வடமொழியில் உரையாடுங்கள் – 1


மற்ற பகுதிகள்: பகுதி-2, பகுதி-3, பகுதி-4

வருகை

ஸுப்ரபா⁴தம்!  [सुप्रभातम्!]
நல்ல காலைப்பொழுது!

ப⁴வந்த: ஸம்°ஸ்க்ருத ஸம்பா⁴ஷண கக்ஷாம் ஆக³ச்ச²து! [भवन्त: संस्कृत संभाषण कक्षाम् आगच्छतु!]
சமஸ்க்ருதத்தில் பேசும் வகுப்புக்கு நீங்கள் அனைவரும் வருக!

உபவிஶது! [उपविशतु!]
அமருங்கள்.

ஸம்ஸ்க்ருதே ஸம்பா⁴ஷணம் ஸுலப⁴ம் ஏவ |  ஶ்ருணோது! ஆரம்ப⁴ம் குர்மஹ |
[संस्कृते संभाषणम् सुलभं एव | श्रुणोतु! आरम्भं कुर्म: |]
சமஸ்க்ருதத்தில் பேசுவது எளிது தான். கேளுங்கள். துவங்குவோம்.

Back to top

அறிமுகம்

மம நாம ராமஹ ப⁴வதஹ நாம கிம்? [मम नाम राम: भवत: नाम किम्?]
எனது பெயர் ராமன். உங்களுடைய (ஆண்) பெயர் என்ன?

மம நாம ராமஹ, ப⁴வத்யாஹா நாம கிம்? [मम नाम राम:, भवत्या: नाम किम्?]
என்னுடைய பெயர் ராமன். உங்களுடைய (பெண்) பெயர் என்ன?

எதிரில் இருப்பவர் ஆணாக இருந்தால் பவதஹ என்றும் பெண்ணாக இருந்தால் பவத்யாஹா என்றும் சொல்ல வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது மம நாம ….. (உங்கள் பெயர்) சொல்லவேண்டும்.

Back to top

அவன் – இவன், அவள் – இவள், அது – இது

முதலில் தூரத்தில் உள்ள ஒரு பொருளை/மனிதரை எப்படி சுட்டிக்காட்டி சொல்வது,  அருகிலிருப்பதை எவ்வாறு சுட்டிக் காட்டி சொல்வது என்று சொல்லித் தருகிறேன்.

ஸஹ (स:) என்றால் தூரத்தில் உள்ள அவன் என்று பொருள் படும்.

ஸஹ ராமஹ (स: राम:)
(தூரத்தில் உள்ள) அவன் ராமன்

ஸஹ க்ருஷ்ணஹ (स: कृष्ण:)
(தூரத்தில் உள்ள) அவன் கிருஷ்ணன்

ஸஹ பா³லகஹ  (स: बालक:)     [(பாலகஹ) – சிறுவன்.]
(தூரத்தில் உள்ள) அவன் சிறுவன்.

ஏஷஹ (एष:) என்றால் அருகில் உள்ள இவன் என்று பொருள் படும்.

ஏஷஹ கோ³விந்த³ஹ (एष: गोविन्द:)
(அருகில் உள்ள) இவன் கோவிந்தன்

ஏஷஹ ராமஹ (एष: राम:)
(அருகில் உள்ள) இவன் ராமன்

இதே போல பெண்களை எவ்வாறு சுட்டிக் காட்டுவது?

ஸா (सा) என்றால் தூரத்தில் உள்ள அவள் என்று பொருள் படும்.  ஏஷா (एषा) என்றால் அருகில் உள்ள இவள் என்று பொருள் படும்.

