விஸர்க³ ஸந்தி⁴ ப்ரகரணம்

१०३ विसर्जनीयस्य सः॥ । ८ । ३ । ३४॥

खरि। विष्णुस्त्राता॥

103 விஸர்ஜநீயஸ்ய ஸ​: ॥ 8 | 3 | 34 ॥

க²ரி| விஷ்ணுஸ்த்ராதா॥

103 க²ரி = க²ர் ப்ரத்யாஹார எழுத்து தொடர்கையில்
விஸர்ஜநீயஸ்ய ஸ: ஸ்யாத் = விஸர்க³த்துக்கு பதிலாக ஸ் என்ற எழுத்து அமையும்

ஒரு சொல்லின் இறுதியில் விஸர்க³ம் இருந்து அதனைத் தொடர்ந்து க²ர் (खर्) ப்ரத்யாஹார எழுத்துடன் கூடிய சொல் தொடர்ந்தால், அந்த விஸர்க³த்துக்கு பதிலாக ஸ் (स्) என்கிற எழுத்து அமையும். இங்கே விருத்தியில் க²ரி என்று மட்டும் குறிப்பிடுகிறார். இது க²ரவஸாநயோ: விஸர்ஜநீய​: (8.3.15) என்கிற சூத்திரத்தில் இருந்து க²ரி என்கிற சொல் மட்டும் அநுவ்ருத்தி ஆகி இருக்கிறது. (அவஸாநயோ: என்பது சப்தமி விபக்தியில் இருப்பதால் அதிலிருந்து பிரித்து க²ர் என்கிற சொல்லை எடுக்கும் போது அதுவும் சப்தமி விபக்தியிலேயே அநுவ்ருத்தி ஆகி வருகிறது).

खर् – ख फ च ठ थ च ट त क प श ष स

உதாரணம்:

विष्णु: त्राता = विष्णु: + त्राता = विष्णु स् + त्राता = विष्णुस्त्राता

விஷ்ணு: த்ராதா = விஷ்ணு: + த்ராதா = விஷ்ணு ஸ் + த்ராதா = விஷ்ணுஸ்த்ராதா
இதில் விஷ்ணுஹு – என்கிற விஸர்க³ம் போய் விஷ்ணுஸ் என்று ஆனது இந்த சூத்திரத்தின் விளைவு.


१०४ वा शरि॥ ८ । ३ ।३६॥

शरि विसर्गस्य विसर्गो वा। हरिः शेते, हरिश्शेते॥

104 வா ஶரி ॥ 8 । 3 ।36॥

ஶரி விஸர்க³ஸ்ய விஸர்கோ³ வா। ஹரி​: ஶேதே, ஹரிஶ்ஶேதே॥

ஶரி = ஶர் ப்ரத்யாஹார எழுத்து தொடர்ந்திருக்கும் போது
விஸர்க³ஸ்ய = விஸர்கத்துக்கு
விஸர்கோ³ வா ஸ்யாத் = விஸர்க்கமே ஆகலாம்.

ஒரு சொல்லின் இறுதியில் உள்ள விஸர்க்கம், அடுத்த சொல் ஶர் ப்ரத்யாஹார எழுத்தில் துவங்கினால் அப்போது முந்தைய சூத்திரத்தின் படி மாற்றம் அடையலாம், அல்லது இந்த சூத்திரத்தின் படி எந்த மாற்றமும் அடையாமலும் இருக்கலாம் (வா என்கிற விகல்பத்தின் மூலம் இதனை ஆசிரியர் தெரிவிக்கிறார்). ஶர் ப்ரத்யாஹார எழுத்துக்கள் க²ர் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு உட்பட்டவை தான் என்பதால் இது முந்தைய சூத்திரத்துக்கு அபவாத சூத்திரம் (மறுக்கும் சூத்திரம்) ஆகும்.

खर् – ख फ च ठ थ च ट त क प श ष स
शर् – श ष स

உதாரணம்:

हरि: शेते

ஹரி​: ஶேதே
இந்த வா ஶரி சூத்திரப் படி மாற்றம் நிகழாது இரண்டு சொற்களும் அப்படியே இருக்கலாம். அல்லது ஹரிஶ்ஶேதே என்று மாறலாம்.


१०५ स सजुषो रुः॥ ८ । २ । ६६॥

पदान्तस्य सस्य सजुषश्च रुः स्यात्॥

105 ஸ ஸஜுஷோ ரு​:॥ 8 । 2 । 66 ॥

பதா³ந்தஸ்ய ஸஸ்ய ஸஜுஷஸ்²ச ரு​: ஸ்யாத்॥

பதா³ந்தஸ்ய = பதத்தினுடைய (விபக்தியுடன் கூடிய சொல்)
ஸஸ்ய = ஸ-காரத்துக்கும்
ஸஜுஷஸ்²ச = ஸஜுஷ் என்கிற சொல்லுக்கும்
ரு: ஸ்யாத் = ருத்வம் ஆகும்

ஒரு சொல்லின் (பதத்தின்) இறுதியில் உள்ள ஸ-காரத்திற்கு பதிலாக ர் (அல்லது ரேப²ம்) என்கிற எழுத்து வரும். இதே போல ஸஜுஷ் என்கிற சொல் (அல்லது ஒரு கூட்டுச் சொல்லின் இறுதியில் ஸஜுஷ் வரும்போது) அங்கும் இறுதியில் ரேப²ம் வரும்.

உதாரணம்:

शिव: + अर्च्य: = शिवस् अर्च्य: = शिवर् अर्च्य:

ஶிவ: அர்ச்ய: = ஶிவஸ் அர்ச்ய: = ஶிவர் அர்ச்ய:
இந்த சூத்திரத்தின் தொடர்ச்சி அடுத்த சூத்திரத்திலும் தொடர்கிறது.


१०६ अतो रोरप्लुतादप्लुते॥ ६ । १ । ११३॥

अप्लुतादतः परस्य रोरुः स्यादप्लुते ऽति। शिवोर्ऽच्यः॥

106 அதோ ரோரப்லுதாத³ப்லுதே॥ 6 । 1 । 113॥

அப்லுதாத³த​: பரஸ்ய ரோரு​: ஸ்யாத³ப்லுதே (அ)தி। ஶிவோர்(அ)ச்ய​:॥

அப்லுதாத் அத​: பரஸ்ய – ப்லுதம் இல்லாத அ-காரத்தைத் தொடர்ந்து
ரோ: உ​: ஸ்யாத் – ர் இருக்கும் போது உ ஆக மாறும்.
அப்லுதே (அ)தி – ப்லுதம் இல்லாத அ தொடர்ந்து இருக்கையில்

ரேப²த்திற்கு முன்னால் அ-காரமும், தொடர்ந்து அ-காரமும் இருக்கும் போது, அந்த ரேப²ம் உ-காரமாக மாறும். இந்த இடத்தில் அ என்பது அதன் ஸவர்ண ஒலிகளான ஆ, ஆ3(ப்லுதம்) ஆகியவற்றைக் குறிக்காது என்று தெளிவாக அப்லுதம் என்று குறிப்பிட்டு விடுகிறார். அத் என்பதே தபரகரணத்தினால் அந்த (பார்க்க: 26 தபரஸ்தத்காலஸ்ய 1.1.70) ஒரு ஹ்ரஸ்வ அகாரத்தை மட்டுமே குறிக்கும்.

உதாரணம்:
शिव: + अर्च्य:
ஶிவ: என்பது ப்ரதமா விபக்தி. சொல்லையும் அதன் விபக்தியையும் பிரித்தால் ஶிவ + ஸு (இந்த ஸு தான் விஸர்கமாக ஆகி இருக்கிறது. விபக்தி பகுதிகளைப் பார்க்க). ஸு வில் உ என்பது இத்.. ஆகவே அது லோபம் ஆகி ஶிவஸ் என்று ஆகிறது.
शिव + स् +अर्च्य:
(१०५ स सजुषो रुः) शिव् + अ + र् + अर्च्य:
(१०६ अतो रोरप्लुतादप्लुते) शिव् + अ + + अर्च्य:
(२७ आद्गुण:) = शिव् + + अर्च्य:
(४३ एङ: पदान्तादति) = शिवोऽर्च्य:

ஶிவ + ஸ் +அர்ச்ய:
(105 ஸ ஸஜுஷோ ரு​:) ஶிவ் + அ + ர் + அர்ச்ய:
(106 அதோ ரோரப்லுதாத³ப்லுதே) ஶிவ் + அ + உ + அர்ச்ய:
(27 ஆத்³கு³ண:) = ஶிவ் + ஓ + அர்ச்ய:
(43 ஏங: பதா³ந்தாத³தி) = ஶிவோ(அ)ர்ச்ய:


१०७ हशि च ॥ ६,१.११४॥

तथा। शिवो वन्द्यः॥

107 ஹஶி ச ॥ 6 । 1 । 114॥

ததா²। ஶிவோ வந்த்³ய​:॥

ததா² = அவ்வாறே (மேலே சொன்ன சூத்திரம் போலவே)

மேலே சொன்ன சூத்திரத்தைப் போலவே தான் இதுவும். அ-காரம் மட்டும் அல்லாது ஹஶ் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், அ-காரம் முன்னால் இருக்கும் போது ர-கரம் உ-கரமாக மாறும்.

हश् = ह य व र ल ञ म ङ ण न झ भ घ ढ ध ज ब ग ड द

உதாரணம்:
शिव: वन्द्य:
शिव स् वन्द्य:
(१०५ स सजुषो रुः) शिव र् वन्द्य
(१०७ हशि च) शिव् अ + + वन्द्य: = शिवोवन्द्य:
(२७ आद्गुण:)शिवोवन्द्य:

ஶிவ: வந்த்³ய:
ஶிவ ஸ் வந்த்³ய:
(105 ஸ ஸஜுஷோ ரு​:) ஶிவ ர் வந்த்³ய
(107 ஹஶி ச) ஶிவ் அ + + வந்த்³ய: = ஶிவோவந்த்³ய:
(27 ஆத்³கு³ண:)ஶிவோவந்த்³ய:


१०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि॥ ८ । ३ । १७॥

एतत्पूर्वस्य रोर्यादेशो ऽशि। देवा इह, देवायिह। भोस् भगोस् अघोस् इति सान्ता निपाताः। तेषां रोर्यत्वे कृते॥

108 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யோ (அ)ஶி॥ 8। 3 ।17॥

ஏதத்பூர்வஸ்ய ரோர்யாதே³ஶோ (அ)ஶி। தே³வா இஹ, தே³வாயிஹ। போ⁴ஸ் ப⁴கோ³ஸ் அகோ⁴ஸ் இதி ஸாந்தா நிபாதா​:। தேஷாம்ʼ ரோர்யத்வே க்ருʼதே॥

