வேற்றுமை உருபுகள்

தமிழில் வேற்றுமை உருபுகள் என்று ஆறு உண்டு.. ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. ஒரு வாக்கியத்தில் ராமன் என்கிற சொல்லை, ராமனை, ராமனால், ராமனுக்கு, ராமனின், ராமனது, ராமன்கண் என்று வெவ்வேறு வகைகளில் அமைக்கலாம். சமஸ்க்ருதத்தில் இதே போல ஏழு வகையான வேற்றுமை உருபுகள் உண்டு… இதற்கு விப4க்தி (विभक्ति) என்று பெயர்.

சமஸ்க்ருதத்தில் வேற்றுமைகள் ஒரு சொல் எந்த எழுத்தில் முடிகிறதோ அதற்கு தகுந்தவாறு அமையும். அதாவது ஒரு சொல் அ வில் முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்; உதாரணத்துக்கு ராம: என்ற சொல் “அ” காரத்தில் முடிகிறது. இதை வாக்கியத்தில் உபயோகிக்கும் பொது இவ்வாறு அமையும்.

விப4க்தி (विभक्ति) ஏகவசன (एकवचन:)
பிரத2மா ராம: ராமன்
த்3விதீயா ராமம் ராமனுக்கு அல்லது
ராமனிடம் (to Ram)
த்ருதீயா ராமேண ராமனுடன்/ராமனால் (with/By Ram)
சது2ர்தி2 ராமாய ராமனுக்காக (for Ram)
பஞ்சமி ராமாத் ராமனிடமிருந்து (from Ram)
ஷஷ்டி ராமஸ்ய ராமனுடைய (Ram’s)
சப்தமி ராமே ராமனில் (in Ram)
சம்போ3தனம் ஹே ராம! ராமா! என்று அழைத்தல்

இந்த விபக்தி அட்டவணை “அ” கார அந்த புல்லிங்க ராம சப்த3ம் என்று அழைக்கப் படுகிறது. அதாவது ஆதி ஆரம்பம் – அந்தம் முடிவு என்பது போல அகார அந்தம் – அ காரத்தில் முடியும் ராம என்கிற சொல். பொதுவாக சொல்லும் போது அகாராந்த புல்லிங்க3 “ராம” சப்த3ம் (अकारान्त पुंलिङ्ग “राम” शब्द:) என்று சொல்வார்கள்.

சில உதாரண வாக்கியங்கள்:

ராமன் படிக்கிறான் ராம: படதி [राम: पठति]
தசரதன் ராமனிடம் பேசுகிறார் தசரத: ராமம் வததி [दसरथ: रामम् वदति]
ராமனுடன் செல்கிறேன் ராமேண ஸஹ கச்சாமி [रामेण सह गच्छामि]
ராமனுக்காக பூவை அர்பணிக்கிறேன் ராமாய புஷ்பம் அர்பயாமி [रामाय पुष्पं अर्पयामि]
ராமனிடமிருந்து ராவணனுக்கு பயம் ராமாத் ராவணம் பி3பே4தி [रामात् रावणं बिभेति]
ராமனுடைய தந்தை தசரதன் ராமஸ்ய பிதா தசரத: [रामस्य पिता दशरथ:]
ராமனில் லக்ஷ்மணனுக்கு அதிக பக்தி ராமே லக்ஷ்மணஸ்ய மஹதீ ப3க்தி [रामे लक्ष्मणस्य महती भक्ति]

சமஸ்க்ருதத்தில் ஒருமை இருமை பன்மை என்று மூன்று வகையான விகுதிகள் உண்டு என்று முன்னமே பார்த்தோம். இரு ராமர்களுக்கு, பல ராமர்களுக்கு, ராமர்களில், ராமர்களால் என்பன போன்ற சொற்களை எப்படி அமைப்பது? கீழே உள்ள அட்டவணை உதவும்.