ஸா பா³லிகா (सा बालिका)  (பாலிகா) – சிறுமி
(தூரத்தில் உள்ள) அவள் சிறுமி

ஏஷா பா³லிகா (एषा बालिका) |
(அருகில் உள்ள) இவள் சிறுமி

ஸா ருக்மிணீ (सा रुक्मिणी)
(தூரத்தில் உள்ள) அவள் ருக்மிணி

ஏஷா ஸீதா (एषा सीता)
(அருகில் உள்ள) இவள் சீதா

தத்³ (तद्) என்றால் தூரத்தில் உள்ள “அது”  என்று பொருள்.

எதத்³ (एतद्) என்றால் அருகில் உள்ள “இது” என்று பொருள்.

தத்³ வாதாயனம் (तद् वातायनम्) [வாதாயனம் – ஜன்னல்]

எதத்³  உபநேத்ரம் (एतद् उपनेत्रम्) [உபநேத்ரம் – மூக்குக் கண்ணாடி]

Back to top

அங்கே இருப்பவர் யார்? அவர் பெயர் என்ன?

ஸஹ கஹ? (स: क:?)
அவன் யார்?

ஸஹ பாலகஹ (सः बालक:)
அவன் சிறுவன்.

ஸா கா? (सा का?)
அவள் யார்?

ஸா பாலிகா (सा बालिका)
அவள் சிறுமி.

தத்³  கிம்? (तद् किम्?)
அது என்ன?

தத்³ புஸ்தகம் (तद् पुस्तकम्)
அது புத்தகம்

யார் என்று கேட்கும் போது, ஆணைக் குறிக்கும் போது கஹ என்றும் பெண்ணை கா என்றும் அஃறிணை பொருளை கிம் என்று சொல்ல வேண்டும்.

தஸ்ய நாம கிம்? (तस्य नाम किम्?)
(தூரத்தில் உள்ள) அவனுடைய பெயர் என்ன?

தஸ்ய நாம ராமஹ (तस्य नाम राम:)
(தூரத்தில் உள்ள) அவன் பெயர் ராமன்.

ஏதஸ்ய நாம கிம்? (एतस्य नाम किम्?)
(அருகில் உள்ள) இவன் பெயர் என்ன?

ஏதஸ்ய நாம ரமேஶஹ (एतस्य नाम रमेश:)
(அருகில் உள்ள) இவன் பெயர் ரமேஷ்.

தஸ்யாஹா நாம கிம்? (तस्या: नाम किम्?)
(தூரத்தில் உள்ள) அவள் பெயர் என்ன?

தஸ்யாஹா நாம ஸீதா (तस्या: नाम सीता)
(தூரத்தில் உள்ள) அவள் பெயர் சீதா

ஏதஸ்யாஹா நாம கிம்? (एतस्या: नाम किम्?)
(அருகில் உள்ள) இவள் பெயர் என்ன?

ஏதஸ்யாஹா நாம ருக்மிணீ (एतस्या: नाम रुक्मिणी)
(அருகில் உள்ள) இவள் பெயர் ருக்மணீ.

தத் நாம கிம்? (तत् नाम किम्?)
(தூரத்தில் உள்ள) அதன் பெயர் என்ன?

ஏதத் நாம கிம்? (एतत् नाम किम्?)
(அருகில் உள்ள) இதன் பெயர் என்ன?

Back to top

என்ன தொழில் செய்கிறீர்கள்?

அஹம் ஶிக்ஷகஹ |   ப⁴வான் கஹ?  (अहम् शिक्षक: |  भवान क:?)
நான் ஆசிரியன். நீங்கள் (ஆணை நோக்கி) யார்? (என்ன தொழில் செய்கிறீர்கள்?)

அஹம் சா²த்ரஹ (अहम् छात्र:)
நான் மாணவன்.

அஹம் ஶிக்ஷிகா |  ப⁴வதி கா? (अहम् शिक्षिका | भवति का?)
நான் ஆசிரியை. நீங்கள் (பெண்ணை நோக்கி) யார்?

அஹம் சா²த்ரா (अहम् छात्रा)
நான் மாணவி.

