வடமொழியில் உரையாடுங்கள் – 3

மற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2, பகுதி-4

சம்ஸ்க்ருதத்தில் மேலும் பல பொருட்களின் பெயர்களை தெரிந்து கொள்ள எளிய சம்ஸ்க்ருதம் பகுதியை பார்க்கவும். சமஸ்க்ருதத்தில் கமா, காற்புள்ளி, முற்றுப் புள்ளி போன்ற குறியீடுகள் இல்லை (இவை ஆங்கிலத்திலிருந்து வந்தது). சமஸ்க்ருதத்திற்கென்றே சில குறியீடுகள் (punctuation marks) உள்ளன:

இந்த :  குறியின் பெயர் விசர்கம் (विसर्ग:). ஒரு சொல்லின் இறுதியில் இந்த குறி இருந்தால் அதை உயிரெழுத்தை பொறுத்து ஹ என்றோ ஹா என்றோ உச்சரிக்க வேண்டும்.

உதாரணம்: अ: அஹ, आ: ஆஹா, इ: இஹி, ई: ஈஹி, उ: உஹு, ऊ: ஊஹு, ए: எஹே, ऐ: ஐஹி, ओ: ஓஹோ

இந்த | குறி ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதி முடிவைக் குறிக்கும். இதன் பெயர் விராமம் (विराम:). இதையே இரண்டு முறை || எழுதுவதால் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் முடிந்ததைக் குறிக்கும்.  இவ்வாறு இரண்டு முறை || குறிப்பது பூர்ண விராமம் என்று பெயர்.

வினைச்சொற்களில் பன்மை

சமஸ்க்ருதத்தில் ஒருமை (Singular), இருமை (Dual), பன்மை (Plural) என்று மூன்று உண்டு. ஆனால் இந்த தொடரில் ஒருமை பன்மை மட்டும் பார்ப்போம். முந்தைய பகுதியில் பார்த்த சில வினைச்சொற்களையே எடுத்துக் கொள்வோம்:

ஒருமை பன்மை
பட²தி (पठति)
படிக்கிறான்
பட²ந்தி (पठन्ति)
படிக்கிறார்கள்
க³ச்ச²தி (गच्छति)
போகிறான்
க³ச்ச²ந்தி(गच्छन्ति)
போகிறார்கள்
ஆக³ச்ச²தி (गच्छति)
வருகிறான்
ஆக³ச்ச²ந்தி(गच्छन्ति)
வருகிறார்கள்
வத³தி (वदति)
சொல்கிறான்
வத³ந்தி (वदन्ति)
சொல்கிறார்கள்
பிப³தி (पिबति)
குடிக்கிறான்
பிப³ந்தி (पिबन्ति)
குடிக்கிறார்கள்
பஸ்²யதி (पश्यति)
பார்க்கிறான்
பஸ்²யந்தி (पश्यन्ति)
பார்க்கிறார்கள்
அஸ்தி (अस्ति)
இருக்கிறான்
ஸந்தி (सन्ति)
இருக்கிறார்கள்

வினைச்சொற்கள் எந்த பாலையும் (ஆண்பால்/பெண்பால் – அஃறிணை) சார்ந்தது இல்லை. ஆகவே பிப³தி (पिबति) என்பது குடிக்கிறான் அல்லது குடிக்கிறாள் அல்லது குடிக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

Back to top

கேள்விகள்

பேச்சுமுறையில் கேள்விகள் கேட்பது, பதில் சொல்லுவது ஆகியவை முக்கியம். என்ன அது?, எங்கே இருக்கிறது? எப்போது வரும்? போன்ற கேள்விகள் பொதுவான பேச்சு வழக்கில் அவசியம். இந்த பகுதியில் அடிப்படையான கேள்விகள் கேட்பது குறித்த சம்ஸ்க்ருத வாசகங்களை காணலாம்.

