திரு எஸ்.எல்.அப்யங்கர் (S.L. Abhyankar) அவர்கள் இந்த அருமையான மரபுச் சொற்றொடர்களை தொகுத்துள்ளார். இவைகள் பெரும்பாலும் சமஸ்க்ருத மரபுவழி வாக்கியங்களான சுபாஷிதங்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றுக்கு நேரடி தமிழாக்கத்துடனும் சிலவற்றுக்கு ஈடான தமிழ் பழமொழிகளுடனும் கீழே தரப் பட்டுள்ளது..
- பர்யாப்த ஏக: புலாக: ஸ்தா²ல்யா நித³ர்ஸ²னாய [पर्याप्त एक: पुलाक: स्थाल्या निदर्शनाय]
Single grain enough to tell us the condition of the cooking of the entire pot. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் - அதிபரிசயாத³வஜ்ஞா [ अतिपरिचयादवज्ञा]
Familiarity breads contempt. “अतिपरिचयादवज्ञा संततगमनादनादरो भवति । मलये भिल्लपुरंध्री चन्दनतरुकाष्ठमिंधनं कुरुते” என்கிற சுபாஷித வாக்கியத்தின் ஒரு பகுதி இந்த சொற்றொடர். இதன் பொருள் அதிகமாக பழகுவது அலட்சியத்தை ஏற்படுத்தும். மலை மீது, வேடன் மனைவி (அதிகமாக கிடைக்கும்) சந்தனக்கட்டையை விறகாக உபயோகப் படுத்துவது போல” - அதிலோபோ⁴ விநாஸா²ய [ अतिलोभो विनाशाय ]
Greed will kill (is poison) பேராசை பெருநஷ்டம். - அதி ஸர்வத்ர வர்ஜயேத் [ अति सर्वत्र वर्जयेत् ]
Excess of anything is bad அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. - அதி த்ருஷ்ணா ந கர்தவ்யா [ अति तृष्णा न कर्तव्या ]
Too much hankering is badஅதிகம் ஆசைப் படாதே. - அதி⁴கஸ்ய அதி⁴கம் ப²லம் [ अधिकस्य अधिकं फलम् ]
More the merrier நிறைய இருந்தால் நல்லது தான். - அநதிக்ரமணீயா ஹி நீதி: [ अनतिक्रमणीया हि नीतिः ]
Codes should not be transcendedவிதியை மீறாதே. - அல்பஸ்²ச காலோ ப³ஹவஸ்²ச விக்⁴நா: [ अल्पश्च कालो बहवश्च विघ्नाः ]
Time is short and obstacles are many. நேரம் குறைவு. தடங்கல் அதிகம். - அவ்யாபாரேஷு வ்யாபார: [ अव्यापारेषु व्यापारः ]
Trading in non-tradeables. தேவையில்லாதவற்றில் தலையிடாதே. பகவத் கீதையில் “ஸ்²ரேயாந் ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மோ ப⁴யாவஹ: ” என்கிற வாக்கியம் இரண்டு முறை (3:35, 18:47) சொல்லப் படுகிறது. அந்த அளவு முக்கியம் இது. ஒருவர் தன்னுடைய குணத்துக்கும், சுபாவத்துக்கும் ஏற்ற செயல்களை செய்வதே நல்லது என்பதை இதன் பொருளாக கொள்ளலாம். - அஹிம்ஸா பரமோ த⁴ர்ம: [ अहिंसा परमो धर्मः ]
Non-violence is the supreme code of conduct அஹிம்சை எல்லாவற்றிலும் முதன்மையான அறம். - அலப்⁴யோ லாப⁴: [ अलभ्यो लाभः ]
Unattainable gain, A windfall. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல எதிர்பாராத நன்மை. - அப⁴த்³ரம்° ப⁴த்³ரம்° வா விதி⁴லிகி²தமுந்மூலயதி க: விதி⁴லிகி²தமுந்மூலயதி [ अभद्रं भद्रं वा विधिलिखितमुन्मूलयति कः (विधिलिखितमुन्मूलयति ]
Good or bad, can anyone avoid or evade the destiny? விதியை மீற முடியாது. - அர்தோ² ஹி லோகே புருஷஸ்ய ப³ந்து⁴: [ अर्थो हि लोके पुरुषस्य बन्धुः ]
Money only is the true friend.செல்வமே உண்மையான துணை. - ஆக்ருதிர்ப³கஸ்ய த்³ரு«ஷ்டிஸ்து காகஸ்ய [ आकृतिर्बकस्य दृष्टिस्तु काकस्य ]
Personality of a crane, but looks of (hovering eyesight like that of) a crowகொக்கின் குணம் இருந்தும் பார்க்க காகம் போல் இருத்தல். - ஆயே து³:க²ம்° வ்யயே து³:க²ம்° தி⁴க³ர்தா²: [ आये दुःखं व्यये दुःखं धिगर्थाः (]
Hate the Moneys which prove troublesome whether by income or outgoசெல்வம் இருந்தாலும் துக்கம் இல்லாவிட்டாலும் துக்கம். - இக்ஷு: மது⁴ரோ’பி ஸமூலம்° ந ப⁴க்ஷ்ய: [ इक्षुः मधुरोऽपि समूलं न भक्ष्यः ]
Sugarcane, even if it is sweet is not to be eaten along with its roots.கரும்பு இனித்தாலும் வேருடன் உண்ணப் படுவதில்லை. - இத: கூப: ததஸ்தடீ [ इतः कूपः ततस्तटी ]
This side a dug well and that side a trenchஇந்தப் பக்கம் கிணறு போல இருந்தாலும் அந்தப்பக்கம் அது சுரங்கம். - இதோ ப்⁴ரஷ்ட: ததோ ப்⁴ரஷ்ட: [ इतो भ्रष्टः ततो भ्रष्टः ]
Unethical here, unethical thereஇங்கும் அநீதி, அங்கும் அநீதி - ஈஸ்²வரேச்சா² ப³லீயஸீ [ ईश्वरेच्छा बलीयसी ]
God’s will prevailsதெய்வமே பலம் மிகுந்தது. - உத்பத்³யந்தே விலீயந்தே த³ரித்³ராணாம் மநோரதா²: [ उत्पद्यन्ते विलीयन्ते दरिद्राणां मनोरथाः ]
Dreams of the poor crop up and vanishபயிர் உற்பத்தியும் அழிவும் ஏழைகளின் கனவில் - உத்ஸவப்ரியா: க²லு மநுஷா: [ उत्सवप्रियाः खलु मनुषाः ]
People are given to festivities உல்லாசங்களை மக்கள் எப்போதும் விரும்புவர். - கண்டகேநைவ கண்டகமுத்³த⁴ரேத் [ कण्टकेनैव कण्टकमुद्धरेत् (]
Use a thorn to remove a thorn. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும். - கர்தவ்யோ மஹதா³ஸ்²ரய: [ कर्तव्यो महदाश्रयः ]
Keep company of the noble.பெரியோரை அண்டி இருத்தல் நல்லது. மேகதூத காவியத்தில் காளிதாசன், “யாஞ்சா மோகா⁴ வரமதி⁴கு³ணே நாத⁴மே லப்³த⁴காமா ” என்று குறிப்பிடுகிறார். அதாவது தீயவர்களின் பிரார்த்தனை பலன் தரும் போல இருந்தாலும் அதை விட பெரியோரின் பிரார்த்தனைகளை வேண்டுவது பலன் தராமல் போனாலும் நல்லது. - கவய: கிம் ந பஸ்²யந்தி [ कवयः किं न पश्यन्ति ]
Is there anything that is beyond the imagination of poets?கவிஞர்களின் கற்பனைக்கு அளவு ஏது? - காவ்யஸா²ஸ்த்ரவிநோதே³ந காலோ க³ச்ச²தி தீ⁴மதாம் [ काव्यशास्त्रविनोदेन कालो गच्छति धीमताम् ]
Intelligent people engage themselves in poetry, sciences, entertainment. அறிவாளிகள் காவியத்திலும் அறிவியலிலும் பொழுது போக்குகிறார். இன்னொரு வகையிலும் இதை விளக்கலாம். அறிவாளிகள் தன் மூளையைக் சிந்தனை செய்வார்கள். சாதாரணர்கள் சம்பவங்களைப் பற்றி பேசுவார்கள். மூடர்கள் மற்றவரைப் பற்றி பேசி பொழுது போக்குவர். - காலாய தஸ்மை நம: [ कालाय तस्मै नमः ]
Time and tide wait for none. காலத்துக்கு வந்தனம். இன்னொரு வாக்கியமும் உண்டு “ந காலேந ஸமௌஷத⁴ம் ” – காலமே அரு மருந்து. - கிமிவ ஹி மது⁴ராணாம்° மண்ட³நம்° நாக்ரு«தீநாம் நாக்ருதீநாம் [ मधुराणां आकृतीनां किमिव हि मण्डनं न ]
whatever can not become an adornment for one, who has inherent beauty of one’s own ?இயற்கையில் அழகு உள்ளவருக்கு எந்த ஆபரணம் தான் அழகு சேர்க்காது? இது காளிதாசரின் அபி⁴ஜ்ஞாநஸா²குந்தலம் காவியத்தில் வரும் ஸ்லோகத்தின் கடைசி வரி. இந்த ஸ்லோகம் “ஸரஸிஜமநுவித்³த⁴ம் ஸை²வலேநாபி ரம்யம் ” – சேற்றில் இருந்தாலும் தாமரை அழகு. மலிநமபி ஹிமாம்ஸோ²ர்லக்ஷ்ம லக்ஷ்மீம் தநோதி – நிலவின் நிழலும் அழகு. ல்யாமதி⁴கமநோஜ்ஞா வல்கலேநாபி தந்வீ – இந்த நிலையிலும் இந்த பெண் அழகு, கிமிவ ஹி மது⁴ராணாம் மண்ட³நம்° நாக்ருதீநாம் – இயற்கையில் அழகு உள்ளவருக்கு எந்த ஆபரணம் தான் அழகு சேர்க்காது? - கிமிவ ஹி து³ஷ்கரமகருணாநாம் [ किमिव हि दुष्करमकरुणानाम् (]
What is impossible for the heartless?கருணை இல்லாதவருக்கு எதுதான் முடியாது? - கிமிஷ்டமந்நம் க²ரஸூகராணாம் [ किमिष्टमन्नं खरसूकराणाम् ]
What of sweets to donkeys and pigs? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? - க்ஷமயா கிம் ந ஸித்³த்⁴யதி [ क्षमया किं न सिद्ध्यति ]
