ஆரம்பமே அமர்க்களமாக…

குழந்தை கந்தனுக்கு ஆறு முகங்கள். ஆனால் அம்பிகையிடம் ஒரு முகத்தால்  பாலருந்தும் போது மீதம் உள்ள ஐந்து முகங்கள் அனாதரவாக (பால் அருந்த முடியாமல்) இருக்க, கணேசர் தன் தும்பிக்கையால் ஐந்து முகங்களுக்கும் பால் உறிஞ்சி ஊட்டுகிறாராம். அதே சமயம் கணேசரின் கழுத்தில் மொய்க்கும் ஈக்களை (யானைக்கு மத ஜலம் வடிவதால்  கழுத்தில் ஈக்கள் மொய்க்கும்) தனது பனிரெண்டு கரங்களாலும் விரட்டுகிறாராம்…

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை?

மேலும் படிக்க

போஜராஜன் சபையில்…

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

மேலும் படிக்க

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…

நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே. ஆங்கிலேயர்… மேலும் படிக்க

கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

மேலும் படிக்க

வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர்.

குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.

மேலும் படிக்க