வடமொழியில் உரையாடுங்கள் – 4

மற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2 , பகுதி-3

நிகழ்கால – இறந்த காலச் சொற்கள்

அஸ்தி(अस्ति) – இருக்கிறது (நிகழ் காலம்)
ஏதத் சித்ரம் ஸம்யக் அஸ்தி(एतत् चित्रम् सम्यक् अस्ति) – இந்த படம் நன்றாக இருக்கிறது

அஸ்மி(अस्मि) – இருக்கிறேன் (நிகழ்காலம்)
அஹம் வைத்³ய: அஸ்மி(अहम् वैद्य: अस्मि) – நான் வைத்தியராக இருக்கிறேன் (நான் ஒரு டாக்டர்)

ஆஸம்(आसम्) – இருந்தேன் (இறந்த காலம்)
அஹம் தி³ல்லீ நக³ரே ஆஸம்(अहम् दिल्ली नगरे आसम्) – நான் டில்லி நகரத்தில் இருந்தேன்

ஸ்ம: (स्म:) – இருக்கிறோம் (நிகழ் காலம்)
வயம் சென்னை நகரே ஸ்ம: (वयम् चेन्नै नगरे स्म:) – நாங்கள் சென்னை நகரத்தில் இருக்கிறோம்

ஆஸ்மா(आस्मा) – இருந்தோம் (இறந்த காலம்) 
வயம் வித்³யாலயே சா²த்ரா: ஆஸ்மா(वयम् विद्यालये छात्रा: आस्मा) – நாங்கள் பள்ளியில் மாணவர்களாக இருந்தோம்

ஆஸீத்(आसीत्) – இருந்தது (இறந்த காலம்)
ஹ்ய: போ⁴ஜநம் ஸம்யக் ஆஸீத்(ह्य: भोजनम् सम्यक् आसीत्) – நேற்று சாப்பாடு நன்றாக இருந்தது

ஆஸந்(आसन्) – இருந்தார்கள் (இறந்த காலம்)
வநே ருஷய: ஆஸந் (वने ऋषय: आसन्) – காட்டில் ரிஷிகள் இருந்தார்கள்

ஸ்ம (स्म) – ‘used to’ (இறந்த காலம்) என்ற பொருளில் வரும். அதாவது ஒரு காலத்தில் இருந்தது, இப்போது இல்லை என்ற பொருள்.
வநே ருஷய: வஸதி ஸ்ம (वने ऋषय: वसति स्म) – காட்டில் ரிஷிகள் வாழ்ந்து வந்தார்கள் (இப்போது இல்லை என்று பொருள் படும்)

Back to top

மேலும் சில இறந்த காலச் சொற்கள்

சமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும்.

உதாரணமாக  க³ச்ச²தி (गच्छति) – போகிறான், க³ச்ச²ஸி (गच्छसि) – போகிறாய், க³ச்சா²மி (गच्छामि)  – போகிறேன் ஆகிய மூன்று வினைச்சொற்களின் இறந்த காலத்தை க³தவாந் (गतवान्) என்ற ஒரே இறந்தகால் வினைச்சொல்லில் சொல்லி விடலாம்.

ஸ: க³ச்ச²தி (स: गच्छति) – அவன் போகிறான்
இறந்த காலத்தில், ஸ: க³தவாந் (स: गतवान्) – அவன் போனான்

த்வம் க³ச்ச²ஸி (त्वं गच्छसि) – நீ போகிறாய்
இறந்த காலத்தில், த்வம் க³தவாந் (त्वं गतवान्) – நீ போனாய்

அஹம் க³ச்சா²மி (अहम् गच्छामि) – நான் போகிறேன்
இறந்த காலத்தில், அஹம் க³தவாந் (अहम् गतवान्) – நான் போனேன்

இதே போல மேலும் சில வினைச்சொற்களையும் பயன் படுத்தலாம்:

பட²தி (पठति)  – படிக்கிறான்,  இறந்த காலத்தில் படி²தவாந் (पठितवान्)  – படித்தான்/படித்தாய்/படித்தேன்
லிக²தீ (लिखति) – எழுதுகிறான்,   லிகி²தவாந் (लिखितवान्)   – எழுதினான்
கரோதி (करोति) – செய்கிறான், க்ருதவாந்(कृतवान्)  – செய்தான் 
ஹஸதி (हसति) – சிரிக்கிறான், ஹஸிதவாந் (हसितवान्) – சிரித்தான் 
த³தா³தி (ददाति) – தருகிறான், த³த்தவாந்(दत्तवान्)  – தந்தான் 
திஷ்டதி (तिष्टति) – நிற்கிறான், ஸ்தி²தவாந்(स्थितवान्) – நின்றான் 
க்ரீட³தி(क्रीडति) – விளையாடுகிறான், க்ரீடி³தவாந்(क्रीडितवान्)   – விளையாடினான் 
வத³தி (वदति) – சொல்கிறான், உதி³தவாந்(उदितवान्) – சொன்னான்

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்.  பட²தி (पठति)  என்பது மூன்று பாலினத்திற்கும் பொதுவாக படிக்கிறாள்/படிக்கிறான்/படிக்கிறது என்று பொருளில் வருகிறது. ஆனால் மேலே சொன்ன இறந்த கால வினைச்சொல்லில் படி²தவாந் (पठितवान्) என்பது ஆணை மட்டுமே குறிக்கும். ஒரு பெண் படித்தாள் என்று சொல்ல படி²தவதீ என்றும், படிக்கிறது என்று சொல்ல படி²தவத் என்றும் சொல்ல வேண்டும்.

