1977 ம் வருடம் புத்த தேவ் ஷர்மா, காசியில் சம்பூர்ணாநந்தா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்த போது, தான் கற்றுக் கொண்டிருந்த சமஸ்க்ருத மொழியை மறந்துபோவோம் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்கவும், படிப்பிலும் ஆராய்ச்சியிலும் ஒரு ஆண்டு இடைவெளி ஏற்பட்டது. அவ்வளவுதான், அவ்வளவு நாள் கற்று வைத்திருந்த சம்ஸ்க்ருத ஞானம் ஆவியாகி விட்டது. ஒரு மொழியை கற்று – கற்றதை காப்பாற்ற வேண்டுமானால் அதை பழக்கத்தில் கொண்டு வரவேண்டும்...
கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை...

