மாதங்களும் கிழமைகளும்

வாஸரம் என்பதை கிழமை என்று பொருள் கொள்ளலாம். வார நாட்களின் பெயர்கள் வடமொழியில் இவ்வாறு அழைக்கப் படுகின்றன:

இந்து³வாஸர​: (इन्दुवासरः) திங்கள் கிழமை
பௌ⁴மவாஸர​: (भौमवासरः) செவ்வாய் கிழமை
ஸௌம்யவாஸர​: (सौम्यवासरः) புதன் கிழமை
கு³ருவாஸர​: (गुरुवासरः) வியாழக் கிழமை
ஸு²க்ரவாஸர​: (शुक्रवासरः) வெள்ளிக் கிழமை
ஸ²நிவாஸர​: (शनिवासरः) சனிக் கிழமை
பா⁴நுவாஸர​: (भानुवासरः) ஞாயிற்று கிழமை

சமஸ்க்ருதத்தில் மாதங்களின் பெயர்களும், அவற்றுக்கு இணையான தமிழ் மாதங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மாதங்களின் பெயர்களில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவெனில், ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே சற்று மாறுதலுடன் அமைந்திருக்கிறது. தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழி பெயர்களில் இருந்து மருவியது என்றும் கூறுவார்.

சைத்ர (चैत्र) சித்திரை  இந்த மாதத்தில் சித்ரா நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
வைஸா²க²(वैशाख) வைகாசி இந்த மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
ஆநுஷி / ஜ்யேஷ்ட(आनुषि / ज्येष्ट) ஆனி இந்த மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
ஆஷாட⁴(आषाढः) ஆடி  இந்த மாதத்தில்  பூராடம் /உத்திராடம்  நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
ஸ்²ராவண​: (श्रावणः) ஆவணி இந்த மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
ப்ரோஷ்டபதீ /பா⁴த்³ரபத³(प्रोष्टपती/ भाद्रपदः) புரட்டாசி இந்த மாதத்தில் பூரட்டாதி / உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
ஆஸ்²விந​: (आश्विनः) ஐப்பசி  இந்த மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
கார்திக:​ (कार्तिकः) கார்த்திகை இந்த மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
மார்க³ஸீ²ர்ஷ​: (मार्गशीर्षः) மார்கழி இந்த மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
தைஷ்யம‌‌் / பௌஷ​: (पौषः) தை  இந்த மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
மாக⁴(माघः) மாசி  இந்த மாதத்தில் மக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
பா²ல்கு³ந​: (फाल्गुनः) பங்குனி இந்த மாதத்தில் பூரம்/உத்திரம் (பூர்வ பல்குனி,உத்திர பல்குனி) நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும்.
இந்திய அரசின் அரசாங்க நாட்காட்டி சாலிவாஹன ஆண்டு முறையைத்தான் உபயோகிக்கிறது. இதில் மாதங்களின் பெயர் ஏறக்குறைய இந்த வடமொழி பெயர்களை ஒத்து அமைந்துள்ளது.  

6 Comments மாதங்களும் கிழமைகளும்

  1. mariadevanand

    பௌ⁴மவாஸர​-ku sevaikilamai endru solli irukinga ok anal ஸௌம்யவாஸர​-kum sevaikilamai endru solli irukinga. kizhamaikalin vivarngal thavaraga kodukkapattu ullathu. Pls update it.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)