புதிய சமஸ்க்ருத திரைப்படம்

பிரபோத சந்த்ரோதயம் என்கிற பதினொன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண மிஸ்ரரால் இயற்றப்பட்ட காவியத்தை கதையின் அடிப்படையாக கொண்டு சமஸ்க்ருதத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளது. சுமார் ஒரு கோடி செலவில் நூறு நிமிடங்களுக்கு ஓடும் அளவில் இந்த திரைப்படம் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் திரு கே.எஸ்.எல். சுவாமி அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கி வெளியிட உள்ளார். எண்பதுகளில் சமஸ்க்ருதத்தில் தொடர்ந்து மூன்று படங்களை (ஸ்ரீ ஆதிசங்கராசார்யா, ஸ்ரீ ராமானுஜசார்யா, ஸ்ரீ மத்வச்சர்யா) இயக்கிய திரு. ஜி.வி. அய்யர் அவர்களுடன் பணிபுரிந்து வந்த திரு. கே.எஸ்.எல்.சுவாமி அவர்கள் அதே பாணியில் இந்த புதிய சமஸ்க்ருத திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் இந்த திரைப்பட துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சனாதன தர்ம வர்த்தினி என்கிற சமூக அமைப்பு இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் திரு. சி.வி.எல் சாஸ்திரி அவர்கள், இத்திரைப்படத்துக்கு நிதி உதவி செய்யுமாறு சமஸ்க்ருத ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இத்திரைப்படத்தில் பதினைந்து நொடிகள் தயாரிக்க குறைந்தது இருபத்தி ஐந்தாயிரம் செலவாகக் கூடும் என்றுதெரிவித்தார்.

[Source: IndiaGlitz]

Tags: , , , , ,

ஒரு மறுமொழி புதிய சமஸ்க்ருத திரைப்படம்


    Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: