ஹல் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3

८३ नपरे नः॥ | ८ | ३ | २७॥

नपरे हकारे मस्य नो वा। किन् ह्नुते | किं ह्नुते॥

83 நபரே ந​:|| | 8 | 3 | 27||

நபரே ஹகாரே பரே மஸ்ய நோ வா| கின் ஹ்னுதே | கிம்ʼ ஹ்னுதே||

நபரே ஹகாரே பரே = ஹகாரத்தை தொடர்ந்து ந இருக்கும் போது
மஸ்ய நோ வா = ம-காரம் ந-கராமாக மாறலாம்.

ந-வைத் தொடர்ந்து ஹ இருக்கும் சொல்லின் முன் உள்ள சொல் ம் என்கிற எழுத்தில் முடியும் போது (ம் + ஹ் + ந்), அந்த ம் எழுத்து ந் ஆக மாறலாம்.

உதாரணம்:

किम् + ह्नुते = कि म् + ह् न् + उते => (नपरे नः) => कि न् + ह् न् + उते = किन्ह्नुते


८४ आद्यन्तौ टकितौ॥ | १ | १ | ४६॥

टित्कितौ यस्योक्तौ तस्य क्रमादाद्यन्तावयवौ स्तः॥

84 ஆத்³யந்தௌ டகிதௌ|| | 1 | 1 | 46||

டித்கிதௌ யஸ்யோக்தௌ தஸ்ய க்ரமாதா³த்³யந்தாவயவௌ ஸ்த​:||

ஆத்³யந்தௌ = ஆதியிலும் அந்தத்திலும்
டகிதௌ = ட மற்றும் க இத்தாக இருக்கும் போது
டித்கிதௌ = டித் (ட இத்) மற்றும் கித் (க இத்)
யஸ்யோக்தௌ = எதற்கு இத் என்று சொல்லப் படுகிறதோ
தஸ்ய = அதற்கு
க்ரமாத் = முறையே
ஆதி அந்தௌ அவயவௌ ஸ்த = ஆதியிலும் அந்தத்திலும் அவயவம் ஆகும் (சேரும்)

ஒரு சொல்லிற்கு முதலில் உள்ள ட-காரம் அல்லது இறுதியில் உள்ள க-காரம் இத் ஆக கூறப் படும்போது அது லோபம் ஆகாமல் அவயவம் அல்லது ஆகமம் ஆகும் – அதாவது சேர்ந்தே இருக்கும். இதன் உபயோகம் அடுத்த சூத்திரத்தில் புரியும்.


८५ ङ्णोः कुक्टुक् शरि॥ | ८ | ३ | २८॥

ङकारणकारयो: कुक्टुकावागमौ वा स्तः। शरि | (चयो द्वितीयाः शरि पौष्करसादेरिति वाच्यम्)। प्राङ्ख् षष्ठः, प्राङ्क्षष्ठः, प्राङ् षष्ठः। सुगण्ठ् षष्ठः सुगण्ट् षष्ठः, सुगण् षष्ठः॥

85 ங்ணோ​: குக்டுக் ஶரி|| | 8 | 3 | 28||

ஙகாரணகாரயோ: குக்டுகாவாக³மௌ வா ஸ்த​:| ஶரி | (சயோ த்³விதீயா​: ஶரி பௌஷ்கரஸாதே³ரிதி வாச்யம்)| ப்ராங்க்² ஷஷ்ட²​:, ப்ராங்க்ஷஷ்ட²​:, ப்ராங் ஷஷ்ட²​:| ஸுக³ண்ட்² ஷஷ்ட²​: ஸுக³ண்ட் ஷஷ்ட²​:, ஸுக³ண் ஷஷ்ட²​:||

ஙகாரணகாரயோ: = சொல்லின் இறுதியில் உள்ள ங் மற்றும் ண் எழுத்துக்களுக்கு

குக் டுக் = குக் மற்றும் டுக்
ஆக³மௌ வா ஸ்த​: = = ஆகமம் ஆகும்

ஒரு சொல்லில் இறுதியில் ங் அல்லது ண் இருக்கும் போதும் அதனைத் தொடர்ந்த அடுத்த சொல் ஶர் பிரத்யஹார எழுத்துக்களில் ஒன்றில் இருக்கையில், அந்த ங் எழுத்துடன் க-வரிசை எழுத்தும், ண் எழுத்துடன் ட-வரிசை எழுத்தும் ஆகமமாக சேரலாம்.