கிம் (किम्) – என்ன

தத் கிம்? [तत् किम् ?] =  என்ன அது?
தத் த்³வாரம் [तत् द्वारम्]  அது வாசல்
ஏதத் கிம்? [एतत् किम् ?] = என்ன இது?
ஏதத் கந்து³கம் [एतत् कन्दुकम्] இது பந்து
ப⁴வான் கிம் கரோதி? [भवान् किम् करोति?] = நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
அஹம் தூ³ரத³ர்ஸ²நம்° பஸ்²யாமி [अहम् दूरदर्शनं पश्यामि] நான் தொலைகாட்சி பார்க்கிறேன்
ப⁴வதஹ நாம கிம்? [भवत: नाम किम्?] = உங்கள் பெயர் என்ன?
மம நாம ஸோ²பா⁴ [मम नाम शोभा] என் பெயர் ஷோபா

குத்ர (कुत्र) – எங்கே

பவான் குத்ர க³ச்ச²தி? [भवान् कुत्र गच्छति?] – நீங்கள் எங்கே போகிறீர்கள்?
அஹம் கார்யாலயம் க³ச்சா²மி [अहम् कार्यालयम् गच्छामि]
புஸ்தகம் குத்ர அஸ்தி? [पुस्तकम् कुत्र अस्ति?] – புத்தகம் எங்கே இருக்கிறது?
புஸ்தகம் ஸ்யூதே அஸ்தி [पुस्तकम् स्यूते अस्ति]
வாகனம் குத்ர க³ச்ச²தி? [वाहनम् कुत्र गच्छति?] – வாகனம் எங்கே போகிறது?
வாஹநம் செந்நை நக³ரம்° க³ச்ச²தி [वाहनम् चेन्नै नगरं गच्छति]
லேக²நி குத்ர அஸ்தி? [लेखनि कुत्र अस्ति?] – பேனா எங்கே இருக்கிறது?
லேக²நி பேடிகாயாம் அஸ்தி [लेखनि पेटिकायाम् अस्ति]

கதி (कति) – எத்தனை

ஹஸ்தே கதி அங்குல்ய: சந்தி? [हस्ते कति अङ्गुल्यः सन्ति?] – கையில் எத்தனை விரல்கள் உள்ளன?
ஹஸ்தே பஞ்ச அங்கு³ல்ய: ஸந்தி [हस्ते पञ्च अङ्गुल्य: सन्ति]
கதி மூல்யம்? [कति मूल्यम्?] – எத்தனை விலை?
பஞ்ச ருப்யகாணி [पञ्च रुप्यकाणि]
ப⁴வதஹ கதி மித்ராணி சந்தி? [भवत: कति मित्राणि सन्ति?] – உங்களுக்கு எத்தனை நண்பர்கள் உள்ளனர்?
மஹ்யம்° த்ரீணி மித்ராணி ஸந்தி [मह्यं त्रीणि मित्राणि सन्ति]
கதி சாத்ராஹா க³ச்ச²ந்தி? [कति छात्राः गच्छन्ति?] – எத்தனை மாணவர்கள் செல்கிறார்கள்?
ஷட் சா²த்ரா: க³ச்ச²ந்தி [षट् छात्रा: गच्छन्ति]

கதா³ (कदा) – எப்போது?

ப⁴வான் ப்ராத: கதா³ உத்திஷ்டதி? [भवान् प्रात: कदा उत्थिष्टति?] – நீங்கள் காலையில் எப்போது எழுந்திருக்கிறீர்கள்?
அஹம் ப்ராத: பஞ்ச வாத³நே உத்தி²ஷ்டாமி [अहम् प्रात: पञ्च वादने उत्थिष्टामि]
ரயில்யானம் கதா³ ஆக³ச்ச²தி? [रेल्यानम् कदा आगच्छति?] – ரயில் வண்டி எப்போது வருகிறது?
ரயில்யாநம்° ஷட் வாத³நே ஆக³ச்ச²தி [रयिल्यानं षट् वादने आगच्छति]
ப⁴வான் கார்யாலயம் கதா³ க³ச்ச²தி? [भवान् कार्यालयम् कदा गच्छति?] – நீங்கள் அலுவலகத்துக்கு எப்போது போகிறீர்கள்?
அஹம் நவ வாத³நே கார்யாலயம் க³ச்சா²மி  [अहम् नव वादने कार्यालयम् गच्छामि]

குதஹ (कुत:) – எங்கிருந்து?

