வடமொழியில் உரையாடுங்கள் – 2

மற்ற பகுதிகள்: பகுதி-1, பகுதி-3, பகுதி-4

விருப்பங்கள்

ஒரு பொருள் வேண்டும் என்று சொல்ல,  ஆவஶ்யகம் (आवश्यकम्) என்று சொல்லலாம்.  சில உதாரணங்கள்,

ஜலம் ஆவஶ்யகம் வா (जलम् आवश्यकम् वा?)
நீர் வேண்டுமா?

புஸ்தகம் ஆவஶ்யகம் வா (पुस्तकम् आवश्यकम् वा?)
புத்தகம் வேண்டுமா?

ஆம், ஆவஶ்யகம். (आम्, आवश्यकम्)

வேண்டாம் என்று சொல்ல மாஸ்து (मास्तु) என்று சொல்ல வேண்டும்.

க்ரோத³​ஹ மாஸ்து (क्रोदः मास्तु) க்ரீடா³ மாஸ்து (क्रीडा मास्तु )
கோபம் வேண்டாம். விளையாட்டு வேண்டாம்

சரி (Ok) (ஆகட்டும்) என்று சொல்ல அஸ்து (अस्तु) என்று சொல்லலாம்.

ந (न) என்றால் இல்லை என்று பொருள்.

Back to top

ப³ந்து⁴ வாசக:(बन्धु वाचक:)உறவினர்கள்

1.  பிதா (पिता) – மாதா (माता) – புத்ரஹ (पुत्र:) – புத்ரிஹி (पुत्रि:)

உதா: லவஸ்ய பிதா ராமஹ |  ராமஸ்ய புத்ரஹ  லவஹ | [लवस्य पिता राम: | रामस्य पुत्र: लव: |] ஸீதாயாஹா பிதா ஜநகஹ |  ஜநகஸ்ய புத்ரிஹி ஸீதா | [सीताया: पिता जनक: | जनकस्य पुत्रि: सीता] ராமஸ்ய மாதா கௌஸல்யா |  கௌஸல்யாயாஹா புத்ரஹ ராமஹ | [रामस्य माता कौसल्या | कौसल्याया: पुत्र: राम: |]

2.  அக்³ரஜஹ (अग्रज:) = முன்னாள் பிறந்தவன்  – அநுஜஹ (अनुज:) = அடுத்து பிறந்தவன்./ அக்³ரஜா (अग्रजा ) = முன்னால் பிறந்தவள் / அநுஜா (अनुजा) = அடுத்து பிறந்தவள்

உதா: ராமஸ்ய அநுஜஹ ப⁴ரதஹ |  ப⁴ரதஸ்ய அநுஜஹ லக்ஷ்மணஹ |  லக்ஷ்மணஸ்ய அநுஜஹ ஶத்ருக்³நஹ | [रामस्य अनुज: भरत:| भरतस्य अनुज: लक्ष्मण: | लक्ष्मणस्य अनुज: शत्रुग्न: | ] ஶத்ருக்³நஸ்ய அக்³ரஜஹ லக்ஷ்மணஹ |  லக்ஷ்மணஸ்ய அக்³ரஜஹ ப⁴ரதஹ |  ப⁴ரதஸ்ய அக்³ரஜஹ ராமஹ | [शत्रुग्नस्य अग्रज: लक्ष्मण:| लक्ष्मणस्य अग्रज: भरत: | भरतस्य अग्रज: राम: |]. ஸீதாயாஹா அநுஜா ஊர்மிளா |  ஊர்மிலாயாஹா அக்³ரஜா ஸீதா | [सीताया: अनुजा ऊर्मिला | ऊर्मिलाया: अग्रजा सीता |]

