Posts Tagged ‘ அரசு உதவி ’

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி

நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள்...

Read more »

உத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு

உத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ  மொழியாக அறிவிப்பு

உத்தர கண்ட மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷான்க் அறிவித்தார். பொதுவாக நடைமுறை உபயோகத்திற்கு சம்ஸ்க்ருதம் உபயோகப்பட இந்த முயற்சி உதவும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார். BHEL நிறுவனத்தின் சரஸ்வதி கலா மந்திர் பள்ளியில், அகில உலக நேபாளி - சம்ஸ்க்ருத மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார்.

Read more »

சிக்கிம் மாநிலத்தில் தேசிய சம்ஸ்க்ருத ஆய்வரங்கு

சிக்கிம் மாநிலத்தில் தேசிய சம்ஸ்க்ருத ஆய்வரங்கு

வடகிழக்கு இந்தியாவில் இத்தகைய விழா நடப்பது இதுவே முதன் முறையாகும். ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகம் ஆகும். சிக்கிம் மாநில முதல்வர் இந்த விழாவுக்கு எழுத்து மூலமாக வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில் சிக்கிம் மாநிலத்தில் பனிரெண்டு பள்ளிகள் சம்ஸ்க்ருத கல்வி கற்றுக் கொடுப்பதாகவும், மேலும் பல பள்ளிகளை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். சிக்கிம் மாநிலம் மிகப் பழமை வாய்ந்தது;...

Read more »

சமஸ்க்ருத வளர்ச்சிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு உதவி

கலாசார பண்பாட்டு அடிப்படை அம்சமாக சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவும் என, அம்மாநில கல்வி அமைச்சர் ஸ்ரீ முகமது சயத் கூறினார். இந்திய புத்த மத கல்வி கழகத்தின் (Indian Society for Buddhist Studies (ISBS)) ஆண்டு விழாவில் பேசிய அவர், “புத்தமதம் ஜம்மு காஷ்மீரின் கலாசார பண்பாட்டு அமைப்பில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அந்த கலாசார பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு பகுதியாக சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு உதவ அரசு உறுதி...

Read more »