குழந்தைகளுக்கான சின்னச் சின்ன ஸ்லோகங்கள்

हरे राम हरे राम राम राम हरे हरे ।
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे ॥

***

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

வெள்ளை உடை உடுத்தியவரும், எங்கும் நிறைந்தவரும் (மகாவிஷ்ணுவானவரும்), நிலவைப் போன்று ஒளிர்பவரும், நான்கு கைகளை உடையவரும், இனிய முகம் கொண்டவருமானவரை தியானிப்போம், அவர் நம் இடர்களை நீக்குவார்.

***

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णूः गुरुर्देवो महेश्वरः ।
गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥

குருவே பிரம்மா; குருவே விஷ்ணு; குருவே மகேஸ்வரன்; குருவே பரப்பிரம்மம்;
அப்படிப்பட்ட குருவுக்கு நமஸ்காரம்;

***

गजाननं भूतगणादि सेवितं,
कपित्थ जम्बूफलसार भक्षितम्
उमासुतं शोक विनाशकारणं
नमामि विघ्नेश्वर पादपङ्कजम् ॥

ஆனை முகத்தவரும், பூதகணங்கள் முதலானவர்களால் வணங்கப்படுபவரும், விளாம்பழச் சாற்றை உண்பவரும், உமையின் புதல்வரும், கவலைகளைப் போக்குபவருமான விக்னேஸ்வரரின் பாத கமலங்களை வணங்குகிறேன்.

***

मूषिकवाहन मोदकहस्त चामरकर्ण विलम्बित सूत्र ।
वामनरूप महेश्वरपुत्र विघ्नविनायक पाद नमस्ते ॥

மூஞ்சூறு வாகனம் உடையவரும், கொழுக்கட்டை கையில் ஏந்தியவரும், பெரிய விசிறி போன்ற காதுகளை உடையவரும், நீண்ட முப்புரி நூல் அணிந்தவரும், குள்ள உருவம் உடையவரும், மகேஸ்வரரின் பிள்ளையும், தடைகளை நீக்குபவருமான விநாயகரை வணங்குவோம்.

***

वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ ।
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

வளைந்த தந்தம் உடையவரும், கோடி சூரியன்களின் ஒளி பொருந்தியவருமான தேவனே, எல்லா செயல்களிலும், எப்போதும் இடையூறுகளை நீக்குவாயாக.

***

शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम्
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम् ।
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यम्
वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् ॥ ॥

சாந்தமானவரும், பாம்பை படுக்கையாகக் கொண்டவரும், தொப்புழில் தாமரை மலரை உடையவரும், தேவர்களின் தலைவரும், உலகின் ஆதாரமும், ஆகாயம் போல எல்லையற்றவரும், மேக நிறத்தவரும், அழகிய உடலமைப்பு கொண்டவரும், திருமகளின் கணவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், யோகிகளால் தியானத்தின் மூலம் அடையப்படுபவரும், பயத்தைப் போக்குபவரும், எல்லா உலகங்களில் தலைவருமான விஷ்ணுவை வணங்குகிறேன்.

***

श्रीराम राम रामेति रमे रामे मनोरमे।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने॥

ஸ்ரீராம ராம ராம என்று (சொல்லும்போது) ராமனிடம் என் மனம் கரைந்து போகிறது. ஆயிரம் நாமங்களைச் சொல்லுவதற்கு அது சமம்!

***

आञ्जनेय मति पाटलालनं काञ्चनाद्रिकमनीय विग्रहं ।
पारिजात तरु मूल वासिनं भावयामि पवमान नन्दनम् ॥

சிவந்த முகம் கொண்டவரும், பொன் மலை போன்ற உடல் அமைந்தவரும், பாரிஜாத மரத்தின் வேர்களில் வசிப்பவரும், காற்று தேவனின் புதல்வருமான ஆஞ்சநேயனை வணங்குகிறேன்.

***

अञ्जनानन्दनं वीरं जानकीशोकनाशनम् ।
कपीशमक्षहन्तारं वन्दे लंका भयंकरम् ॥

அஞ்சனை மைந்தனும், வீரனும், சீதையின் துயரை நீக்கியவரும்,
வானரர்களின் தலைவனும், அக்ஷன் முதலிய அரக்கர்களை அழித்தவரும்,
இராவணனனின் தேசத்துக்கு பயமூட்டியவருமான ஆஞ்சநேயரை வணங்குகிறேன்.

***

रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे।
रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥

ராமனாக, ராம பத்ரனாக, ராம சந்திரனாக, ரகு நாதனாக, நாதனாக (தலைவனாக) அறியப்பட்ட சீதையின் தலைவனுக்கு நமஸ்காரம்.

***

अगजानन पद्मार्कं गजाननं अहर्निशम् ।
अनेकदंतं भक्तानां एकदन्तं उपास्महे ॥

அகஜா என்பது மலையில் உதித்தவள் பார்வதி. ஒற்றை தந்தம் உள்ள, ஆனை முகம் உடைய விநாயகர் பக்தர்களுக்கு எல்லாம் அருளுபவர். அவர் மீது மலை மகளான பார்வதியின் பார்வை எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. அத்தகைய விநாயகரை வணங்குவோமாக.

***

या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना।
या ब्रह्माच्युतशंकरप्रभृतिभिर्देवैः सदा वन्दिता
सामां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा ॥

வெண்மையான பொருட்களையெல்லாம் இங்கே தொகுத்துச் சொல்லப் படுகிறது. வெண்மையான மல்லிகைப்பூ சூடியவன். சந்திரனைப்போல, பனியைப் போல வெண்மையான மாலை அணிந்தவள். வெண்மையான ஆடை சூடியவள், அழகிய வீணை ஏந்தியவள், வெண் தாமரையில் அமர்ந்தவள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்கள் அனைவராலும் வணங்கப் படுபவள், அத்தகைய சரஸ்வதி என்னை காக்கட்டும்.

***

करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि || 3 |

மலர்க்கரங்களால் மலர்பாதங்களை எடுத்து மலர் முகத்தின் வாயினுள் நுழைக்கும், ஆல இலையில் துயிலுகின்ற பாலன் முகுந்தனை நினைவு கூறுகிறேன்.

***

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)