பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4

[முன்னுரை: பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.]
-: முந்தைய பகுதிகள் :-

प्रसह्य मणिमुद्धरेन्मकरदंष्ट्रान्तरात्
समुद्रमपि सन्तरेत् प्रचलदुर्मिमालाकुलाम् ।
भुजङ्गमपि कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ॥

ப்ரஸஹ்ய மணிமுத்³த⁴ரேன்மகரத³ம்ʼஷ்ட்ராந்தராத்
ஸமுத்³ரமபி ஸந்தரேத் ப்ரசலது³ர்மிமாலாகுலாம் |
பு⁴ஜங்க³மபி கோபிதம்ʼ ஸி²ரஸி புஷ்பவத்³தா⁴ரயேத்
ந து ப்ரதிநிவிஷ்டமூர்க²ஜனசித்தமாராத⁴யேத் ||

பதச்சேதம்

ப்ரஸஹ்ய மணிம் உத்³த⁴ரேத் மகர த³ம்ʼஷ்ட்ர அந்தராத்
ஸமுத்³ரம் அபி ஸந்தரேத் ப்ரசலத் ஊர்மி மாலா ஆகுலாம்
பு⁴ஜங்க³ம் அபி கோபிதம்ʼ ஸி²ரஸி புஷ்பவத் உத்³தா⁴ரயேத்
ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க² ஜன சித்தம் ஆராத⁴யேத்

அந்வயம்

ப்ரஸஹ்ய = பலவந்தமாக, மணிம் உத்³த⁴ரேத் = மணியை எடுக்கக் கூடும், மகர த³ம்ʼஷ்ட்ர அந்தராத் = முதலையின் பல்வரிசைக்குள் இருந்து, ஸமுத்³ரம் அபி = கடலையும் கூட, ஸந்தரேத் = நீந்திக் கடக்ககூடும், ப்ரசலத் = சுழலால் பயங்கரமாக அசையும், ஊர்மி = அலை, மாலா ஆகுலாம் = மாலை போன்று கலங்கி புறப்பட்டு வரும் (அலை), பு⁴ஜங்க³ம் அபி = பாம்பையும் கூட, கோபிதம்ʼ = கோபமாக இருக்கும், ஸி²ரஸி = தலையில், புஷ்பவத் = பூவைப்போல, உத்³தா⁴ரயேத் = எடுத்து அணிய முடியும், ப்ரதிநிவிஷ்ட = தீர்மானமாக இருக்கும், மூர்க² ஜன சித்தம் = முட்டாளின் மனதை, ந து ஆராத⁴யேத் = திருப்தி படுத்த இயலாது.

