விமானயானம் ரசயாம!

ராக⁴வ! மாத⁴வ! ஸீதே! லலிதே!
விமானயானம்ʼ ரசயாம |
நீலே க³க³னே விபுலே விமலே
வாயுவிஹாரம்ʼ கரவாம || 1 ||

(விமானயானம்ʼ = ஆகாய விமானம், ரசயாம = அமைத்துக் கொள்வோம், விபுலே விமலே நீலே க³க³னே = பரந்து விரிந்த, தெளிந்த, நீல ஆகாயத்தில், வாயுவிஹாரம்ʼ = காற்றில் பயணம், கரவாம = செய்வோம்). ஹே ராகவா! மாதவா! சீதா! லலிதா!! வாருங்கள், விமானம் ஒன்றை எடுத்துக் கொண்டு, பரந்து விரிந்த, தெளிந்த, நீல வானில் காற்றாட உலாவருவோம்!

உன்னதவ்ருʼக்ஷம்ʼ துங்க³ம்ʼ ப⁴வனம்ʼ
க்ராந்த்வாகாஸ²ம்ʼ க²லு யாம |
க்ருʼத்வா ஹிமவந்தம்ʼ ஸோபானம்ʼ
சந்தி³ரலோகம்ʼ ப்ரவிஸா²ம || 2 ||

(உன்னதவ்ருʼக்ஷம்ʼ = உயர்ந்த மரம், துங்க³ம்ʼ ப⁴வனம்ʼ = உயரமான வீடுகள், க்ராந்த்வா = கால் வைத்து, க²லு = நிச்சயமாகவே, யாம = செல்வோம், ஹிமவந்தம்ʼ ஸோபானம்ʼ = இமயமலையின் படிக்கட்டுகளால், ப்ரவிஸா²ம = நுழைவோம்) உயர்ந்த வீடுகள், மரங்கள் ஆகியவற்றின் மீது கால்வைத்து வானத்தில் செல்வோம். இமயத்தை படிக்கட்டுகளாக்கி, அதன் மீதேறி சந்திர உலகத்தில் நுழைவோம்.

ஸு²க்ரஸ்²சந்த்³ர: ஸூர்யோ கு³ருரிதி
க்³ரஹான் ஹி ஸர்வான் க³ணயாம |
விவிதா⁴: ஸுந்த³ரதாராஸ்²சித்வா
மௌக்திகஹாரம்ʼ ரசயாம || 3 ||

(ஸர்வான் = எல்லாவற்றையும், க³ணயாம = எண்ணுவோம், விவிதா⁴: = விதவிதமான, சித்வா = திரட்டிய பின், மௌக்திகஹாரம்ʼ = முத்து மாலை, ரசயாம = அமைப்போம்) சூரியன், சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய கிரகங்களை எண்ணுவோம். விதவிதமான நட்சத்திரங்களை திரட்டி முத்துமாலை அமைப்போம்.

அம்பு³த³மாலாம் அம்ப³ரபூ⁴ஷாம்
ஆதா³யைவ ஹி ப்ரதியாம |
து³:கி²த-பீடி³த-க்ருʼஷிகஜனானாம்
க்³ருʼஹேஷு ஹர்ஷம் ஜனயாம || 4 ||

– விஸ்²வாஸ: (அம்பு³த³ = மேகத்தின் நீர்த்துளி, அம்ப³ர = வானம், பூ⁴ஷாம் = அணிந்த, ஆதா³ய = எடுத்து வந்து, ப்ரதியாம = திரும்பி வருவோம், க்ருʼஷிகஜனானாம் = விவசாயம் செய்யும் மக்கள், ஹர்ஷம் = மகிழ்ச்சி, ஜனயாம = உருவாக்குவோம்) வானம் அணிந்த மேகத்தின் நீர்த்துளிகள் எடுத்து வருவோம். (அதன் மூலம், நீர் கிடைக்காமல்) வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிற விவசாயிகள் வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்குவோம்.

राघव! माधव! सीते! ललिते!
विमानयानं रचयाम |
नीले गगने विपुले विमले
वायुविहारं करवाम || 1 ||

उन्नतवृक्षं तुङ्गं भवनं
क्रान्त्वाकाशं खलु याम |
कृत्वा हिमवन्तं सोपानं
चन्दिरलोकं प्रविशाम || 2 ||

शुक्रश्चन्द्र: सूर्यो गुरुरिति
ग्रहान् हि सर्वान् गणयाम |
विविधा: सुन्दरताराश्चित्वा
मौक्तिकहारं रचयाम || 3 ||

अम्बुदमालाम् अम्बरभूषाम्
आदायैव हि प्रतियाम |
दु:खित-पीडित-कृषिकजनानाम्
गृहेषु हर्षम् जनयाम || 4 ||
– विश्वास:

1 Comment விமானயானம் ரசயாம!

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)