பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3

[முன்னுரை: பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.]

-: முந்தைய பகுதிகள் :-

अज्ञ: सुखमाराध्य: सुखतरमाराध्यते विशेषज्ञ: |
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि च तं नरं न रंजयति॥

அஜ்ஞ: ஸுக²மாராத்⁴ய: ஸுக²தரமாராத்⁴யதே விஸே²ஷஜ்ஞ: |
ஜ்ஞானலவது³ர்வித³க்³த⁴ம்ʼ ப்³ரஹ்மாபி ச தம்ʼ நரம்ʼ ந ரஞ்ஜயதி||

பதச்சேதம்

அஜ்ஞ: ஸுக²ம் ஆராத்⁴ய: ஸுக²தரம் ஆராத்⁴யதே விஶேஷஜ்ஞ: |
ஜ்ஞான லவ து³ர்வித³க்³த⁴ம்ʼ ப்³ரஹ்மா அபி ச தம்ʼ நரம்ʼ ந ரஞ்ஜயதி||

அந்வயம்

அஜ்ஞ: = கல்வியறிவு இல்லாதவன்; ஸுக²ம் ஆராத்⁴ய: = எளிதில் புரிந்து கொள்ள செய்ய முடியும்; ஸுக²தரம் ஆராத்⁴யதே விஶேஷஜ்ஞ: = கல்வி அறிவுள்ளவனுக்கு மேலும் எளிதாக புரிந்து கொள்ளச் செய்ய முடியும்; ஜ்ஞான லவ து³ர்வித³க்³த⁴ம்ʼ = ஞானத்தை லவலேசம் தவறாக தெரிந்து கொண்டவனுக்கு (அரைகுறையாக தெரிந்து கொண்டவனுக்கு); ப்³ரஹ்மா அபி ச தம்ʼ நரம்ʼ ந ரஞ்ஜயதி = பிரம்மனாலும் அவனுக்கு திருப்தி அளிக்கும் படி செய்ய முடியாது

வியாக்கியானத்திலிருந்து…

न जानातीति अज्ञ: | मूढ इति यावत् – ஜ்ஞ: என்பது அறிவுடையவன், ஒன்றும் அறியாதவன் அஜ்ஞ:. மூடன் என்று அர்த்தம்.
सुखम् अक्लेशेन – சுகமாக, கஷ்டமின்றி
आराध्य: समाधेय: – அடையச் செய்தல்
तस्य उपदेश मात्रेण एव – அவனுக்கு உபதேசத்தின் வழியாகவே
विस्रम्भ संभवात् इति भाव – புரிந்து கொள்ளுதல் நிகழும். समौ विस्रम्भविश्वासौ என்கிறது அமரகோசம். விஸ்ரம்ப என்பது விசுவாசம், நம்பிக்கை.
विशेषं जानाति इति विशेषज्ञ – நன்கு கற்றவர் விசேஷஜ்ஞ:
सुखतरं अत्यन्त अनायाशेन इति अर्थ: – மிகவும் அனாயாசமாக என்று அர்த்தம்
तत् बुद्धे सर्वदा विशेषग्रहणमात्र पर्यवसानात् इति भाव: – அவர் புத்தியில் எப்போதும் விசேஷ ஞானத்தை அடைவதிலேயே முடிவாக இருப்பதால்
किंतु ज्ञानं शास्त्रजन्यसंवित् – சாஸ்திரங்களின் வழியாக கிடைத்த ஞானம்
तस्य लवेन – அதில் ஒரு துளி
दुर्विदग्धं पण्डितमानिनं नरम् – முட்டாள் தனமாகக் கற்றவன் पण्डितमानिन् என்ற சப்தத்துக்கு முட்டாள் என்று அர்த்தம்
ब्रह्मा अपि, कर्तुं अकर्तुं अन्यथा कर्तुं समर्थ: चतुर्मुखोऽपि किमुत अन्य इति भाव: – ஒன்றை செய்வது, செய்யாமல் இருப்பது, வேறு விதத்தில் செய்வது என்ற சாமர்த்தியம் படைத்த நானுமுகனும் கூட என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும் कर्तुं अकर्तुं अन्यथा कर्तुं समर्थ: என்பது ஒரு சொலவடை (idiom). किमुत अन्य என்கிற பதமும் ஒரு வழக்குச் சொல். அவராலேயே முடியாது என்றால் மற்றவரைப் பற்றி சொல்லவா வேண்டும் என்று அர்த்தம்
न रञ्जयितुं शक्नोति – புரிந்து கொள்ளச் செய்யமுடியாது
तन्मनस: सूक्तिसहस्रैरपि समाधान असंभावाद् इति भाव: – ஆயிரம் நல்ல விஷயம் சொன்னாலும் அவன் மனதில் சமாதானம் ஏற்படாது

சொற்பிரயோகங்கள்

ஜ்ஞ என்கிற ஒரேழுத்திலேயே அறிதல் உள்ளவன் என்ற அர்த்தத்தை வைத்துக் கொண்டு அஜ்ஞ, விசேஷஜ்ஞ என்று இரு

விதமாக முட்டாளையும் அறிவாளியையும் சுட்டுகிறார். தமிழிலும் ஞ என்பதை சேர்த்து அறிஞன் என்கிற சொல் இங்கே குறிப்பிடத் தக்கது.

1 Comment பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3

  1. Balasubramanian N.

    மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது எடுத்துக்கொண்ட நன்மொழி’யின் பதவுரை, சொல்பொருள் இலக்கணம். இலக்கணப்பாடத்தைத்தாண்டி இந்தச் செய்யுள்களின் அருமை அவற்றின் கவிதாரஸத்தில் கவிதையழகில் இருப்பதால், அந்த கவிப்பொருட்சுவையையும் முயன்ற அளவு மொழி மாற்றம் செய்து காட்டினீரானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! உதாரணத்துக்கு இந்தச்செய்யுளுக்கே உள்ள ஒரு ’சுளு’வான மொழிபெயர்ப்பு:-

    ” ஒன்றும் அறியாதவனைத் திருப்திப்படுத்தலாம், மிக்க அறிவாளியையும் இன்னும் சுலபமாகவே திருப்திப்படுத்தலாம். ஆனால் இந்த ஆட்டம்போடுகிற அரைவேக்காட்டை ஆண்டவனால் கூடத் திருப்திசெய்யமுடியாது!” எனும் வரிகள் மூல ஸம்ஸ்க்ருதக் கவிதையில் மிளிரும் கிண்டல்சுவைச்சிறப்பை உணர்த்துகிறது. அது போலவே எல்லா நன்மொழிகளுக்கும் தங்கள் அரிய பதவுரை விளக்கத்தோடு ரஸத்தை – கவிச்சுவையை- பிரதிபலிக்கும் எளிய மொழிபெயர்ப்புகளையும் தாருங்களேன்!

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)