3. பிதாமஹஹ (पितामह:)  = தந்தையின் தந்தை – [பௌத்ரஹ (पौत्र:) = மகன் வழி பேரன், பௌத்ரிஹி (पौत्रि:) = மகன் வழி பேத்தி], மாதாமஹஹ (मातामह:) = தாயாரின் தகப்பனார் – [தௌ³ஹித்ரஹ (दौहित्र:) = மகள் வழி பேரன், தௌ³ஹித்ரிஹி(दौहित्रि:) = மகள் வழி பேத்தி]

உதா: லவஸ்ய பிதாமஹஹ த³ஶரத²ஹ |  த³ஶரத²ஸ்ய பௌத்ரஹ லவஹ | [लवस्य पितामह दशरथ: | दशरथस्य पौत्र: लव: |] லவஸ்ய மாதாமஹஹ ஜநகஹ |  ஜநகஸ்ய தௌ³ஹித்ரஹ லவஹ | [लवस्य मातामह: जनक: | जनकस्य दौहित्र: लव:]

இதே போல பிதாமஹீ(पितामही) தந்தையின் தாயாரையும், மாதாமஹீ (मातामही) தாயின் தாயாரையும் குறிக்கும்.

4.  மாதுலஹ (मातुलः) = தாய் மாமன்  – பா⁴கி³நேயஹ (भागिनेय:) = சகோதரியின் பிள்ளை, மாதுலாநி(मातुलानि) = தாய்மாமனின் மனைவி

உதா: க்ருஷ்ணஸ்ய மாதுலஹ கம்ஸஹ | கம்ஸஸ்ய பா⁴கி³நேயஹ க்ருஷ்ணஹ | [कृष्णस्य मातुल: कंस: | कंसस्य भागिनेय: कृष्ण:] ப⁴ரதஸ்ய மாதுலஹ ஸத்ராஜிதஹ ஸத்ராஜிதஸ்ய பா⁴கி³நேயஹ ப⁴ரதஹ | [भरतस्य मातुल: सत्राजित: सत्राजितस्य भागिनेय: भरत:] அபி⁴மந்யோஹோ மாதுலாநி ருக்மிணி | [अभिमन्यो: मातुलानि रुक्मिणि]

5.  பித்ருவ்யஹ  (पितृव्य:) = தந்தையின் சகோதரர்  & பித்ருவ்யா(पित्रुव्या) = அத்தை அல்லது தந்தையின் சகோதரரின் மனைவி

உதா: அர்ஜுநஸ்ய பித்ருவ்யஹ த்⁴ருதராஷ்ட்ரஹ |  அர்ஜுநஸ்ய பித்ருவ்யா கா³ந்தா⁴ரீ | [अर्जुनस्य पितृव्य: धृतराष्ट्र: | अर्जुनस्य पितृव्या गान्धारी |]

மேலும் சில உறவுகள்:

ஜ்யேஷ்ட பித்ருவ்யஹ (ज्येष्ट पितृव्य:) = பெரியப்பா
கநிஷ்ட பித்ருவ்யஹ (कनिष्ट पितृव्य:) = சித்தப்பா
ஜாமாதா (जामाता) = மாப்பிள்ளை
ஆவ்ருத்த: (आवुत्तः) = சகோதரியின் கணவன்
தே³வரஹ (देवर:) = கணவனின் சகோதரன் (மைத்துனன்)
நநாந்தா³ (ननान्दा) = கணவனின் சகோதரி
ஶ்யாலஹ (श्याल:) = மனைவியின் சகோதரன்,  ஸ்யாலி (श्याली) = மனைவியின் சகோதரி
ப்⁴ராத்ருஜாயா (भ्रातृजाया) = சகோதரனின் மனைவி
ஷ்வஸுரஹ  (श्वशुर:) = மாமனார்
ஷ்வஸ்ரு (श्वश्रू) = மாமியார்

Back to top

சில வினைச்சொற்கள்

உரையாடுவதற்கு அவசியமான சில வினைச்சொற்களும் அவற்றை உபயோகப் படுத்த உதாரணங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

