சமஸ்க்ருத புத்தக கண்காட்சி 2011

“விஸ்வ சம்ச்க்ருத புஸ்தக மேளா” என்கிற சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி முதன் முறையாக பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இது ஜனவரி 7 – 10, 2011 மூன்று நாட்கள் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது.

பல்வேறு சமஸ்க்ருத மொழி வளர்ச்சி அமைப்புகள் இணைந்து இக்கண்காட்சியை ஒரு விழாவாக கொண்டாடுகின்றன.

இந்நிகழ்வின் நோக்கமாக

  • நவீன சமஸ்க்ருத ஆராய்ச்சி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது
  • சமஸ்க்ருத அறிஞர்களை ஊக்குவிப்பது
  • சமஸ்க்ருத மொழி புத்தகங்கள்,  பதிப்பகங்களுக்கு சந்தையை ஏற்படுத்தி தருவது
  • சமஸ்க்ருத மொழி மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்பு  வளர்ச்சி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவது
  • சமஸ்க்ருத மொழியை பிரபலப் படுத்தி மக்களின் ஆதரவை பெறுவது

இவ்வாறு பல்வேறு நல்ல நோக்கங்களை உத்தேசித்து இவ்விழா திட்டமிடப் பட்டுள்ளது.  இவ்விழா சமஸ்க்ருதம் தெரிந்த – தெரியாத அனைவருக்குமாக அமையும் – அதே நேரத்தில் இவ்விழாவில் தன்னார்வ சேவகர்கள் (volunteer) அனைவரும் எளிய சமஸ்க்ருதத்திலேயே உரையாடுவர்.

இந்த சமஸ்க்ருத புத்தக விழா குறித்த மேலும் விவரங்கள் இங்கே http://www.samskritbookfair.org/

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: