சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை?

மேலும் படிக்க

காதல், காற்று, கவிதை…

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…

மேலும் படிக்க