ஹல் ஸந்தி⁴ ப்ரகரணம் – 2

७३ झरो झरि सवर्णे॥ | ८ | ४ | ६५॥

हलः परस्य झरो वा लोपः सवर्णे झरि॥

73 ஜ²ரோ ஜ²ரி ஸவர்ணே|| | 8 | 4 | 65||

ஹல​: பரஸ்ய ஜ²ரோ வா லோப​: ஸவர்ணே ஜ²ரி||

ஹல​: பரஸ்ய = ஹல் பிரத்யாஹார எழுத்தை அடுத்து
ஜ²ர: = ஜ²ர் பிரத்யாஹார எழுத்து இருந்தால்
லோப​: வா ஸ்யாத் = லோபம் ஆகலாம்
ஸவர்ணே ஜ²ரி = ஸவர்ண ஜர் எழுத்து தொடர்ந்து வரும் பொது

ஓரு மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் ஜ²ர் பிரத்யாஹார எழுத்தை அடுத்து அதன் ஸவர்ண எழுத்தாக ஜ²ர் பிரத்யாஹார எழுத்து இருந்தால் அந்த ஜ²ர் பிரத்யாஹார எழுத்து லோபம் ஆகலாம் (மறையலாம்) – அல்லது மறையாமலும் இருக்கலாம்.

ஒரு ஜ²ர் பிரத்யாஹார எழுத்து எப்போது லோபம் ஆகும் என்றால் (1) ஒரு மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் போதும் (2) ஜ²ர் பிரத்யாஹார எழுத்து முன்னால் இருக்கும் போதும்,

उ द् + थ् + थ् आनम् = उ द् + थ् आनम्
उ द् + थ् + त् अम्भनम् = उ द् + त् अम्भनम्

என்று லோபம் ஆகலாம்.

அல்லது லோபம் ஆகாமல் இருந்தால்

उ द् + थ् + थ् आनम्
उ द् + थ् + त् अम्भनम्

என்றே தொடரும்.


७४ खरि च॥ | ८ | ४ | ५५॥

खरि परे झलां चरः स्यु: । इत्युदो दस्य तः। उत्थानम्। उत्तम्भनम्॥

74 க²ரி ச|| | 8 | 4 | 55||

க²ரி பரே ஜ²லாம்ʼ சர​: ஸ்யு:| இத்யுதோ³ த³ஸ்ய த​:| உத்தா²னம்| உத்தம்ப⁴னம்||

ஜ²லாம் = ஜ²ல் பிரத்யாஹார எழுத்து
க²ரி பரே = க²ர் பிரத்யாஹார எழுத்தின் முன் வரும் போது
சர​: ஸ்யு: = சர் பிரத்யாஹார எழுத்து ஆதேசம் ஆகும்

ஜ²ல் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து, க²ர் பிரத்யாஹார எழுத்து வரும் போது, அது சர் பிரத்யாஹார எழுத்து ஆதேசம் ஆகும்.

இதி உதோ³ த³ஸ்ய த​: – இதனால் த³-காரம் த-காரம் ஆகிறது.

उ द् + थ् + थ् आनम् = उ त् + थ् + थ् आनम् = उत्थ्थानम्
उ द् + थ् + त् अम्भनम् = उ त् + थ् + त् अम्भनम् = उत्थ्तम्भनम्


७५ झयो हो ऽन्यतरस्याम्॥ | ८ | ४ | ६२॥

झयः परस्य हस्य वा पूर्वसवर्णः। नादस्य घोषस्य संवारस्य महाप्राणस्य तादृशो वर्गचतुर्थः। वाग्घरिः, वाघरिः॥

75 ஜ²யோ ஹோ (அ)ந்யதரஸ்யாம் || | 8 | 4 | 62||

ஜ²ய​: பரஸ்ய ஹஸ்ய வா பூர்வஸவர்ண​:| நாத³ஸ்ய கோ⁴ஷஸ்ய ஸம்ʼவாரஸ்ய மஹாப்ராணஸ்ய தாத்³ருʼஸோ² வர்க³சதுர்த²​:| வாக்³க⁴ரி​:, வாக⁴ரி​:||

ஜ²ய​: பரஸ்ய = ஜய் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து வரும்
ஹஸ்ய = ஹ-விற்கு
பூர்வஸவர்ண​: வா = ஜய் பிரத்யாஹார எழுத்தின் சவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகலாம்.

ஜய் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து வரும் ஹ-விற்கு ஜய் பிரத்யாஹார எழுத்தின் சவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகலாம்.

உதாரணமாக, वाक् + हरि = वा क् + ह अरि: (ஜ²லாம்ʼ ஜஸோ²(அ)ந்தே) => वा ग् + ह् अरि:.

