ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)

முருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.

எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை). எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கந்தன்கருணை திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீ அப்பா..’ என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.

மேலும் படிக்க