1. பட²தி (पठति)

உதா:  ஸ: பட²தி (स: पठति) = அவன் படிக்கிறான்;  ஸா பட²தி (सा पठति) = அவள் படிக்கிறாள்;  தத் பட²தி (तत् पठति) = அது படிக்கிறது;  ப⁴வாந் பட²து (भवान् पठतु) = நீங்கள் படியுங்கள்;  அஹம் படா²மி (अहम् पठामि)= நான் படிக்கிறேன்;  வயம் படா²மஹ (वयम् पठाम:) = நாங்கள் படிக்கிறோம்.

2. க³ச்ச²தி (गच्छति)

ஸ: க³ச்ச²தி (स: गच्छति) = அவன் போகிறான்; ஸா க³ச்ச²தி (सा गच्छति) = அவள் போகிறாள்; தத் க³ச்ச²தி  (तत् गच्छति) = அது போகிறது; ப⁴வாந் க³ச்ச²து(भवान् गच्छतु) = நீங்கள் செல்லுங்கள்; அஹம் க³ச்சா²மி (अहम् गच्छामि) = நான் போகிறேன்; வயம் க³ச்சா²மஹ (वयम गच्छाम:) = நாங்கள் போகிறோம்.

3. ஆக³ச்ச²தி (आगच्छति)

உதா: ஸ: ஆக³ச்ச²தி (स: आगच्छति) = அவன் வருகிறான்; ஸா ஆக³ச்ச²தி (सा आगच्छति) = அவள் வருகிறாள்; தத் ஆக³ச்ச²தி (तत् आगच्छति) = அது வருகிறது; ப⁴வாந் ஆக³ச்ச²து(भवान् आगच्छतु) = நீங்கள் வாருங்கள்; அஹம் ஆக³ச்சா²மி (अहम् आगच्छामि) = நான் வருகிறேன்; வயம் ஆக³ச்சா²மஹ (वयम आगच्छाम:) = நாங்கள் வருகிறோம்.

4. வத³தி (वदति)

உதா: ஸ: வத³தி (स: वदति) = அவன் பேசுகிறான்; ஸா வத³தி (सा वदति) = அவள் பேசுகிறாள்; தத் வத³தி (तत् वदति) = அது பேசுகிறது; ப⁴வாந் வத³து(भवान् वदतु) = நீங்கள் பேசுங்கள்;  அஹம் வதா³மி (अहम् वदामि) = நான் பேசுகிறேன்; வயம் வதா³ம: (वयम वदाम:) = நாங்கள் பேசுகிறோம்.

5. பிப³தி (पिबति)

ஸ: பிப³தி (स: पिबति) = அவன் குடிக்கிறான்; ஸா க³ச்ச²தி (सा पिबति) = அவள் குடிக்கிறாள்; தத் பிப³தி (तत् पिबति) = அது குடிக்கிறது; ப⁴வாந் பிப³து(भवान् पिबतु) = நீங்கள் குடியுங்கள்; அஹம் பிபா³மி (अहम् पिबामि) = நான் குடிக்கிறேன்; வயம் பிபா³மஹ (वयम् पिबाम:) = நாங்கள் குடிக்கிறோம்.

6. பஶ்யதி (पश्यति)

ஸ: பஶ்யதி (स: पश्यति) = அவன் பார்க்கிறான்; ஸா பஶ்யதி (सा पश्यति) = அவள் பார்க்கிறாள்; தத் பஶ்யதி (तत् पश्यति) = அது பார்க்கிறது; ப⁴வாந் பஶ்யது(भवान् पश्यतु) = நீங்கள் பாருங்கள்;  அஹம் பஶ்யாமி (अहम् पश्यामि) = நான் பார்க்கிறேன்;  வயம் பஶ்யாமஹ (वयम् पश्याम:) = நாங்கள் பார்க்கிறோம்.

