பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5

व्यालं वालामृणालतन्तुभिरसौ रोद्धुम् समुज्जृम्भते
भेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन संनह्यति |
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षाराम्भुधेरीहते
मूर्खान् य: प्रतिनेतुमिच्छति बलात्सूक्तै: सुधास्यन्धिभी: ||

வ்யாலம்ʼ வாலாம்ருʼணாலதந்துபி⁴ரஸௌ ரோத்³து⁴ம் ஸமுஜ்ஜ்ருʼம்ப⁴தே
பே⁴த்தும்ʼ வஜ்ரமணிம்ʼ ஶிரீஷகுஸுமப்ராந்தேன ஸந்நஹ்யதி |
மாது⁴ர்யம்ʼ மது⁴பி³ந்து³னா ரசயிதும்ʼ க்ஷாராம்பு⁴தே⁴ரீஹதே
மூர்கா²ன் ய: ப்ரதினேதுமிச்ச²தி ப³லாத்ஸூக்தை: ஸுதா⁴ஸ்யந்தி⁴பீ⁴: ||

அந்வயம்

बलात् सुधास्यन्धिभि: सूक्तै: मूर्खान् य: प्रतिनेतुमिच्छति
असौ बालमृणालतन्तुभि: व्यालं रोद्धुं समुज्जृम्भते
शिरीषकुसुमप्रान्तेन वज्रमणिं भेत्तुं संनह्यति
मधुबिन्दुना क्षाराम्भुधे: माधुर्यं रचयितुं ईहते

ப³லாத் ஸுதா⁴ஸ்யந்தி⁴பி⁴: ஸூக்தை: மூர்கா²ந் ய: ப்ரதினேதுமிச்ச²தி
அஸௌ பா³லம்ருʼணாலதந்துபி⁴: வ்யாலம்ʼ ரோத்³து⁴ம்ʼ ஸமுஜ்ஜ்ருʼம்ப⁴தே
ஶிரீஷகுஸுமப்ராந்தேன வஜ்ரமணிம்ʼ பே⁴த்தும்ʼ ஸந்நஹ்யதி
மது⁴பி³ந்து³னா க்ஷாராம்பு⁴தே⁴: மாது⁴ர்யம்ʼ ரசயிதும்ʼ ஈஹதே

ப³லாத் திறமையால் ஸுதா⁴ஸ்யந்தி⁴பி⁴: ஸூக்தை: அமுதம் போன்ற நன்மொழிகளால் மூர்கா²ந் முட்டாள் மூர்க்கனை ய: எவன் ப்ரதினேதுமிச்ச²தி வழிப்படுத்த எண்ணுகிறானோ அஸௌ அவன், பா³லம்ருʼணாலதந்துபி⁴: இளம் பூங்கொடியால், வ்யாலம்ʼ மதம் பிடித்த யானையை, ரோத்³து⁴ம்ʼ கட்டுவதற்கு ஸமுஜ்ஜ்ருʼம்ப⁴தே முயற்சி செய்கிறான். ஶிரீஷகுஸுமப்ராந்தேன பூவின் மெல்லிய இதழ்களால் வஜ்ரமணிம்ʼ பே⁴த்தும்ʼ வைரத்தை உடைக்க ஸந்நஹ்யதி தயாராகிறான். மது⁴பி³ந்து³னா தேன் துளியால் க்ஷாராம்பு⁴தே⁴: உப்புக்கடலை மாது⁴ர்யம்ʼ ரசயிதும்ʼ இனிப்பாக்க ஈஹதே விரும்புகிறான்.

வியாக்கியானத்திலிருந்து…

पुमान् व्यालं दुष्टगजम् – மதம் பிடித்த ஆண் யானை
न तु साधारण जन्तुं इति अर्थ: – சாதாரண மிருகம் அல்ல என்று அர்த்தம்
व्यालो दुष्टगजे सर्पे इति विश्व: – வ்யாளம் என்பது துஷ்ட கஜம் (மதயானை) என்று விஷ்வகோசம் கூறுகிறது
रोद्धुं नियन्तुं समुज्जृम्भते कृतप्रयत्न: भवति इति अर्थ: – கட்டுப் படுத்த முயற்சி செய்கிறான் என்று அர்த்தம்
तता वज्रमणीन् हीराख्यमणिविशेषान् – வைரத்தை
हीरो वज्रश्च कथ्यते इति हलायुध: – ஹீரம் வஜ்ரம் இவை வைரத்தைக் குறிக்கும் என்று ஹலாயுத கோசம் கூறுகிறது.
शिरीषकुसुमस्य अति कोमल पुष्प विशेषस्य – மிகவும் மெல்லிய பூவின்
प्रान्तेन अञ्चलेन – இதழ்களால் (அஞ்சலை என்று தமிழில் முந்தானையைக் குறிப்பதுண்டு)
भेत्तुं विदारयितुं सन्नह्यति | उद्युक्त: इति अर्थ: – உடைக்க முயற்சிக்கிறான்
तथा क्षाराम्बुधे: लवणार्णवस्य न तु स्वल्पजलाशयस्य – உப்புக்கடலை (சிறிய நீர்நிலை அல்ல)
मधुबिन्दुना क्षौद्रविप्लुषा – தேன் துளியால் (சிறிய துளியால்)
न तु अवच्छिन्न मधु धारा संपातेन इति अर्थ: – இடைவிடாமல் நீர் வீழ்ச்சி போன்று இல்லாமல்
माधुर्यं मधुरगुणं रचयितुं सम्पादयितुं ईहते काङ्क्षति – இனிப்பாக்க விரும்புகிறான்
य: पुमान् वलाद्वाक्पाटवात् – எவன் வாக்குத் திறமையால்
सुधास्यन्दिभी: अमृतस्राविभि: अतिमधुरै: इति अर्थ: – மிகவும் இனிமையான
सूक्तै: प्रियोक्तिभि: – நன்மொழிகளால்
मूर्खान् प्रतिनेतुं समाधातुं इच्छति वाञ्चति स: असौ इति संबन्ध: – முட்டாளை வழிப்படுத்த எண்ணுபவன் என்று இங்கே சம்பந்தம் வருகிறது