விப4க்தி

(विभक्ति)

ஏகவசன த்3விவசன 3ஹுவசன
பிரத2மா ராம: (राम:) ராமௌ (रामौ ) ராமா: (रामा: )
த்3விதீயா ராமம் (रामम्) ராமௌ (रामौ) ராமாந் (रामान् )
த்ருதீயா ராமேண (रामेण) ராமாப்4யாம் (रामाभ्याम्) ராமை: (रामै:)
சது2ர்தி2 ராமாய (रामाय) ராமாப்4யாம் (रामाभ्याम्) ராமேப்4ய: (रामेभ्य:)
பஞ்சமி ராமாத் (रामात्) ராமாப்4யாம் (रामाभ्याम्) ராமேப்4ய: (रामेभ्य:)
ஷஷ்டி ராமஸ்ய (रामस्य) ராமயோ: (रामयो:) ராமாணாம் (रामाणाम्)
சப்தமி ராமே (रामे) ராமயோ: (रामयो:) ராமேஷு (रामेषु)
சம்போ3தனம் ஹே ராம! (हे राम!) ஹே ராமௌ! (हे रामौ) ஹே ராமா: (हे रामा:)

ராமௌ என்றாலே இரு ராமர்கள் என்று பொருள் படும். ராமா: என்றால் பல ராமர்கள். இதே போலவே ராமம் என்றால் ஒரு ராமனுக்கு அல்லது ராமனிடம், ராமௌ என்றால் இரு ராமர்களுக்கு அல்லது ராமர்களிடம், ராமாந் என்றால் பல ராமர்களுக்கு அல்லது ராமர்களிடம் என்று இவ்வாறு பொருத்தி அறிந்து கொள்ளலாம்.

ராம: என்று சொல்லைப் போலவே அகாரத்தில் முடியும் பல சொற்கள் இதே போலவே வேற்றுமை உருபுகளை பெறும்.

உதாரணம்: தசரத:, கிருஷ்ண:, கோபால:, கோவிந்த:, சிவ:, நாராயண: இப்படி ஏராளமான சொற்கள்.

சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள இந்த வேற்றுமை உருபுகள் மிகவும் அடிப்படை தேவை. பெரும்பாலும் “அ” வில் முடியும் பெயர்கள் தான் அதிகம் என்பதால் இதை கற்றுக் கொள்வது எளிது. “கமருதீன்” என்று பெயர் இருந்தாலும் அதை சமஸ்க்ருதத்தில் “கமருதீன:” என்று அ வில் முடிவதாக மாற்றிக் கொள்ளலாம். அதனால் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வசனங்களும் உள்ள அட்டவணையை மனப்பாடம் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

இதில் சில வேற்றுமை உருபுகளுக்கு ஒரே சொல் பயின்று வந்திருப்பதை காணலாம் – ராமாப்4யாம் போன்ற வேற்றுமை உருபுகளை அவை சொல்லப்படும் இடத்தைக் கொண்டு பொருள் அறிய வேண்டும்.

இது வரை பார்த்தது ஆண்பால் (புல்லிங்க3ம்). இதே போல பெண்பால் (ஸ்திரி லிங்க3), அஃறிணை (நபும்சக) லிங்க3ங்கள் உண்டு. சமஸ்க்ருதத்தில் அ என்ற எழுத்தில் முடியும் பெண்பால் பெயர்கள் கிடையாது! ஸ்திரி லிங்க3த்தில் “ஆ”காராந்தத்தில் ராதா4 என்கிற பெண்பால் பெயர்ச்சொல்லுக்கான வேற்றுமை உருபுகளை பாருங்கள்:

ஆகாராந்த ஸ்த்ரி லிங்க3 “ராதா4” சப்த3:

விப4க்தி

(विभक्ति)

