பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2

[முன்னுரை: பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.]

-: முந்தைய பகுதிகள் :-

बोद्धारो मत्सरग्रस्ताः प्रभवः स्मयदूषिताः।
अबोधोपहताश्चान्ये जीर्णमङ्गे सुभाषितम्॥

போ³த்³தா⁴ரோ மத்ஸரக்³ரஸ்தா​: ப்ரப⁴வ​: ஸ்மயதூ³ஷிதா​: |
அபோ³தோ⁴பஹதாஸ்²சாந்யே ஜீர்ணமங்கே³ ஸுபா⁴ஷிதம் ||

பதச்சேதம்

போ³த்³தா⁴ர: ‘மத்ஸர க்³ரஸ்தா​: ப்ரப⁴வ​: ஸ்மயதூ³ஷிதா​: |
அபோ³த⁴: உபஹதா: ச அந்யே ஜீர்ணம் அங்கே³ ஸுபா⁴ஷிதம் ||

அந்வயம்

போ³த்³தா⁴ர: (बोद्धार:) = அறிவாளிகள், மத்ஸர க்³ரஸ்தா​:(मत्सर ग्रस्ताः) = பொறாமையால் ஆட்பட்டவர்கள், ப்ரப⁴வ​: = பிரபுக்கள் (அரசர்கள், அதிகாரிகள்), ஸ்மய தூ³ஷிதா​: = கர்வத்தில் மூழ்கியவர்கள், அன்யே (अन्ये) = மற்றவர்கள், அபோ³த⁴ உபஹதா: (अबोध उपहता:) = அறியாமையால் நலிந்தவர்கள், ஸுபா⁴ஷிதம் = நன்மொழிகள், அங்கே³ = உடலில், ஜீர்ணம் = அழிந்து போனது

வியாக்கியானத்திலிருந்து…

बोद्धार: परिज्ञातार: = அறிவாளிகள், நன்கு கற்றவர்கள், போ³த்³தா⁴ர:, பரிஜ்ஞாதார: இரண்டும் ஒரே அர்த்தம் உள்ளவை.

‘बुध अवगमने’ इति अस्मात् धातो: तृच् = “பு³த⁴ கற்றலில்” என்கிற தாது பாடத்தின் படி “பு³த⁴” என்கிற தாதுவுடன் த்ருச் பிரத்யயம் சேரும் போது, போ³த்³தா⁴ என்று ஆகிறது. கற்றவர் என்று அர்த்தம்.

मत्सरेण असूयया = பொறாமையினால், மத்ஸர:, அஸூயா இரண்டும் பொறாமை என்ற அர்த்தம்.

परोत्कर्ष असहनेन = அடுத்தவர் முன்னேற்றத்தை பொறுக்க மாட்டாததால் (பர உத்கர்ஷ – வேறொருவரின் ஏற்றம்)

ग्रस्ताः = முற்றிலுமாக ஈடுபட்டவர்கள் (சிந்தாக்³ரஸ்த: என்பது சிந்தனையில் மூழ்கியவர் என்று அர்த்தம்)

समाक्रान्ता: = ஆட்பட்டவர்கள்

अत: न अनुमोदन्त इति भाव: = அதனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது உட்பொருள்

प्रभव: राजान: = பிரபுக்கள், அரசர்கள்

स्मयदूषिताः गर्वदुर्विनीता: = கர்வத்தால் ஆட்பட்டவர்கள்

न तु विनय प्रह्वा: = வினயத்தால் பணிந்தவர்கள் அல்லர் (ப்ரஹ்வா என்றால் பணிதல்)

अत: न शृण्वन्ति इति भाव: = அதனால் கேட்கமாட்டார் என்பது உட்பொருள்

अन्ये = மற்றவர்களில்

उक्त: उभय व्यतिरिक्त जना: = சொன்னவர்களில் இவர்கள் இருவர் தவிர்த்த மற்றவர்கள்

अबोधेन अज्ञानेन उपहता: = அறியாமையால் கல்வியறிவு இல்லாமையால் பாதிக்கப் பட்டவர்கள்

नष्टात्मान: = அறிவு குன்றியவர்கள்

ते न अधिकारिण: = அவர்கள் தகுதியற்றவர்கள்

अत: तेषां आकर्णन योग्यता अपि नास्ति इति भाव; = அதனால் அவர்கள் கேட்டுப் புரிந்து கொள்ள தக்கவர்கள் அல்லர் என்பது உட்பொருள்

