சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான்… மேலும் படிக்க

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

“தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!”

மேலும் படிக்க

அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி

ஒரு மொழிக்கும் அதன் படைப்புகளும் எழுதி பாதுகாக்கப் படுவது மிகவும் அவசியம். அதனாலேயே எழுத்துக்களுக்கு அக்ஷரம் என்று பெயர். க்ஷரம் என்றால் அழியக்கூடியது – அக்ஷரம் என்பது நிலையானது என்று புரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் அக்ஷர அப்யாசம் என்கிற ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அக்ஷரமாகிய எழுத்துக்களை – அப்யாசம் – பயிற்சி செய்தல் என்று பொருள். [தேக அப்யாசம் – என்றால் உடல் பயிற்சி]. இதை ஒரு பண்டிகையாகவே ஒவ்வொரு வருடமும் – நவராத்திரி சமயத்தில் விஜய தசமி அன்றைக்கு குழந்தைகளை – பள்ளிக்கு [முன்னாட்களில் குருகுலத்திற்கு] அனுப்பி ஆசிரியர் உதவியுடன் நெல்லில் குழந்தைகளை எழுத செய்வார்கள்.

மேலும் படிக்க

தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

மேலும் படிக்க