Posts Tagged ‘ காளிதாசன் ’

ரகுவம்சம் – சில பாடல்கள்

raghuvamsa

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் - பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம்

Read more »

போஜராஜன் சபையில்…

Court

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் - கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

Read more »

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு  குறிப்பு…

நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே....

Read more »

சீனாவில் காளிதாசன் சிலை!

காளிதாசன் சிலை - ஷாங்காய் சீனா

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால்...

Read more »