ஏதத்பூர்வஸ்ய ரோ: = போ⁴, ப⁴கோ³, அகோ⁴, அ/ஆ இவற்றைத் தொடர்ந்து ரேபம் வரும் போது
ய ஆதே³ஶ: ஸ்யாத் = ய் என்கிற எழுத்து ஆதேசம் ஆகும்
அஶி = அஶ் ப்ரத்யாஹார எழுத்து தொடரும் போது

போ⁴, ப⁴கோ³, அகோ⁴ போன்ற அவ்யய சொற்கள் மற்றும் அ/ஆ ஆகிய எழுத்துக்களுக்கு பின்னர் ர் என்கிற எழுத்து வரும் போது, அஶ் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடருகையில், அந்த ர-கரத்திற்கு பதிலாக (ஆதேசமாக) ய் என்கிற எழுத்து வரும். இதில் அண் உதித் ஸவர்ணஸ்ய சாப்ரத்யய: சூத்திரத்தின் படி அ என்பது ஆ-வையும் சேர்த்துக் குறிக்கும்

உதாரணம்:
देवा: इह = देवास् इह
(१०५ स सजुषो रुः) देव् + आ + र् + इ ह
(१०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि) देव् + आ + य् + इह = देवायिह

தே³வா: இஹ = தே³வாஸ் இஹ
(105 ஸ ஸஜுஷோ ரு​:) தே³வ் + ஆ + ர் + இ ஹ
(108 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யோ (அ)ஶி) தே³வ் + ஆ + ய் + இஹ = தே³வாயிஹ

இதில் முன்னர் பார்த்த லோப: ஶாகல்யஸ்ய சூத்திரம் பயன் படுத்தினால் ய் என்கிற எழுத்து லோபம் ஆகி விடும். தே³வா இஹ என்கிற நிலையில் இரு சொற்களும் தனியாகவே இருக்கும்.

போ⁴ஸ் ப⁴கோ³ஸ் அகோ⁴ஸ் இதி ஸாந்தா நிபாதா​:। தேஷாம்ʼ ரோர்யத்வே க்ருʼதே॥

போ⁴ஸ் ப⁴கோ³ஸ் அகோ⁴ஸ் ஆகிய சொற்கள் ஸா – அந்தா: – ஸ-காரத்தில் முடிகிற நிபாத (மாறிலி) எழுத்துக்கள். இவற்றில் இந்த சூத்திரம் பயன்படுத்தும் போது இவ்வாறு ஆகிறது:

भो: देवा: = भो + स् + देवा: = (१०५ स सजुषो रुः) = भो + र् + देवा: = (१०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि) = भो + य् + देवा:
भगो: नमस्ते = भगो + स् + नमस्ते = (१०५ स सजुषो रुः) = भगो + र् + देवा: = (१०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि) = भगो + य् + नमस्ते
अघो: याहि = अघो + स्+ याहि = (१०५ स सजुषो रुः) = अघो + र् + याहि = (१०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि) = अघो + य् + याहि

போ⁴: தே³வா: = போ⁴ + ஸ் + தே³வா: = (105 ஸ ஸஜுஷோ ரு​:) = போ⁴ + ர் + தே³வா: = (108 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யோ (அ)ஸி²) = போ⁴ + ய் + தே³வா:
ப⁴கோ³: நமஸ்தே = ப⁴கோ³ + ஸ் + நமஸ்தே = (105 ஸ ஸஜுஷோ ரு​:) = ப⁴கோ³ + ர் + தே³வா: = (108 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யோ (அ)ஸி²) = ப⁴கோ³ + ய் + நமஸ்தே
அகோ⁴: யாஹி = அகோ⁴ + ஸ்+ யாஹி = (105 ஸ ஸஜுஷோ ரு​:) = அகோ⁴ + ர் + யாஹி = (108 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யோ (அ)ஸி²) = அகோ⁴ + ய் + யாஹி

இந்நிலையில் அடுத்த சூத்திரம் அமலுக்கு வருகிறது


१०९ हलि सर्वेषाम् । ८ । ३ । २२ ॥

भोभगोअघोअपूर्वस्य यस्य लोपः स्याद्धलि। भो देवाः। भगो नमस्ते। अघो याहि॥

109 ஹலி ஸர்வேஷாம்॥ லஸக109 = பா8,3.22॥

போ⁴ப⁴கோ³அகோ⁴அபூர்வஸ்ய யஸ்ய லோப​: ஸ்யாத்³த⁴லி। போ⁴ தே³வா​:। ப⁴கோ³ நமஸ்தே। அகோ⁴ யாஹி॥

போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அபூர்வஸ்ய யஸ்ய = போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அ/ஆ ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் ய-கரத்திற்கு
லோப​: ஸ்யாத்³ ஹலி = லோபம் ஆகும் ஹல் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடருகையில்

ஹல் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடருகையில் போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அ/ஆ ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் ய-கரம் லோபம் ஆகும்.
இந்த சூத்திரத்தின் மூலம் தெரிவது என்னவெனில் ஹல் (மெய்யெழுத்துக்கள்) தொடர்ந்து வரும்போது கண்டிப்பாக ய் என்கிற எழுத்தை லோபம் செய்தே ஆகவேண்டும். உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து வரும் போது ய் என்கிற எழுத்தை லோபம் செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம்.