இவ்வாறாக

க³தவாந் (गतवान्) – போனான், க³தவதீ (गतवती) – போனாள், க³தவத் (गतवत्) – போனது

லிகி²தவாந் (लिखितवान्) – எழுதினான்,  லிகி²தவதீ(लिखितवती) – எழுதுகிறாள், லிகி²தவத்(लिखितवत्) எழுதியது

க்ருதவாந்(कृतवान्) – செய்தான், க்ருதவதீ(कृतवती) – செய்தாள், க்ருதவத்(कृतवत्) செய்தது

ஹஸிதவாந் (हसितवान्) – சிரித்தான், ஹஸிதவதீ(हसितवती) – சிரித்தவள், ஹஸிதவத்(हसितवत्) – சிரித்தது

த³த்தவாந்(दत्तवान्) – தந்தான், த³த்தவதீ(दत्तवती) – தந்தாள், த³த்தவத்(दत्तवत्) – தந்தது

ஸ்தி²தவாந்(स्थितवान्) – இருந்தான், ஸ்தி²தவதீ(स्थितवती) – இருந்தாள், ஸ்தி²தவத்(स्थितवत्) – இருந்தது

க்ரீடி³தவாந்(क्रीडितवान्) – விளையாடினான், க்ரீடி³தவதீ(क्रीडितवती) – விளையாடினாள், க்ரீடி³தவத்(क्रीडितवत्) – விளையாடியது

உதி³தவாந்(उदितवान्) – சொன்னான், உதி³தவதீ(उदितवती ) – சொன்னாள், உதி³தவத்(उदितवत्) – சொன்னது

Back to top

சில/பல, அதிகம் குறைவு…

கிஞ்சித் கஸ்²சித் காசித்(किञ्चित् कश्चित् काचित्) – சில

கிஞ்சித் – சில, நபும்சக லிங்கத்தில் உள்ள சில பொருட்கள் என்று சொல்லும் போது, கிஞ்சித் என்று சொல்ல வேண்டும். சிறிது என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கலாம்.
உதா: கிஞ்சித் த⁴நம் அஸ்தி (किञ्चित् धनम् अस्ति) – சிறிது செல்வம் இருக்கிறது

கஸ்²சித் – புல்லிங்கத்தில் உள்ளவற்றில் சில என்று கஸ்²சித் என்று சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் some என்ற பொருளில் உபயோகிக்கப் படுகிறது.
கஸ்²சித் ராஜா விதி³ஸா² நக³ரே ஆசீத் (कश्चित् राजा विदिशा नगरे आसीत्) – In the city of Vidisha, there was ‘some’ King.

இதே போல ஸ்திரீ லிங்கத்தில் உள்ளவற்றில் சில என்று சொல்ல காசித் என்று சொல்ல வேண்டும்.
காசித் மஹிலா க்³ராமே வஸதி (काचित् महिला ग्रामे वसति) – In the village, there lives some woman.

அதி⁴கம், ப³ஹு(अधिकं, बहु) – நிறைய

ஸீ²தம் அதி⁴கம் அஸ்தி (शीतं अधिकं अस्ति) – குளிர் அதிகமாக இருக்கிறது
உத்³யாநம் ப³ஹு ஸோ²ப⁴நம் அஸ்தி (उद्यानं बहु शोभनं अस्ति) – தோட்டம் அழகாக இருக்கிறது

தீ³ர்க⁴(दीर्घ) – நீளமான, ஹ்ரஸ்வ(ह्रस्व) – சிறிய

ப⁴வத: கேஸ²: தீ³ர்க⁴: அஸ்தி (भवत: केश: दीर्घ: अस्ति) – உங்கள் தலைமுடி நீண்டதாக இருக்கிறது.

தத்ர ஏக ஹ்ரஸ்வ மநுஷ்ய: ஆஸீத் (तत्र एक ह्रस्व मनुष्य: आसीत्) – அங்கே குள்ளமாக/சிறிய மனிதன் ஒருவன் இருந்தான்

உத்தம (उत्तम) – சிறந்த , அத⁴ம(अधम) – மட்டமான

கீ³தம் உத்தமம் அஸ்தி (गीतम् उत्तमं अस्ति) – பாட்டு நன்றாக இருக்கிறது 
ராம: உத்தம மநுஷ்ய: (राम: उत्तम मनुष्य:) – ராமன் சிறந்த மனிதன்.

