1977 ம் வருடம் புத்த தேவ் ஷர்மா, காசியில் சம்பூர்ணாநந்தா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்த போது, தான் கற்றுக் கொண்டிருந்த சமஸ்க்ருத மொழியை மறந்துபோவோம் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.
ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்கவும், படிப்பிலும் ஆராய்ச்சியிலும் ஒரு ஆண்டு இடைவெளி ஏற்பட்டது. அவ்வளவுதான், அவ்வளவு நாள் கற்று வைத்திருந்த சம்ஸ்க்ருத ஞானம் ஆவியாகி விட்டது.
ஒரு மொழியை கற்று – கற்றதை காப்பாற்ற வேண்டுமானால் அதை பழக்கத்தில் கொண்டு வரவேண்டும் – பேச்சு மொழியாக இல்லாது போனால் மொழியறிவு மறந்து போகும் என்று தெரிந்து கொண்டார். ‘வாக்’ பத்திரிக்கைக்கான துவக்கம் இதிலிருந்து தான் ஏற்பட்டது.
வாக் இதழ் 2002 ஏப்ரல் மாதம் துவங்கியது. இந்த பத்திரிக்கையின் செய்தியாளர், எடிடர், பப்ளிஷர் எல்லாமே ஷர்மாவே பார்த்துக் கொண்டார். முதல் வருடத்தில் ஐநூறு பிரதிகள் வெளியிட்டார். இன்று ஆயிரத்து அறுநூறுக்கும் மேல் விற்பனை ஆகி வருகிறது.
“சுதர்மா“ சமஸ்க்ருத தினசரியைப் போல இன்னும் இது இணையத்தில் வெளியிட துவங்கவில்லை. விரைவில் துவங்கப் படலாம் என்று எதிர்பார்ப்போம்.
[செய்தி: Vaak, a newspaper that helps brush up ‘practical’ Sanskrit]