ஆகவே

भो + य् + देवा: (१०९ हलि सर्वेषाम्) = भो देवा:
भगो + य् + नमस्ते = भगो नमस्ते
अघो + य् + याहि = अघो याहि

போ⁴ + ய் + தே³வா: (109 ஹலி ஸர்வேஷாம்) = போ⁴ தே³வா:
ப⁴கோ³ + ய் + நமஸ்தே = ப⁴கோ³ நமஸ்தே
அகோ⁴ + ய் + யாஹி = அகோ⁴ யாஹி


११० रो ऽसुपि॥ । ८ । २ । ६९ ॥

अह्नो रेफादेशो न तु सुपि। अहरहः। अहर्गणः॥

110 ரோ (அ)ஸுபி॥ | 8 | 2 | 69 ||

அஹ்நோ ரேபா²தே³ஸோ² ந து ஸுபி। அஹரஹ​:। அஹர்க³ண​:॥

அஹ்நோ ரேபா²தே³ஶ: ஸ்யாத் = அஹந் என்பதற்கு பதிலாக ரேபம் (ர்) ஆதேசம் ஆகும்
ந து ஸுபி = ஸுப் தொடராத நிலையில்

ஸுப் என்கிற (ஸு ஔ ஜஸ்) பெயர்சொல் விகுதிகள் தொடராத நிலையில் அஹந் என்பதற்கு பதிலாக ரேபம் (ர்) ஆதேசம் ஆகும்.
உதாரணம்:
अहन् + अहन् = (११० रो ऽसुपि) अहरहर् = (९३ खरवसानयो: विसर्जनीय:) = अहरह:
அஹந் + அஹந் = (110 ரோ (அ)ஸுபி) அஹரஹர் = (93 க²ரவஸாநயோ: விஸர்ஜநீய:) = அஹரஹ:
अहन् + गण: = (११० रो ऽसुपि) अहर् गण: = (९३ खरवसानयो: विसर्जनीय:) अहर्गण:
அஹந் + க³ண: = (110 ரோ (அ)ஸுபி) அஹர் க³ண: = (93 க²ரவஸாநயோ: விஸர்ஜநீய:) அஹர்க³ண:


१११ रो रि॥ ८ । ३ ।१४॥

रेफस्य रेफे परे लोपः॥

111 ரோ ரி॥ லஸக111 = பா8,3.14॥

ரேப²ஸ்ய ரேபே² பரே லோப​:॥

ரேப²ஸ்ய லோப​: ஸ்யாத் = ரேபம் லோபம் ஆகும்
ரேபே² பரே = ரேபம் தொடருகையில்

ரேபம் தொடருகையில் ரேபம் லோபம் ஆகும்

உதாரணம்

शम्भु: + राजाते = शम्भु स् + राजते = (१०५ स सजुषो रुः) शम्भु + र् + राजते = (१११ रो रि) = शम्भु राजते

ஸ²ம்பு⁴: + ராஜாதே = ஸ²ம்பு⁴ ஸ் + ராஜதே = (105 ஸ ஸஜுஷோ ரு​:) ஸ²ம்பு⁴ + ர் + ராஜதே = (111 ரோ ரி) = ஸ²ம்பு⁴ ராஜதே

இதன் தொடர்ச்சி அடுத்த சூத்திரத்தில் பார்க்க.


११२ ढ्रलोपे पूर्वस्य दीर्घो ऽणः॥ ६ | ३ | १११॥

ढरेफयोर्लोपनिमित्तयोः पूर्वस्याणो दीर्घः। पुना रमते। हरी रम्यः। शम्भू राजते। अणः किम् ? तृढः। वृढः। मनस् रथ इत्यत्र रुत्वे कृते हशि चेत्युत्वे रोरीति लोपे च प्राप्ते॥

112 ட்⁴ரலோபே பூர்வஸ்ய தீ³ர்கோ⁴ (அ)ண​:॥ லஸக112 = பா6,3.111॥

ட⁴ரேப²யோர்லோபநிமித்தயோ​: பூர்வஸ்யாணோ தீ³ர்க⁴​:। புநா ரமதே। ஹரீ ரம்ய​:। ஸ²ம்பூ⁴ ராஜதே। அண​: கிம் ? த்ருʼட⁴​:। வ்ருʼட⁴​:। மநஸ் ரத² இத்யத்ர ருத்வே க்ருʼதே ஹஶி சேத்யுத்வே ரோரீதி லோபே ச ப்ராப்தே॥

ட⁴ரேப²யோ: லோப: நிமித்தயோ​: = ட்⁴ மற்றும் ரேப எழுத்துக்கள் லோபம் ஆகும் நிலையில் இருக்கும் போது
பூர்வஸ்ய அண: தீ³ர்க⁴​: ஸ்யாத் = அதற்கு முன்னால் இருக்கும் அண் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தீர்க்கம் ஆகும்.

ட்⁴ மற்றும் ரேப எழுத்துக்கள் லோபம் ஆகிற நிலையில் அதற்கு முன்னர் உள்ள அண் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தீர்க்கம் ஆகும்.

