ஸுபாஷிதங்கள் (நன்மொழிகள்)

नभसो भूषणं चन्द्र:
नारीणां भूषणं पति: |
पृथिव्या भूषणं राजा
विद्या सर्वस्य भूषणं ||

நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:
நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |
ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா
வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||

ஆகாயத்துக்கு அழகு சந்திரன். பெண்களுக்கு அழகு கணவன். நாட்டுக்கு அழகு அரசன். எல்லோருக்கும் கல்வி அழகு.


माता शत्रुः पिता वैरी
येन बालो न पाठितः ।
न शोभते सभामध्ये
हंसमध्ये बको यथा ॥

மாதா ஶத்ரு​: பிதா வைரீ
யேன பா³லோ ந பாடி²த​: |
ந ஶோப⁴தே ஸபா⁴மத்⁴யே
ஹம்ʼஸமத்⁴யே ப³கோ யதா² ||

எந்த பாலகன் படிக்க வில்லையோ அவனது பெற்றோர் அவனுக்கு எதிரிகள் ஆவர். ஏனெனில் அன்னப் பறவைகள் நடுவே கொக்கு போல, கற்றோர் அவையில் களையிழந்து அவமானப் பட அவர்களே காரணமாவர்.


पुस्तकस्था च या विद्या
परहस्ते च यद्धनम् ।
कार्यकाले समायाते
न सा विद्या न तद्धनम् ॥

புஸ்தகஸ்தா² ச யா வித்³யா
பரஹஸ்தே ச யத்³த⁴னம் |
கார்யகாலே ஸமாயாதே
ந ஸா வித்³யா ந தத்³த⁴னம் ||

புத்தகத்தில் மட்டும் தங்கி விட்ட அறிவு, பிறர் கைக்கு போய்விட்ட தனம், இவை தேவைப்படும் சமயத்துக்கு உதவுவதில்லை.


सुखार्थी चेत् त्यजेद्विद्यां
विद्यार्थी चेत् त्यजेत् सुखम्।
सुखार्थिन: कुतो विद्या
कुतो विद्यार्थिन: सुखम्॥

ஸுகா²ர்தீ² சேத் த்யஜேத்³வித்³யாம்ʼ
வித்³யார்தீ² சேத் த்யஜேத் ஸுக²ம்|
ஸுகா²ர்தி²ன: குதோ வித்³யா
குதோ வித்³யார்தி²ன: ஸுக²ம்||

சுகம் வேண்டுமா கல்வியை விடு. கல்வி வேண்டுமா சுகத்தை விடு. சுகம் வேண்டுபவனிடம் ஏது கல்வி… கல்வி வேண்டுபவனிடம் ஏது சுகம்…


क्षणश: कणशश्चैव
विद्यामर्थं च साधयेत् ।
क्षणत्यागे कुतो विद्या
कणत्यागे कुतो धनम् ।।

க்ஷணஶ: கணஶஶ்சைவ
வித்³யாமர்த²ம்ʼ ச ஸாத⁴யேத் |
க்ஷணத்யாகே³ குதோ வித்³யா
கணத்யாகே³ குதோ த⁴னம் ||

ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு துளியும் கல்வி மற்றும் செல்வம் தேடுவதில் முனைந்தவர்களுக்கு முக்கியம். கற்க வேண்டிய தருணத்தை இழைப்பவனுக்கு ஏது கல்வி? சிறிது சிறிதாக இழந்து கொண்டிருப்பவனிடம் ஏது செல்வம்?


आचार्यात् पादमादत्ते
पादं शिष्यः स्वमेधया ।
पादं सब्रह्मचारिभ्यः
पादं कालक्रमेण च ॥

ஆசார்யாத் பாத³மாத³த்தே
பாத³ம்ʼ ஶிஷ்ய​: ஸ்வமேத⁴யா |
பாத³ம்ʼ ஸப்³ரஹ்மசாரிப்⁴ய​:
பாத³ம்ʼ காலக்ரமேண ச ||

கல்வி என்பது ஆசிரியனிடம் கால் (பாதம்) பங்கும், தானே கற்று கால்பங்கும், உடன் படிப்பவர்களிடம் கால் பங்கும் கிடைக்கிறது. நான்காவது கால் பங்கை காலமே கற்றுக் கொடுத்து கல்வி முழுமை ஆகிறது.


स्वगृहे पूज्यते मूर्खः
स्वग्रामे पूज्यते प्रभुः।
स्वदेशे पूज्यते राजा
विद्वान्सर्वत्र पूज्यते॥

ஸ்வக்³ருʼஹே பூஜ்யதே மூர்க²​:
ஸ்வக்³ராமே பூஜ்யதே ப்ரபு⁴​:|
ஸ்வதே³ஶே பூஜ்யதே ராஜா
வித்³வான்ஸர்வத்ர பூஜ்யதே||

முட்டாள் வீட்டிலும், செல்வந்தன் தன் சொந்த ஊரிலும், அரசன் தன்னாட்டிலும் புகழப் படுகிறான். கல்வி கற்ற வித்வான் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெருகிறான்.


जनिता च उपनेता च
यश्च विद्यां प्रयच्छति ।
अन्नदाता भयत्राता
पञ्चैते पितरः स्मृताः ॥

ஜனிதா ச உபனேதா ச
யஶ்ச வித்³யாம்ʼ ப்ரயச்ச²தி |
அன்னதா³தா ப⁴யத்ராதா
பஞ்சைதே பிதர​: ஸ்ம்ருʼதா​: ||

பெற்ற தந்தை, வழிகாட்டுபவர், கல்வி கொடுத்த ஆசான், உணவளித்தவர், பயத்தைப் போக்கியவர், ஆகிய ஐவரும் தந்தையராக கருதப் படுவோர்.


कन्यादातान्नदाता च
ज्ञानदाताभयप्रदः ।
जन्मदो मन्त्रदो
ज्येष्ठभ्राता च पितरः स्मृतः ॥

கன்யாதா³தான்னதா³தா ச
ஜ்ஞானதா³தாப⁴யப்ரத³​: |
ஜன்மதோ³ மந்த்ரதோ³
ஜ்யேஷ்ட²ப்⁴ராதா ச பிதர​: ஸ்ம்ருʼத​: ||

பெண்ணைக் கொடுத்த மாமனார், உணவளித்தவர், ஞானம் கொடுத்தவர், பயத்தைப் போக்கியவர், உயிர் கொடுத்தவர், மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தவர், மூத்த அண்ணன் ஆகியோர் தந்தையராக கருதப் படுவோர் ஆவர்.


गुरुपत्नी राजपत्नी
ज्येष्टपत्नी तथैव च ।
पत्नीमाता स्वमाता च
पञ्चैताः मातरः स्मृताः ॥

கு³ருபத்னீ ராஜபத்னீ
ஜ்யேஷ்டபத்னீ ததை²வ ச |
பத்னீமாதா ஸ்வமாதா ச
பஞ்சைதா​: மாதர​: ஸ்ம்ருʼதா​: ||

குருவின் மனைவி, அரசன் மனைவி, அண்ணனின் மனைவி, மனைவியின் தாய், பெற்ற தாய் ஆகிய ஐவரும் தாயார் ஆவார்.


सत्यं माता पिता ज्ञानं
धर्मो भ्राता दया सखा ।
शान्तिः पत्नी क्षमा पुत्रः
षडेते मम बान्धवाः ॥

ஸத்யம்ʼ மாதா பிதா ஜ்ஞானம்ʼ
த⁴ர்மோ ப்⁴ராதா த³யா ஸகா² |
ஶாந்தி​: பத்னீ க்ஷமா புத்ர​:
ஷடே³தே மம பா³ந்த⁴வா​: ||

உண்மை தாய், அறிவே தந்தை, அறம் என் சகோதரன், தயை என் தோழன், அமைதி என் மனைவி, மன்னிக்கும் குணம் என் பிள்ளை – இந்த அறுவருமே என் உறவினர்.


