Posts Tagged ‘ இலக்கியம் ’

சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

natya-shastra

சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற...

Read more »

போஜராஜன் சபையில்…

Court

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் - கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

Read more »

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு  குறிப்பு…

நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே....

Read more »

கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”

GandhiBookCover_t

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். "சத்ய சோதனம்" என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

Read more »

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

kama

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

Read more »

வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

shishupala

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர். குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.

Read more »

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

SanskritPoet4

"தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!"

Read more »

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

Read more »

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

ticked

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை  செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்:  செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு சந்த வடிவில் இருக்கும்.  [Generally has...

Read more »

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

சங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு கொடுக்கப்படும் பகுதி கொஞ்சம் எடக்கு முடக்காக இருக்கும். இதற்கு வடமொழியில் சமஸ்யா பூர்த்தி (समस्या पूर्ति) என்று சொல்வார்கள். கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் (गौरी पचति गोमांसम्) என்கிற சொற்றொடரை எடுத்துக் கொண்டு இங்கே வடமொழியில் சமஸ்யா பூர்த்தி...

Read more »

Page 1 of 2
1 2