ஏகவசன த்3விவசன 3ஹுவசன
பிரத2மா ராதா4 (राधा) ராதே4 (राधे) ராதா4: (राधा:)
த்விதீயா ராதா4ம் (राधाम्) ராதே4 (राधे) ராதா4: (राधा:)
த்ருதீயா ராத4யா (राधया) ராதா4ப்4யாம் (राधाभ्याम्) ராதா4பி: (राधाभि:)
சது2ர்தி2 ராதா4யை (राधायै) ராதா4ப்4யாம் (राधाभ्याम्) ராதா4ப்4ய: (राधाभ्य:)
பஞ்சமி ராதா4யா: (राधाया:) ராதா4ப்4யாம் (राधाभ्याम्) ராதா4ப்4ய: (राधाभ्य:)
ஷஷ்டி ராதா4யா: (राधाया:) ராத4யோ: (राधयो:) ராதா4நாம் (राधानाम्)
சப்தமி ராதா4யாம் (राधायाम्) ராத4யோ: (राधयो:) ராதா4ஸு (राधासु)
சம்போ3தனம் ஹே ராதே4! (हे राधे!) ஹே ராதே4! (हे राधे) ஹே ராதா4: (हे राधा:)

இதே போலவே ரமா, உமா, சீதா, மாலா போன்ற பெயர்களையும் வேற்றுமை உருபுகளைப் பொருத்தலாம்.

அடுத்து நபும்சக லிங்கத்தில் (neutre gender) ப2லம் (தமிழில் பழம்) என்ற சொல்லை எப்படி வேற்றுமை உருபுடன் பொருத்துவது என்று இந்த அட்டவனையை பாருங்கள்.

அகாராந்த நபும்சக லிங்க3 “ப2ல” சப்த3:

விப4க்தி

(विभक्ति)

ஏகவசன த்3விவசன 3ஹுவசன
பிரத2மா 2லம் (फलम्) 2லே (फले) 2லாநி(फलानि)
த்3விதீயா 2லம் (फलम्) 2லே (फले) 2லானி (फलानि)
த்ருதீயா 2லேன (फलेन) 2லாப்4யாம்(फलाभ्याम्) 2லை: (फलै:)
சது2ர்தி2 2லாய (फलाय) 2லாப்4யாம் (फलाभ्याम्) 2லேப்4ய: (फलेभ्य:)
பஞ்சமி 2லாத் (फलात्) 2லாப்4யாம் (फलाभ्याम्) 2லேப்4ய: (फलेभ्य:)
ஷஷ்டி 2லஸ்ய(फलस्य) 2லயோ: (फलयो:) 2லாநாம் (फलानाम्)
சப்தமி 2லே(फले) 24யோ: (फलयो:) 2லேஷு (फलेषु)
சம்போ3தனம் ஹே ப2ல! (हे फल!) ஹே ப2லே! (हे फले) ஹே ப2லாநி (हे फलानि)

இதே போலவே வன: (காடு), நேத்ர (கண்), தன (செல்வம்) ஆகிய சொற்களையும் அமைக்கலாம். அகாராந்த புல்லிங்க “ராம” சப்த3த்தில் உள்ள அதே முறையில் நபும்சக லிங்க3 வேற்றுமை உருபுகளும் அமைந்திருப்பது நமது வேலையை சுலபமாக்கி விடுகிறது.

இந்த விப3க்திகள் சமஸ்க்ருத இலக்கணத்தில் ஒரு பெரும் பகுதியாக இருக்கின்றன. சிறிது சிறிதாக அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம். இவற்றை முடிந்த வரை மனப்பாடம் செய்து கொள்வது அவசியம்.

  • படிக்கும்போது உச்சரிப்பு மிக முக்கியம். ப2லை: என்பதை ப2லைஹி என்றும், ராமேப்4ய: என்பதை ராமேப்4யஹ என்றும் : காற்புள்ளி (விசர்கம்) கவனித்து படிக்க வேண்டும்.
  • இந்த வலைப்பக்கத்தில் உங்களுக்கு தேவையான சொல்லைக் கொடுத்தால் அதன் அத்தனை வேற்றுமை உருபு சொற்களும் கிடைக்கும்.
  • சப்த மஞ்சரி என்கிற – வேற்றுமை உருபுகளின் தொகுப்பு புத்தகம் பிடீஎப் கோப்பாக இங்கே கிடைக்கும்.

12 comments for “வேற்றுமை உருபுகள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் கருத்து:

*