खल: करोति दुर्वृत्तं
नूनं फलति साधुषु |
दशाननोऽहरत्सीतां
बन्धनं च महोदधे: ||

க²ல​: கரோதி து³ர்வ்ருʼத்தம்ʼ
நூனம்ʼ ப²லதி ஸாது⁴ஷு |
த³ஶானனோ(அ)ஹரத்ஸீதாம்ʼ
ப³ந்த⁴னம்ʼ ச மஹோத³தே⁴: ||

தீயவனின் தீமை செய்கிறான். பலன் நல்லவர்கள் மீதும் விழுகிறது. ராவணன் சீதையை கவர்ந்து செல்ல, இடைமறிக்கப் பட்டு கட்டுப்படுத்தப் பட்டதோ இலங்கைக்கு அருகாமையில் இருந்த கடல்.


सर्प दुर्जन योर्मध्ये
वरं सर्पो न दुर्जनः
सर्पम् दशती कालेन
दुर्जनस्तु पदे पदे ||

ஸர்ப து³ர்ஜன யோர்மத்⁴யே
வரம்ʼ ஸர்போ ந து³ர்ஜன​:
ஸர்பம் த³ஶதீ காலேன
து³ர்ஜனஸ்து பதே³ பதே³ ||

பாம்புக்கும் தீயவனுக்கும் நடுவில், பாம்பே நன்று, தீயவன் அன்று. காலம் வரும்போது மட்டுமே பாம்பு கடித்து விடுகிறது. தீயவனோ ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தீமை செய்து விடுகிறான்.


यथा परोपकारेषु
नित्यं जागर्ति सज्जनः ।
तथा परापकारेषु
जागर्ति सततं खलः ॥

யதா² பரோபகாரேஷு
நித்யம்ʼ ஜாக³ர்தி ஸஜ்ஜன​: |
ததா² பராபகாரேஷு
ஜாக³ர்தி ஸததம்ʼ க²ல​: ||

அடுத்தவருக்கு நன்மை செய்வதில் நல்லோருக்கு எப்போதும் எப்படி கருத்து இருக்குமோ அது போல தீமை செய்வதில் தீயோருக்கு கருத்து இருக்கும்.


खलः सत्क्रियमाणोपि ददाति कलहं सतां
दुग्ध धौतोपि किं याति वायसः कलहंसताम्

க²ல​: ஸத்க்ரியமாணோபி த³தா³தி கலஹம்ʼ ஸதாம்ʼ
து³க்³த⁴ தௌ⁴தோபி கிம்ʼ யாதி வாயஸ​: கலஹம்ʼஸதாம்

தீயவனுக்கு எத்தனை இரக்கம் காட்டி உதவி செய்தாலும் கலகமே விளைவிப்பான். பால் கொண்டு குளிப்பாட்டினாலும் அன்னம் ஆகாது காகம்.


त्यज दुर्जनसंसर्गं
भज साधुसमागमं।
कुरुपुण्यमहोरात्रं
स्मर नित्यमनित्यताम् ॥

த்யஜ து³ர்ஜனஸம்ʼஸர்க³ம்ʼ
ப⁴ஜ ஸாது⁴ஸமாக³மம்ʼ|
குருபுண்யமஹோராத்ரம்ʼ
ஸ்மர நித்யமனித்யதாம் ||

தீயோருடன் இணைவதை விடு. நல்லோரின் நட்புக்கு முயற்சி செய். இரவும் பகலும் நல்லதே செய். நிலையாமையை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்.


श्लोकार्धेन प्रवक्ष्यामि
यदुक्तं ग्रन्थकोटिभिः ।
परोपकारः पुण्याय
पापाय परपीडनम् ॥

ஶ்லோகார்தே⁴ன ப்ரவக்ஷ்யாமி
யது³க்தம்ʼ க்³ரந்த²கோடிபி⁴​: |
பரோபகார​: புண்யாய
பாபாய பரபீட³னம் ||

கோடி நூல்களில் சொன்னதை அரைச் செய்யுளில் சொல்லுகிறேன். புண்ணியம் என்பது அடுத்தவருக்கு செய்யும் உபகாரம். பாவம் என்பது அடுத்தவருக்கு செய்யும் தீங்கு.