ப⁴வான் குதஹ ஆக³ச்ச²தி? [भवान् कुत: आगच्छति?] – நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
அஹம் க்³ருஹத: ஆக³ச்சா²மி[अहम् गृहत: आगच्छामि]
ப⁴வான் ஏதத் குதஹ ஆநயதி? [भवान् एतत् कुत: आनयति?] – நீங்கள் இதனை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்?
அஹம் பே³ந்க³லூருத: ஆநயாமி [अहम् बेन्गलूरुत: आनयामि]

Note: குதஹ என்பது ஏன் என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கலாம்.

கத²ம் (कथम्) – எப்படி?

ப⁴வான் கத²ம் அஸ்தி? [भवान् कथम् अस्ति?] – நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
அஹம் ஸம்யக் அஸ்மி [अहं सम्यक् अस्मि] – நான் நன்றாக இருக்கிறேன்.
கார்யம் கத²ம் அஸ்தி? [कार्यम् कदम् अस्ति?] – வேலை எப்படி இருக்கிறது?
ஸர்வம் ஸம்யக் அஸ்தி [सर्वं सम्यक् अस्ति] – எல்லாம் நன்றாக இருக்கிறது.
தமிழ்நாடு³ ப்ரதே³ஸே²  கத²ம் ஸீ²தோஷ்ண: அஸ்தி?  [तमिळ्नाडु प्रदेशे कथम् शीतोष्ण: अस्ति?] – தமிழ்நாடு பிரதேசத்தில் தட்பவெப்ப நிலை எப்படி?
தமிழ்நாடு³ ப்ரதே³ஸே² ஸீ²தோஷ்ண: ஸீ²தலம் அஸ்தி [तमिळ्नाडु प्रदेशे शीतोष्ण: शीतलं अस्ति] – தமிழ் நாடு பிரதேசத்தில் தட்பவெப்பம் குளிர்ச்சியாக இருக்கிறது.

கிமர்த²ம் (किमर्थम्) – ஏன்?

ப⁴வான் கிமர்த²ம் ஹஸதி? [भवान् किमर्थम् हसति?] – ஏன் சிரிக்கிறீர்கள்?
அஹம் ஹாஸ்ய சித்ரம் பஸ்யாமி [अहम् हास्य चित्रम् पश्यामि] நான் ஒரு நகைச்சுவை படம் பார்க்கிறேன்
ப⁴வான் கிமர்த²ம் தத்ர க³ச்ச²தி? [भवान् किमर्थम् तत्र गच्छति?] – நீங்கள் ஏன் அங்கு செல்கிறீர்கள்?
அஹம் க்ரீடார்த்தம் தத்ர க³ச்சா²மி [अहम् क्रीडार्थम् तत्र गच्छामि] – நான் விளையாடுவதற்காக செல்கிறேன்.

Back to top

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு

இத: [इत:]  – இங்கிருந்து, இப்போதிலிருந்து,

அஹம் இத: தத்ர க³ச்சா²மி [अहम् इत: तत्र गच्छामि] – நான் இங்கிருந்து அங்கே போகிறேன்.
அஹம் இத: கார்யாலயம் க³ச்சா²மி [अहम् इत: कार्यालयम् गच्छामि] – நான் இங்கிருந்து அலுவலகம் செல்கிறேன்.

தத: [तत:]  – அங்கிருந்து, அப்போதிலிருந்து

ஏதத் வாஹநம் தத: அத்ர ஆக³ச்ச²தி [एतत् वाहनम् तत: अत्र आगच्छति அஹம் தத: சென்னைநக³ரம் க³ச்சா²மி [अहम् तत: चेन्नैनगरं गच्छामि] – நான் அங்கிருந்து சென்னை செல்கிறேன்.