What can not be achieved by pardon ? or What cannot be achieved by saying “sorry” ? மன்னிப்பதால் எதுதான் ஆகாது? - க்லேஸ²: ப²லேந ஹி புநர்நவதாம்° வித⁴த்தே [ क्लेशः फलेन हि पुनर्नवतां विधत्ते ]
If one trouble succeeds in troubling, it keeps coming back in newer forms. ஒரே தொல்லை திரும்ப திரும்ப வரும். இதே போல சி²த்³ரேஷ்வநர்தா² ப³ஹுலீ ப⁴வந்தி , சிறு துளை இருந்தால் போதும், எல்லா கழிவுகளும் அங்கே சேரும். - க³தம் ந ஸோ²ச்யம் [ गतं न शोच्यम् ]
Let bygone be bygone. போனது போகட்டும். - க³தாநுக³திகோ லோகோ ந கஸ்²சித் பாரமார்தி²க: [ गतानुगतिको लोको न कश्चित् पारमार्थिकः ]
People conduct rooted in conventions. Rarely there is anyone, who seeks the supreme meaning. மக்கள் ஆட்டு மந்தை போல உண்மையை அறியாமல் பின் செல்கிறார்கள். - க³ஹநா கர்மணோ க³தி: [ गहना कर्मणो गतिः ]
It becomes a matter of very deep thinking to understand what Karma is. It is to be understood by Karma, as it presents itself , also by its anti-theses and also by its non-being. இது பகவத் கீதையில் வரும் ஸ்லோகம், “கர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம்° போ³த்³த⁴வ்யம்° ச விகர்மண: | அகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ” கர்மாவை புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம். விதி (கர்மா) என்பதை அறிவதும் விதி வசம் தான். - கு³ணா: ஸர்வத்ர பூஜ்யந்தே [ गुणाः सर्वत्र पूज्यन्ते ]
Virtues are respected everywhere.நற்குணம் எல்லா இடத்தும் மதிக்கப் படுகிறது. - சக்ரவத்பரிவர்தந்தே து³:கா²நி ச ஸுகா²நி ச [ चक्रवत्परिवर्तन्ते दुःखानि च सुखानि च ]
Sorrows and happiness keep coming and going in cyclic order as a turning wheel. இன்பமும் துன்பமும் சுழற்சியாக வரும். - ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்²ச ஸ்வர்கா³த³பி க³ரீயஸீ [ जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ]
Mother and motherland are more respectable than even heaven பிறந்த தேசம் என்பது சுவர்க்கத்தை விட சிறந்தது. இது ராமாயணத்தில் வரும் ஒரு அழகிய ஸ்லோகம்: அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே லக்ஷ்மண ரோசதே | ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்²ச ஸ்வர்கா³த³பி க³ரீயஸீ || – ராவணன் அழிந்த பின் இலங்கையை விபீஷணன் சுற்றிக் காட்ட, அதில் மகிழ்ந்த ராமன் பிறகு சொன்னது, “என்னதான் தங்கமும் வைரமுமாக இந்த நாடு இருந்தாலும் நமது பிறந்த தேசத்துக்கு ஈடாகாது”. - ஜலபி³ந்து³நிபாதேந க்ரமஸ²: பூர்யதே க⁴ட: [ जलबिन्दुनिपातेन क्रमशः पूर्यते घटः ]
Drops fill up a pitcher. சிறு துளி பெருவெள்ளம். - ஜீவோ ஜீவஸ்ய ஜீவநம் [ जीवो जीवस्य जीवनम् ]
Lives survive, one on another. Another version of this is जीवो जीवस्य भोजनम् means “one life is food of another.”உயிர்களில் ஒன்றின் ஊன் இன்னொன்றுக்கு உணவு. - த்ருடித: ஸம்ப³ந்த⁴: ப்ரஸா²ந்த: கலஹ: [ त्रुटितः सम्बन्धः प्रशान्तः कलहः ]
Relationship severed, quarrel pacified. உறவை துண்டித்ததும் பிரச்னை முடிந்தது. - த்ரைலோக்யே தீ³பக: த⁴ர்ம: [ त्रैलोक्ये दीपकः धर्मः ]
Dharma i.e. righteous conduct is the guiding light, beacon, in all three worlds (here, in nether world and in heaven)மூவுலகிலும் அறமே வழிகாட்டி. - து³ர்லப⁴ம்° பா⁴ரதே ஜந்ம மாநுஷ்யம்° தத்ர து³ர்லப⁴ம் [ दुर्लभं भारते जन्म मानुष्यं तत्र दुर्लभम् ]