உதாரணம்:
शम्भु: + राजाते = शम्भु स् + राजते = (१०५ स सजुषो रुः) शम्भु र् + राजते = (१११ रो रि) = शम्भु राजते = (११२ ढ्रलोपे पूर्वस्य दीर्घो ऽणः) शम्भू राजते
ஸ²ம்பு⁴: + ராஜாதே = ஸ²ம்பு⁴ ஸ் + ராஜதே = (105 ஸ ஸஜுஷோ ரு​:) ஸ²ம்பு⁴ ர் + ராஜதே = (111 ரோ ரி) = ஸ²ம்பு⁴ ராஜதே = (112 ட்⁴ரலோபே பூர்வஸ்ய தீ³ர்கோ⁴ (அ)ண​:) ஸ²ம்பூ⁴ ராஜதே

இதே போலவே
पुन: + रमते = पुन + स् + रमते = (१०५ स सजुषो रुः) पुन + र् + रमते = (१११ रो रि) पुन रमते = पुनारमते
புந: + ரமதே = புந + ஸ் + ரமதே = (105 ஸ ஸஜுஷோ ரு​:) புந + ர் + ரமதே = (111 ரோ ரி) புந ரமதே = புநாரமதே
हरि: + रम्यः = हरि + स् + रम्य: = (१०५ स सजुषो रुः) हरि + र् + रम्य: = (१११ रो रि) हरि रम्य: = (११२ ढ्रलोपे पूर्वस्य दीर्घो ऽणः) हरीरम्य:
ஹரி: + ரம்ய​: = ஹரி + ஸ் + ரம்ய: = (105 ஸ ஸஜுஷோ ரு​:) ஹரி + ர் + ரம்ய: = (111 ரோ ரி) ஹரி ரம்ய: = (112 ட்⁴ரலோபே பூர்வஸ்ய தீ³ர்கோ⁴ (அ)ண​:) ஹரீரம்ய:

அண​: கிம் ? த்ருʼட⁴​:। வ்ருʼட⁴​:
அண் என்று ஏன் சொல்ல வேண்டும்? அண் ப்ரத்யாஹாரம் இல்லாத வேறு எழுத்து உள்ள நிலையில் தீர்க்க எழுத்தாக மாற்றுவது சாத்தியம் இல்லை.
உதாரணமாக:

तृढ् + ढ: = तृढः

த்ருʼட்⁴ + ட⁴: = த்ருʼட⁴​:

तृढ् + ढः = वृढः

த்ருʼட்⁴ + ட⁴​: = வ்ருʼட⁴​:

இதில் இன்னொரு விசாரம் இருக்கிறது..

மநஸ் ரத² இத்யத்ர ருத்வே க்ருʼதே ஹஶி சேத்யுத்வே ரோரீதி லோபே ச ப்ராப்தே

மநஸ் + ரத² என்னும் இடத்தில் ஹஶி ச மற்றும் ரோ ரி இரண்டு சூத்திரங்களுமே அமலுக்கு வரும். எப்படி எனில்
मन: + रथ: = मन स् + रथ:
(१०५ स सजुषो रुः) मन र् + रथ:
(२०७ हशि च) मन + उ + रथ:
(आद्गुण:) मनोरथ:

மந: + ரத²: = மந ஸ் + ரத²:
(105 ஸ ஸஜுஷோ ரு​:) மந ர் + ரத²:
(207 ஹஸி² ச) மந + உ + ரத²:
(ஆத்³கு³ண:) மநோரத²:

இன்னொரு வகையான வரிசையில் சூத்திரங்களைப் பயன்படுத்தும் போது

मन: + रथ: = मन स् + रथ:
(१०५ स सजुषो रुः) मन + र् + रथ:
(१११ रो रि) = मन + रथ:
(११२ ढ्रलोपे पूर्वस्य दीर्घोऽणः) मनारथ:

மந: + ரத²: = மந ஸ் + ரத²:
(105 ஸ ஸஜுஷோ ரு​:) மந + ர் + ரத²:
(111 ரோ ரி) = மந + ரத²:
(112 ட்⁴ரலோபே பூர்வஸ்ய தீ³ர்கோ⁴(அ)ண​:) மநாரத²:

இந்நிலையில் மநாரத² என்பது சரியான ரூபம் அல்ல. மநோரத²: என்பதுதான் சரி. இது எவ்வாறு என்று அடுத்த சூத்திரத்தில் பார்ப்போம்.


११३ विप्रतिषेधे परं कार्यम्॥ १ | ४ | २॥

तुल्यबलविरोधे परं कार्यं स्यात्। इति लोपे प्राप्ते। पूर्वत्रासिद्धमिति रोरीत्यस्यासिद्धत्वादुत्वमेव। मनोरथः॥

113 விப்ரதிஷேதே⁴ பரம்ʼ கார்யம்॥ 1 | 4 | 2॥

துல்யப³லவிரோதே⁴ பரம்ʼ கார்யம்ʼ ஸ்யாத்। இதி லோபே ப்ராப்தே। பூர்வத்ராஸித்³த⁴மிதி ரோரீத்யஸ்யாஸித்³த⁴த்வாது³த்வமேவ। மநோரத²​:॥

துல்யப³லவிரோதே⁴ = இரண்டு சமமான விதிகள் ஒரே சமயத்தில் அமலுக்கு வரும் போது
பரம்ʼ கார்யம்ʼ ஸ்யாத் = கடைசி விதியைத்தான் பயன்படுத்த வேண்டும்