ஒரு வார்த்தையின் முடிவில் தஹ (த:) என்ற

க்³ருஹத: [गृहत:]  – வீட்டிலிருந்து
கார்யாலயத: [कार्यालयत:] – அலுவலகத்திலிருந்து

சில உதாரணங்கள்:

ப்ராத: காலே க்³ருஹத: கார்யாலயம் க³ச்சா²மி [प्रात: काले गृहत: कार्यालयम् गच्छामि ] – காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்கிறேன்.
கார்யாலயத: ஆபணம் க³ச்சா²மி [कार्यालयत: आपणम् गच्छामि] – அலுவலகத்திலிருந்து கடைக்கு செல்கிறேன்.
ஆபணத: க்³ருஹம் க³ச்சா²மி [आपणत: गृहम् गच्छामि] – கடையிலிருந்து வீட்டிற்கு செல்கிறேன்.

***

இதே போல  இரண்டு மணித்துளிகளுக்கு இடையில் உள்ள கால இடைவெளியையும் கூறலாம்.

“உதாரணமாக இன்று மாலை நான்கு மணியிலிருந்து ஐந்து மணிவரை சமஸ்க்ருத வகுப்பு இருக்கிறது.” என்கிற வாக்கியத்தை இவ்வாறு சொல்லலாம்:
அத்⁴ய சதுர்வாத³நத: பஞ்ச வாத³ந பர்யந்தம் ஸம்ஸ்க்ருத கக்ஷா அஸ்தி  [अध्य चतुर्वादनत: पञ्च वादन पर्यन्तम् संस्कृत कक्षा अस्ति]

திங்கள்  முதல் வெள்ளி வரை பள்ளிக் கூடம் செல்கிறேன் என்பதை இவ்வாறு சொல்லலாம்:
ஸோமவாஸரத: ஸு²க்ரவாஸர பர்யந்தம் பாட²ஸா²லாம் க³ச்சா²மி [सोमवासरत: शुक्रवासर पर्यन्तम् पाठशालाम् गच्छामि]

பஞ்ச தி³நாங்கத: த³ஸ² தி³நாங்க பர்யந்தம் பரிக்ஷா அஸ்தி  [पञ्च दिनाङ्कत: दश दिनाङ्क पर्यन्तं परिक्षा अस्ति]
ஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை தேர்வு இருக்கிறது.

Back to top

இடங்கள்

அத⁴: [अध:] – கீழே
தீ³பஸ்ய அத⁴: சா²யா அஸ்தி  [दीपस्य अध: छाया अस्ति] – விளக்கின் கீழே நிழல் இருக்கிறது

உபரி [उपरि] – மேலே
புஸ்தகஸ்ய உபரி லேக²நி அஸ்தி [पुस्तकस्य उपरि लेखनि अस्ति] – புத்தகத்தின் மேலே பேனா இருக்கிறது.

புரத: [पुरत:] – முன்னால்  /  ப்ருஷ்ட²த: [पृष्ठत:] – பின்னால்
மம புரத: ராஜு அஸ்தி |  [मम पुरत: राजु अस्ति] – எனக்கு முன்னாள் ராஜூ இருக்கிறான்
மம ப்ருஷ்ட²த: கோ³பால: அஸ்தி |[मम पृष्ठत: गोपाल: अस्ति] – எனக்கு பின்னால் கோபாலன் இருக்கிறான்

த³க்ஷிணத: [दक्षिणत:] – வலது புறத்திலிருந்து / வாமத: [वामत:] – இடது புறத்திலிருந்து
மம த³க்ஷிணத: மஹேஸ²: அஸ்தி [मम दक्षिणत: महेश: अस्ति] – எனக்கு வலது பக்கத்தில் மகேசன் இருக்கிறான்
மம வாமத: ரமேஸ²: அஸ்தி [मम वामत: रमेश: अस्ति] – என்னுடைய இடது புறத்தில் ரமேஷ் இருக்கிறான்.