இதில் वाग् என்ற சொல்லில் வரும் ग् என்கிற எழுத்து இந்த ஜ²யோ ஹோ (அ)ந்யதரஸ்யாம் என்ற சூத்திரம் பிரயோகம் ஆகலாம். ஜ-வும், ஹ-வும் சவர்ண ஒலிகள் ஆகையால் (அகுஹவிசர்ஜநீயானாம் கண்ட:) ஹ-வின் இடத்திற்கு அதற்கு முன் உள்ள க³ வின் சவர்ண எழுத்து வரலாம்.

நாத³ஸ்ய கோ⁴ஷஸ்ய ஸம்ʼவாரஸ்ய மஹாப்ராணஸ்ய தாத்³ருʼஸோ² வர்க³சதுர்த²​: – குணக்ருத ஸாத்ருஸ்யத்தினால் மெய்யெழுத்து வரிசையில் நான்காவதாக அமையும் எழுத்துக்கள் (घ, झ, ढ, ध, भ) ஆகிய எழுத்துக்கள் ஆதேசம் ஆகலாம். இதில் घ மட்டுமே ஹ-காரத்திற்கு சவர்ண ஒலி ஆகும்.

ஆகையால்
वा ग् + ह् अरि: = वा ग् + घ् अरि: = वाग्घरि:

என்று ஆகும். இது விகல்பமாகையால் இந்த சூத்திரம் பிரயோகிக்கப் படாமல் இருந்தால் वाग्हरि: என்றே அமையும்.

மேலும் சில உதாரணங்கள்:

अच् + हीनम् = (ஜ²லாம்ʼ ஜஸோ²(அ)ந்தே) = अ ज् + ह् + ईनम्

இந்நிலையில் ஜ²யோ ஹோ (அ)ந்யதரஸ்யாம் சூத்திரம் பிரயோகிக்கப் பட்டால்
अ ज् + झ् + ईनम् = अज्झीनम्
என்று ஆகிறது.


७६ शश्छो ऽटि॥ | ८ | ४ | ६३॥

पदान्ताज्झयः परस्य शस्य छो वाटि। तद् शिव इत्यत्र दस्य श्चुत्वेन जकारे कृते खरि चेति जकारस्य चकारः। तच्छिवः, तच्शिवः। (छत्वममीति वाच्यम्) तच्छ्लोकेन॥

76 ஸ²ஸ்²சோ² (அ)டி|| | 8 | 4 | 63||

பதாந்தாஜ்ஜ²ய​: பரஸ்ய ஸ²ஸ்ய சோ² வாடி| தத்³ ஸி²வ இத்யத்ர த³ஸ்ய ஸ்²சுத்வேன ஜகாரே க்ருʼதே க²ரி சேதி ஜகாரஸ்ய சகார​:| தச்சி²வ​:, தச்ஸி²வ​:| (ச²த்வமமீதி வாச்யம்) தச்ச்²லோகேன||

பதாந்த = சொல்லின் இறுதியில் வரும்
ஜ²ய​: பரஸ்ய = ஜ²ய் பிரத்யாஹார எழுத்துக்களைத் தொடர்ந்து
ஸ²ஸ்ய = ஸ²காரத்திற்கு
அடி = அட் பிரத்யாஹார எழுத்து தொடர்ந்திருக்கையில்
ச²: வா = ச² ஆதேசம் ஆகலாம்

சொல்லின் இறுதியில் வரும் ஜ²ய் பிரத்யாஹார எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் ஸ²காரத்திற்கு அட் பிரத்யாஹார எழுத்து தொடர்ந்திருக்கையில் ச² ஆதேசம் ஆகலாம்.

உதாரணம்:
तद् + शिव: = (ஸ்தோ​: ஶ்சுனா ஶ்சு​:​) = त ज् + श् इव:
त ज् + श् इव: = (க²ரி ச) = त च् + श् इव:

இந்நிலையில் ஜ²ய் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து ஸ² இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அட் பிரத்யாஹார எழுத்து இ இருக்கிறது. ஆகவே ஸ²ஸ்²சோ² (அ)டி சூத்திரம் பிரயோகம் ஆகி கீழ்கண்டவாறு ஆகிறது.

त च् + श् इव: = तच् + छ् इव = तच्छिव:

விகல்பத்தால் இச்சூத்திரம் பிரயோகம் ஆகாமல் இருந்தால் तच्शिव: என்றே ஆகும்.