இரண்டு சமமான விதிகள் ஒரே சமயத்தில் அமலுக்கு வரும் போது கடைசி விதியைத்தான் பயன்படுத்த வேண்டும் இந்த சூத்திரப்படி மநஸ் + ரத² என்னும் இடத்தில் (111 ரோ ரி) என்கிற சூத்திரம் (207 ஹஶி ச) என்கிற சூத்திரத்திற்கு பிறகே ஏற்படுகிறது. ஆகவே அந்த சூத்திரமே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், (111 ரோ ரி) என்கிற சூத்திரம் திரிபாதி என்கிற அஷ்டாத்யாயியின் கடைசி மூன்று பாகங்களுக்குள் வருகிறது. ஆகவே அது (31 பூர்வத்ராஸித்³த⁴ம்) என்கிற சூத்திரத்தின் படி (207 ஹஶி ச) என்கிற சூத்திரம் இதற்கு ஈடாக இருப்பதே இந்த சூத்திரத்தின் பார்வையில் தெரியாது. ஆகவே (207 ஹஶி ச) சூத்திரமே இங்கே உபயோகிக்கப் பட்டு மநோரத²: என்கிற சொல் கிடைக்கிறது.


११४ एतत्तदोः सुलोपो ऽकोरनञ्समासे हलि ॥ ६ ।१ ।१३२॥

अककारयोरेतत्तदोर्यः सुस्तस्य लोपो हलि न तु नञ्समासे। एष विष्णुः। स शम्भुः। अकोः किम् ? एषको रुद्रः। अनञ्समासे किम् ? असः शिवः। हलि किम् ? एषो ऽत्र॥

114 ஏதத்ததோ³​: ஸுலோபோ (அ)கோரநஞ்ஸமாஸே ஹலி॥ 6 | 1 | 132॥

அககாரயோரேதத்ததோ³ர்ய​: ஸுஸ்தஸ்ய லோபோ ஹலி ந து நஞ்ஸமாஸே। ஏஷ விஷ்ணு​:। ஸ ஶம்பு⁴​:। அகோ​: கிம் ? ஏஷகோ ருத்³ர​:। அநஞ்ஸமாஸே கிம் ? அஸ​: ஶிவ​:। ஹலி கிம் ? ஏஷோ (அ)த்ர॥

அககாரயோ: ஏதத் ததோ³: = க் என்கிற எழுத்தில் முடியாத, எதத், தத் ஆகிய சொற்களுக்கு (ஏஷக: என்பன போன்ற க-காரத்தில் முடியாத அது, அந்த என்னும் சொற்கள்)
ய​: ஸு: தஸ்ய லோப: ஸ்யாத் = முதல் விபக்தி ப்ரத்யயமான ஸு லோபம் ஆகும்
ஹலி = ஹல் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து வருகையில்
ந து நஞ்ஸமாஸே = நஞ் சமாசத்தில் உள்ள கூட்டுச் சொல்லாக இல்லாத போது

பிரதிபெயர்ச்சொற்களான (Pronouns) தத், எதத் ஆகிய சொற்கள், க் என்கிற எழுத்தில் முடியாமலும், எதிர்மறையான நஞ் சமாசத்தில் இல்லாத போதும், ஹல் ப்ரத்யாஹார எழுத்து தொடர்ந்து வரும் போதும், முதல் விபக்தி ப்ரத்யயமான ஸு என்கிற எழுத்து லோபம் ஆகும்.
உதாரணமாக எதத் என்னும் சொல்லின் முதல் விபக்தி (வேற்றுமை) ஏஷ: என்று ஆகும்.

एष: विष्णुः = एष स् विष्णु: = (११४ एतत्तदोः सुलोपो ऽकोरनञ्समासे हलि) एष विष्णुः ।

ஏஷ: விஷ்ணு​: = ஏஷ ஸ் விஷ்ணு: = (114 ஏதத்ததோ³​: ஸுலோபோ (அ)கோரநஞ்ஸமாஸே ஹலி) ஏஷ விஷ்ணு​: ।
இதில் ஏஷ: என்பது முதல் வேற்றுமை (விபக்தியில்) உள்ளது. இந்த சூத்திரத்தின் படி அதன் முதல் விபக்திக்குரிய ஸ-காரம் லோபம் ஆகி ஏஷ விஷ்ணு என்று ஆகிறது. இதே போலவே

स: शम्भुः = स स् शम्भुः = स शम्भुः ।

ஸ: ஶம்பு⁴​: = ஸ ஸ் ஶம்பு⁴​: = ஸ ஶம்பு⁴​: ।
இதில் க-காரத்தை விலக்கும் உதாரணம்

एषक: रुद्र: = एषक स् रुद्र: = (२०५ स सजुषो रु:) एषक र् रुद्र: = (२०७ हशि च) एषक् + अ + उ + रुद्र: = (२७ आद्गुण: ) एषको रुद्र: ।

ஏஷக: ருத்³ர: = ஏஷக ஸ் ருத்³ர: = (205 ஸ ஸஜுஷோ ரு:) ஏஷக ர் ருத்³ர: = (207 ஹஸி² ச) ஏஷக் + அ + உ + ருத்³ர: = (27 ஆத்³கு³ண: ) ஏஷகோ ருத்³ர: |