கவனியுங்கள், கஹ என்று ஆண்களையும், கா என்று பெண்களையும் விளிக்க வேண்டும். சா²த்ரஹ என்பது மாணவன், சா²த்ரா  என்பது மாணவி என்று பொருள். இதே போல ஶிக்ஷகஹ என்பது ஆண் ஆசிரியர், ஶிக்ஷிகா என்பது பெண் ஆசிரியர் என்று பொருள்.

அஹம் க்³ருஹிணீ (अहम् गृहिणी)
நான் இல்லத்தரசி.

அஹம் தந்த்ரஜ்ஞஹ (अहम् तन्त्रज्ञ:)
நான் பொறியியல் வல்லுநர்.

அஹம் வைத்³யஹ (अहम् वैद्य:)
நான் மருத்துவர்.

ப⁴வாந் தந்த்ரஜ்ஞஹ வா? (भवान् तन्त्रज्ञ: वा?)
நீங்கள் பொறியியல் வல்லுனரா?

“வா” என்பது, இல்லையா? என்பது போல கேட்க உபயோகிக்கப் படுகிறது.

ஆம்! அஹம் தந்த்ரஜ்ஞஹ (आम्! अहम् तन्त्रज्ञ:)
ஆமாம், நான் பொறியியல் வல்லுனன்.

தமிழில் ஆமாம் என்று சொல்வது சமஸ்க்ருதத்தில் “ஆம்” என்று சொன்னால் போதும். இல்லை நான் மருத்துவர் என்று சொல்ல,

ந அஹம் வைத்³யஹ (न अहम् वैद्य:)

“ந” என்பது இல்லை என்று அர்த்தம்.

அஹம் கா³யிகா (अहम् गायिका)
நான் பாடகி.

அதே ஆணாக இருந்து பாடகன் என்று சொல்ல,
அஹம் கா³யகஹ (अहम् गायक:)

என்று சொல்ல வேண்டும்.

மேலே உள்ள சொற்றொடர்களைக் கொண்டு சில எளிய அறிமுக சொற்றொடர்களை அமைக்கலாம்.

ஸுப்ரபா⁴தம்!  மம நாம ரமேஶ: ஸ: பா³லக: தஸ்ய நாம ஶிவ: |  ஸ: சாத்ர: |  ஏஷா பா³லிகா |  ஏதஸ்யா: நாம ஸுதா⁴ |  ஏஷா கா³யிகா |   தத் மம வாஹநம் |  ஏதத் மம புஸ்தகம் |
[ सुप्रभातम्!  मम नाम रमेश: स: बालक: तस्य नाम शिव: | स: चात्र: | एषा बालिका | एतस्या: नाम सुधा | एषा गायिका |  तत् मम वाहनम् | एतत् मम पुस्तकम् | ]

Back to top

இங்கே – அங்கே…

அத்ர (अत्र) – இங்கே

பா³லகஹ அத்ர அஸ்தி (बालक: अत्र अस्ति) [அஸ்தி என்றால் இருக்கிறது/இருக்கிறாள்/இருக்கிறான் என்று பொருள்).
சிறுவன் இங்கே (அருகில்) இருக்கிறான்.

பா³லிகா அத்ர அஸ்தி (बालिका अत्र अस्ति)
சிறுமி இங்கே (அருகில்) இருக்கிறாள்.

ராமஹ அத்ர அஸ்தி (राम: अत्र अस्ति)
ராமன் இங்கே (அருகில்) இருக்கிறான்.

புஸ்தகம் அத்ர அஸ்தி (पुस्तकम् अत्र अस्ति)
புத்தகம் இங்கே (அருகில்) இருக்கிறது.

தத்ர (तत्र) – அங்கே (தூரத்தில்)

வாஹநம் தத்ர அஸ்தி (वाहनम् तत्र अस्ति)
வாகனம் அங்கே(தூரத்தில்) இருக்கிறது.

வாதாயநம் தத்ர அஸ்தி (वातायनम् तत्र अस्ति)
ஜன்னல் அங்கே (தூரத்தில்) இருக்கிறது.

ப⁴வாந் தத்ர அஸ்தி (भवान् तत्र अस्ति)
நீங்கள் அங்கே (தூரத்தில்) இருக்கிறீர்கள்

ஸர்வத்ர (सर्वत्र) (எல்லா இடத்திலும்)

வாயுஹு ஸர்வத்ர அஸ்தி (वायु: सर्वत्र अस्ति)
காற்று எல்லா இடத்திலும் இருக்கிறது.

தே³வஹ ஸர்வத்ர அஸ்தி (देव: सर्वत्र अस्ति)
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார்.

ஆகாஶஹ ஸர்வத்ர அஸ்தி (आकाश: सर्वत्र अस्ति)
ஆகாயம் எல்லா இடத்திலும் இருக்கிறது.

குத்ர (कुत्र) ? எங்கே?

ஸூர்யஹ குத்ர அஸ்தி ? (सूर्य: कुत्र अस्ति?)
சூரியன் எங்கே இருக்கிறது?

ஸூர்யஹ தத்ர அஸ்தி (सूर्य: तत्र अस्ति)
சூரியன் அங்கே (தூரத்தில்) இருக்கிறது.

பா³லகஹ குத்ர அஸ்தி? (बालक: कुत्र अस्ति ?)
சிறுவன் எங்கே இருக்கிறான்?

பா³லகஹ அத்ர அஸ்தி (बालक: अत्र अस्ति)
சிறுவன் இங்கே இருக்கிறான்.

புஷ்பம் குத்ர அஸ்தி? (पुष्पम् कुत्र अस्ति)
பூ எங்கே இருக்கிறது?

புஷ்பம் அத்ர அஸ்தி (पुष्पम् अत्र अस्ति)
பூ இங்கே இருக்கிறது.

Back to top

ஒருமை – பன்மை

புருஷஹ पुरुष: – (புருஷாஹா) पुरुषा:
ஆண் – ஆண்கள்

பா³லகஹ (बालक:) –  பா³லகாஹா(बालका:)
சிறுவன் –  சிறுவர்கள்

ராமஹ (राम:)  – ராமாஹா (रामा:)
ராமன் – பல ராமர்கள்

சா²த்ரஹ (छात्र:) – சா²த்ராஹா (छात्रा:)
மாணவன் – மாணவர்கள்

ப⁴வாந் (भवान्) – ப⁴வந்தஹ (भवन्त:)
நீங்கள் (ஆண்) – நீங்கள் (பலர் – ஆண்கள், பெண்கள் அனைவரும்)

ப⁴வதி (भवति)  – ப⁴வத்யஹ (भवत्य:)
நீங்கள் (பெண்) – நீங்கள் (பலர் – பெண்கள்)

பா³லிகா (बालिका) – பா³லிகாஹா (बालिका:)
சிறுமி – சிறுமிகள்

ஶாடிகா (शाटिका) – ஶாடிகாஹா (शाटिका:)
புடவை – புடவைகள்

ரமா(रमा) – ரமாஹா(रमा:)
ரமா – பல ரமாக்கள்

நதீ³ (नदी) – நத்³யஹ (नद्य:)
ஆறு – ஆறுகள்

லேக²நி (लेखनि) – லேக²ந்யஹ (लेखन्य:)
எழுதுகோல் – எழுதுகோல்கள் (பேனா)