வியாக்கியானத்திலிருந்து…

मकर शिशुमाराख्य: जलग्राह विशेष: = முதலையின் சிறப்பு தண்ணீருக்குள் இழுத்துச் செல்லும் வலிமை
तस्य वक्त्रे वदनगह्वरे दंष्ट्राणाम् = அதனுடைய வாயினுள் பற்களிடமிருந்து
निशित अग्र दशन विशेषणाम् अन्तरात् अन्तरालात् = கூரிய பற்களின் நடுவே இருந்து
अतिसंकटात् इति अर्थ: = மிகவும் ஆபத்து நிறைந்தது என்று அர்த்தம்
प्रसह्य बलात्कारेण मणिं रत्नम् | उद्धरेत् उद्धर्तुं शक्नुयात् = பலவந்தமாக ரத்தினத்தை எடுக்க முடியும்
केनचित् अवधानेन आनयेत् इति अर्थ: = ஏதாவது ஒரு வித்தையைக் கொண்டு கவனப் படுத்துவதன் மூலம் என்று அர்த்தம்
प्रचलन्त: दोलायमान: ये ऊर्म्य: = அமைதியின்றி அடித்துக் கொண்டிருக்கும் அலைகள்
तेषां मालाभि: परम्पराभि: आकुलम् संकुलम् = தொடர்ந்து மாலை மாலையாக வரும் அலைகள்
उल्लोलकल्लोल जृम्बितम् इति अर्थ: = உல்லோலகல்லோல என்பது அலைகளைக் குறிக்கும், அதிகமாகி விட்ட அலைகள் என்று அர்த்தம்
संतरेत् सम्यक् तरितुं शक्नुयात् = நீந்திக் கடக்க முடியும்
केनचित् प्लवन साधनेन इति भाव: = ஏதாவது மிதவை சாதனம் கொண்டு என்று உட்பொருள்
“लङ्घयेत्” इति पाठे हनुमानिव केनचित् शक्ति विशेषेण लङ्घितुं शक्नुयात् इति अर्थ: = லங்க⁴யேத் என்ற பாடமும் உண்டு, அதற்கு ஹனுமானைப் போல சக்தி விசேஷத்தினால் கடலைத் தாண்டிக் கடக்க முடியும் என்று அர்த்தம்
कोपवशात्सफुत्कारं जिह्वया सृक्विप्रान्तौ लेलिहानम् इति अर्थ: = கோபவசத்தால் வாயின் ஓரத்தில் நாக்கை நீட்டி நீட்டி வரும் பாம்பு
शिरसि केशपाशे पुष्पेण तुल्यं पुष्पवत् धारयितुम् शक्नुयात् = அந்த பாம்பை எடுத்து பூவை சூடுவது போல மயிர்கற்றைகளின் மீது சூட முடியும்
मणिमन्त्रादि साधनेन इति भाव: = மணி – மந்திரம் போன்றவற்றால் என்று உட்பொருள்
किं तु प्रतिनिविष्टं अभिनिवेशक्रान्तम् = ஆனால் அருகில் இருக்கும்
दुराग्रहाविष्टम् इति यावत् = பிடிவாதமாக இருக்கும்
मूर्खजनस्य दुर्विदग्धस्य चित्तं न आराधयेत् = முட்டாளின் சித்தத்தை சமாதானம் செய்ய இயலாது
आराधयितुम् समाधातुम् न शक्नुयात् = திருப்தி படுத்துவது இயலாது
उपाय अभावाद् इति भाव: = எந்த உபாயமும் இதற்கு இல்லை என்று அர்த்தம்
मकर दंष्ट्रान्तस्थ मणि उद्धरणादिप्रायं मूर्खजनचित्त समाराधनमिति श्लोकार्थ: = முதலையின் பல் இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் மணியை எடுப்பது போன்ற செயல்கள் முட்டாளின் சித்தத்தை மாற்றுவதை விட எளியது என்பது ஸ்லோகத்தின் அர்த்தம்

***

இந்த செய்யுளில் உள்ள சில சொற்களின் பர்யாய சப்தங்களை (ஒரே பொருள்கொண்ட சொற்கள்) பார்ப்போம். முதலைக்கு சம்ஸ்க்ருதத்தில் मकर, शिशुमार, नक्र, कुम्भीर ஆகிய பெயர்கள்.

நீருக்கும், கடலுக்கும், அலைகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் பல சொற்கள் காணப்படுகின்றன.

समुद्रोऽब्धिरकूपार: पारावार: सरित्पति: |
उदन्वानुदधि: सिन्धु: सरस्वान् सागरोऽर्णव:||

रत्नाकरो जलनिधिर्याद:पतिरपांपति | (अमरकोश – वारिवर्ग:)

ஸமுத்³ரம், அப்³தி⁴, அகூபார:, பாராவார:, ஸரித்பதி:, உத³ன்வான், உத³தி⁴:, ஸிந்து⁴:, ஸரஸ்வான், ஸாக³ர:, அர்ணவ:, ரத்னாகர:, ஜலநிதி⁴:, யாத³:பதி, அபாம்பதி ஆகிய பெயர்கள் கடலுக்கு உண்டானவை என்று அமரகோசத்தில் காணப்படுகிறது.