Difficult i.e. not in everyone’s luck to be borne in India. It is further difficult to born as a human being.பாரதத்தில் பிறப்பதே அரிது. அங்கேயும் மனிதனாக பிறப்பது மேலும் அரிது. - தூ³ரத: பர்வதா: ரம்யா: [ दूरतः पर्वताः रम्याः ]
Mountains are beautiful from a distance. மலைகளை தூரத்தில் பார்க்க அழகு. (இக்கரைக்கு அக்கரை பச்சை) - த்³ரவ்யேண ஸர்வே வஸா²: [ द्रव्येण सर्वे वशाः ]
All can be commanded by wealthசெல்வத்தால் எல்லாவற்றையும் ஆளலாம். - த⁴ர்மோ மித்ரம்° ம்ருதஸ்ய [ धर्मो मित्रं मृतस्य ]
Religion is a friend of the dead (?)இறந்தாலும் தர்மமே துணை. - தீ⁴ரா: ஹி தரந்த்யாபத³ம் தரந்த்யாபத³ம் [ धीराः हि तरन्त्यापदम् (तरन्त्यापदम् ]
The bold conquer obstaclesதுணிந்தவனுக்கே வெற்றி. - நாஸ்தி ஸத்யஸமோ த⁴ர்ம: [ नास्ति सत्यसमो धर्मः ]
There is no religion equal to the Truthஉண்மையை விட பெரிய அறம் வேறெதுவும் இல்லை. - ந கூபக²நநம்° யுக்தம்° ப்ரதீ³ப்தே வந்ஹிநா க்³ரு«ஹே [ न कूपखननं युक्तं प्रदीप्ते वन्हिना गृहे ]
It is no use digging a well when the house is on fireவீடு பற்றி எரியும் பொது கிணறு வெட்டி என்ன பிரயோஜனம்? - ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி [ न भूतो न भविष्यति ]
Hasn’t been, shall not be. The phrase is used to describe an unparalleled event or person. For example, a Mahatma like Gandhi has not been, shall not be.இதற்கும் முன்னும் இருந்ததில்லை. இனியும் வரப் போவதில்லை. - ந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம்° பவித்ரமிஹ வித்³யதே [ न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ]
There is nothing as sacrosanct as (true) knowledge. This is first line in a shloka in श्रीमद्भगवद्गीता where the second line is तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ||४-३८||ஞானத்துக்கு ஈடு வேறு எதுவும் இல்லை. - ந ஸா²ந்தே: பரமம் ஸுக²ம் [ न शान्तेः परमं सुखम् ]
There is no happiness more sublime than peaceஅமைதியை விட பெரிய சுகம் வேறு இல்லை. - நிகூ³டே⁴’பி குக்குடே உதே³த்யேவ அருண: [ निगूढेऽपि कुक्कुटे उदेत्येव अरुणः ]
Hiding the hen cannot stop the sun from risingசேவலை ஒளித்து வைப்பதால் சூரியன் உதயமாகாமல் இருக்காது. - நிர்வாணதீ³பே கிமு தைலதா³நம் [ निर्वाणदीपे किमु तैलदानम् ]
What use is putting oil in a lamp, where the flame is put out ? Locking the stable after the horse is stolen.அணைந்த விளக்குக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்? - நிரஸ்தபாத³பே தே³ஸே² ஏரண்டோ³’பி த்³ருமாயதே [ निरस्तपादपे देशे एरण्डोऽपि द्रुमायते ]
In a plant-less desert, even a shrub of castor looks like a (banyan) tree.பாலை வனத்தில் சிறு புதர் கூட ஆலமரம் போல தெரியுமாம். - நி:ஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜக³த் [ निःस्पृहस्य तृणं जगत् ]
To a person, who has transcended all desires, the whole world is but a blade of grass.ஆசையை துறந்தவனுக்கு உலகமே துரும்பு. - ந நிஸ்²சிதார்தா²த் விரமந்தி தீ⁴ரா: [ न निश्चितार्थात् विरमन्ति धीराः ]
The determined never halt until they achieve their goals. தீர்மானமாக இறங்குபவருக்கு குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லை. இது பர்த்ருஹரியின் சுபாஷிதத்தில் வரும் கடைசி வரி. முழுவதும்: ரத்நைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ந தே³வா | ந பே⁴ஜிரே பீ⁴மவிஷேண பீ⁴திம் | ஸுதா⁴ம்° விநா ந ப்ரயயுர்விராமம் | ந நிஸ்²சிதார்தா²த்³விரமந்தி தீ⁴ரா: – அதாவது, பாற்கடலைக் கடைந்த போது, எத்தனையோ ரத்தினங்களும், அரிய பொருட்களும் கிடைத்த போதும், தேவர்கள் நிற்கவில்லை. விஷம் வந்த போதும் ஓயவில்லை. அமுதம் கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருந்தனர். குறிக்கோளை அடையும் வரை ஓயவில்லை. - நிர்த⁴நஸ்ய குத: ஸுக²ம் [ निर्धनस्य कुतः सुखम् ]