இதில் ஆகமமாக வரும் எழுத்தை ங்/ண் எழுத்துக்களுக்கு முன்னால் சேர்க்கவேண்டுமா பின்னால் சேர்க்கவேண்டுமா என்ற கேள்விக்கு முந்தைய சூத்திரத்தை (ஆத்³யந்தௌ டகிதௌ) பார்க்க வேண்டும். அதன்படி கித் எனும் க் இத்தாக உள்ள நிலையில் அது அந்தத்தில் அவயவம் ஆகும் என்று கூறுவதால், ங்/ண் ஆகிய எழுத்துக்களுக்கு இறுதியிலேயே சேர்க்க வேண்டும் என்று தெரிகிறது.

உதாரணம்:
प्राङ् + षष्ठः
இதில் ங் எழுத்தில் ப்ராங் என்ற சொல் முடிவதாலும் அடுத்து தொடர்ந்து வரும் ஷ என்பது ஶர் பிரத்யஹார எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதால் இந்த சூத்திரப் படி க-காரம் ஆகமம் ஆகவேண்டும். ஆகையால்

प्राङ् + षष्ठः = प्राङ्क् + षष्ठः = प्राङ्क्षष्ट:

மற்றொரு உதாரணம்:

सुगण् + षष्ठः = (ङ्णोः कुक्टुक् शरि) = सुगण् + ट् + षष्ठः = सुगण्ट्षष्ठः |

चयो द्वितीयाः शरि पौष्करसादेरिति वाच्यम्

சயோ த்³விதீயா​: ஶரி பௌஷ்கரஸாதே³ரிதி வாச்யம்

சய: = च, ट, त, क, प, ஆகிய முதல் எழுத்துக்களுக்கு பதிலாக
த்³விதீயா​: = = இரண்டாம் வரிசை எழுத்துக்கள் (छ, ठ, थ, ख, फ)
ஶரி = ஶர் பிரத்யஹார எழுத்துக்கள் தொடர்கையில்
பௌஷ்கரஸாதே³ இதி வாச்யம் = பௌஷ்கரஸாதி என்கிற ஆசாரியர் கூறியது

பௌஷ்கரசாதி என்கிற ஆசாரியார் கூறியது, ஶர் பிரத்யஹார எழுத்துக்கள் தொடர்கையில், சய் பிரத்யஹார எழுத்துக்களில் முடியும் சொல்லின் இறுதியில் அந்த சய் பிரத்யஹார எழுத்துக்களில் முதல் வரிசை எழுத்துகளுக்கு பதிலாக இரண்டாம் வரிசை எழுத்துக்கள் இடம் பெறும்.
இதனால்

प्राङ् + षष्ठः = प्राङ् क् + षष्ठः = प्राङ् ख् + षष्ट = प्राङ्ख्षष्ट:
सुगण् + षष्ठः = सुगण् + ट् + षष्ठः = सुगण् + ठ् + षष्ठः = सुगण्ठ्षष्ठः


८६ डः सि धुट्॥ | ८ | ३ | २९॥

डात्परस्य सस्य धुड्वा। षट्त्सन्तः, षट् सन्तः॥

86 ட³​: ஸி து⁴ட்|| | 8 | 3 | 29||

டா³த்பரஸ்ய ஸஸ்ய து⁴ட்³வா| ஷட்த்ஸந்த​:, ஷட் ஸந்த​:||

டா³த்பரஸ்ய = ட-காரத்தைத் தொடர்ந்து
ஸஸ்ய = ஸ-காரத்திற்கு
து⁴ட்³வா = து⁴ட் ஆகமம் ஆகலாம்

ட-காரத்தைத் தொடர்ந்து வரும் ஸ-காரத்திற்கு து⁴ட் ஆகமம் ஆகலாம்.

இதில் டா³த் என்பது ட என்பதன் ஐந்தாம் வேற்றுமை. ஸி என்பது ஸ-வின் ஏழாம் வேற்றுமை. ஐந்தாம் வேற்றுமை இருக்கும் போது, தஸ்மாதி³த்யுத்தரஸ்ய என்ற சூத்திரத்தின் படி து⁴ட் ஆகமம் ட-வினை அடுத்து நிகழ வேண்டும். ஸி என்பது ஏழாம் வேற்றுமை ஆதலால் தஸ்மின் இதி நிர்த்திஷ்டே பூர்வஸ்ய சூத்திரம் பிரயோகம் ஆகலாம் – அதன்படி சந்தி ட-விற்கு முன்னால் து⁴ட் ஆகமம் நிகழ வேண்டும் என்று ஆகும். இதனால் குழப்பம் நேரிடுகிறது.