7. ப்ருச்ச²தி (पृच्छति) – (கேள்வி கேட்பது)

ஸ: ப்ருச்ச²தி (स: पृच्छति) = அவன் கேட்கிறான்; ஸா ப்ருச்ச²தி (सा पृच्छति) = அவள் கேட்கிறாள்; தத் ப்ருச்ச²தி (तत् पृच्छति) = அது கேட்கிறது; ப⁴வாந் ப்ருச்ச²து(भवान् पृच्छतु) = நீங்கள் கேளுங்கள்; அஹம் ப்ருச்சா²மி (अहम् पृच्छामि) = நான் கேட்கிறேன்; வயம் ப்ருச்சா²மஹ (वयम् पृच्छाम:) = நாங்கள் கேட்கிறோம்

8. ஶ்ருணோதி (स: श्रुणोति) – காதால் கேட்பது

ஸ: ஶ்ருணோதி (स: श्रुणोति) = அவன் கேட்கிறான்; ஸா ஶ்ருணோதி (सा श्रुणोति)= அவள் கேட்கிறாள்; தத் ஶ்ருணோதி (तत् श्रुणोति) = அது கேட்கிறது; ப⁴வாந் ஶ்ருணோது(भवान् श्रुणोतु) = நீங்கள் கேளுங்கள்; அஹம் ஶ்ருணோமி (अहम् श्रुणोमि) = நான் கேட்கிறேன்; வயம் ஶ்ருணுமஹ (वयम् शृणुमः) = நாங்கள் கேட்கிறோம்

9. ஜாநாதி (जानाति)

ஸ: ஜாநாதி (स: जानाति) = அவன் அறிகிறான்; ஸா ஜாநாதி (सा जानाति) = அவள் அறிகிறாள்; தத் ஜாநாதி (तत् जानाति) = அது அறிகிறது; ப⁴வாந் ஜாநாது(भवान् जानातु) = நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; அஹம் ஜாநாமி (अहम् जानामि) = நான் அறிகிறேன்; வயம் ஜாநீம​ஹ (वयम् जानीमः) = நாங்கள் அறிகிறோம்

10. கரோதி (करोति)

ஸ: கரோதி (स: करोति) = அவன் செய்கிறான்; ஸா கரோதி (सा करोति) = அவள் செய்கிறாள்; தத் கரோதி(तत् करोति) = அது செய்கிறது; ப⁴வாந் கரோது(भवान् करोतु) = நீங்கள் செய்யுங்கள்; அஹம் கரோமி (अहम् करोमि) = நான் செய்கிறேன்; வயம் குர்ம​ஹ (वयम् कुर्म:) = நாங்கள் செய்கிறோம்

11. ஸ்மரதி (स्मरति)

ஸ: ஸ்மரதி (स: स्मरति) = அவன் நினைவு கூர்கிறான்; ஸா ஸ்மரதி (सा स्मरति) = அவள் நினைவு கூர்கிறாள்; தத் ஸ்மரதி (तत् स्मरति) = அது நினைவு கூர்கிறது; ப⁴வாந் ஸ்மரது(भवान् स्मरतु) = நீங்கள் நினைவு கூர்ந்து யோசியுங்கள்; அஹம் ஸ்மராமி (अहम् स्मरामि)= நான் நினைவு கூர்கிறேன்; வயம் ஸ்மராம​ஹ (वयम् स्मरामः) = நாங்கள் நினைவு கூர்கிறோம்

Back to top

ஸப்தாஹம் (सप्ताहम्) – வாரம் (week)

பா⁴நுவாஸரஹ  (भानुवासर:) – ஞாயிற்றுக் கிழமை

சோமவாஸரஹ (सोमवासर:) – திங்கள் கிழமை

மங்க³லவாஸரஹ (मङ्गलवासर:) – செவ்வாய்க் கிழமை

பு³த⁴வாஸரஹ (बुधवासर:) – புதன் கிழமை

கு³ருவாஸரஹ (गुरुवासर:) – வியாழக் கிழமை

ஶுக்ரவாஸரஹ (शुक्रवासर:) – வெள்ளிக் கிழமை

ஶநிவாஸரஹ (शनिवासर:) –  சனிக்கிழமை

கிழமைகளை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா…  இன்று என்ன கிழமை என்று எப்படி கேட்பது… மேலே பார்க்கலாம்.