Can a poor be happy ?ஏழைக்கு சுகம் ஏது? - நீசைர்க³ச்ச²த்யுபரி ச த³ஸா² சக்ரநேமிக்ரமேண [ नीचैर्गच्छत्युपरि च दशा चक्रनेमिक्रमेण ]
Our conditions go cyclically up and down like the spokes of a wheel. சக்கரத்தின் சுழற்சி போல நமது நிலை இன்பமும் துன்பமும் ஆக செல்கிறது. - பரது³:க²ம்° ஸீ²தலம் [ परदुःखं शीतलम् ]
Other’s sorrow is cool (is no sorrow).எருது நோய் காக்கை அறியுமா? - பரோபகாரார்த²மித³ம்° ஸ²ரீரம் [ परोपकारार्थमिदं शरीरम् ]
This body is for service unto othersபிறருக்கு உதவுவதே பிறவிப் பயன் - பரோபதே³ஸே² பாண்டி³த்யம் [ परोपदेशे पाण्डित्यम् ]
Sporting wisdom in advising othersஊருக்கு உபதேசம். - பரோபகாராய ஸதாம் விபூ⁴தய: [ परोपकाराय सतां विभूतयः ]
Lives of the noble are for gracing othersபெரியோரின் வாழ்க்கை பலருக்கு உதவுவதாகவே இருக்கிறது. - புந: புநரபி ப்ரக்ஷால்ய கஜ்ஜலம் ந ஸ்²வேதாயதே [ पुनः पुनरपि प्रक्षाल्य कज्जलं न श्वेतायते ]
You may wash coal again and again, but it will never become white.அடுப்புக்கரியை எத்தனை கழுவினாலும் வெளுப்பாக இருக்காது. - பிண்டே³ பிண்டே³ மதிர்பி⁴ந்நா [ पिण्डे पिण्डे मतिर्भिन्ना ]
Many people, many minds. Literally, every brain has a different mind. உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோசனை உதிக்கும். இது ஒரு சுபாஷிதத்தின் கடைசி வரி. மற்ற வரிகள், குண்டே³ குண்டே³ நவம்° பய: | ஜாதௌ ஜாதௌ நவாசாரா நவா வாணீ முகே² முகே². இதன் பொருள் ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு நீர். ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு பழக்க வழக்கம், ஒவ்வொரு வாயிலும் ஒரு குரல். - ப்ரஜ்ஜ்வாலிதோ ஜ்ஞாநமய: ப்ரதீ³ப: [ प्रज्ज्वालितो ज्ञानमयः प्रदीपः ]
Lamp of knowledge is litஞானம் சுடர்விட்டு ஒளிர்கிறது. - ப்ரத²மக்³ராஸே மக்ஷிகாபாத: [ प्रथमग्रासे मक्षिकापातः ]
Find a fly in the first sip.முதலில் குடிக்கும்போதே பூச்சி/புழு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். (குடித்தபின் அதில் பல்லி விழுந்திருப்பதை கண்டு என்ன பயன்?) - ப்ருதி²வ்யாம் த்ரீணி ரத்நாநி ஜலமந்நம் ஸுபா⁴ஷிதம் [ पृथिव्यां त्रीणि रत्नानि जलमन्नं सुभाषितम् ]
There are only three true jewels – water, food and good sayings. This line is actually the first line of a सुभाषितम्. The other line is मूढैः पाषाणखण्डेषु रत्नसंज्ञा विधीयते meaning, “fools call bits of stone as jewels.”பூமியில் மூன்று முக்கியப் பொருள்கள் உண்டு, நீர், உணவு மற்றும் நல்வார்த்தைகள் - ப³தி⁴ராத் மந்த³கர்ண: ஸ்²ரேயாந் [ बधिरात् मन्दकर्णः श्रेयान् ]
A person slow of hearing is better than a deaf.முழுச்செவிடனை விட அரை செவிடு மேல் - ப³ஹுஜநஹிதாய ப³ஹுஜநஸுகா²ய [ बहुजनहिताय बहुजनसुखाय ]
For the good of many, for happiness of many.பலரின் நன்மைக்காக, பலரது மகிழ்ச்சிக்காக - ப³ஹுரத்நா வஸுந்த⁴ரா [ बहुरत्ना वसुन्धरा ]
Earth is a treasure of jewels.பூமி பல அரும்செல்வங்களை தன்னகத்தே கொண்டது. - பா³லாநாம் ரோத³நம்° ப³லம் [ बालानां रोदनं बलम् ]
