
அண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்!
அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்

குழந்தை பிறப்பதை உதிக்கும் சூரியனின் இளம் சூட்டுடன் ஒப்பிடுவது கவிஞரின் கற்பனை வளத்தின் உச்சம். வெற்றுச் சொற்களால் அரசனை புகழ்ந்து விட்டுப் போகாமல் உள்ளபடியே தம் கவித்திறனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படிக்கும் போதும் தன் உணர்ச்சியை நமக்குள் பதிந்து விடுகிறார் இந்த பெயர் தெரியாத கவிஞர். இக்கவிதையை படிக்கும் போதே கவிஞரின் உள்ளத்தில் குழந்தைக்காக எழும் வாஞ்சை உணர்வுகளை உணர முடியும்.
இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

சமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து "அவ்யய கோசம்" (Avyaya Kosa - A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.

சமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் - குறைவு, உயரம் - குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.
श्वसुरपक्षत: केचन जना: रमणस्य गृहम् आगता: |
पत्नि - (उच्चै:) गच्छतु मम गृहसदस्यां कृते बहिस्तात् किमपि आनयतु |
रमण: बहि: गत्वा 'टेक्सि' आनीतवान् |
ஸ்²வஸுரபக்ஷத: கேசந ஜநா: ரமணஸ்ய க்³ருஹம் ஆக³தா: |
மனைவியின் உறவினர்கள் சிலர் ரமணனின் வீட்டுக்கு வந்தனர்.
பத்நி - (உச்சை:) க³ச்ச²து மம க்³ருஹஸத³ஸ்யாம் க்ருதே ப³ஹிஸ்தாத் கிமபி ஆநயது...