छत्वममीति वाच्यम् | तच्छ्लोकेन | (छत्वम् + अमि + इति + वाच्यम्)

ச²த்வமமீதி வாச்யம் | தச்ச்²லோகேன | (ச²த்வம் + அமி + இதி + வாச்யம்)

ச²த்வம் = ஸ²-காரத்திற்கு பதிலாக ச²-காரம் வருவது ச²த்வம்
அமி = அம் பிரத்யாஹார எழுத்துக்கள் தொடரும் நிலையில்
இதி வாச்யம் = என்று கூறுகிறது காத்யாயனரின் வார்த்திகம்

மூல சூத்திரத்தில் அடி என்று அட் பிரத்யாஹாரத்தத்துடன் பாணிநி நிறுத்தி விட்டார். இதனை அம் பிரத்யாஹாரம் வரை வார்த்திகக்காரர் விரித்துக் கூறுகிறார்.

உதாரணம்:
तद् + श्लोकेन => तद् + श् ल् ओकेन => (स्तोः श्चुना श्चुः) = त ज् + श् ल् ओकेन => (खरि च) => त च् + श् ल् ओकेन
இதில் ஜ²ய் பிரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து ஸ²-காரம் அதனைத் தொடர்ந்து அம் பிரத்யாஹார எழுத்தான ல-காரம் இருக்கிறது. இந்நிலையில் இந்த வாச்யத்தின் படி ஸ²-காரம் ச²-காரமாக மாறுகிறது. – இவ்வாறு தச்ச்²லோகேன என்று ஆகிறது.


७७ मो ऽनुस्वारः॥ | ८ | ३ | २३॥

मान्तस्य पदस्यानुस्वारो हलि। हरिं वन्दे॥

77 மோ (அ)நுஸ்வார​:|| | 8 | 3 | 23||

மாந்தஸ்ய பத³ஸ்யானுஸ்வாரோ ஹலி| ஹரிம்ʼ வந்தே³||

மாந்தஸ்ய பத³ஸ்ய = சொல்லின் இறுதியில் உள்ள ம் என்ற எழுத்துக்கு
அனுஸ்வார: = அனுஸ்வரம் ஆகும்
ஹலி = ஹல் பிரத்யாஹார எழுத்துக்கள் (மெய்யெழுத்துக்கள்) தொடர்கையில்

சொல்லின் இறுதியில் ம் இருந்து, அதனைத் தொடர்ந்து முதலில் மெய்யெழுத்து உடைய சொல் தொடர்ந்தால், அந்த ம் என்ற எழுத்துக்கு பதிலாக அனுஸ்வார குறி இடவேண்டும்.

உதாரணம்:
हरिम् वन्दे => हर् इ म् + व् अन्दे
இதில் ம்-ஐத் தொடர்ந்து வ் என்கிற மெய்யெழுத்து வருவதால் இங்கு ம்-க்கு பதிலாக அனுச்வாரம் வரும்.

हर् इ म् + व् अन्दे = हरिंवन्दे


७८ नश्चापदान्तस्य झलि॥ | ८ | ३ | २४॥

नस्य मस्य चापदान्तस्य झल्यनुस्वारः। यशांसि। आक्रंस्यते। झलि किम् ? मन्यते॥

78 நஸ்²சாபதா³ந்தஸ்ய ஜ²லி|| | 8 | 3 | 24||

நஸ்ய மஸ்ய சாபதா³ந்தஸ்ய ஜ²ல்யனுஸ்வார​:| யஸா²ம்ʼஸி| ஆக்ரம்ʼஸ்யதே| ஜ²லி கிம் ? மந்யதே||

நஸ்ய மஸ்ய ச அபதா³ந்தஸ்ய = ந மற்றும் ம-காரம் சொல்லின் இடையில்
ஜ²லி = ஜ²ல் பிரத்யாஹார எழுத்து தொடர்கையில்
அனுஸ்வார​: = அனுஸ்வாரம் ஆகும்

வேற்றுமை உருபு அல்லது வினைச்சொல் என முழுமை அடையாத சொல்லின் இடைநிலையில் இருக்கும் ந் மற்றும் ம் ஆகிய எழுத்துக்கள் ஜ²ல் பிரத்யாஹார எழுத்துக்கள் தொடரும் நிலையிலும் அனுஸ்வாரம் ஆகும்.

உதாரணம்:
यशान् + सि = यश् आ न् + स् इ = यशांसि
आक्र म् + स् यते = आक्रंस्यते

ஜ²லி என்று ஏன் சொல்லவேண்டும் என்று ஒரு சந்தேகம் எழலாம் என்று ஆசிரியரே கேட்டுக் கொண்டு பதில் சொல்கிறார்.

