
"தாசன்" (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது"
அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்

சமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் - குறைவு, உயரம் - குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மண்ணின் வளம், விதைகளை தேர்வு செய்தல், பக்குவப் படுத்துதல், பயிரிடும் காலம், அறுவடை செய்தல், விவசாய சுழற்சி முறை, பல்வேறு பண்பாடு சார்ந்த முறைமைகள், உரமிடுதல், நீர்தேக்கும் முறைகள், அசாம சக்கரம் அல்லது அரஹத்த கதி யந்திரம் எனப்படும் ஏற்றம் அமைக்கும் முறை ஆகியவை பற்றி வேத இலக்கியங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள், அன்றைய நாளில் விவசாயிகள் இவற்றைக் குறித்து அறிந்து வைத்திருந்ததையே காட்டுகிறது.

தற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை சமஸ்க்ருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது. ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதி...
நமது வரலாற்றில் எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே....