ப்ரஹேலிகா

ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle என்று பொருள். சம்ஸ்க்ருதத்தில் இது போன்ற சிறிய விடுகதை சுலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமத்காரமான இந்த சுலோகங்களில் பல வகை உண்டு. சாடு (चाटु) சுலோகங்கள், டுப் (टुप्) கவிதை, சமஸ்யா பூர்த்தி (समस्यापूर्ति) என்று வேறு வகைகளும் உண்டு. சில சுவாரசியமான பிரபலமான விடுகதைகள் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மேலும் படிக்க

ஆரம்பமே அமர்க்களமாக…

குழந்தை கந்தனுக்கு ஆறு முகங்கள். ஆனால் அம்பிகையிடம் ஒரு முகத்தால்  பாலருந்தும் போது மீதம் உள்ள ஐந்து முகங்கள் அனாதரவாக (பால் அருந்த முடியாமல்) இருக்க, கணேசர் தன் தும்பிக்கையால் ஐந்து முகங்களுக்கும் பால் உறிஞ்சி ஊட்டுகிறாராம். அதே சமயம் கணேசரின் கழுத்தில் மொய்க்கும் ஈக்களை (யானைக்கு மத ஜலம் வடிவதால்  கழுத்தில் ஈக்கள் மொய்க்கும்) தனது பனிரெண்டு கரங்களாலும் விரட்டுகிறாராம்…

மேலும் படிக்க

நகைச்சுவை – 2

श्वसुरपक्षत: केचन जना: रमणस्य गृहम् आगता: |
पत्नि – (उच्चै:) गच्छतु मम गृहसदस्यां कृते बहिस्तात् किमपि आनयतु |
रमण: बहि: गत्वा ‘टेक्सि’ आनीतवान् |

ஸ்²வஸுரபக்ஷத: கேசந ஜநா: ரமணஸ்ய க்³ருஹம் ஆக³தா: |
மனைவியின் உறவினர்கள் சிலர் ரமணனின் வீட்டுக்கு வந்தனர்.
பத்நி – (உச்சை:) க³ச்ச²து மம க்³ருஹஸத³ஸ்யாம் க்ருதே ப³ஹிஸ்தாத் கிமபி ஆநயது |
மனைவி (உச்ச குரலில்) போங்கள், என் வீட்டு மனிதர்களுக்காக வீட்டுக்கு வெளியே போய் ஏதாவது கொண்டு வாருங்கள்!

ரமண: ப³ஹி: க³த்வா ‘டேக்ஸி’ ஆநீதவாந் |
ரமணன் வெளியே போய் டாக்சி கொண்டு வந்தான்.

மேலும் படிக்க

நகைச்சுவை

निष्प्रेषणं
ஆம்ராணி க்வா க³தாநி? [आम्राणि क्वा गतानि?]
மாம்பழங்கள் எங்கே போய்விட்டன?

அமேரிகாபு⁴வம் [अमेरिकाभुवं] |
அமெரிக்காவுக்கு

மேலும் படிக்க

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

சங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு கொடுக்கப்படும் பகுதி கொஞ்சம் எடக்கு முடக்காக இருக்கும். இதற்கு வடமொழியில் சமஸ்யா பூர்த்தி (समस्या पूर्ति) என்று சொல்வார்கள். கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் (गौरी पचति गोमांसम्) என்கிற சொற்றொடரை எடுத்துக் கொண்டு இங்கே வடமொழியில் சமஸ்யா பூர்த்தி கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க