இந்நிலையில் உப⁴யனிர்தே³ஸே² பஞ்சமீனிர்தே³ஸோ² ப³லீயான் (उभयनिर्देशे पञ्चमीनिर्देशो बलीयान्) என்கிற வாக்கியத்தின் படி, ஐந்தாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமையை விட முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது.

உதாரணம்:

षट् + सन्तः = ष + ट् + स् + अन्त: = ष + ट् + धुट् + स् + अन्त: = ष + ट् + ध् + स् + अन्त: = (खरि च) = ष + ट् + त् + स् + अन्त: = षट्त्सन्त:

இந்த சூத்திரம் விகல்பமாக இருப்பதால் षट्सन्त: என்றும் இச்சொல் அமையும்.


८७ नस्च॥ | ८ | ३ | ३०॥

नान्तात्परस्य सस्य धुड्वा। सन्त्सः, सन्सः॥

87 நஸ்ச|| | 8 | 3 | 30||

நாந்தாத்பரஸ்ய ஸஸ்ய து⁴ட்³வா| ஸந்த்ஸ​:, ஸன்ஸ​:||

ந அந்தாத் = ந் என்கிற எழுத்திலிருந்து
பரஸ்ய ஸஸ்ய = தொடர்ந்து வரும் ஸ-காரத்திற்கு
து⁴ட்³வா = து⁴ட் ஆகமம் ஆகலாம்.

இதற்கு முந்தைய சூத்திரத்தைப் போலவே ( ட³​: ஸி து⁴ட்) அமையும் சந்தி ந-காரத்திலும் அமையும் என்று இந்த சூத்திரம் கூறுகிறது.

உதாரணம்:

सन् + स: = स + न् + स् + अ: => (நஸ்ச) => स + न् + धुट् + स् + अ: =
(खरि च) => स + न् + त् + स् + अ: = सन्त्स:

இது விகல்பமாக இருப்பதால் सन्स: என்றும் அமையலாம்.


८८ शि तुक्॥ | ८ | ३ | ३१॥

पदान्तस्य नस्य शे परे तुग्वा। सञ्छम्भुः, सञ्च्छम्भुः, सञ्च्शम्भुः, सञ्शम्भुः॥

88 ஸி² துக்|| | 8 | 3 | 31||

பதா³ந்தஸ்ய நஸ்ய ஸே² பரே துக்³வா| ஸஞ்ச²ம்பு⁴​:, ஸஞ்ச்ச²ம்பு⁴​:, ஸஞ்ச்ஶம்பு⁴​:, ஸஞ்ஶம்பு⁴​:||

பதா³ந்தஸ்ய நஸ்ய = சொல்லில் இறுதியில் உள்ள ந் என்கிற எழுத்துக்கு
ஸே² பரே = ஶ தொடர்ந்து இருக்கும் போது
துக்³ வா = துக் ஆகமம் ஆகும்

சொல்லின் இறுதியில் உள்ள ந் எழுத்துக்கு துக் ஆதேசம் ஆகும் ஶ தொடர்ந்து இருக்கும் போது.

உதாரணம்:

सन् + शम्भु: = स न् + श् + अम्भु: = स न् + तुक् + श् + अम्भु: = स न् + त् + श् + अम्भु: = ( स्तोः श्चुना श्चुः​) = स + न् + च् + श् + अम्भु: = (स्तोः श्चुना श्चुः) = स + ञ् + च् + श् + अम्भु: = (शश्छो ऽटि) = स + ञ् + च् + छ् + श् + अम्भु: = सञ्चछम्भू:


८९ ङमो ह्रस्वादचि ङमुण् नित्यम्॥ | ८ | ३ | ३२॥

ह्रस्वात्परे यो ङम् तदन्तं यत्पदं तस्मात्परस्याचो नित्यं ङमुडागम: स्यात् । प्रत्यङ्ङात्मा। सुगण्णीशः। सन्नच्युतः॥

89 ஙமோ ஹ்ரஸ்வாத³சி ஙமுண் நித்யம்|| | 8 | 3 | 32 ||

ஹ்ரஸ்வாத்பரே யோ ஙம் தத³ந்தம்ʼ யத்பத³ம்ʼ தஸ்மாத்பரஸ்யாசோ நித்யம் ஙமுடா³கம: ஸ்யாத் | ப்ரத்யங்ஙாத்மா| ஸுக³ண்ணீஶ​:| ஸன்னச்யுத​:||

ஹ்ரஸ்வாத் பரே = ஹ்ரஸ்வ எழுத்தைத் தொடர்ந்து
ய: ஙம் = ஙம் பிரத்யஹார எழுத்து (ங, ண, ந)
தத³ந்தம்ʼ யத்பத³ம்ʼ = முடிவில் உள்ள சொல்
தஸ்மாத் பரஸ்ய அச: = தொடர்ந்து வரும் அச் (உயிர் எழுத்து) பிரத்யாஹார எழுத்துக்கு
நித்யம் ஙமுடா³கம: ஸ்யாத் = ஙுட், ணுட், நுட் ஆகியவை எப்போதும் ஆகமம் ஆகும்

ஙம: என்பது ஐந்தாம் வேற்றுமையில் உள்ளது. ஙம் பிரத்யஹார எழுத்துக்கள் (ங, ண ந) ஆகியவை ஒரு சொல்லின் இறுதியில் இருந்து, அதனைத் தொடர்ந்து உயிர் எழுத்தில் அடுத்த சொல் தொடரும் போது, அந்த உயிரெழுத்துக்கு ங, ண, ந ஆகியவை ஆகமம் ஆகும்.

உதாரணம்:

प्रत्यङ् + आत्मा => प्रत्य + ङ् + आ + त्मा => प्रत्य + ङ् + ङ् + आ + त्मा = प्रत्यङ्ङ्आत्मा |


९० समः सुटि॥ | ८ | ३ | ५॥

समो रुः सुटि॥

90 ஸம​: ஸுடி|| | 8 | 3 | 5||

ஸமோ ரு​: ஸுடி||

ஸம: = ஸம் என்பதற்கு பதிலாக
ரு: = ரு அல்லாத ர் என்கிற எழுத்து
ஸுடி = ஸுட் தொடர்ந்து இருக்கும் போது.

ஸம் என்கிற உபசர்க்கத்துக்கு பதிலாக ரு (ர்) என்கிற எழுத்து ஆதேசம் ஆகும் ஸுட் (ஸ) தொடர்ந்து இருக்கும் போது.

இதில் கவனிக்க வேண்டியது, ஸம் என்கிற முழு சொல்லுக்கும் ஆதேசம் ஆவதை அலோ(அ)ந்த்யஸ்ய என்கிற சூத்திரம் தடுக்கிறது. ஆகவே அந்த அல் ஆன ம் என்கிற எழுத்து மட்டுமே ரு(ர்) என்று மாறும்.

உதாரணம்:

सम् + स्कर्ता => स + म् + स् + कर्ता => (समः सुटि) => स + र् + स् + कर्ता

இந்நிலையில் அடுத்த சூத்திரத்தைப் பார்க்கலாம்.


९१ अत्रानुनासिकः पूर्वस्य तुवा॥ | ८ | ३ | २॥

अत्र रुप्रकरणे रोः पूर्वस्यानुनासिको वा॥

91 அத்ரானுனாஸிக​: பூர்வஸ்ய துவா|| | 8 | 3 | 2||

அத்ர ருப்ரகரணே ரோ​: பூர்வஸ்யானுனாஸிகோ வா||

அத்ர ருப்ரகரணே = ம் என்கிற எழுத்து ரு வாக மாறுகிற விஷயத்தில்
ரோ​: பூர்வஸ்ய = ர-காரத்திற்கு பதிலாக
அனுனாஸிகோ வா = அனுநாசிகம் (சந்திரபிந்து) ஆகலாம்

அனுனாசிகமான ம் என்கிற எழுத்து ரு வாக மாறுகிற சந்தர்ப்பத்தில், ருவிற்கு முன்னால் உள்ள எழுத்துக்கு அனுனாசிகம் – சந்திரபிந்து ஆதேசம் ஆகும்.

