சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…

தத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம். இந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க