Posts Tagged ‘ தமிழ் ’

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்

Read more »

கிரந்தம் – நடப்பது என்ன?

unicode

அரசே ஒரு மொழியை/அறிவை பொதுமக்கள் கற்றுக் கொள்ள முடியாமல்  தடுப்பது சரியான நடவடிக்கை   அல்ல. ஆனால் துரதிருஷ்ட வசமாக சம்ஸ்க்ருதம், ஹிந்தி என்று மற்ற மொழிகளை தமிழர் தெரிந்து கொள்ளாமல் தடுப்பதே தமிழக அரசியலாக இருந்து வருகிறது. இப்போது கிரந்தம் ஒருங்குறியில் (Unicode) இணைப்பது குறித்து எழும் எதிர்ப்பிலும் இந்த வகை அரசியலே எதிரொலிக்கிறது.  மீடியாக்கள் முதல் தெருவில் இருக்கும் கடைகள் வரை கிரந்தம் இடம் பிடித்து விடும் – இதனால் தமிழ் அழியும்...

Read more »

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப்...

Read more »