பாணினியின் அஷ்டாத்யாயி – 2

பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.

மேலும் படிக்க

பாணினியின் அஷ்டாத்யாயி – 1

இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

மேலும் படிக்க