Crying is the strength (weapon) of children (to get, what they want).குழந்தைக்கு அழுகையே பலம். - பு³த்³தி⁴: கர்மாநுஸாரிணீ [ बुद्धिः कर्मानुसारिणी ]
Actions cultivate the intellect.செயலே சிந்தனையை வளர்க்கும். - பு³த்³தி⁴ர்யஸ்ய ப³லம் தஸ்ய [ बुद्धिर्यस्य बलं तस्य ]
He is strong, who has intelligence. “Pen is mightier than the sword” sounds synonymous.புத்திமான் பலவான் ஆவான். - ப⁴த்³ரம் கர்ணேபி⁴: ஸ்²ருணுயாம தே³வா: [ भद्रं कर्णेभिः श्रुणुयाम देवाः ]
Gods! May we get to listen only good things by our ears!! தேவர்களே நல்லதையே எங்கள் கண்கள் பார்க்கட்டும். - ப⁴வந்தி ப⁴விதவ்யாநாம் த்³வாராணி ஸர்வத்ர [ भवन्ति भवितव्यानां द्वाराणि सर्वत्र ]
Providence provides doors (openings, opportunities) all over. You should have the vision to see them and alertness to grab them.இறைவன் எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கிறான். நீங்கள் தான் அதை பயன்படுத்த வேண்டும். - பி⁴ந்நருசிர்ஹி லோக: [ भिन्नरुचिर्हि लोकः ]
People have different tastes. உலகம் பலவிதம். - மது⁴ திஷ்ட²தி ஜிவ்ஹாக்³ரே ஹ்ரு«த³யே து ஹலாஹலம் [ मधु तिष्ठति जिव्हाग्रे हृदये तु हलाहलम् ]
Has honey on the tip of the tongue, but poison in the heart.உதட்டில் தேன், உள்ளத்தில் நஞ்சு. - மந: பூதம் ஸமாசரேத் [ मनः पूतं समाचरेत् ]
Act by your own discretion.எண்ணப்படி செய். - மநோரதா²நாமக³திர்ந வித்³யதே [ मनोरथानामगतिर्न विद्यते ]
Dreams know no holds.கனவில் என்ன தடை? - மரணம் ப்ரக்ருதி: ஸ²ரீரிணாம் [ मरणं प्रकृतिः शरीरिणाम् ]
Death is natural to everyone born. பிறந்தது அனைத்தும் இறந்தே தீரவேண்டும். - மஹாஜநோ யேந க³த: ஸ பந்தா²: [ महाजनो येन गतः स पन्थाः ]
Two different meanings of this. (1) Great are those who followed this path (2) That should be the path, by which the great ones went. In meaning (1) “this path” means the path in search of the ultimate truth. This quotation is Yudhishthir’s answer to one of the 30-odd questions asked by Yaksha the यक्षप्रश्नाःஇந்தப் பாதையை பெரியோர் பின்பற்றினர். பாதை என்பது இறுதி உண்மைக்கு இட்டுச் செல்லும் வழி. இது யக்ஷ பிரச்னம் என்னும் மகா பாரத நிகழ்வில் இடம் பெறுகிறது. - மார்கா³ரப்³தா⁴: ஸர்வயத்நா: ப²லந்தி [ मार्गारब्धाः सर्वयत्नाः फलन्ति ]
Once efforts are undertaken, they will succeed. “Try and try forever and you will succeed.” Nearly 400 years ago, Saint rAmadAsa, precept of Chhatrapati ShivAji wrote in his dAsabodha, केल्याने होत आहे रे । आधी केलेचि पाहिजे ॥ meaning, “First do it, only then things will happen.”முயற்சி பலன் தரும். - மாத்ருதே³வோ ப⁴வ [ मातृदेवो भव ]
Be one who would respect mother as God. I would consider मातृदेवो i.e. मातृदेव: as a compound word माता एव देवः यस्मै सः (चतुर्थी बहुव्रीहि समास). தாயே தெய்வம் - பித்ருதே³வோ ப⁴வ [ पितृदेवो भव ]
As above, “Be one who would respect father as God”தந்தையே தெய்வம். - ஆசார்யதே³வோ ப⁴வ [ आचार्यदेवो भव ]
As above, “Be one who would respect teacher the preceptor as God”குருவே தெய்வம். - அதிதி²தே³வோ ப⁴வ [ अतिथिदेवो भव ]
As above, “Be one who would respect a guest (an uninvited guest also) as God” अतिथि: is actually तिथिः न (अस्ति) यस्य सः – (नञ् बहुव्रीहि समास) one who does not come by an appointment, so अतिथि: விருந்தினனே தெய்வம். - மூட⁴: பரப்ரத்யநேயபு³த்³தி⁴: [ मूढः परप्रत्यनेयबुद्धिः ]
