கூட. முதன்முதலில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு மேலை நாட்டு அறிஞர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மேலை நாட்டு மொழிகளிலும் பரவியது. இதற்கு முன்பே பல்வேறு இந்திய மொழிகளில்… மேலும் படிக்க