அத்³ய (अद्य) – இன்று

ஶ்வஹ (श्व:) – நாளை

பரஶ்வஹ (परश्व) – நாளை மறுநாள்

ப்ர-பரஶ்வஹ (प्रपरश्व:) – நாளை மறுநாளுக்கு மறுநாள்

ஹ்யஹ (ह्य:) – நேற்று

பரஹ்யஹ (परह्य:) – நேற்றைக்கு முந்தைய நாள்

ப்ர-பரஹ்யஹ (परपरह्य:) – நேற்றைக்கு முந்தைய நாளுக்கு முதல் நாள்

சில உதாரணங்கள்,

அத்³ய  பா⁴நுவாஸரஹ  (अद्य भानुवासर:).  – இன்று ஞாயிற்றுக் கிழமை.

ஹ்யஹ ஶநிவாஸரஹ (ह्य: शनिवासर:) – நேற்று சனிக்கிழமை.  பரஹ்யஹ ஶுக்ரவாஸரஹ (परह्य: शुक्रवासर:) – நேற்றைக்கு முந்தைய நாள்  வெள்ளிக் கிழமை. ப்ர-பரஹ்யஹ கு³ருவாஸரஹ (परपरह्य: गुरुवासर:) – நேற்றைக்கு முந்தைய நாளுக்கு முதல் நாள் வியாழக் கிழமை.

அத்³ய  பா⁴நுவாஸரஹ  (अद्य भानुवासर:) .  – இன்று ஞாயிற்றுக் கிழமை.

ஷ்வஹ சோமவாஸரஹ  (श्व: सोमवासर:) – நாளை திங்கள் கிழமை.  பரஷ்வஹ மங்க³லவாஸரஹ  (परश्व: मङ्गलवासर:) – நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை. ப்ர-பரஷ்வஹ பு³த⁴வாஸரஹ  (परपरश्व: बुधवासर:) – நாளை மறுநாளுக்கு மறுநாள்  புதன் கிழமை.

Back to top

கடிகாரம்

அடுத்து  கடிகார மணி நேரத்தை எப்படி வடமொழியில் சொல்வது என்று பார்ப்போம்.

கடிகார மணிநேரத்தை வாத³நம் (वादनम्) என்றும் க⁴ண்டா (घण्टा) என்றும் சொல்லலாம்.

ஒரு மணி = ஏக வாத³நம்,  இரண்டு மணி = த்³வி வாத³நம்,  மூன்று மணி = த்ரி வாத³நம், நான்கு மணி = சதுர் வாத³நம், ஐந்து மணி = பஞ்ச வாத³நம், ஆறு  மணி = ஷட் வாத³நம், ஏழு மணி = ஸப்த வாத³நம், எட்டு மணி  = அஷ்ட வாத³நம், ஒன்பது மணி  = நவ வாத³நம், பத்து மணி = த³ச வாத³நம், பதினோரு மணி  = ஏகாத³ச வாத³நம், பனிரெண்டு மணி = த்³வாத³ச வாத³நம் இவ்வாறு சொல்ல வேண்டும்.

