ஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில் இருந்து துவங்கும். ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத்திலும் அந்த வருடத்திற்கான பெயர் முக்கியமாக இருப்பதைக் காணலாம். இந்த வருடம் துர்முக வருடம். சென்ற ஆண்டு மன்மத ஆண்டு. இந்த ஆண்டுக் கணக்குகள் சூரியனைச் சுற்றி வியாழன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு வியாழ வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த… மேலும் படிக்க
Post Category → குறிப்புகள்
வரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்
கவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.
மேலும் படிக்கப்ரத்யாஹாரம் என்றால் என்ன?
சம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.
மேலும் படிக்கசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்
கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீட்ச ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் சுபரீட்சிதம் பர்ஷா பவதி சந்தாபம் பிராம்மணி நகுலம் யதா’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.
மேலும் படிக்கஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)
முருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.
எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை). எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கந்தன்கருணை திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீ அப்பா..’ என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.
மேலும் படிக்கபௌத்த கலப்பு சமஸ்கிருதம்
மொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு உரிய முறையில் பௌத்த சமஸ்கிருதம் ஆரம்ப காலத்தில் விளங்கியது. இதேபோல இதிஹாசங்களில் வரும் சமஸ்கிருத பயன்பாட்டையும் “இதிஹாஸ சமஸ்கிருதம்” (Epic Sanskrit) என்று அழைக்கின்றனர். சமஸ்கிருதம் என்பது மிகவும் கடுமையான கட்டுக்கோப்பான மொழி என்ற பொதுவான எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில், மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த இது போன்ற மொழிப்பயன்பாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது பண்டிதர்களுக்கு கட்டுப்பட்ட மொழி மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும் நெகிழ்ந்து செல்லக்கூடியமொழி என்பதையே இது மீண்டும் வலியுறுத்துகிறது.
— திரு.வினோத் ராஜன்.
சாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…
கறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன. எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) !
மேலும் படிக்க