स + र् + स् + कर्ता = स्अँ + र् + स् + कर्ता

விகல்பத்தினால் இந்த சூத்திரம் பிரயோகிக்கப் படாமல் போனால் இதற்கு அடுத்த சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்


९२ अनुनासिकात्परो ऽनुस्वारः॥ | ८ | ३ | ४॥

अनुनासिकं विहाय रोः पूर्वस्मात्परो ऽनुस्वारागमः॥

92 அனுனாஸிகாத்பரோ (அ)நுஸ்வார​:|| | 8 | 3 | 4||

அனுனாஸிகம்ʼ விஹாய ரோ​: பூர்வஸ்மாத்பரோ (அ)நுஸ்வாராக³ம​:||

அனுனாஸிகம்ʼ விஹாய = அனுனாசிகம் தவிர
ரோ​: பூர்வஸ்மாத் பர: = முன்னுள்ள ர் எழுத்தைத் தொடர்ந்து
அநுஸ்வார: ஆக³ம​: ஸ்யாத் = அனுஸ்வரம் ஆகமம் ஆகலாம்

ரு(ர்) எழுத்துக்கு முன்னுள்ள எழுத்துக்கு சந்திரபிந்துவுக்கு பதிலாக அனுஸ்வரம் ஆகமம் ஆகலாம்.

स्अँ + र् + स् + कर्ता = स्अं + र् + स् + कर्ता


९३ खरवसानयोर्विसर्जनीयः॥ | ८ | ३ | १५॥

खरि अवसाने च पदान्तस्य रेफस्य विसर्गः। (संपुंकानां सो वक्तव्यः)। संस्स्कर्ता, संस्स्कर्ता॥

93 க²ரவஸானயோர்விஸர்ஜனீய​:|| | 8 | 3 | 15||

க²ரி அவஸானே ச பதா³ந்தஸ்ய ரேப²ஸ்ய விஸர்க³​: ஸ்யாத் | (ஸம்புங்கானாம்ʼ ஸோ வக்தவ்ய​:)| ஸம்ʼஸ்ஸ்கர்தா, ஸம்ʼஸ்ஸ்கர்தா||

க²ரி = க²ர் பிரத்யாஹார எழுத்துக்கள் தொடர்கையில்
அவஸானே ச = வேறு எந்த எழுத்துக்களும் தொடர்ந்து இல்லாத நிலையிலும்
பதா³ந்தஸ்ய ரேப²ஸ்ய = சொல்லின் முடிவில் உள்ள ர-காரம்
விஸர்க³​: ஸ்யாத் = விசர்க்கம் ஆகலாம்

சொல்லின் இறுதியில் ரு(ர்) இருக்கும் போது, அதனைத் தொடர்ந்து க²ர் பிரத்யாஹார எழுத்துக்கள் இருக்கும் போதோ அல்லது வேறு எந்த எழுத்துக்களும் இல்லாத நிலையில் ரு(ர்) விசர்க்கம் ஆகும்.

सअँ र् + स् कर्ता = (खरवसानयोर्विसर्जनीयः) = सअँ : + स् कर्ता

संपुंकानां सो वक्तव्यः

ஸம்புங்கானாம்ʼ ஸோ வக்தவ்ய​:

ஸம்புங்கானாம்ʼ = ஸம், பும், கான் ஆகியவற்றுக்கு ரு-வாக மாற்றப்பட்டு பின்னர் விசர்க்கமாகும் போது
ஸ: வக்தவ்ய​: = அது ஸ் என்கிற எழுத்தாக ஆகும்

இந்த வார்த்திகத்தில் ஸம், பும், கான் ஆகியவை முந்தைய விதிகளால் ரு-வாக மாற்றப்பட்டு பின்னர் விசர்க்கமாகும் போது அது ஸ் என்கிற எழுத்தாக ஆகும் என்கிறார் ஆசிரியர்.

ஆகையால்

सअँ + : + स् + कर्ता = सअँ + स् + स् + कर्ता = सँस्स्कर्ता

அல்லது

सअं + : + स् + कर्ता = सअं + स् + स् + कर्ता = संस्स्कर्ता

இந்நிலையில் समो वा लोपमेके என்கிற பாஷ்ய வசனத்தின் படி இதில் ஸ் என்கிற எழுத்து இருமுறை இருப்பதில் ஒன்று நீக்கப் படலாம்.

ஆகையால் सँस्कर्ता அல்லது संस्कर्ता என்று ஆகும்.