சரி நிமிடங்களை எப்படி சொல்வது…

5:05 = பஞ்ச அதி⁴க பஞ்ச வாத³நம் (पञ्च अधिक पञ्च वादनम्)

5: 10 = த³ச அதி⁴க பஞ்ச வாத³நம் (दश अधिक पञ्च वादनम्)

5:15  = ஸபாத³ பஞ்ச வாத³நம் (सपाद पञ्च वादनम्)

5:30 =  ஸார்த⁴ பஞ்ச வாத³நம் (सार्ध पञ्च वादनम्)

5:45 =  பாதோ³ந ஷட் வாத³நம் (पादोन षट् वादनम्)

5:50 = தச ந்யூந ஷட் வாத³நம் (दश न्यून षट् वादनम् )

5:55 = பஞ்ச ந்யூந ஷட் வாத³நம் (पञ्च न्यून षट् वादनम्)

இவ்வாறு கடிகாரத்தின் மணித்துளிகளை உரையாடும் போது குறிப்பிடலாம்.

சமஸ்க்ருதத்தில் தேதிகளை குறிப்பிட (दिनाङ्क:)  என்று சொல்ல வேண்டும்.   இந்த பகுதியில் கடிகார மணித்துளிகள், வாரக்கிழமைகள் ஆகியவற்றைக் கொண்டு சில வாக்கியங்களை அமைத்து பார்க்கலாம்.

ஶநி வாஸரே க: தி³நாங்கஹ ? (शनि वासरे क: दिनाङ्क: ?)
சனிக்கிழமை என்ன தேதி?

ஶநி வாஸரே ஸப்த தி³நாங்கஹ (शनि वासरे सप्त दिनाङ्क:)
சனிக்கிழமை ஏழாம் தேதி.

ப⁴வாந் ப்ராத²:காலே  கதா³ உத்தி²ஷ்டதி ? (भवान् प्राथ:काले  कदा उत्थिष्टति ?)
நீங்கள் காலையில் எப்போது எழுந்திருக்கிறீர்கள்?

அஹம் ப்ராத²:காலே  ஷட் வாத³நே உத்திஷ்டாமி   (अहम् प्राथ:काले  षट् वादने उत्तिष्टामि )
நான் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்கிறேன்

ப⁴வதி கதா³ கார்யாலம்° க³ச்ச²தி ? (भवति कदा कार्यालयं गच्छति ?)
நீங்கள் அலுவலகத்துக்கு எப்போது செல்கிறீர்கள்?

அஹம் ஸார்த³ நவ வாத³நே கார்யாலம்° க³ச்சா²மி |  (अहम् सार्ध नव वादने कार्यालयं गच्छामि )
நான் ஒன்பதரை மணிக்கு அலுவலகம் செல்கிறேன்.

ப⁴வாந் அத்³ய கிம்  கிம்  கரோதி? (भवान् अद्य किम्  किम्  करोति?)
நீங்கள் இன்று என்னென்ன செய்கிறீர்கள்?

ஷட் வாத³நே உத்தி²ஷ்டாமி | (षट् वादने उत्थिष्टामि )
ஆறு மணிக்கு எழுந்திருக்கிறேன்.

ஸபாத³ ஷட் வாத³நே த³ந்த தா⁴வநம்° கரோமி | (सपाद षट् वादने दन्त धावनं करोमि )
ஆறே கால் மணிக்கு பல் துலக்குகிறேன்.

ஸார்த³ ஷட் வாத³நே காபீ²ம் பிபா³மி | (सार्द षट् वादने काफीम् पिबामि )
ஆறரை மணிக்கு காபி குடிக்கிறேன்.

பாதோ³ந ஸப்த வாத³நே ஸ்நாநம் கரோமி | (पादोन सप्त वादने स्नानम् करोमि )
ஆறே முக்கால் மணிக்கு குளிக்கிறேன்.

ஸப்த வாத³நே பூஜாம் கரோமி | (सप्त वादने पूजाम् करोमि )
ஏழு மணிக்கு பூஜை செய்கிறேன்.

ஸார்த³ ஸப்த வாத³நே யோகா³ஸநம்  கரோமி | (सार्द सप्त वादने योगासनम्  करोमि )
ஏழரை மணிக்கு யோகாசனம் செய்கிறேன்.