நர்தகீ (नर्तकी) – நர்தக்யஹ (नर्तक्य:)
நடனமாடும் பெண் – நடனமாடும் பெண்கள்

ப²லம்(फलम्) – ப²லாநி (फलानि)
பழம் – பழங்கள்

வாதாயநம் (वातायनम्) – வாதாயநாநி (वातायनानि)
ஜன்னல் – ஜன்னல்கள்

புஷ்பம்(पुष्पम्) – புஷ்பாணி(पुष्पाणि)
பூ – பூக்கள்

வாஹநம் (वाहनम्) – வாஹநாநி(वाहनानि)
வாகனம் – வாகனங்கள்

மித்ரம் (मित्रम्)  – மித்ராணி (मित्राणि)
நண்பன் – நண்பர்கள்

Back to top

நான் – நாங்கள்

अहम् – वयम्
நான் – நாங்கள்

ஸஹ(स:) – தே (ते)
அவன் – அவர்கள்

ஏஷஹ (एष:) –  (ஏதே) एते
இவன் – இவர்கள்

ஸா (सा) – தாஹா (ता:)
அவள் – அவர்கள்

ஏஷா (एषा) – ஏதாஹா (एता:)
இவள் – இவர்கள்

தத்³ (तद्) – தாநி (तानि)
அது – அவைகள்

ஏதத்³ (एतद्) – ஏதாநி (एतानि)
இது – இவைகள்

Back to top

ஒருமை – பன்மையில் கேள்விகள்

கஹ (क:) – கே (के)
யார் (ஆண்)? –  யாவர்கள்?

சஹ கஹ? (स: क:?) – யார் அவன்?

தே கே (ते के?) – யாவர்கள் அவர்கள்?

கா: (का:) – (காஹா?) का: ?
யார் (அவள்) – யாவர்கள் (அந்த பெண்கள்?)

ஸா கா (सा का?) – அவள் யார்?

தாஹா காஹா (ता का:?) – யாவர்கள் அவர்கள் (பெண்கள்?)

கிம் – காநி (किं – कानि?)
எது (என்ன?) – எவைகள்

தத்³ கிம் (तद् किं?) – அது என்ன

தாநி காநி (तानि कानि?) –  அவைகள் என்ன?

Back to top

என்னுடையது – நம்முடையது

ஆரம்பத்தில் ப⁴வதஹ நாம (உங்களுடைய பெயர்), மம நாம (என்னுடைய பெயர்) என்று சில பதங்கள் உபயோகித்தோம். இவ்வாறு “ஒருவருடைய”  என்று சொல்ல என்னென்ன விதமாக சொல்வது என்று பார்ப்போம்.

ப⁴வதஹ (भवत:) – உங்களுடைய (ஆண்)

ப⁴வத்யாஹா (भवत्या:) – உங்களுடைய (பெண்)

மம (मम) – என்னுடைய

அஸ்மாகம் (अस्माकम्) – எங்களுடைய

தஸ்ய (तस्य)  – அவனுடைய

ஏதஸ்ய (एतस्य) – இவனுடைய

தஸ்யாஹா (तस्या:)  – அவளுடைய

ஏதஸ்யாஹா (एतस्या:) – இவளுடைய

ராமஸ்ய (रामस्य ) – ராமனுடைய

கிருஷ்ணஸ்ய (कृष्णस्य) – கிருஷ்ணனுடைய

மித்ரஸ்ய (मित्रस्य)  – நண்பனுடைய

ஸகோத³ரஸ்ய (सहोदरस्य) – சகோதரனுடைய

சீதாயாஹா (सीताया:) – சீதாவினுடைய

சுப⁴த்ராயாஹா (सुभद्राया:) – ரமாவினுடைய

ப⁴கிந்யாஹா (भगिन्या:) – சகோதரியினுடைய

அம்பா³யாஹா (अम्बाया:) – அம்மாவினுடைய

இவற்றை வைத்து சில வாக்கியங்கள்

ப⁴வதஹ புஸ்தகம் (भवत: पुस्तकम्) – உங்களுடைய (ஆண்) புத்தகம்

ப⁴வத்யாஹா கண்டஹாரம் (भवत्या: कण्ठहार:) – உங்களுடைய (பெண்) கழுத்து அணிகலன் (நகை)

