சென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான திரு. ஜி. திருவாசகம் அவர்கள், பாரதியார் பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பனிரெண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்த விழாவில் பங்கு கொண்டு பேசுகையில், மேலும் பனிரெண்டு புத்தகங்களை பல்கலைக் கழகம் மொழி பெயர்க்க உள்ளதாக தெரிவித்தார்.
இதில் கருணாநிதி அவர்களின் நெஞ்சுக்கு நீதி என்கிற சுய சரிதம் உள்ளிட்ட, ரோமாபுரிப்பாண்டியன், குறளோவியம், சங்கத்தமிழ், முத்துக் குவியல் ஆகியவையும் அடங்கும். இவை இந்தி, தெலுகு, மலையாளம், கன்னடம் மற்றும் வடமொழியிலும், இது தவிர, பிரெஞ்சு, ஜப்பானிஸ், சீனமொழி, ஜெர்மானிய மொழி மற்றும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப் பட உள்ளன.
வடமொழி மற்றும் இந்தி மொழிகளை கொள்கையாகவே எதிர்த்து வந்த கழக ஆட்சியில் இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமே! இந்த மொழி பெயர்ப்பு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய முதல்வர், தமது கவிதைகள் கடவுளின் அருளால் எழுதப் படவில்லை – தமது அனுபவத்தைக் கொண்டே எழுதப் பட்டதாக தெரிவித்தார். கவிதை என்பது இலக்கியத்திறனை மட்டும் காண்பிப்பதாக இருக்கக் கூடாது – மானுடத்தை உயர்த்தும் கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
[Source: The Indian Express, 1, June]

Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334