९४ पुमः खय्यम्परे॥ | ८ | ३ | ६॥

अम्परे खयि पुमो रुः। पुंस्कोकिलः, पुंस्कोकिलः॥

94 பும​: க²ய்யம்பரே|| | 8 | 3 | 6||

அம்பரே க²யி புமோ ரு​:| பும்ʼஸ்கோகில​:, பும்ʼஸ்கோகில​:||

அம் பரே க²யி = அம் பிரத்யாஹார எழுத்துக்கு முன்பாக க²ய் பிரத்யாஹார எழுத்துக்கள் இருந்தால்
புமோ ரு​: = பும் உபசர்க்கத்துடன் சேரும் போது ம் என்பதற்கு ரு ஆதேசம் ஆகும்.

பும் உபசர்க்கத்தை சேர்க்கும் போது, க²ய் பிரத்யாஹார எழுத்தில் துவங்கும் சொல், அந்த க²ய் பிரத்யாஹார எழுத்தையும் தொடர்ந்து அம் பிரத்யஹார எழுத்து இருக்கும் போது, பும் என்பதில் உள்ள ம் என்பதற்கு பதிலாக ரு(ர்) ஆதேசம் ஆகும்.

உதாரணம்:

पुम् + कोकिल: => पुम् + क् ओ किल: => (पुमः खय्यम्परे) => पु र् + क् ओ किल: => (अनुनासिकात्परो ऽनुस्वारः) => पुं र् + क् ओ किल: => (खरवसानयोर्विसर्जनीयः) => पुं : + क् ओ किल: => (संपुंकानां सो वक्तव्यः) => पुं स् + क् ओ किल: => पुंस्कोकिल:


९५ नश्छव्यप्रशान्॥ | ८ | ३ | ७॥

अम्परे छवि नान्तस्य पदस्यरुः॑ न तु प्रशान्शब्दस्य॥

95 நஶ்ச²வ்யப்ரஸா²ன்|| | 8 | 3 | 7||

அம்பரே ச²வி நாந்தஸ்ய பத³ஸ்ய ரு​: ஸ்யாத் | ந து ப்ரஸா²ன் ஶப்³த³ஸ்ய||

அம் பரே ச²வி = ச²வ் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து அம் பிரத்யாஹார எழுத்து உள்ள போது
ந அந்தஸ்ய பத³ஸ்ய = ந-காரத்தில் முடியும் சொல்லுக்கு
ரு​: ஸ்யாத் = ரு ஆதேசம் ஆகலாம்
ந து ப்ரஸா²ன் ஶப்³த³ஸ்ய = ப்ரஸா²ன் என்கிற சொல்லைத் தவிர

ச²வ் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து அம் பிரத்யாஹார எழுத்து உள்ள சொல்லுக்கு முன், ந-காரத்தில் முடியும் சொல் இருந்தால், அந்த ந-காரத்துக்கு ரு(ர்) ஆதேசம் ஆகும். இவ்வாறு நிகழ்வது ப்ரஸா²ன் என்கிற சொல்லுக்கு மட்டும் தடை செய்யப் பட்டுள்ளது.

உதாரணம்:

चक्रिन् + त्रायस्व => चक्रि न् + त् र् आयस्व => (अनुनासिकात् परोऽनुस्वारः) => चक्रिं र् + त् र् आयस्व = (खरवसानयोर्विसर्जनीयः) = चक्रिं : + त् र् आयस्व

இனி தொடர்ச்சியாக அடுத்த விதியைப் பார்க்க வேண்டும்.


९६ विसर्जनीयस्य सः॥ | ८ | ३ | ३४॥

खरि विसर्जनीयस्य सः स्यात् । चक्रिंस्त्रायस्व, चक्रिंस्त्रायस्व। अप्रशान् किम् ? प्रशान्तनोति। पदस्येति किम् ? हन्ति॥

96 விஸர்ஜனீயஸ்ய ஸ​:|| | 8 | 3 | 34||

க²ரி விஸர்ஜனீயஸ்ய ஸ​: ஸ்யாத்| சக்ரிம்ʼஸ்த்ராயஸ்வ, சக்ரிம்ʼஸ்த்ராயஸ்வ| அப்ரஸா²ன் கிம் ? ப்ரஸா²ந்தனோதி| பத³ஸ்யேதி கிம் ? ஹந்தி||

க²ரி = க²ர் பிரத்யாஹார எழுத்து தொடர்கையில்
விஸர்ஜனீயஸ்ய ஸ​: ஸ்யாத் = விஸர்க்கத்துக்கு பதிலாக ஸ் என்கிற எழுத்து இடம்பெறும்

சொல்லின் இறுதியில் விசர்க்கம் இருந்து அடுத்த சொல் க²ர் பிரத்யாஹார எழுத்துடன் துவங்கும் போது, அந்த விசர்க்கம் ஸ் என்று மாறும்.

