கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்

ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.

மேலும் படிக்க