Fools (people of low intellect) will only follow. Only intelligent one can lead. முட்டாள்கள் பின்பற்றுவர், அறிவுள்ள பெரியோரே முன்னிட்டு நடத்துவர். - ம்ருது³ர்ஹி பரிபூ⁴யதே [ मृदुर्हि परिभूयते ]
Softness is encompassing. Most true of softness of speech. Have harsh words ever helped anybody? இனிமையான மொழியால் எதையும் சாதிக்கலாம். - மௌநம் ஸர்வார்த²ஸாத⁴நம் [ मौनं सर्वार्थसाधनम् ]
Silence is goldenமௌனம் பலகாரியங்களை சாதிக்கும். - யதா² பீ³ஜம் ததா²ங்குர: [ यथा बीजं तथाङ्कुरः ]
As you sow, sow you reap.எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்ய முடியும். - யதா² ராஜா ததா² ப்ரஜா [ यथा राजा तथा प्रजा ]
As the king, so the subjects. Almost identical is राजा कालस्य कारणम् அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி. - யத்³வா தத்³வா ப⁴விஷ்யதி [ यद्वा तद्वा भविष्यति ]
Garbage in garbage out. எதையோ செய்தால் எதுவோ தான் நடக்கும். - யத்³வா தத்³வா வத³தி [ यद्वा तद्वा वदति ]
Speaks whatever!எதைஎதையோ பேசுகிறான். - யாசகோ யாசகம் த்³ருஷ்ட்வா ஸ்²வாநவத்³கு³ர்கு³ராயதே [ याचको याचकं दृष्ट्वा श्वानवद्गुर्गुरायते ]
Like dogs, a beggar purrs at another beggar. There is another सुभाषितम् काक आव्हयते काकान् याचको न तु याचकान् । काकयाचकयोर्मध्ये वरं काको न याचकः ॥ meaning, “A crow crows to call other crows. But one beggar does not call another. Between crows and beggars, the crow seem to be the better ones! ஒரு பிச்சைக்காரனுக்கு இன்னொரு பிச்சைக் காரனைப் பார்த்தால் கோபம் வருகிறது. - யாத்³ருஸ²ம் வபதே பீ³ஜம் தாத்³ருஸ²ம் லப⁴தே ப²லம் [ यादृशं वपते बीजं तादृशं लभते फलम् ]
As you sow, sow you reap.எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்ய முடியும். - ய: க்ரியாவாந் ஸ பண்டி³த: [ यः क्रियावान् स पण्डितः ]
One who exemplifies by own conduct is really the knowledgeable.செயலே ஒருவனை சிறந்தவனாக்கும். - யுத்³த⁴ஸ்ய கதா² ரம்யா [ युद्धस्य कथा रम्या ]
“War-stories are entertaining.” What if you have to yourself go to the battle-front? போரின் கதைகள் சுவையானது தான். - யேந கேந ப்ரகாரேண ப்ரஸித்³த⁴: புருஷோ ப⁴வேத் [ येन केन प्रकारेण प्रसिद्धः पुरुषो भवेत् ]
Do anything to become known ? The previous line is घटं भिन्द्यात् पटं छिन्द्यात् कुर्याद्वा रासभध्वनिम् break the pots, tear the clothes or bray like a donkey. … Do anything to become knownபுகழ் அடைய எதையாவது செய். - யோஜகஸ்தத்ர து³ர்லப⁴: [ योजकस्तत्र दुर्लभः ]
Good managers are rare. योजक: actually means “one, who implants”, e.g. a guru. Actually the disciple also has to be a worthy disciple. Guru also gets real satisfaction when the disciple is as good. This is well-stated by महाकवि कालिदास in मालविकाग्निमित्रम् in a shloka पात्रविशेषे न्यस्तं गुणान्तरं व्रजति शिल्पमाधातुः । जलमिव समुद्रशुक्तौ मुक्ताफलतां पयोदस्य ॥ meaning, “Art manifests itself with different quality, when embedded in a special entity. For example, rain-drops falling in a sea-shell can become a pearl (not rain-drops falling anywhere).”திறமையுடையவர்கள் குறைவு. - ராஜா காலஸ்ய காரணம் [ राजा कालस्य कारणम् ]
Responsibility will finally vest with king (the chief executive)பொறுப்பு உச்சியில் (அரசனாக) இருப்பவருக்கே - வந்தே³ மாதரம் [ वन्दे मातरम् ]