உதாரணம்:
चक्रिं : + त् र् आयस्व => चक्रिं स् + त् र् आयस्व = चक्रिंस्त्रायस्व |

அப்ரஸா²ன் கிம் ?
ப்ரஸா²ன் என்பதை மட்டும் ஏன் தவிர்க்க வேண்டும்?
प्रशान् + तनोति = प्रशान्तनोति
இவ்வாறு மாறுதல் அடையாமல் இருப்பதால் அதை மட்டும் தவிர்க்கப் பட்டது.

பத³ஸ்யேதி கிம் ?
பதஸ்ய என்று பதத்தில் மட்டும் ஏன் சொல்ல வேண்டும்?
हन् + ति = हन्ति |
ஹந் என்பது பதம் அல்ல (வேற்றுமை உருபோ அல்லது வினை உருபுகளோ சேர்க்கப் படாதது), ஆகையால் மாற்றம் அடைவதில்லை.


९७ नॄन् पे॥ | ८ | ३ | १०॥

नॄनित्यस्य रुर्वा पकारे परे ॥

97 ந்ரூʼன் பே|| | 8 | 3 | 10||

ந்ரூʼனித்யஸ்ய ருர்வா பகாரே பரே||

ந்ருந் இதி = ந்ருந் என்பதற்கு பதிலாக
அஸ்ய ரு: ஸ்யாத் வா = ரு ஆதேசம் ஆகலாம்
பகாரே பரே = ப் தொடர்கையில்

ந்ருந் என்பதற்கு பதிலாக ரு ஆதேசம் ஆகலாம், ப-காரம் தொடர்ந்து இருக்கும் போது.

உதாரணம்:

नृन् + पाहि => नृन् + प् + आहि => (अनुनासिकात् परोऽनुस्वारः) => नृं + र् + प् + आहि => ( खरवसानयोर्विसर्जनीयः) => नृं: + प् + आहि

இந்நிலையில் தொடர்ந்து அடுத்த சூத்திரத்தைப் பிரயோகிக்க வேண்டும்.


९८ कुप्वोः एक एपौ च॥ | ८ | ३ | ३७॥

कवर्गे पवर्गे च परे विसर्गस्य (:)क (:)पौ स्तः, चाद्विसर्गः। नॄं पाहि, नॄं: पाहि, नॄं: पाहि। नॄन् पाहि॥

98 குப்வோ​: ஏக ஏபௌ ச|| | 8 | 3 | 37||

கவர்கே³ பவர்கே³ ச பரே விஸர்க³ஸ்ய (:)க (:)பௌ ஸ்த​:, சாத்³விஸர்க³​:| ந்ரூம்ʼʼ பாஹி, ந்ரூம்ʼʼ​: பாஹி, ந்ரூம்ʼʼ​: பாஹி| ந்ரூʼன் பாஹி||

கவர்கே³ பவர்கே³ ச பரே = கவர்க்கம் மற்றும் பவர்க்க எழுத்து தொடரும் போது
விஸர்க³ஸ்ய = விசர்க்கத்துக்கு பதிலாக (:)க (:)பௌ ஸ்த​: = அரை விசர்க்கம் க, மற்றும் பவர்க்கத்துக்கு முன்பாக அமையும்

சாத்³விஸர்க³​: = விசர்க்கம் மாற்றம் அடையாது

ஜிஹ்வாமுலியம் எனப்படும் அரை விசர்க்க குறி க-காரத்துக்கு முன் இணைந்தும் என்றும், உபத்மானிய என்னும் அரை விசர்க்க குறி ப-காரத்துக்கு முன் இணைந்தும் விசர்க்கத்துக்கு பதிலாக அமையும்.

இதனால்

नृं: + पाहि = नृं(:)पाहि


९९ तस्य परमाम्रेडितम्॥ | ८ | १ | २॥

द्विरुक्तस्य परमाम्रेडितम् स्यात्॥

99 தஸ்ய பரமாம்ரேடி³தம்|| | 8 | 1 | 2||

த்³விருக்தஸ்ய பரமாம்ரேடி³தம் ஸ்யாத்||

த்³விருக்தஸ்ய = இரு முறை கூறப்பட்ட சொல்லில்
பரம் ஆம்ரேடி³தம் ஸ்யாத் = இரண்டாம் முறை உள்ள சொல் ஆம்ரேடி³தம் ஆகும்

ஒரே சொல் இருமுறை வரும் போது, இரண்டாம் முறை உள்ள சொல்லை ஆம்ரேடி³தம் என்று அழைக்கப் படுகிறது.