நஞ் சமாசத்தில் உள்ளதற்கு ஒரு உதாரணம்

अस: शिव: = अस स् + शिव: = (२०५ स सजुषो रु:) अस र् +शिव: = अस: शिव: ।

அஸ: ஶிவ: = அஸ ஸ் + ஶிவ: = (205 ஸ ஸஜுஷோ ரு:) அஸ ர் +ஶிவ: = அஸ: ஶிவ: ।

ஹல் ப்ரத்யாஹார எழுத்து தொடர்ந்திருக்கும் போது தான் இந்த சூத்திரம் பிரயோகம் ஆகும். அது இல்லாத சொற்களுக்கு ஒரு உதாரணம்:

एष: अत्र = एष स् अत्र = (२०५ स सजुषो रु:) एष र् अत्र = (२०७ हशि च) एष् अ + उ + अत्र = (४३ एङ: पदान्तादति) एषोऽत्र ।

ஏஷ: அத்ர = ஏஷ ஸ் அத்ர = (205 ஸ ஸஜுஷோ ரு:) ஏஷ ர் அத்ர = (207 ஹஸி² ச) ஏஷ் அ + உ + அத்ர = (43 ஏங: பதா³ந்தாத³தி) ஏஷோ(அ)த்ர ।


११५ सो ऽचि लोपे चेत्पादपूरणम्॥ ६ । १ । १३४॥

स इत्यस्य सोर्लोपः स्यादचि पादश्चेल्लोपे सत्येव पूर्य्येत। सेमामविड्ढि प्रभृतिम्। सैष दाशरथी रामः॥

115 ஸோ (அ)சி லோபே சேத்பாத³பூரணம்॥ 6 ।1 ।134॥

ஸ இத்யஸ்ய ஸோர்லோப​: ஸ்யாத³சி பாத³ஶ்சேல்லோபே ஸத்யேவ பூர்ய்யேத। ஸேமாமவிட்³டி⁴ ப்ரப்⁴ருʼதிம்। ஸைஷ தா³ஶரதீ² ராம​:॥

ஸ இதி அஸ்ய = ஸ: என்னும் சொல்லினுடைய
ஸோ: லோப​: ஸ்யாத் = ஸ் என்கிற எழுத்திற்கு லோபம் ஆகலாம்
அசி = அச் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில்
பாத³: சேத் லோபே ஸதி-ஏவ = (அவ்வாறு) லோபம் ஆகும் போது பாதம்
பூர்ய்யேத = நிறைவு அடையும் நிலையில்

ஸ: என்பது தத் சப்தத்தின் புல்லிங்க ப்ரதமா விபக்தி ஏகவசனம். இந்த ஸ: என்கிற சொல் ஒரு செய்யுளின் அல்லது ஸ்லோகத்தில் வரும்போது, இதன் விஸர்க³ம் மறைந்தால் (லோபம்) ஆனால்தான் செய்யுளின் சந்தம் சரியாக அமையும் என்னும் நிலையில், அதே சமயத்தில் இந்த ஸ: என்கிற சொல்லைத் தொடர்ந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் தொடங்குவதாக இருக்கும் நிலையில், இந்த விஸர்க³ம் லோபம் ஆகலாம் – மறையலாம்.

இதற்கு முந்தைய சூத்திரம் மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வரும் போது மட்டும் ஏதத், தத் ஆகிய சொற்களில் ப்ரதமா விபக்திக்குறிய விஸர்க³ம் லோபம் ஆகும் என்று விதித்தது. இந்த சூத்திரம் உயிர் எழுத்துக்கள் தொடர்ந்தாலும் செய்யுளின் எழுத்து எண்ணிக்கை சரியாக வருவதற்காக முதல் விபக்தி எழுத்தான ஸ் என்கிற எழுத்தை லோபம் செய்யலாம் என்று விதிக்கிறது.

தமிழில் செய்யுட்கள் வெண்பா, ஆசிரியப்பா போன்ற சந்தங்களில் இயற்றப் படுவது போல, சம்ஸ்க்ருதத்திலும் அனுஷ்டுப் சந்தம், த்ருஷ்டுப் சந்தம் ஆகிய பல வகைகள் உண்டு. சந்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ச²ந்தோ³ப⁴ங்க³தோ³ஷம் (छन्दोभङ्गदोष) ஏற்படக் கூடாது என்று அபி மாஷம்ʼ மஷம்ʼ குர்யாத் ச²ந்தோ³ப⁴ங்க³ம்ʼ ந காரயேத்| (अपि माषं मषं कुर्यात् छन्दोभङ्गं न कारयेत्। ) என்று ஒரு எழுத்தை வெட்டினாலும் பரவாயில்லை ச²ந்தோ³ப⁴ங்க³ம் செய்யாதே என்று வேடிக்கையாக சொல்வர். சந்தம் என்பது அவ்வளவு முக்கியம்.

இந்த சூத்திரத்திற்கு உதாரணமாக வேதத்திலிருந்து ஒன்றும், ராமாயணத்திலிருந்து ஒன்றும் கொடுத்திருக்கிறார்.