மம ஸ்யூதஹ (मम सयूत:) – என்னுடைய பை

அஸ்மாகம் க்ருஹம் (अस्माकम् गृहम्) – எங்கள் வீடு

தஸ்ய அங்கநி (तस्य अङ्कनि) – அவனுடைய பென்சில்

ஏதஸ்ய வாகனம் (एतस्य वाहनम्) – இவனுடைய வாகனம்

தஸ்யாஹா அம்பா (तस्या: अम्बा) – அவளுடைய தாயார்

ஏதஸ்யாஹா பிதா (एतस्या: पिता) – இவளுடைய தந்தையார்

ராமஸ்ய பிதா தசரதஹ (रामस्य पिता दशरात:) – ராமனுடைய தந்தை தசரதர்

கிருஷ்ணஸ்ய மாதா தேவகி (कृष्णस्य माता देवकि) – கிருஷ்ணனுடைய தாய் தேவகி

மித்ரஸ்ய வஸ்திரம் (मित्रस्य वस्त्रम्) – நண்பனுடைய ஆடை

ஸகோத³ரஸ்ய  புத்ரஹ (सहोदरस्य पुत्र:) –  சகோதரனின் மகன்

சீதாயாஹா பதிஹி ராமஹ (सीताया: पति: राम:) – சீதையின் கணவன் ராமன்

ஸுப⁴த்ராயா பதிஹி அர்ஜுனஹ (सुभद्राया: पति: अर्जुन:) – சுபத்திரையின் கணவன் அர்ஜுனன்

ப⁴கிந்யாஹா தனம் (भगिन्या: दनम्) – சகோதரியின் செல்வம்

***

இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை அடுத்த பகுதியில் காணலாம்.

Back to top

மற்ற பகுதிகள்: பகுதி-2, பகுதி-3, பகுதி-4

89 Comments வடமொழியில் உரையாடுங்கள் – 1

 1. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 2 | Sangatham

 2. S BALACHANDRAN

  பேச்சுப்பயிற்சி நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

 3. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 3 | Sangatham

 4. Pingback: வடமொழியில் உரையாடுங்கள் – 4 | Sangatham

 5. subramanian

  Please suggest me a book to learn Sanskrit(Tamil -> Sanskrit) which covers full sanskrit words , grammar etc…
  and thank you for your good piece of work.

 6. Sundararajan S

  சமஸ்க்ருதத்தை தமிழில் பயில நான் என்ன செய்ய வேண்டும். தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். எனது மின் அஞ்சலில் பதிலை எதிர்பார்க்கலாமா

 7. Pingback: Sanskrit Documents Learning Tools Learning Sanskrit | Life is Sublime

 8. anant kulkarni

  नमोनमः ,
  अहो आश्चर्यं !संस्कृतस्य अध्ययनम बहु सुलभं कारितम .अस्य स्थलस्य निर्माता धन्यवादम अर्हति.
  जयतु संस्कृत भाषा ! जयतु देवनागरी लिपी . சன்ச்க்ருடம் மதுரம் அஸ்தி .தமிழ் பாஷா மத்யமேன் அஹம் லிக்ஹிடும் ஷக்நோமி ,மகான் சண்டோஷாஹ்

 9. Revathi Balasubramani

  சங்கதம் மூலம் நாங்கள் சமஸ்க்ருதம் எழுத படிக்க விரும்புகின்றோம் ஏனெனில் சங்கதத்தில் நாடியுள்ள கற்கும் முறை மிகவும் சுலபமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்
  ஆதலால் சமஸ்க்ருத மொழியை தமிழில் கற்கும் பாடங்களை தயவுசெய்து எங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் மிகவும் உபயோகமாகவும் உபகாரமாகவும் இருக்கும். நன்றி.