रविश्चन्द्रो घना वृक्षा:
नदी गावश्च सज्जनाः।
एते परोपकाराय
भुवि दैवेन निर्मिता ॥

ரவிஶ்சந்த்³ரோ க⁴னா வ்ருʼக்ஷா:
நதீ³ கா³வஶ்ச ஸஜ்ஜனா​:|
ஏதே பரோபகாராய
பு⁴வி தை³வேன நிர்மிதா ||

சூரியன், சந்திரன், மரங்கள், நதிகள், பசுக்கள், நல்லோர் ஆகியோர் மனிதர்களின் நன்மைக்காக இறைவனால் பூமியில் படைக்கப் பட்டுள்ளனர்.


उद्यम: साहसं धैर्यं
बुद्धि: शक्ति: पराक्रम: ।
षडेते यत्र वर्तन्ते
तत्र दैवं प्रसीदति ॥

உத்³யம: ஸாஹஸம்ʼ தை⁴ர்யம்ʼ
பு³த்³தி⁴: ஶக்தி: பராக்ரம: |
ஷடே³தே யத்ர வர்தந்தே
தத்ர தை³வம்ʼ ப்ரஸீத³தி ||

முயற்சி, சாகசம், தைரியம், புத்தி, சக்தி, பராக்கிரமம் ஆகிய ஆறும் எங்கே இருக்கின்றதோ, அங்கே தெய்வம் விளங்குகிறது.


गच्छन् पिपिलिको याति
योजनानां शतान्यपि।
अगच्छन् वैनतेयोऽपि
पदमेकं न गच्छति ।।

க³ச்ச²ன் பிபிலிகோ யாதி
யோஜனானாம்ʼ ஶதான்யபி|
அக³ச்ச²ன் வைனதேயோ(அ)பி
பத³மேகம்ʼ ந க³ச்ச²தி ||

நகர்ந்து செல்கிற எறும்பு (காலப்போக்கில்) நூறு யோஜனை தூரம் கூட கடந்து விடும். அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிற கருடன் ஒரு அடி கூட நகருவதில்லை.


उद्योग: खलु कर्त्यव्यं
फलं मार्जारवत् भवेत् |
जन्म प्रभ्रति गौर्नास्ति
पय: पिबति नित्यश: ||

உத்³யோக³: க²லு கர்த்யவ்யம்ʼ
ப²லம்ʼ மார்ஜாரவத் ப⁴வேத் |
ஜன்ம ப்ரப்⁴ரதி கௌ³ர்னாஸ்தி
பய: பிப³தி நித்யஶ: ||

கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். பலன் தானாக கிடைக்கும். பூனைகள் பசு வளர்ப்பதில்லை. ஆனாலும் அவை தினமும் பால் கிடைத்து அருந்தி விடுகின்றன.


एकस्य कर्म संवीक्ष्य
करोत्यन्योऽपि गर्हितम् |
गतानुगतिको लोको
न लोकः पारमार्थिकः ||

ஏகஸ்ய கர்ம ஸம்ʼவீக்ஷ்ய
கரோத்யன்யோ(அ)பி க³ர்ஹிதம் |
க³தானுக³திகோ லோகோ
ந லோக​: பாரமார்தி²க​: ||

ஒருவன் ஒரு வேலை செய்வதைப் பார்த்து அது நல்லதா இல்லையா என்று ஆராயாமல் அடுத்தவனும் செய்கிறான். ஒருவர் சென்ற வழியிலேயே செல்வதை உலகம் விரும்புகிறது. உண்மையை ஆராய யாரும் விரும்புவதில்லை.


