அநேகமாக தெரிந்தது தான்!

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது. உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது… மேலும் படிக்க

மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை?

சம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாத உச்சரிப்பில் மட்டுமே உள்ளவை என்று எதுவும் அனேகமாக இல்லை. எல்லா உச்சரிப்புகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் அக்ஷரங்கள் அல்லது எழுத்துக்கள் உள்ளன. எழுத்தை எழுத எந்த லிபியை வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம். தேவநாகரி, கிரந்தம் போன்ற எந்த லிபியை எடுத்துக் கொண்டாலும் அதில் எல்லா உச்சரிப்புகளையும் எழுதி வைக்கவும் இயலும். மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும்.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)

ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.

மேலும் படிக்க

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம். தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

மேலும் படிக்க

சமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி

நவீன மொழிகளினுள் (ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் போன்றவை) நுழைந்து விடும் முதல் குறைபாடு, அவைகளுக்கு அடிப்படையாக உள்ள கொள்கையில் இருந்தே உருவாகிறது. நவீன கால பேச்சு முறைகளில் உள்ள பல குறைபாடுகளுக்கு இந்த அடிப்படை கொள்கைதான் முக்கிய காரணம். <..> “மரம்” என்று நேரடியாக மரத்தைக் குறிக்கும் சொல் எதுவுமே சமஸ்க்ருதத்தில் இல்லை. . உண்மையில்  எந்த உலகில் காணும் எந்த பொருளுக்குமே சமஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இல்லை (சில குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை தவிர). <..>

மேலும் படிக்க