உந்நத:(उन्नत:) – உயரமான, வாமந(वामन:) – குள்ளமான

வ்ருக்ஷ​: உந்நத​: அஸ்தி (वृक्षः उन्नतः अस्ति) – மரம் உயரமாக இருக்கிறது 
கஸ்²சித் வாமந புருஷ: அஸ்தி (कश्चित् वामन पुरुष: अस्ति) – யாரோ ஒரு (some) குள்ள மனிதன் இருக்கிறான்

ஸ்தூல: (स्तूल:) – குண்டு, க்ருஸ²(कृश:) – ஒல்லி

गज: स्तूल: प्राणि अस्ति (க³ஜ: ஸ்தூல: ப்ராணி அஸ்தி)  – யானை பருத்த/பெரிய/குண்டு  மிருகம்.
भवान्, कृस: अस्ति (ப⁴வாந், க்ருஸ: அஸ்தி) – நீங்கள் ஒல்லியாக (thin) இருக்கிறீர்கள்

புராதந:(पुरातन:) – பழைய , நூதந:(नूतन:) – புதிய

இத³ம் க⁴டிகாயந்த்ரம் புராதநம் (इदम् घटिकायन्त्रम् पुरातनं) – இந்த கடிகாரம் பழையது 
ஏஷ: நூதந அத்⁴யாய: (एष: नूतन अध्याय:) – இது புதிய பாடம்/அத்தியாயம்

உச்சை: (उच्चै:) – உச்ச சப்தத்துடன் (loud),  ஸ²நை:(शनै:) – மெதுவாக (slowly)

ரமா உச்சை: கா³யதி (रमा उच्चै: गायति) – ரமா உச்ச சப்தத்துடன் பாடுகிறாள்
ஸீதா ஸ²நை: கத²யதி (सीता शनै: कथयति) – சீதா மெதுவாக பேசுகிறாள்
ரயில்யாநம் ஸ²நை: க³ச்ச²தி (रयिल्यानं शनै: गच्छति) – ரயில் வண்டி மெதுவாகச் செல்கிறது

பூர்ணம் (पूर्णम्) – முழுமையான,  ரிக்தம் (रिक्तं) – காலியான

க⁴டே ஜலம் பூர்ணம்  அஸ்தி (घटे जलं पूर्णम्  अस्ति) – குடத்தில் நீர் முழுமையாக இருக்கிறது (குடம் நிறைந்து இருக்கிறது)
வாதாயநஸமீபே ரிக்தம் ஸ்த²லம் அஸ்தி (वातायनसमीपे रिक्तं स्थलम् अस्ति) – ஜன்னலின் அருகில் காலி இடம் இருக்கிறது

Back to top
மற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2 , பகுதி-3

28 Comments வடமொழியில் உரையாடுங்கள் – 4

 1. anant kulkarni

  प्रशंसनीयम कार्यं ! अहम् बहु प्रभावितः अस्मि !उद्यमेन हि सिध्यन्ति कार्याणि न मनोरथै !

 2. G.Mahadevan

  என் வயது 54 . நான் சங்க்கதம் உதவியுடன் சம்ஸ்கிருதம் கற்று வருகிறேன். மேலும் கதைகளையும் , உரையாடல்களை வித் சௌண்ட் உடன் போடவும்

 3. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 1 | Sangatham

 4. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 2 | Sangatham

 5. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 3 | Sangatham

 6. renganathan

  भवान,उबयकुसलोबरी
  एतत येंदिरम बहु सम्यक अस्थि
  दनावात
  रेंगानाथान

  येंदिरम

 7. Ravichandran

  வெரி குட் effort .தாய் மொழில் கற்பதை போல சிறந்தது எதுவும் இல்லை.

 8. vasanthasyamalam

  धनं , दीर्घ
  लिखितवती , हसितवती – என்பது தான் சரி என்று நினைக்கிறன் .

 9. संस्कृतप्रिय:

  தவறுகள் திருத்தப் பட்டன. மேலும் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அவசியம் தெரிவிக்கவும். மிக்க நன்றி.

 10. Yogi

  நண்பரே எனக்கு திருமணத்தின் போது கூறப்படும் மங்கலாய மந்திரத்தின் விளக்கமும் தமிழாக்கமும் கிடைக்குமா ! எனது நெடுநாள் ஆசை ..

 11. vasanthasyamalam

  சம்ச்க்ருத்தில் லுங் என்று ஒர் இறந்த காலம் இருக்கிறதே அதன் விபரம் எழுத்வும். தயவுசெய்து. அதிலும் ஏழு வகை உண்டமே அதன் விளக்கம் தர முடியுமா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)