 10. srinivasan

  தங்களின் இந்த சம்ஸ்கிருத அரிச்சுவடியை பார்த்தேன்.பார்க்க பார்க்க சம்ஸ்கிருத மொழியை படிக்கவும் பேசவும் ஆர்வம் ஏற்படுகிறது அதோடு,ஏன் என்னாலும் நமது பாரம்பரிய மொழியை கற்று கொள்ள முடியாது என்ற எண்ணமே எனக்குள் எழுகிறது ஆதலால்,எனக்கு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  என்றும்,
  நட்புடன்,
  சீனிவாசன்.

 11. ganapathy

  hello sir சம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு
  ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)
  எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! –

 12. Balakrishnan

  My mother is tamil.all Tamilians should learn sanskrit.

  In London, both tamil and sanskrit are freely used in all temples.

  sanskrit and tamil are brother nad sister.
  Jai samskritha.Thrugh Tamil, we shall learn better than through English.

  saipremi

 13. C. NARASIMHAN

  1966-1967 வருடம் பள்ளியில் சமஸ்க்ரிதம் படித்தது. இப்பொழுது சமஸ்க்ரிதம்
  படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இன்டர்நெட்டில் பார்த்தபின்பு திருப்பி படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 14. அஸ்ட்ரோ செந்தில் குமார்

  எனக்கு சமஸ்கிருதம் பயில ஆவல் தான் அதை எங்கு யாரிடம் பயில்வது என்பதை பற்றி விபரம் தந்தால் பரவாயில்லை!!

 15. n.s.neelakandan

  மிக நல்ல முயற்சி சமஸ்க்ருதம் கற்று கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் சமஸ்க்ருத பாடங்களை எனக்கு என் மின் அஞ்சல் முகவரிஎல் அனுப்ப முடியுமா நன்றி……..

 16. Senthil kumar.R

  This is more helpful to learn Sanskrit. I want to learn Sanskrit. Can you please suggest some book and where can I get. Or else can I get book from basic in PDF format. I hope , I can get it. Thanks in advance.

 17. vasanthasyamalam

  सर्वे भवतः एतस्य प्रयासस्य प्रशंसां कुर्वन्ति | शोभनम् | अक्षर-अशुद्धि: न आगच्छेत् तर्हि सम्यक् भवेत्|

 18. S.Parthasarathy

  வி ஆர் வெரி ஹாப்பி தட் தேரே இச் எ சைட் டு லேஅர்ன் சன்ச்க்ரிட் ஔர் தேவ பாஷா. ப்ளீஸ் cஒண்டினுஎ யுவர்
  டிவினே எப்போர்த்ஸ் அண்ட் இ அம த்கன்க்புள்

  Parthasarathy

 19. sensthil

  பயனுள்ள களம் .. நான் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் .. பயனுள்ள தகவல் தெரிவிக்கவும். நன்றி .. மா.செந்தில்.

 20. govindaraj

  மிக்க நன்றி இந்த மொழி பற்று இந்திய முழுவதும் உள்ள அணைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

 21. Ramanathan

  அஹம் ஸி²க்ஷிகா | ப⁴வதி கா? (अहम् शिक्षिका | भवति का?) ——> this one is correct
  நான் மாணவி. நீங்கள் (பெண்ணை நோக்கி) யார்? ——–> this should be “நான் ஆசிரியை. நீங்கள் (பெண்ணை நோக்கி) யார்?

  Thanks. Ramanathan

 22. Ramanathan

  சுப⁴த்ராயாஹா (सुभद्राया:) – ரமாவினுடைய should be replaced by சுப⁴த்ராயாஹா (सुभद्राया:) – சுப⁴த்ராயாவினுடைய

  Thanks.
  Ramanathan

 23. Manivannan TL

  மிகவும் அருமை.. எனக்கு வயது 60, ஒரு மொழியை கற்க இது மிகவும் காலம் கடந்த முயற்சியாக இருப்பினும் இந்த வலைத்தளம் கண்டபின் ஆர்வமும், அவாவும் ஏற்படுகிறது . நன்றி.
  கற்பதைத் தொடரும்
  மணிவண்ணன்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)