तस्मात् = ஆகவே

सुभाषितं साधुभाषणं प्रियवचनं इति यावत् = நன்மொழிகள் கனிவான அறிவுரைகள் ஆகியவை (சுபாஷிதம், ஸாதுபாஷணம், ப்ரியவசனம் எல்லாம் ஒரே பொருள்)

अङ्गे अन्तरङ्गे = உள்மனதில்

जीर्णम् अन्तर्हितं = மறைக்கப் பட்டது

न तु अद्यापि बहि: प्रवृत्तं = இன்றுவரை வெளியே சொல்லப் படவில்லை

तथा अपि वक्ष्यामि इति वाक्यशेष: = இருந்தாலும் சொல்கிறேன் என்பது இதன் நீட்சி

சொற்பிரயோகங்கள்:

போ³த்³தா⁴ (बोद्धा) = அறிவாளி. சம்ஸ்க்ருதத்தில் ஒரு வேர்ச்சொல்லுக்கு பல பின்னொட்டு சொற்கள் (suffix – प्रत्ययम्) சேர்ந்து புதிய அர்த்தங்களை அளிக்கும். ப்ரத்யயம் என்று பெயர். இதில் த்ருச் (तृच्) என்றொரு ப்ரத்யயம் இருக்கிறது. இதை வேர்ச்சொல்லுடன் (தாது அல்லது root) சேர்க்கும் போது, ஒரு செயலை/குணத்தை தன்னிடத்தே கொண்டிருப்பவர்.

நீ ப்ராபணே (नी प्रापणे) என்பது தாது. இழுத்து செல்லுதல் என்ற அர்த்தம். நயதி (नयति) என்று வினைச்சொல் இந்த தாதுவில் இருந்து உருவாக்கு. நீ என்பதுடன் த்ருச் ப்ரத்யயம் சேரும் போது, நேதா என்று ஆகிறது – தலைவர் என்று அர்த்தம். அது போல “பு³த⁴ (அறிதல்) என்கிற தாதுவுடன் த்ருச் ப்ரத்யயம் சேரும் போது, போ³த்தா⁴ (அறிவாளி) என்று ஆகிறது.

மத்ஸர: (मत्सर:) = பொறாமை என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் அஸூயா (असूया), மத்ஸர: (मत्सर:), த்வேஷ: (द्वेष:), ஈர்ஷ்யா (ईर्ष्या), அக்ஷாந்தி (अक्षान्ति) என்று பல பதங்கள் உண்டு. மத்ஸரோ அன்யஸுப⁴த்³வேஷே (मत्सरो अन्यशुभद्वेषे ) என்கிறது அமரகோசம். அடுத்தவர் செழிப்பாக இருப்பதை கண்டு பொறுக்க மாட்டாத தன்மை. பரஸம்பத்தி அஸஹனே மத்ஸர: என்கிறது வியாக்யானம். மதமாச்சரியம் என்று கேள்விப் பட்டிருக்கலாம். மத்ஸர: என்பதிலிருந்து தான் மாத்ஸர்யம் (मात्सर्य्यम्) என்கிற சொல் வருகிறது. மதமாச்சரியம் என்பது மற்ற மத வெறுப்பு, பொறாமை.

(தொடரும்)

5 Comments பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2

 1. சு பாலச்சந்திரன்

  கல்வித்தொடர்கள் வரிசையில் இந்த கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. நன்றிகள் பல. கட்டுரை ஆசிரியரின் பெயரையும் வெளியிட்டால் , அவர் பெயருக்கும் நன்றி தெரிவிப்போம்.

 2. MohanKumar V

  மிக அருமையான வலை தளம் இது. உங்கள் முயற்சி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

 3. P.S. Raman

  Great inputs in a nice way . The designer of this website and the team which is maintaining deserve appreciation and we welcome this great effort
  .Pls continue. I happened to see this only last week for the first time. Since then I visit this web site every day for one or other infm.
  The links are well placed and connected too.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)