சந்யாச யோகம்
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள்.
ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றும் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.
अर्जुन उवाच
सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि।
यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्॥१॥
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோக³ம் ச ஸ²ம்ஸஸி|
யச்ச்²ரேய ஏதயோரேகம் தந்மே ப்³ரூஹி ஸுநிஸ்²சிதம் ||5-1||
அர்ஜுந உவாச “க்ருஷ்ண” = அர்ஜுனன் சொல்லுகிறான் “கண்ணா !”
கர்மணாம் = செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோக³ம் ச ஸ²ம்ஸஸி = துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய்
ஏதயோ: யத் ஏகம் = இவ்விரண்டில் எதுவொன்று
ஸ்²ரேய: ஸுநிஸ்²சிதம் = சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி
தத் மே ப்³ரூஹி = என்னிடம் சொல்!
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.
श्रीभगवानुवाच
सन्न्यासः कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ।
तयोस्तु कर्मसन्न्यासात्कर्मयोगो विशिष्यते॥२॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஸந்ந்யாஸ: கர்மயோக³ஸ்²ச நி:ஸ்²ரேயஸகராவுபௌ⁴|
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ³ விஸி²ஷ்யதே ||5-2||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ஸந்ந்யாஸ: கர்மயோக³ உபௌ⁴ ச = துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும்
நி:ஸ்²ரேயஸகரௌ = உயர்ந்த நலத்தைத் தருவன
து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக³ = இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம்
விஸி²ஷ்யதே = மேம்பட்டது
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.
ज्ञेयः स नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति।
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते॥३॥
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்³வேஷ்டி ந காங்க்ஷதி|
நிர்த்³வந்த்³வோ ஹி மஹாபா³ஹோ ஸுக²ம் ப³ந்தா⁴த்ப்ரமுச்யதே ||5-3||
மஹாபா³ஹோ! = பெருந்தோளாய்!
ய: ந த்³வேஷ்டி = எவன் வெறுப்பு இல்லாமலும்
ந காங்க்ஷதி = விரும்புதலும் இல்லாமலும்
ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய: = அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன்
ஹி நிர்த்³வந்த்³வ: = இருமை நீங்கி
ஸுக²ம் ப³ந்தா⁴த் ப்ரமுச்யதே = எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்
பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
साङ्ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः।
एकमप्यास्थितः सम्यगुभयोर्विन्दते फलम्॥४॥
ஸாங்க்²யயோகௌ³ ப்ருத²க்³பா³லா: ப்ரவத³ந்தி ந பண்டி³தா:|
ஏகமப்யாஸ்தி²த: ஸம்யகு³ப⁴யோர்விந்த³தே ப²லம் ||5-4||
ஸாங்க்²யயோகௌ³ = (மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும்
ப்ருத²க் = வெவ்வேறென்று
பா³லா: ப்ரவத³ந்தி பண்டி³தா: ந = அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்
ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தி²த: = யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன்
உப⁴யோ: ப²லம் விந்த³தே = இரண்டின் பயனையும் எய்துகிறான்
சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.
यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते।
एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति॥५॥
யத்ஸாங்க்²யை: ப்ராப்யதே ஸ்தா²நம் தத்³யோகை³ரபி க³ம்யதே|
ஏகம் ஸாங்க்²யம் ச யோக³ம் ச ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி ||5-5||
ஸாங்க்²யை: யத் ஸ்தா²நம் ப்ராப்யதே = சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ
தத்³ யோகை³: அபி க³ம்யதே = அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள்
ய: ஸாங்க்²யம் யோக³ம் ச ஏகம் பஸ்²யதி = எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ
ஸ ச பஸ்²யதி = அவனே காட்சியுடையோன்
சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.
सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः।
योगयुक्तो मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति॥६॥
ஸந்ந்யாஸஸ்து மஹாபா³ஹோ து³:க²மாப்துமயோக³த:|
யோக³யுக்தோ முநிர்ப்³ரஹ்ம ந சிரேணாதி⁴க³ச்ச²தி ||5-6||
து மஹாபா³ஹோ = ஆனால் பெருந் தோளாய்
அயோக³த: ஸந்ந்யாஸ: ஆப்தும் து³:க²ம் = யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்
யோக³ யுக்த: முநி: ப்³ரஹ்ம = யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை
நசிரேண அதி⁴க³ச்ச²தி = விரைவில் அடைகிறான்
பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते॥७॥
யோக³யுக்தோ விஸு²த்³தா⁴த்மா விஜிதாத்மா ஜிதேந்த்³ரிய:|
ஸர்வபூ⁴தாத்மபூ⁴தாத்மா குர்வந்நபி ந லிப்யதே ||5-7||
விஜிதாத்மா = தன்னைத் தான் வென்றோன்
ஜிதேந்த்³ரிய: = இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்
விஸு²த்³தா⁴த்மா = தூய்மையுற்றோன்
ஸர்வ பூ⁴தாத்ம பூ⁴தாத்மா = எல்லா உயிர்களுந் தானே யானவன்
யோக³யுக்த: குர்வந் அபி = அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும்
ந லிப்யதே = அதில் ஒட்டுவதில்லை
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் -அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित्।
पश्यञ्छृण्वन्स्पृशञ्जिघ्रन्नश्नङ्गच्छन्स्वपन्श्वसन्॥८॥
நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்|
பஸ்²யஞ்ச்²ருண்வந்ஸ்ப்ருஸ²ஞ்ஜிக்⁴ரந்நஸ்²நங்க³ச்ச²ந்ஸ்வபந்ஸ்²வஸந் ||5-8||
பஸ்²யந் = காண்கினும்,
ச்²ருண்வந் = கேட்கினும்,
ஸ்ப்ருஸ²ந் = தீண்டினும்,
ஜிக்⁴ரந் = மோப்பினும்,
அஸ்²நந் = உண்பினும்,
க³ச்ச²ந் = நடப்பினும்
ஸ்வபந் = , உறங்கினும்
ஸ்²வஸந் = உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த: = உண்மை அறிந்த யோகி
கிஞ்சித் ஏவ ந கரோமி = நான் எதனையும் செய்வதில்லை
இதி மந்யேத = என்று நினைக்க வேண்டும்
உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
प्रलपन्विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्॥९॥
ப்ரலபந்விஸ்ருஜந்க்³ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ஷு வர்தந்த இதி தா⁴ரயந் ||5-9||
ப்ரலபந் = புலம்பினும்,
விஸ்ருஜந் = விடினும்,
க்³ருஹ்ணந் = வாங்கினும்,
உந்மிஷந் = இமைகளைத் திறப்பினும்,
நிமிஷந் அபி = மூடினும்
இந்த்³ரியாணி இந்த்³ரியார்தே²ஷு = இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில்
வர்தந்தே இதி தா⁴ரயந் = செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்)
புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.
ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा॥१०॥
ப்³ரஹ்மண்யாதா⁴ய கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா கரோதி ய:|
லிப்யதே ந ஸ பாபேந பத்³மபத்ரமிவாம்ப⁴ஸா ||5-10||
ய: கர்மாணி ப்³ரஹ்மணி ஆதா⁴ய = எவன் செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு
ஸங்க³ம் த்யக்த்வா கரோதி = பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ
அம்ப⁴ஸா பத்³ம பத்ரம் இவ = நீரில் தாமரையிலை போல்
ஸ: பாபேந ந லிப்யதே = அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை
செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि।
योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये॥११॥
காயேந மநஸா பு³த்³த்⁴யா கேவலைரிந்த்³ரியைரபி|
யோகி³ந: கர்ம குர்வந்தி ஸங்க³ம் த்யக்த்வாத்மஸு²த்³த⁴யே ||5-11||
யோகி³ந: ஸங்க³ம் த்யக்த்வா = யோகிகள் பற்றுதலைக் களைந்து
ஆத்மஸு²த்³த⁴யே = ஆத்ம சுத்தியின் பொருட்டாக
காயேந மநஸா பு³த்³த்⁴யா = உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்³ரியை: அபி = வெறுமே இந்திரியங்களாலும்
கர்ம குர்வந்தி = தொழில் செய்வார்
யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.
युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम्।
अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते॥१२॥
யுக்த: கர்மப²லம் த்யக்த்வா ஸா²ந்திமாப்நோதி நைஷ்டி²கீம்|
அயுக்த: காமகாரேண ப²லே ஸக்தோ நிப³த்⁴யதே ||5-12||
யுக்த: கர்மப²லம் த்யக்த்வா = யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து
நைஷ்டி²கீம் ஸா²ந்திமாப்நோதி = நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்
அயுக்த: காமகாரேண = யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப்
ப²லே ஸக்த: = பயனிலே பற்றுதல் கொண்டு
நிப³த்⁴யதே = தளைப்படுகிறான்
யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.
सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी।
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन्॥१३॥
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக²ம் வஸீ²|
நவத்³வாரே புரே தே³ஹீ நைவ குர்வந்ந காரயந் ||5-13||
வஸீ² தே³ஹீ = தன்னை வசங்கொண்ட ஆத்மா
ந குர்வந் ந காரயந் ஏவ = எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி
நவத்³வாரே புரே = ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய = எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து
ஸுக²ம் ஆஸ்தே = இன்புற்றிருக்கிறான்
தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः।
न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते॥१४॥
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு⁴:|
ந கர்மப²லஸம்யோக³ம் ஸ்வபா⁴வஸ்து ப்ரவர்ததே ||5-14||
கர்த்ருத்வம் = செயலின் கர்த்தா என்னும் தன்மை
கர்மாணி = கர்மங்கள்
கர்ம ப²ல ஸம்யோக³ம் = செய்கைப் பயன் பெறுதல்
ப்ரபு⁴: லோகஸ்ய ந ஸ்ருஜதி = (இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை
து ஸ்வபா⁴வ: ப்ரவர்ததே = ஆனால் இயல்புதான் செயல்படுகிறது
செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.
नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः।
अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः॥१५॥
நாத³த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு⁴:|
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: ||5-15||
பாபம் ஸுக்ருதம் ச = பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று
கஸ்யசித் ந ஆத³த்தே = எவனையும் கடவுள் ஏற்பதில்லை
அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம் = அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது
தேந ஜந்தவ: முஹ்யந்தி = அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன
எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.
ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः।
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम्॥१६॥
ஜ்ஞாநேந து தத³ஜ்ஞாநம் யேஷாம் நாஸி²தமாத்மந:|br />
தேஷாமாதி³த்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸ²யதி தத்பரம் ||5-16||
து ஏஷாம் தத் அஜ்ஞாநம் = ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்
ஆத்மந: ஜ்ஞாநேந நாஸி²தம் = ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ
தேஷாம் ஜ்ஞாநம் ஆதி³த்யவத் = அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்
தத்பரம் ப்ரகாஸ²யதி = பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः॥१७॥
தத்³பு³த்³த⁴யஸ்ததா³த்மாநஸ்தந்நிஷ்டா²ஸ்தத்பராயணா:|
க³ச்ச²ந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூ⁴தகல்மஷா: ||5-17||
தத்³பு³த்³த⁴ய: ததா³த்மாந: தந்நிஷ்டா²: தத்பராயணா: = பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்
ஜ்ஞாந நிர்தூ⁴த கல்மஷா: = ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்
அபுநராவ்ருத்திம் க³ச்ச²ந்தி = மீளாப் பதமடைகிறார்கள்
பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥
வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||
வித்³யா விநய ஸம்பந்நே ப்³ராஹ்மணே =