I bow to Mother. Composed by Bankim Chandra Chatterjee in his novel. This became an inspirational quotation for many Indian freedom-fighters. Two stanzas of the song are accorded the status of national song of India. “தாயே வணக்கம்!” – இது பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்த மடம் என்கிற நாவலில் இடம் பெறுகிறது. இந்திய தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பையும் பெற்றுள்ளது. - வக்தா த³ஸ²ஸஹஸ்ரேஷு [ वक्ता दशसहस्रेषु ]
One in ten thousand may be a good speaker. பத்தாயிரத்தில் ஒருவனே சிறந்த பேச்சாளனாக வருகிறான். - வசநே கிம் த³ரித்³ரதா [ वचने किं दरिद्रता ]
Why have poverty in speech?பேச்சில் என்ன சிக்கனம்? - வித்³வாந் ஸர்வத்ர பூஜ்யதே [ विद्वान् सर्वत्र पूज्यते ]
The magi are respected everywhere. Last phrase in a सुभाषितम् where it is also mentioned राजा पूज्यते देशे meaning, a king is respected in his own countryகற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. - வித்³யாத⁴நம் ஸர்வத⁴நப்ரதா⁴நம் [ विद्याधनं सर्वधनप्रधानम् ]
Wealth of knowledge is the most precious wealthகல்வியே சிறந்த செல்வம். - விநாஸ²காலே விபரீதபு³த்³தி⁴: [ विनाशकाले विपरीतबुद्धिः ]
In bad times, all discretion is lost.கெட்ட நேரம் வந்தால் கெட்ட புத்தி தான் வரும். - ஸ²ட²ம்° ப்ரதி ஸா²ட்²யம் [ शठं प्रति शाठ्यम् ]
Tit for tatஏட்டிக்கு போட்டி - ஸ²ரீரமாத்³யம்° க²லு த⁴ர்மஸாத⁴நம் [ शरीरमाद्यं खलु धर्मसाधनम् ]
Doing any good work demands, first and foremost, physical fitnessஎந்த நல்ல காரியம் செய்யவும், சக்தி வேண்டும். - ஸீ²லம்° பரம் பூ⁴ஷணம் [ शीलं परं भूषणम् ]
Character is the most precious ornament. நல்ல குணமே சிறந்த அணிகலன். - ஸு²பா⁴ஸ்தே ஸந்து பந்தா²ந: [ शुभास्ते सन्तु पन्थानः ]
May you have a safe journey. பிரயாணம் நல்லமுறையில் இருக்கட்டும். - ஸு²ப⁴ம் ப⁴வது [ शुभं भवतु ]
May everything be fineநல்லதே நடக்கட்டும். - ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் [ सत्यमेव जयते नानृतम् ]
Inscription on India’s emblem. வாய்மையே வெல்லும். - ஸத்யம் கண்ட²ஸ்ய பூ⁴ஷணம் [ सत्यं कण्ठस्य भूषणम् ]
Truth is the right ornament for the throat (neck). உண்மையே சிறந்த அணிகலன். - ஸுக²முபதி³ஸ்²யதே பரஸ்ய [ सुखमुपदिश्यते परस्य ]
Easier said than done. சொல்வது எளிது. செய்வது கடினம். - ஸம்ஹதி: கார்யஸாதி⁴கா [ संहतिः कार्यसाधिका ]
Together we prosper. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. - ஸ்வபா⁴வோ து³ரதிக்ரம: [ स्वभावो दुरतिक्रमः ]
Habits die hard! சுபாவத்தை மாற்ற இயலாது. - யோக³: சித்தவ்ருத்திநிரோத⁴: [ योगः चित्तवृत्तिनिरोधः ]
Yoga is getting command over the mind.”யோகம் என்பது மனத்தைக் கட்டுப்படுத்துவது தான்.
நன்றி: slabhyankar.wordpress.com

























மிக மிக அருமை. இதை எஸ். எல். அய்யங்கார் இதை நேற்றுதான் தன் வலைப்பக்கத்தில் எழுதி, அதையும் உடனுக்குடன், நம் தமிழிலும் ஏற்றவாறு மொழியாக்கம் செய்ததும் மிக மிக அருமை. இதை ஒரே நாளில் எழுத தாங்கள் எத்தனை நேரம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணும் போது, எனக்குத் திகைப் பூட்டி என்னை வியப்படையச் செய்து விட்டது. வாழ்க, வளர்க தங்கள் இரு மொழிகளுக்கும் ஆற்றும் தொண்டு.
ஸு²ப⁴ம் ப⁴வது
शुभं भवतु
May everything be fine
நல்லதே நடக்கட்டும்.