Posts Tagged ‘ புத்தகங்கள் ’

தமிழில் பாணினியின் அஷ்டாத்யாயி

ashtadyayi_t

பாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ் இலக்கண நூல்களில் ஆழ்ந்த அறிவுள்ள பல தமிழறிஞர்கள், பாணினியின் இலக்கணத்தோடோ அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடோ நேரிடைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப் படுகிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த தமிழாக்கம்.

Read more »

“அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables)

avfront_t

சமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து "அவ்யய கோசம்" (Avyaya Kosa - A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.

Read more »

புத்தகக் கண்காட்சியில்…

DSC01

சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி புகைப் படங்கள்

Read more »

அழிவற்ற புத்தகம் – அமரகோசம்

earth-heaven

இந்நாட்களில்  நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே...

Read more »

வடமொழி-தமிழ் அகராதி

dictfront_t

தற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை சமஸ்க்ருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது. ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதி...

Read more »

வடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…

sanskrit_appre_t

ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.

Read more »

வடமொழி சொற்கடல்

tamildict_th

இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. "संस्कृत भाषा शब्द समुद्र: - द्राविड भाषार्त सहित: - தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்" என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.

Read more »

வடமொழி கற்க பத்து வழிகள்

வடமொழி கற்க பத்து வழிகள்

யூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.

Read more »