பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.

மேலும் படிக்க

நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்

இந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது? மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை?

மேலும் படிக்க

காவியத்தை ரசிப்பது எப்படி?

ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரண்டு முறைகள் உண்டு. தண்டாந்வயம் என்பது ஒரு கோலை நீட்டியது போல சொற்களை அதன் வரிசையிலேயே படித்து அர்த்தம் சொல்வது. கண்டாந்வயம் என்பது சொற்களை வரிசை மாற்றி வெவ்வேறு இடத்தில் பொருத்தி பொருள் சொல்லும் முறை.

மேலும் படிக்க

காவிய அலங்காரம்

இலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான காவியங்களுக்கு மனிதர்களைப் போலவே உயிர் உண்டு. அங்கங்கள் உண்டு. பண்புகள் உண்டு. காவியத்திற்கு இனிமையே முதன்மையான பண்பு என்று சிலர் கூறுவர். மனிதர்கள் ஆபரணங்களை அணியும்போது அழகு மேலும் கூடித் தெரிவது போல அலங்காரங்கள் காவியத்தின் இனிமையை அழகை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க

வடமொழியும் தென்மொழியும்…

நான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன – ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன – இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மல்ஹோத்ரா – அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் “உடையும் இந்தியா..?” என்கிற நூல் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறது. ஒரு நூற்றாண்டுக்குள், பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம் என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச் சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த) வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.

மேலும் படிக்க

சமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’

சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத, “என்சைக்ளோபீடியா’ உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகர வரிசையில் தொகுத்து, அரும்பொருள் சொல்லகராதியான, “என்சைக்ளோபீடியா’வை, உருவாக்கியுள்ளனர். 40 தொகுப்புகள் வெளியிட திட்டமிட்டு, 25 தொகுப்புகளை வெளியிட் டுள்ளனர். மேலும், 15 தொகுப்புகளை வெளியிடும் பணியை, பல்கலையின் சமஸ்கிருத துறை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மஹாகவி பவபூதி

தமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.

பவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.

மேலும் படிக்க