லஹரி, ஊர்மி, பங்கம், தரங்கம் ஆகியவை அலைகளின் பெயர்கள்.

நீருக்கு மட்டும் 27 பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில்.

आप: स्त्री भूम्नि वार्वारि सलिलं कमलं जलं |
पय: कीलालममृतं जीवनं भुवनं वनम् ||

कबन्धमुदकं पाथ: पुष्करं सर्वतोमुखम् |
अम्भोऽर्णस्तोयपानीयनीरक्षीराम्बुशम्बरम् ||

मेघपुष्पं घनरसस्त्रिषु द्वे आप्यमंमयम् | (अमरकोश – वारिवर्ग)

ஆப:, வா:, வாரி, ஸலிலம்ʼ, கமலம்ʼ, ஜலம்ʼ, பய: கீலாலம், அம்ருʼதம்ʼ, ஜீவநம்ʼ, பு⁴வநம்ʼ, வநம், கப⁴ந்த³ம், உத³கம்ʼ பாத²:, புஷ்கரம்ʼ, ஸர்வதோமுக²ம், அம்ப⁴, அர்ண:, தோயம், பாநீயம், நீரம், க்ஷீராம், அம்பு³, ஸ²ம்ப³ரம், மேக⁴புஷ்பம்ʼ, க⁴நரஸம் ஆகிய பெயர்கள் அனைத்தும் நீரைக்குறிப்பவை.

முதலையின் வாயில் சென்று விட்டதை எடுப்பது, புயல் வந்த சமயம் ஆழிப் பேரலையில் கடலைக் கடப்பது, கோபத்துடன் சீறும் பாம்பை தலையில் பூவைப் போல எடுத்து அணிவது இதெல்லாம் கூட ஏதாவது மணி மந்திர ஔஷதங்களால் சாத்தியப் படும். ஆனால் விடாப்பிடியாக ஒன்றை நம்புகிற மூர்க்கனை மாற்றுவது மிகக் கடினம்.

***

लभेत सिकतासु तैलमपि यत्नत: पीडयन्
पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दित: |
कदाचिदपि पर्यटञ्शशविषाणमासादयेत्
न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ||

லபே⁴த ஸிகதாஸு தைலமபி யத்னத: பீட³யன்
பிபே³ச்ச ம்ருʼக³த்ருʼஷ்ணிகாஸு ஸலிலம்ʼ பிபாஸார்தி³த: |
கதா³சித³பி பர்யடஞ்ஶஶவிஷாணமாஸாத³யேத்
ந து ப்ரதினிவிஷ்டமூர்க²ஜனசித்தமாராத⁴யேத் ||

அந்வயம்

यत्नत: सिकतासु पीडयन् तैलमपि लभेत
पिपासार्दित: मृगतृष्णिकासु सलिलं पिबेत् च
कदाचिद् अपि पर्यटन् शशविषाणम् आसादयेत्
प्रतिनिविष्टमूर्खजनचित्तम् न तु आराधयेत्

யத்நத: முயற்சியால், ஸிகதாஸு பீட³யந் கற்களை அரைத்து உடைப்பதன் மூலம், தைலமபி லபே⁴த எண்ணை கிடைக்கக் கூடும். பிபாஸார்தி³த: தாகத்தால் தவிப்பவர்கள், ம்ருʼக³த்ருʼஷ்ணிகாஸு கானல் நீரில், ஸலிலம்ʼ தண்ணீர் பிபே³த் ச அருந்த இயலும், கதா³சித்³ அபி எப்போதாவது, அபி பர்யடந் அலைந்து திரிந்து, ஶஶவிஷாணம் முயற்கொம்பை, ஆஸாத³யேத் அடைய முடியும். (ஆனால்) ப்ரதிநிவிஷ்டமூர்க²ஜனம் அருகில் இருக்கும் முட்டாள் மனிதனின் சித்தம் ந ஆராத⁴யேத் மனதை அடைய முடியாது.

