வடமொழி சொற்கடல்

வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து வடமொழிக்கும் ஏராளமாக அகராதிகள் உள்ளன. வடமொழியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து வடமொழிக்கும் அகராதிகள் உள்ளனவா என்று ஒரு நண்பர் கேட்டார். அப்படி எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வடமொழி அறிந்த தமிழர்கள் யாரும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று தோன்றியது.

தமிழிலிருந்து சிலப்பதிகாரம் – மணிமேகலை, பெரியபுராணம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் வடமொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அந்த அறிஞர்களுக்கு வடமொழி நன்கு அறிந்த காரணத்தினால் அகராதி எதுவும் உருவாக்க வேண்டும் என்று தோன்றாமல் – அல்லது அதற்கு ஒரு அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

நண்பர் ஜடாயு பிரபல கர்நாடக இசை கலைஞரும், சாஹித்ய கர்த்தாவுமான பாபநாசம் சிவன் ஒரு சம்ஸ்க்ருதம் – தமிழ் அகராதியை உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு குறிப்பு கொடுத்தார். இந்த குறிப்பைக் கொண்டு எளிதாக இந்த அகராதியை கண்டு பிடிக்க முடிந்தது.

இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. “संस्कृत भाषा शब्द समुद्र: – द्राविड भाषार्त सहित: – தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்” என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.

வடமொழிச் சொல்லுக்கு பொருள் தருவதால் இதை அகராதி என்று சொல்லலாமே தவிர, வழக்கமான அகராதிகளைப் போல் இது தொகுக்கப் படவில்லை. சிவன் அவர்கள் இதை நூதனமான முறையில், சொல்லின் எதுகை மோனைகளை அடிப்படையாக கொண்டு தொகுத்திருக்கிறார். அதனால் அகராதியை உபயோகிக்கும் எண்ணத்தில் வார்த்தைகளை இதில் தேடுவது மிகக் கடினம் – மேலும் சாதாரண வினைச்சொற்கள், உரிச்சொற்கள் பெருமளவு இதில் இல்லை.

சில உதாரணங்கள்:

மூன்றாவது தரங்கத்தில்:

आननं – முகம்

काननं – காடு, பிரமன் முகம், ஜலம்

लेपनं- பூச்சு

वेपनं – நடுக்கம்

शोभनं – மங்களம்

இவ்வாறு புத்தகம் முழுவது எதுகை – மோனைகளைக் கொண்டே தொகுக்கப் பட்டுள்ளது.  சிவன் அவர்கள் பொதுவான அகராதி குறித்த எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு ஒவ்வொரு பாகத்தில் இறுதியிலும், அந்த பாகத்தில் வந்த அத்தனை சமஸ்க்ருத சொற்களையும் அகரவரிசைப் படி கொடுத்திருக்கிறார்.

சொல்லப் போனால், சமஸ்க்ருதம் நன்கு அறிந்து அதில் கவிதைகள் – சாஹித்யங்கள் எழுத முனைபவர்களுக்கு இந்த புத்தகம் பெரும் உதவியாக இருக்கக் கூடும். பாபநாசம் சிவன் அவர்களே ஒரு வடமொழி கவிஞராகவும், சங்கீத மேதையாக இருப்பதாலும் இவ்வாறு தொகுத்துள்ளார். சமஸ்க்ருதம் கற்க விரும்புகிறவர்களுக்கு இந்த சொற்கடல் உதவும் என்று தோன்றவில்லை.

வடமொழி = தமிழ் நேரடியான அகராதிகள் எதுவும் இன்னமும் இருப்பதாக தெரியவில்லை. இனி யாராவது சமஸ்க்ருதம் அறிந்த தமிழர்கள் அதனை உருவாக்கினால்தான் உண்டு.

இந்தப் புத்தகம் பற்றி: http://shivanisai.net

14 Comments வடமொழி சொற்கடல்

 1. RAVISANKAR

  DEAR SIR,
  PLEASE INFORM ME WHERE THIS BOOK “VADAMOZHI SORKADAL” IS AVAILABLE FOR PURCHASE.PLEASE INFORM ME THE ADDRESS, PHONE NUMBERS ,E MAIL ADDRESS OF THE SHOP AND THE PERSON TO BE CONTACTED.
  WITH REGARDS
  V.RAVISANKAR

 2. சு பாலச்சந்திரன்

  டியர் ரவிசங்கர் ,

  30, கிருபாசங்கரி தெரு
  மேற்கு மாம்பலம்
  சென்னை 33 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் , அந்த புத்தகத்தின் அட்டையில் இந்த முகவரியே அச்சிடப்பட்டு உள்ளது .

 3. b.balakrishnan

  thayavu சித்து வடமொழி சொட்கடல் எங்கே கிடைக்கும். என்று பதில் தரவும் அன்புடன் பாலகிருஷ்ணன்.

 4. b.balakrishnan

  வடமொழி சொட்கடல் என்ற தமிழ் சம்ஸ்க்ருதம் கோஷம் புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட முகவரிக்கு yeழுத்தப்பட்ட YEN KADIDHATHTHIRKU பதில் எனக்கு பல மாதங்கள் கழிந்தும் கிடைக்கப்பபெறவில்லை. எனவே தங்கள் வடமொழி சொட்கடல் PUTTHAKAM எங்கு கிடைக்கப்பெறலாம் என்பதை தயவுசெய்து தெரிவயுங்கள். பா.BALAKRISHNANHNAN.