ஸார்த³ அஷ்ட வாத³நே அல்பாஹாரம் ஸ்வீகரோமி | (सार्द अष्ट वादने अल्पाहारम् स्वीकरोमि )
எட்டரை மணிக்கு காலை உணவு எடுத்துக் கொள்கிறேன்.

நவ வாத³நே கார்யாலயம க³ச்சா²மி | (नव वादने कार्यालयं गच्छामि )
ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்கிறேன்.

ஶாயங்காலே ஷட் வாத³நே க்³ருஹம் ஆக³ச்சா²மி | (शायङ्काले षट् वादने गृहम् आगच्छामि )
மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வருகிறேன்.

ஸப்தவாத³நே தூ³ரத³ர்ஶநம்° பஶ்யாமி | (सप्तवादने दूरदर्शनं पश्यामि )
ஏழு மணிக்கு தொலைக்காட்சி பார்க்கிறேன்.

ஸார்த³அஷ்ட வாத³நே ஆஹாரம் ஸ்வீகரோமி | (सार्दअष्ट वादने आहारं स्वीकरोमि )
எட்டரை மணிக்கு உணவு எடுத்துக் கொள்கிறேன்.

த³ஶ வாத³நே நித்³ராம் கரோமி | (दश वादने निद्राम् करोमि )
பத்து மணிக்கு தூங்குகிறேன்.

Back to top

மற்ற பகுதிகள்: பகுதி-1, பகுதி-3, பகுதி-4

20 Comments வடமொழியில் உரையாடுங்கள் – 2

 1. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 1 | Sangatham

 2. ரகுவீரதயாள்

  இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் சரியாகத் தெரியும் சமஸ்க்ருதம் firefox, chrome browserகளில் சரியாகத் தெரிவதில்லை. हि குறில் ஹி இப்படி வருகிறது. நெடிலும் இப்படியே தெரிகிறது. இது ப்ரவ்ஸரின் கோளாறா? அல்லது எனது செட்டிங்ஸ் தப்பா?

 3. Editor

  Dear ரகுவீரதயாள்,

  Checked this in all three browsers (chrome, IE, Firefox) seems to be displaying fine. Please check if you have Arial Unicode MS and Latha fonts and the browser recognizes the page encoding as unicode.

  bhavadeeya:
  Sangatham Editor.

 4. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 3 | Sangatham

 5. Venkatesan

  The lessons are good. In the example for Agraja: it looks like Lakshmana and Shatrugna got interchanged. Also, in Pithruvya example, Gandhari’s name is given while in the meaning it is put as Athai. Please clarify. Regards

 6. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 4 | Sangatham

 7. P.Mohan

  Kindly correct the error in the following; I suppose it is due to cut and paste practise.
  5:45 = பாதோ³ந ஷட் வாத³நம் (पादोन पञ्च वादनम्).

  Thank you for your efforts. It is inspiring to begin learning Sankrit.

 8. vasanthasyamalam

  कार्यालयम् , सार्ध – शुद्धप्रयोगः | कृपया अशुद्धियां अवधानम् ददातु |

 9. vasanthasyamalam

  सार्ध என்பது தான் சரி . सार्द என்பது பிழை . தயவு செய்து தவறாக நினைக்காமல் திருத்தவும் .

 10. sundaram

  ஸ்திர வாசற யுக்தாயம் என்பது சனிக்கிழமை. ப்ருகு வாசற யுக்தாயம் என்பது வெள்ளிக் கிழமை. இந்து வாசற யுக்தாயம் என்பது திங்கட் கிழமை பௌம வாசற யுக்தாயம் என்பது செவ்வாய் கிழமை சௌம்ய வாசற யுக்தாயம் என்பது புதன் கிழமை குகு வாசற யுக்தாயம் என்பது வியாழன் கிழமை. இதை சரி செய்யவும்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)