१०० कानाम्रेडिते॥ | ८ | ३ | १२॥

कान्नकारस्य रुः स्यादाम्रेडिते। कांस्कान्, कांस्कान्॥

100 கானாம்ரேடி³தே|| | 8 | 3 | 12||

காந்நகாரஸ்ய ரு​: ஸ்யாதா³ம்ரேடி³தே| காம்ʼஸ்கான், காம்ʼஸ்கான்||

காந் நகாரஸ்ய = காந் என்ற சொல்லில் உள்ள நகாரம்
ரு​: ஸ்யாத் = ரு ஆகும்
ஆம்ரேடி³தே = ஆம்ரேடி³தம் தொடரும் போது

காந் காந் என்று இரு முறை வரும் போது, முதல் முறை உள்ள சொல்லில் உள்ள நகாரம் ரு(ர்) ஆகும்.

कान् कान् = का र् + कान् (अनुनासिकात्परो ऽनुस्वारः) = कां र् + कान् = (खरवसानयोर्विसर्जनीयः) = कां : + कान् = (संपुंकानां सो वक्तव्यः) = कां स् + कान् = कांस्कान्


१०१ छे च॥ | ६ | १ | ७३॥

ह्रस्वस्य छे तुक्। शिवच्छाया॥

101 சே² ச|| | 6 | 1 | 73||

ஹ்ரஸ்வஸ்ய சே² பரே துக் ஆகம: ஸ்யாத் | ஸி²வச்சா²யா||

ஹ்ரஸ்வஸ்ய = சொல்லில் இறுதியில் உள்ள ஹ்ரஸ்வ எழுத்துக்கு
சே² பரே = ச² தொடர்கையில்
துக் ஆகம: ஸ்யாத் = துக் ஆகமம் ஆகும்

ஒரு சொல்லில் முடியும் ஹ்ரஸ்வ எழுத்துக்கு, அதனைத் தொடர்ந்து ச² இருக்கும் போது, துக் ஆகமம் ஆகும்.

உதாரணம்:

शिव + छाया = शिव् अ + छ् + आया = (तुक्) = शिव् अ + त् + छ् + आया = ( झलां जशोऽन्ते) = शिव् अ + द् + छ् + आया = (स्तोः श्चुना श्चुः) = शिव् अ + ज् + छ् + आया = (खरि च) = शिव् अ + च् + छ् + आया = शिवच्छाया |


१०२ पदान्ताद्वा॥ | ६ | १ | ७९॥

दीर्घात् पदान्तात् छे परे तुग्वा। लक्ष्मीच्छाया, लक्ष्मी छाया॥

102 பதா³ந்தாத்³வா|| | 6 | 1 | 79||

தீ³ர்கா⁴த் பதா³ந்தாத் சே² பரே துக்³வா ஸ்யாத்| லக்ஷ்மீச்சா²யா, லக்ஷ்மீ சா²யா||

தீ³ர்கா⁴த் பதா³ந்தாத் = சொல்லின் இறுதியில் உள்ள நெடிலைத் தொடர்ந்து
சே² பரே = ச²-காரம் தொடர்ந்து இருக்கும் நிலையில்
துக்³வா ஸ்யாத் = துக் ஆகமம் ஆகலாம்.

நெடிலுடன் முடியும் ஒரு சொல்லைத் தொடர்ந்து, ச²-காரத்தில் துவங்கும் அடுத்த சொல் இருக்கும் நிலையில், அந்த நெடிலுக்கு துக் ஆகமம் ஆகலாம்.

உதாரணம்:

लक्ष्मी छाया = लक्ष् म् ई + छ् आ या => लक्ष् म् ई + त् + छ् आ या (स्तोः श्चुना श्चुः) => लक्ष् म् ई + ज् + छ् आ या = (खरि च) = लक्ष् म् ई + च् + छ् आ या = लक्ष्मीच्छाया

விகல்பமாக விதிக்கப் பட்டிருப்பதால் இந்த சந்தியின் இன்னொரு ரூபம் लक्ष्मीछाया என்றே இருக்கும்.

इति हल्सन्धिप्रकरणं

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)