गवादीनां पयोन्येद्युः
सद्यो वा जायते दधि ।
क्षीरोदधेस्तु नाद्यापि
महतां विकृतिः कुतः ।।

க³வாதீ³னாம்ʼ பயோன்யேத்³யு​:
ஸத்³யோ வா ஜாயதே த³தி⁴ |
க்ஷீரோத³தே⁴ஸ்து நாத்³யாபி
மஹதாம்ʼ விக்ருʼதி​: குத​: ||

பசு போன்ற மிருகங்களின் பால், ஒரே நாளில் திரிந்து தயிராகி விடுகிறது. ஆனால் பாற்கடல் என்றும் திரிந்து போவதில்லை. (பெருமையும், சக்தியும் உடையவர்கள் கெட்டுப் போவதில்லை.)


सम्पदो महतामेव
महतामेव चापदः ।
वर्धते क्षीयते चन्द्रो
न तु तारागणः क्वचित् ॥

ஸம்பதோ³ மஹதாமேவ
மஹதாமேவ சாபத³​: |
வர்த⁴தே க்ஷீயதே சந்த்³ரோ
ந து தாராக³ண​: க்வசித் ||

நன்மையையும் தீமையும் அனுபவித்து கடந்தவர்களே பெரியோர். எந்த வளர்ச்சியும் தேய்வும் இல்லாத நட்சத்திரக் கூட்டங்களை விட, வளர்ந்தும் தேய்ந்தும் போனாலும் சந்திரன் பெருமை உடையதாகிறது.


कृषतो नास्ति दुर्भिक्षं
जपतो नास्ति पातकम् ।
मौनिनः कलहो नास्ति
न भयं चास्ति जाग्रतः ।।

க்ருʼஷதோ நாஸ்தி து³ர்பி⁴க்ஷம்ʼ
ஜபதோ நாஸ்தி பாதகம் |
மௌனின​: கலஹோ நாஸ்தி
ந ப⁴யம்ʼ சாஸ்தி ஜாக்³ரத​: ||

உழைப்பவனுக்கு துன்பம் இல்லை. இறைவனை நினைப்பவனுக்கு தாழ்வு இல்லை. மௌனமாக இருப்பவனுக்கு கலகம் இல்லை. விழிப்புடன் இருப்பவனுக்கு பயம் இல்லை.


धर्मो जयति नाधर्मः
सत्यं जयति नानृतम् ।
क्षमा जयति न क्रोधो
देवो जयति नासुरः ।।

த⁴ர்மோ ஜயதி நாத⁴ர்ம​:
ஸத்யம்ʼ ஜயதி நான்ருʼதம் |
க்ஷமா ஜயதி ந க்ரோதோ⁴
தே³வோ ஜயதி நாஸுர​: ||

அறமே வெல்லும், அதர்மம் அல்ல. உண்மையே வெல்லும் பொய் அல்ல. இரக்கமே வெல்லும் கோபம் அல்ல. இறைவனே வெல்லுகிறான்,அரக்கன் அல்ல.


आकाशात् पतितं तोयं
यथा गच्छति सागरम् ।
सर्वदेवनमस्कारः
केशवं प्रति गच्छति ।।

ஆகாஶாத் பதிதம்ʼ தோயம்ʼ
யதா² க³ச்ச²தி ஸாக³ரம் |
ஸர்வதே³வனமஸ்கார​:
கேஶவம்ʼ ப்ரதி க³ச்ச²தி ||

பல இடங்களில் ஆகாயத்தில் இருந்து விழுகிற மழை நீர் எவ்வாறு கடலில் சென்று ஒன்றாகக் கலக்கிறதோ அவ்வாறு, எந்த இறைவனை வழிபட்டாலும் அது கேசவனை (ஒரே தெய்வத்தை) சென்று அடைகிறது.


7 Comments ஸுபாஷிதங்கள் (நன்மொழிகள்)

  1. Tiruvidamarudur S.Radhakrishnan

    Very informative and educative. Parents have a role on this for the benefit of posterity and inculcate the same in their wards. These wise saying are of utmost importance in these days of failing moral values

  2. expired domains

    First I must congratulate you on your mission of spreading Sanskrit Language among Tamil Readers. There are many websites and many sanskrit reading materials available in English. I always prefer to read Sanskrit through Tamil.I look forward to more and more reading material of Sanskrit through Tamil. Once again thanks a lot. Best wishes.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)