பேச்சுத் திறமையால் முட்டாளின் மனதை மாற்றி விடமுடியும் என்று எவன் எண்ணுகிறானோ அவனது செயல், இளம் பூச்செடியின் கொடி கொண்டு மதம் பிடித்த யானையை கட்டுப் படுத்துவது போல, பூவின் இதழ் கொண்டு வைரத்தை அறுப்பது போல, தேன் துளியால் உப்புக்கடலை இனிப்பாக்க முயலுவதற்கு ஒப்பானது. நடக்காத காரியம் என்று அர்த்தம்.

***

स्वायत्तमेकान्तहितं विधात्रा विनिर्मितं छादनमज्ञतायाः ।
विशेषतस्सर्वविदां समाजे विभूषणं मौनमपण्डितानाम् ।।

ஸ்வாயத்தமேகாந்தஹிதம்ʼ விதா⁴த்ரா விநிர்மிதம்ʼ சா²த³னமஜ்ஞதாயா​: |
விஸே²ஷதஸ்ஸர்வவிதா³ம்ʼ ஸமாஜே விபூ⁴ஷணம்ʼ மௌனமபண்டி³தானாம் ||

அந்வயம்

விதா⁴த்ரா விநிர்மிதம்ʼ, அஜ்ஞதாயா: சா²த³னம், ஸ்வாயத்தம், ஏகாந்தஹிதம்ʼ, விஸே²ஷத: ஸர்வவிதா³ம்ʼ ஸமாஜே அபண்டி³தானாம் விபூ⁴ஷணம்ʼ, மௌனம் || விதா⁴த்ரா விநிர்மிதம்ʼ பிரமனால் உருவாக்கப் பட்டது, அஜ்ஞதாயா: சா²த³னம் முட்டாள் தனத்தை மறைக்கும் சாதனம், ஸ்வாயத்தம் வேறொருவர் உதவி இன்றி தானே செய்யக் கூடியது, ஏகாந்தஹிதம்ʼ மிகவும் நன்மை பயக்கக் கூடியது, விஸே²ஷத: முக்கியமாக ஸர்வவிதா³ம்ʼ ஸமாஜே கற்றறிந்தோர் கூடியிருக்கும் அவையில் அபண்டி³தானாம் விபூ⁴ஷணம்ʼ முட்டாள்களுக்கு அழகு சேர்ப்பது மௌனம்!

வியாக்கியானத்திலிருந்து…

विधात्रा ब्रह्मणा कर्त्रा स्वायत्तम् आत्माधीनम् – பிரமனால் தரப்பட்ட தனக்கேயுரிய
न तु परोपदेशसापेक्षम् – மற்றவர் சொல்லித் தர வேண்டாதது
स्व अवगुण आच्छादकत्वात् इति भाव: – தன் கீழ்மைப் பண்புகளை மறைப்பதால் என்று அர்த்தம்
सर्वविदां समाजे सर्वज्ञसभायां – கற்றோர் நிறைந்த அவையில்
विभूषणम् उपस्कार हेतु भूतत्वाद् – அழகு சேர்க்கக் கூடியது
मौनं तूष्णींभाव: कर्म – மௌனமாக இருத்தல்
अपण्डितानां अविदुषां सम्बन्धिन्या अज्ञताया मौढ्यस्य छादनं आच्छादकं सत विनिर्मितं रचितं – முட்டாள்களின் மூடத்தனத்தை மறைக்கும் சாதனமாகச் செய்யப்பட்டது
अत: अपण्डितै: निजमौढ्यसंगोपनार्थम् मौने एव वर्तितव्यं – அதனால் முட்டாள்களின் நிஜமான முட்டாள்தனத்தை மறைப்பதற்கு மௌனமாக இருக்க வேண்டும்.
इयं एव एतेषां गति: | अन्यथा हास्यास्पदता स्यात् इति भाव: | – அதுவே அவர்கள் கதி. இல்லாவிட்டால் நகைப்புக் கிடமாகும் என்று அர்த்தம்

அறிவில்லாதவர்களின் அணிகலன் மௌனமே. கற்றோர் நிறைந்த அவையில் நகைப்புக்கு இடமாகாமல் இருக்க அவர்களுக்கு பிரமனே அளித்த, வேறொருவரிடம் கற்றுக் கொள்ளத் தேவையில்லாத ஒன்று மௌனம்.
(தொடரும்)

2 Comments பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5

  1. Melly

    Good post. I learn something totally new and chgnnelailg onwebsites I stumbleupon on a daily basis. It will always be interesting to read articles from other writersand practice something from other web sites.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)