தமிழ் வழியாக வடமொழி கற்க உங்களை வரவேற்கிறேன். சுஸ்வாகதம்! ஆங்கிலத்தைவிட தமிழ் மொழி வழியாக வடமொழி கற்பது மிகவும் எளிது. ஏனெனில் ஆங்கில மொழியில் சமஸ்க்ருத வார்த்தைகளின் திரிபுகள் இருந்தாலும் (मातृ – மாத்ரு – mother) அந்த மொழியில் வார்த்தைகளின் சம்ஸ்க்ருத வேர்களை க
ண்டு அடைவது கடினம். ஆனால் தமிழில் நேரடியாகவே பல்லாயிரக் கணக்கான சமஸ்க்ருத வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆகையால் தமிழுக்கு வடமொழி அன்னியமானதாக இருக்காது.
வாருங்கள். முதலில் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்வோம்.
ஒருவரை மரியாதையாக அழைக்க, ஆணாக இருந்தால் भवान् (ப4வாந்) என்றும் பெண்ணாக இருந்தால் भवति (ப4வதி) என்று அழைக்கலாம். சிறியவராகவோ அல்லது நன்கு அறிந்த சமவயதுடையவராகவோ இருந்தால் நேரடியாகவே கேள்வியை கேட்டு விடலாம். ஆங்கிலத்தில் Hello! என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो! (போ4) என்று அழைப்பர்.
भवान् नमस्ते! मम नाम राम: | [ப4வாந் நமஸ்தே! மம நாம ராம:]
[ப4வாந் - ஐயா நமஸ்தே! - வணக்கம் மம நாம - எனது பெயர் ராம: - ராமன்]
எதிரிலிருப்பவர் பெண்ணாக இருந்தால்
भवति नमस्ते| मम नाम राम: | [ப4வதி நமஸ்தே! மம நாம ராம: |]
ஒருவருடைய பெயரை கேட்க,
भवत: / भवत्या: नाम किम् ? [ [ப4வத: / ப4வத்யா: நாம கிம்? ]
அவர் சிறியவராக இருந்தால்,
तव नाम किम्? [தவ நாம கிம்?]
எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க
भो! कथम् असि? [போ4! கத2ம் அஸி? ]
நல்லது, ஆங்கிலத்தில் Very good என்று சொல்வதற்கு साधु [ஸாது4] என்று சொல்லலாம்.
நல்லது அல்ல – Not good என்று சொல்ல असाधु [அஸாது4] என்று சொல்லி விடலாம்.
ஒருவரை சந்தித்துவிட்டு விடைபெறும் பொழுது
पुनर्मिलाम: – [புனர்மிலாம:] – மீண்டும் சிந்திப்போம்
धन्यवाद: – த4ன்யவாத3: – நன்றி
என்று சொல்லலாம்.
அடுத்த பகுதிகளில் வார்த்தைகள் – வாக்கியங்கள் அமைக்கும் முறை குறித்து காணலாம். உங்களுக்கு இந்த பகுதியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, தவறுகள் சுட்டிக்காட்ட விரும்பினாலோ மறுமொழி பகுதியில் தெரிவிக்கவும்.

Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334