 5. K. Thirukkumaran

  நீண்ட நாட்களாக தேடின புத்தகத்தின் விலாசம் உங்கள் மூலம் அறியபெற்றேன் . மிக்க நன்றி.
  வளர்க உங்கள் பணி.

 6. Nataraja Deekshidhar

  பாபநாசம் சிவன் அவர்களால் தொகுக்கப்பட்ட வடமொழி சொற்கடல் ஒரு அற்புதமானது. தாளக்கட்டுக்கு ஏற்ப வடமொழி வார்த்தைகளை அமைக்க அல்லது கவிதைகள் எழுத அல்லது இத்தனை எழுத்துக்களில் வார்த்தை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம். அடியேனிடம் பழைய பதிப்பு இருக்கின்றது. நேரடியாக வடமொழிச் சொல்லுக்கு தமிழ் அர்த்தம் தேடுதல் சற்று சிரமம் என்றாலும், வடமொழி ஆர்வலர்களால் இப்புத்தகம் இன்றும் விரும்பப்படுகின்றது.

 7. அத்விகா

  வடமொழி சொற்கடல் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி. பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

 8. அத்விகா

  அன்புள்ள संस्कृतप्रिय: ,

  தாங்கள் அளித்த முகவரியில் தொடர்பு கொண்டு, வடமொழி சொற்கடல் பிரதியை பெற்றுக்கொண்டேன். மிக நன்றாக உள்ளது. விலை ரூபாய் 250/- . பிரதிகள் அச்சிட்ட காகிதம் பழுப்பேறி இருந்தாலும், அதிலுள்ள விஷயம் மிக உயர்ந்ததாக உள்ளது. தகவலுக்கு மீண்டும் நன்றி.

 9. வெள்ளைவாரணன்

  வடமொழிச் சொற்கடல் 546 பக்கங்கள் உள்ள அகராதி ஆகும். சமஸ்கிருத சொற்களுக்கு தமிழில் எளிமையாக பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சொற்கடல் இரண்டு பாகங்கள் அடங்கியது. ஒவ்வொரு பாகமும் கீழ்க்கண்டவாறு பல தரங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  பாகம் ஒன்று – ஐந்து தரங்கங்கள் ( பக்கம் 1முதல் 279 முடிய )

  பாகம் இரண்டு_ நான்கு தரங்கங்கள் ( பக்கம் 280 முதல் 546 முடிய ) சுமார் 16000 ( பதினாறு ஆயிரம் சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

  மொத்தம் இரண்டுபாகங்களும் சேர்ந்து 546 பக்கம். விலை ரூபாய் 250/- மேலே கூறிய 41, உமாபதி தெரு, மேற்கு மாம்பலம் , சென்னை-33 என்ற முகவரியில் பெறலாம். சிறந்த தொகுப்பு.

  சமஸ்கிருதம்- ஆங்கிலம்- தமிழ் ( sanskrit-english- tamil) என்ற மும்மொழி அகராதி சென்னை சமஸ்கிருத கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 12000 சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. விலை ரூபாய் 150/- வேண்டுவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்க:-

  SAMSKRITHA EDUCATION SOCIETY ( REGD)
  OLD NO 212/ NEW 13/1, ST. MARY’S ROAD,
  RAJA ANNAMALAI PURAM

  CHENNAI- 600 028
  PHONE 044- 24951402

 10. Vasan Iyer

  மிக்க நன்றி மறு பதிப்பு செய்ய ஆவல் முயற்சிப்போம்
  பிராமிண்டுடே வாசகர்களுக்கு முதலில் இது பற்றி தெரியப்படுத்த வேண்டும்
  செய்கிறேன்
  ஆசிரியர்
  பிராமிண்டுடே

 11. RSR

  I wanted to create a very simple tamil to sanskrit collection of words.
  I can list atleast one thousand ‘tamil’ words commonly used in tamil brahmin families . though the exact pronunciation and even meanibg in sanskrit may be different. I needed collaborators for the attempt as my knowlerdge of sanskrit is not enough. For example, ‘dhroham ‘
  is often used in spoken and even written tamil. but what exactly is the sanskrit word for that and what is the meaning? poorna chandran, full moon, Like that we need a good collection. Rather than, sanskrit to tamil, to english, actually, we need tamil-to sanskrit to English( the sanskrit word should be in devanagari script).

 12. RSR

  ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு, பேச்சு வழக்கிலும் ,எழுத்திலும் கூட, ஏராளமான சம்ஸ்க்ருத சொற்கள் ,தமிழ்ப் படுத்தி பயனில் இருந்தன. மிகுந்த பிரயாசையின் மூலம் பல சொற்களுக்கு தூய தமிழ் பாதங்கள் தயாரிக்கப் பட்டு இப்போது வழக்கில் வந்துள்ளன. சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த அத்தகைய சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதி சரியான உச்சரிப்பும், பொருளும் தரும்படி ஒரு முதற்சியை தொடங்க வேண்டும். சில உதாரணங்கள். ( சாதாரணம் ,சர்வலோகம், ஈஸ்வரன், சமர்ப்பணம், பிரயாசை, pப்ரார்தனை, பக்தி, ப்ரமாதம், ப்ரச்சாரம், ப்ரபஞ்சம், வனவாசம், agyaathavaasam , அபூர்வம், அஸாத்யம், நித்யம், அநேகமாக, நமஸ்காரம் ,வந்தனம், வருஷம், பிரதோஷம், ப்ரதக்ஷணம் , etc

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)