மத்⁴யே [मध्ये] என்பது நடுவில் என்று பொருள் படும்.
உதா: நக³ரஸ்ய மத்³யே தே³வாலயம் அஸ்தி  [नगरस्य मद्ये देवालयम् अस्ति] – நகரின் நடுவில் கோவில் இருக்கிறது.

மேலும் சில உதாரணங்கள்:

மம க்³ரஹஸ்ய புரத: ஆம்ரவ்ருக்ஷம் அஸ்தி [मम ग्रहस्य पुरत: आम्रवृक्षं अस्ति]
எனது வீட்டிற்கு முன்னால் மாமரம் இருக்கிறது.
ஆம்ரவ்ருக்ஷஸ்ய உபரி ஆம்ரப²லாநி ஸந்தி [आम्रवृक्षस्य उपरि आम्रफलानि सन्ति]
மாமரத்தின் மேலே மாம்பழங்கள் இருக்கின்றன.
ஆம்ரவ்ருக்ஷஸ்ய அத⁴: மநுஷ்ய: உபவிஸ²தி [आम्रवृक्षस्य अध: मनुष्य: उपविशति]
மாமரத்துக்கு கீழே மனிதன் உட்கார்ந்திருக்கிறான்.
ஆம்ரவ்ருக்ஷஸ்ய த³க்ஷிணத: மந்தி³ரம் அஸ்தி [आम्रवृक्षस्य दक्षिणत: मन्दिरम् अस्ति
மாமரத்தின் வலதுபக்கத்தில் கோவில் இருக்கிறது
மந்தி³ரஸ்ய வாமத: ஆம்ர வ்ருக்ஷ: அஸ்தி [मन्दिरस्य वामत: आम्र वृक्ष: अस्ति]
கோவிலுக்கு இடது புறத்தில் மாமரம் இருக்கிறது.

Back to top

மற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2, பகுதி-4

8 Comments வடமொழியில் உரையாடுங்கள் – 3

  1. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 2 | Sangatham

  2. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 1 | Sangatham

  3. T.Venkatesa gurukkal

    மிக மிக மிக அருமை,தொடர்ந்து பதியவும்.நாங்கள் மிக விரும்புகிறோம்.அப்படியே சம்பூ பாரதம் அல்லது சம்பூ ராமாயணத்திலுள்ள கத்யங்களை தமிழ் விளக்கத்துடன் பதியவும்.தன்யவாத:

  4. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 4 | Sangatham

  5. savitha

    சங்கதம் மூலம் நாங்கள் சமஸ்க்ருதம் எழுத படிக்க விரும்புகின்றோம் ஏனெனில் சங்கதத்தில் நாடியுள்ள கற்கும் முறை மிகவும் சுலபமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்
    ஆதலால் சமஸ்க்ருத மொழியை தமிழில் கற்கும் பாடங்களை தயவுசெய்து எங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் மிகவும் உபயோகமாகவும் உபகாரமாகவும் இருக்கும். நன்றி.

  6. கே.எஸ்.பொன்னம்பலம்

    சமஸ்கிருதம் கற்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒர் நல்ல பயிற்சி. எளிமையான அன்றாடம் வாழ்க்கையில் பயன்ப்டுத்தும் சொற்களையே பாடமாக அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அ, ஆ இ, ஈ, போன்ற எழுத்துக்ளுக்கு சமஸ்ககிருத எழுத்துக்களை அமைத்துப் பாடமாக வெளியிட்டிருக்கலாம். நன்றி

  7. விஜயலட்சுமி

    வணக்கம்
    என்னைப் போன்ற பல பேருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. ஸ்வாமி ஸ்லோகங்களை சரியாக உச்சரிக்கவும், அர்த்தம் தெரிந்து சொல்லவும் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)