வியாக்கியானத்திலிருந்து…

यत्नत: कुतश्चित् प्रयत्नात् – முயற்சியால்
पीडयन् केनचित् यन्त्रेण संमर्दयन् लभेत लब्धुं शक्नुयात् – ஏதாவது இயந்திரத்தால் நன்கு அரைப்பதால்
கிடைக்கலாம்
पातुं इच्छा पिपासा – பிபாஸா என்பது குடிக்கும் இச்சை
तया आर्दित: पीडित: – அதனால் அவதிப்படுபவன்
तृष्णातूर: – தீவிரமான ஆசை உடையவன்
मृगतृष्णिकासु मरुमरीचिकासु अपि जलभ्रममात्रदायिनीषु अपि इति भाव: – பாலைவனத்தில் ஏற்படும் கானல் நீரில்
सलिलं जलं पिबेत् पातुं शक्नुयात् – நீர் அருந்த இயலும்
पर्यटन् वनान्तरे सञ्चरन् – காட்டில் அலைந்து திரிந்து
कदाचित् कस्मिंचित् समये – ஏதாவது ஒரு சமயத்தில்
शशस्य मृगविशेषस्य विषाणं शृङ्गमपि – முயலின் கொம்பு
आसादयेत् अधिगन्तुं शक्नुयात् – அடைய முடியும்
सिकतातैललाभादिवत् अत्यन्तदुर्गटम् मूर्खचित्तसमारादनं इति भाव: – கல்லில் எண்ணை எடுப்பது போல மிகவும் கடினம் மூர்க்கனின் மனதை அடைவது

முயற்கொம்பு, கானல் நீர், கல்லில் எண்ணை எடுப்பது என்று இயலாத செயல்களைக் கூட செய்து விடலாம் ஆனால் முட்டாளின் மனதை அடைய முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவி. இந்த உதாரணங்கள் இல்லவே இல்லாத நடக்கவே முடியாத செயல்களைக் குறிக்க அடிக்கடி இலக்கியங்களில் பயன்படுத்தப் படும். ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு விரிவுரை (வார்த்திகம்) எழுதிய சுரேஸ்வராசாரியார் இவை எல்லாவற்றையும் ஒரே ஸ்லோகத்தில் கொண்டு வந்து வேடிக்கையாகச் சொல்கிறார்

मृगतृष्णाम्भसि स्नात: खपुष्पकृतशेकर: |
एष वन्द्यासुतो याति शशशृङ्गधनुर्धर: ||

ம்ருʼக³த்ருʼஷ்ணாம்ப⁴ஸி ஸ்நாத: க²புஷ்பக்ருʼதஶேகர: |
ஏஷ வந்த்³யாஸுதோ யாதி ஶஶஶ்ருʼங்க³த⁴னுர்த⁴ர: ||

கானல் நீரில் குளித்த, ஆகாயத்தில் மலர்ந்த தாமரையை தலையில் சூடிய, மலடியின் மகன், முயற்கொம்பை வில்லாக எடுத்துக் கொண்டு செல்கிறான். ம்ருʼக³த்ருʼஷ்ணாம்ப⁴ஸி என்பது கானல் நீர். க² என்பது ஆகாயம். க²புஷ்பம் என்பது ஆகாயத்தில் மலர்ந்த தாமரை. இதற்கு க³க³நாரவிந்தம் என்றும் பெயர். இதுவும் உலகில் காண முடியாத ஒன்று தான்.

மேலே கண்ட இரு ஸ்லோகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விதிலிங் அமைப்பில் நடக்க முடியாதவற்றைச் சொல்லி மூர்க்கனின் மனதை மாற்றவே முடியாது என்று அறிவுறுத்துகிறது.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)