सेमामविड्ढि प्रभृतिम् ईशेषे (ऋक् 2-14-1)

இந்த ஸ்லோகத்தின் முதற் பகுதியை பிரித்து எழுதும் போது ஸ: இமாமவிட்³டி⁴ ப்ரப்⁴ருʼதிம் ய ஈஶேஷே (स: इमामविड्ढि प्रभृतिम् य ईशेषे) என்று உள்ளது. இவ்வாறு பிரித்து எழுதினால் இந்த பாதத்தில் (செய்யுளின் கால் பாகம் அல்லது பகுதி) பதிமூன்று எழுத்துக்கள் உள்ளன. பனிரெண்டு எழுத்துக்கள் தான் இருக்க வேண்டும். இந்நிலையில் முதல் சொல்லான ஸ: என்பது ஸ + விபக்தி ப்ரத்யயம் ஸு-வுடன் சேர்ந்துள்ளது. ஸு என்பதில் உ இத் ஆகும். ஆகவே

ஸ + ஸ் + இமாமவிட்³டி⁴ ப்ரப்⁴ருʼதிம் (स स् इमामविड्ढि प्रभृतिम्) என்று ஆகும். மேலும் சூத்திரங்களைப் பயன் படுத்தினால்

स् + अ + स् + इमामविड्ढि प्रभृतिम्
(२०५ स सजुषो रु:) स् + अ + र् + इमामविड्ढि…
(२०८ भो भगो अघो अ पूर्वस्य योऽशि) स् + अ + य् + इमामविड्ढि…
(३० लोप: शाकल्यस्य) स् + अ + इ + मामविड्ढि…
(२७ आद्गुण:) स् + ए + मामविड्ढि… = सेमामविड्ढि प्रभृतिम् ईशेषे

ஸ் + அ + ஸ் + இமாமவிட்³டி⁴ ப்ரப்⁴ருʼதிம்
(205 ஸ ஸஜுஷோ ரு:) ஸ் + அ + ர் + இமாமவிட்³டி⁴…
(208 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அ பூர்வஸ்ய யோ(அ)ஶி) ஸ் + அ + ய் + இமாமவிட்³டி⁴…
(30 லோப: ஶாகல்யஸ்ய) ஸ் + அ + இ + மாமவிட்³டி⁴…
(27 ஆத்³கு³ண:) ஸ் + ஏ + மாமவிட்³டி⁴… = ஸேமாமவிட்³டி⁴ ப்ரப்⁴ருʼதிம் ஈஶேஷே

இதில் (30 லோப: ஶாகல்யஸ்ய) பயன்படுத்தாமல் போனால் ஸயிமாமவிட்³டி⁴… (सयिमामविड्ढि… ) என்று ஆகி இருக்கும் – அதுவும் சந்தத்தை பங்கப் படுத்தும். அதனால் இந்த சூத்திரம் அவ்வாறு லோபம் செய்வதை அவசியமாக்குகிறது.

இதே போல அநுஷ்டுப் சந்தத்தில் அமைந்த ஸ்லோகத்தின் ஒரு பகுதியான ஸ ஏஷ தாசரதீ ராம: என்கிற பகுதி இவ்வாறு மாறுகிறது

स: एष दाशरथी राम:
स स् + एष दाशरथी राम:
(२०५ स सजुषो रु:) स् + अ + र् + एष दाशरथी राम:
(२०८ भो भगो अघो अ पूर्वस्य योऽशि) स् + अ + य् + एष दाशरथी राम:
(३० लोप: शाकल्यस्य) स् + अ + ए ष दाशरथी राम:
(३३ वृद्धिरेचि) स् ऐ ष दाशरथी राम: = सैषदाशरथी राम:

ஸ: ஏஷ தா³ஶரதீ² ராம:
ஸ ஸ் + ஏஷ தா³ஶரதீ² ராம:
(205 ஸ ஸஜுஷோ ரு:) ஸ் + அ + ர் + ஏஷ தா³ஶரதீ² ராம:
(208 போ⁴ ப⁴கோ³ அகோ⁴ அ பூர்வஸ்ய யோ(அ)ஶி) ஸ் + அ + ய் + ஏஷ தா³ஶரதீ² ராம:
(30 லோப: ஶாகல்யஸ்ய) ஸ் + அ + ஏ ஷ தா³ஶரதீ² ராம:
(33 வ்ருʼத்³தி⁴ரேசி) ஸ் ஐ ஷ தா³ஶரதீ² ராம: = ஸைஷதா³ஶரதீ² ராம:

இவ்வாறு லோபம் ஆகாமல் போனால் ஸயேஷ தா³ஶரதீ² ராம: என்று ஆகியிருக்கும். அதனால் இந்த பாதத்தில் ஒன்பது எழுத்துக்கள் ஆகி மொத்த ஸ்லோகமும் முப்பத்தி இரண்டு எழுத்துக்கள் இருக்க வேண்டிய அநுஷ்டுப் சந்தத்தில் அமையாமல் போயிருக்கும். முழு ஸ்லோகம்:

सैष दाशरथी राम: सैष राजा युधिष्टिर: ।
सैष कर्णो महादानी सैषा भीमो महाबल: ॥

ஸைஷ தா³ஶரதீ² ராம: ஸைஷ ராஜா யுதி⁴ஷ்டிர: |
ஸைஷ கர்ணோ மஹாதா³நீ ஸைஷா பீ⁴மோ மஹாப³ல: ||

इति विसर्गसन्धि प्रकरणम्


2 Comments விஸர்க³ ஸந்தி⁴ ப்ரகரணம்

  1. domain names

    இங்கே காணப்படும் தமிழ் வ்யாகரணத்தை download செய்வது எப்படி என்பதை,தயவு செய்து தெரியப்படுத்தவும்

  2. Pingback: விளிகள் – ஸம்போதநம் | சங்கதம்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)