க³வி ஹஸ்திநி ஸு²நி ச ஏவ = பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட
ஸ்²வபாகே: ச = நாயைத் தின்னும் புலையனிடத்தும்
பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: = பண்டிதர் சமப் பார்வையுடையோர்
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
इहैव तैर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः।
निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः॥१९॥
இஹைவ தைர்ஜித: ஸர்கோ³ யேஷாம் ஸாம்யே ஸ்தி²தம் மந:|
நிர்தோ³ஷம் ஹி ஸமம் ப்³ரஹ்ம தஸ்மாத்³ ப்³ரஹ்மணி தே ஸ்தி²தா: ||5-19||
ஏஷாம் மந: ஸாம்யே ஸ்தி²தம் = எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ
தை: இஹ ஏவ ஸர்க³: ஜித: = இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்
ஹி ப்³ரஹ்ம நிர்தோ³ஷம் ஸமம் = ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது
தஸ்மாத்³ தே ப்³ரஹ்மணி ஸ்தி²தா: = ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்
மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
न प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम्।
स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः॥२०॥
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்³விஜேத்ப்ராப்ய சாப்ரியம்|
ஸ்தி²ரபு³த்³தி⁴ரஸம்மூடோ⁴ ப்³ரஹ்மவித்³ப்³ரஹ்மணி ஸ்தி²த: ||5-20||
ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத் = விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்
அப்ரியம் ப்ராப்ய ச ந உத்³விஜேத் = பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்
ஸ்தி²ரபு³த்³தி⁴: அஸம்மூட⁴: = ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி
ப்³ரஹ்மவித் ப்³ரஹ்மணி ஸ்தி²த: = பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்
விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्।
स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते॥२१॥
பா³ஹ்யஸ்பர்ஸே²ஷ்வஸக்தாத்மா விந்த³த்யாத்மநி யத்ஸுக²ம்|
ஸ ப்³ரஹ்மயோக³யுக்தாத்மா ஸுக²மக்ஷயமஸ்²நுதே ||5-21||
பா³ஹ்ய ஸ்பர்ஸே²ஷு = புறத் தீண்டுதல்களில்
அஸக்தாத்மா ஆத்மநி = பற்றற்ற சாதகன் உள்ளத்தில்
யத் ஸுக²ம் விந்த³தி = எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்
ப்³ரஹ்ம யோக³ யுக்தாத்மா = (அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி
ஸ: அக்ஷயம் ஸுக²ம் அஸ்²நுதே = அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்
புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.
ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते।
आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः॥२२॥
யே ஹி ஸம்ஸ்பர்ஸ²ஜா போ⁴கா³ து³:க²யோநய ஏவ தே|
ஆத்³யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே பு³த⁴: ||5-22||
ஸம்ஸ்பர்ஸ²ஜா யே போ⁴கா³: = புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ
தே ஹி து³:க²யோநய: ஏவ = அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்
ஆதி³ அந்தவந்த: = தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை)
கௌந்தேய = குந்தி மகனே
பு³த⁴: தேஷு ந ரமதே = அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை
புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
शक्नोतीहैव यः सोढुं प्राक्शरीरविमोक्षणात्।
कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः॥२३॥
ஸ²க்நோதீஹைவ ய: ஸோடு⁴ம் ப்ராக்ஸ²ரீரவிமோக்ஷணாத்|
காமக்ரோதோ⁴த்³ப⁴வம் வேக³ம் ஸ யுக்த: ஸ ஸுகீ² நர: ||5-23||
ய: இஹ ஏவ = எவன் இவ்வுலகத்திலேயே
ஸ²ரீரவிமோக்ஷணாத் ப்ராக் = சரீரம் நீங்குமுன்னர்
காம க்ரோத⁴ உத்³ப⁴வம் = விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்
வேக³ம் ஸோடு⁴ம் ஸ²க்நோதி = எழுச்சியை பொறுக்க வல்லானோ
ஸ நர: யுக்த: = அந்த மனிதன் யோகி
ஸ ஸுகீ² = அவன் இன்பமுடையோன்
சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.
योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति॥२४॥
யோऽந்த:ஸுகோ²’ந்தராராமஸ்ததா²ந்தர்ஜ்யோதிரேவ ய:|
ஸ யோகீ³ ப்³ரஹ்மநிர்வாணம் ப்³ரஹ்மபூ⁴தோऽதி⁴க³ச்ச²தி ||5-24||
ய: ஏவ அந்த:ஸுக² = எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக
அந்தராராம: = உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்
ததா² ய: அந்தர்ஜ்யோதி: = அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ
ஸ: ப்³ரஹ்மபூ⁴த: = அவன் தானே பிரம்மமாய்
ப்³ரஹ்மநிர்வாணம் அதி⁴க³ச்ச²தி = பிரம்ம நிர்வாணமடைகிறான்
தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.
लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः।
छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः॥२५॥
லப⁴ந்தே ப்³ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:|
சி²ந்நத்³வைதா⁴ யதாத்மாந: ஸர்வபூ⁴தஹிதே ரதா: ||5-25||
சி²ந்நத்³வைதா⁴ = இருமைகளை வெட்டிவிட்டு
ஸர்வபூ⁴தஹிதே ரதா: = எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி
யதாத்மாந: = எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ
ருஷய: க்ஷீணகல்மஷா: = (அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து
ப்³ரஹ்மநிர்வாணம் லப⁴ந்தே = பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்
இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम्।
अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम्॥२६॥
காமக்ரோத⁴வியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்|
அபி⁴தோ ப்³ரஹ்மநிர்வாணம் வர்ததே விதி³தாத்மநாம் ||5-26||
காமக்ரோத⁴வியுக்தாநாம் = விருப்பமும் சினமும் தவிர்த்து
யதசேதஸாம் விதி³தாத்மநாம் = சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
யதீநாம் அபி⁴த: = முனிகளுக்கு நாற்புறமும்
ப்³ரஹ்மநிர்வாணம் வர்ததே = பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது
விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
स्पर्शान्कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः।
प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ॥२७॥
ஸ்பர்ஸா²ந்க்ருத்வா ப³ஹிர்பா³ஹ்யாம்ஸ்²சக்ஷுஸ்²சைவாந்தரே ப்⁴ருவோ:|
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்⁴யந்தரசாரிணௌ ||5-27||
பா³ஹ்யாந் ஸ்பர்ஸா²ந் ப³ஹி ஏவ க்ருத்வா = புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி
சக்ஷு: ப்⁴ருவோ: அந்தரே = புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி
நாஸாப்⁴யந்தர சாரிணௌ = மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்
ஸமௌ க்ருத்வா ச = சமமாகச் செய்துகொண்டு
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;
यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः।
विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः॥२८॥
யதேந்த்³ரியமநோபு³த்³தி⁴ர்முநிர்மோக்ஷபராயண:|
விக³தேச்சா²ப⁴யக்ரோதோ⁴ ய: ஸதா³ முக்த ஏவ ஸ: ||5-28||
யதேந்த்³ரிய: மந: பு³த்³தி⁴: = புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி
விக³த: இச்சா² ப⁴ய க்ரோத⁴: = விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து
மோக்ஷபராயண: = மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற
ய: முநி: ஸ: ஸதா³ முக்த ஏவ = அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
விடுதலை யிலக் கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான்
முக்தனே யாவான் முனி.
भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति॥२९॥
போ⁴க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்²வரம்|
ஸுஹ்ருத³ம் ஸர்வபூ⁴தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸா²ந்திம்ருச்ச²தி ||5-29||
மாம் யஜ்ஞதபஸாம் போ⁴க்தாரம் = என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்
ஸர்வலோகமஹேஸ்²வரம் = உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்
ஸர்வபூ⁴தாநாம் ஸுஹ்ருத³ம் = எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்
ஜ்ஞாத்வா ஸா²ந்திம் ருச்ச²தி = என்று அறிபவன் அமைதி அடைகிறான்
வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே;
உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்
றறிவான் அமைதி யறிவான்.
ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे सन्नयासयोगो नाम पञ्चमोऽध्याय: || 5 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
ஐந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.