மந்யதே என்ற சொல்லில் மந் + யதே என்பதில் யகாரம் ஜ²ல் பிரத்யஹாரத்தில் அடங்காது – அதனால் அது விலக்கப் படுகிறது..


७९ अनुस्वारस्य ययि परसवर्णः॥ | ८ | ४ | ५८॥

स्पष्टम्। शान्तः॥

79 அனுஸ்வாரஸ்ய யயி பரஸவர்ண​:|| | 8 | 4 | 58||

ஸ்பஷ்டம்| ஸா²ந்த​:||

அனுஸ்வாரஸ்ய = அனுஸ்வரத்துக்கு
யயி = யய் ப்ரத்யாஹார எழுத்து தொடர்கையில்
பரஸவர்ண​: = தொடர்ந்து வரும் எழுத்தின் சவர்ண ஒலி ஆதேசம் ஆகும்

அனுஸ்வரத்தை அடுத்து யய் ப்ரத்யாஹார எழுத்து தொடர்கையில் அதனைத் தொடர்ந்து வரும் எழுத்தின் சவர்ண ஒலி அனுஸ்வாரத்துக்கு பதிலாக ஆதேசம் ஆகும்.

யய் என்ற பிரத்யாஹாரத்தில் ய, வ, ர, ல ஆகிய எழுத்துக்களுடன் இதர க, ச, ட, த, ப ஆகிய எழுத்து வரிசைகளும் அடக்கம். இவற்றில் ர-காரத்துக்கு அனுஸ்வாரம் இல்லை. ய, வ, ல ஆகியவற்றுக்கு அனுஸ்வர ஒலி உண்டு என்றாலும் அவை பிரயோகத்தில் இல்லை. ஆகவே க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்களுக்கே அனுஸ்வாரத்துக்கு ஏற்ற சவர்ண அனுஸ்வார ஒலி உண்டு.

உதாரணம்:
शाम् + त: = शान्त:

இந்த சூத்திரம் அபதாந்த (சொல்லின் நடுவில், அல்லது சொல் ஆகாத நிலையில்) நிலையில் ஏற்படும் சந்தி பற்றிக் கூறுகிறது. அடுத்த சூத்திரம் பதாந்த நிலையிலும் ஏற்படும் சந்தி பற்றிக் கூறுகிறது.


८० वा पदान्तस्य॥ | ८ | ४ | ५९॥

पदान्तस्याऽनुस्वारस्य ययि परे परसवर्णो वा स्यात् | त्वङ्करोषि, त्वं करोषि॥

80 வா பதா³ந்தஸ்ய|| | 8 | 4 | 59||

பதா³ந்தஸ்யா(அ)நுஸ்வாரஸ்ய யயி பரே பரஸவர்ணோ வா ஸ்யாத் | த்வங்கரோஷி, த்வம்ʼ கரோஷி||

பதா³ந்தஸ்ய அநுஸ்வாரஸ்ய = சொல்லின் இறுதியில் உள்ள அனுஸ்வரத்துக்கு
யயி பரே = யய் பிரத்யஹார எழுத்து தொடர்கையில்
பரஸவர்ணோ வா ஸ்யாத் = பரத்தில் உள்ள எழுத்தின் ஸவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகும்

சொல்லின் இறுதியில் உள்ள அனுஸ்வரத்தைத் தொடர்ந்து யய் பிரத்யஹார எழுத்து தொடர்கையில் பரத்தில் உள்ள எழுத்தின் ஸவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகும்.
யய் பிரத்யாஹாரத்தில் ர- எழுத்துக்கு அனுஸ்வர ஒலி இல்லை.

உதாரணம்:
त्वम् + करोषि = (मोऽनुस्वार:) => त्व अं + क् अरोषि => (वा पदान्तस्य) => त्व अङ् + करोषि = त्वङ्करोषि

இந்த சூத்திரம் விகல்பத்துடன் பிரயோகம் ஆவதால், இது பிரயோகம் ஆகாமல் இருக்கும் நிலையில் त्वं करोषि என்றே அமையும்.


८१ मो राजि समः क्वौ॥ | ८ | ३ | २५॥

क्विबन्ते राजतौ परे समो मस्य म एव स्यात्। सम्राट्॥

81 மோ ராஜி ஸம​: க்வௌ|| | 8 | 3 | 25||

க்விப³ந்தே ராஜதௌ பரே ஸமோ மஸ்ய ம ஏவ ஸ்யாத்| ஸம்ராட்||

க்விப³ந்தே ராஜதௌ பரே = க்விப் பிரத்யயத்தை கொண்ட ராஜ் தாதுவைத் தொடர்ந்தால்
ஸமோ மஸ்ய ம ஏவ ஸ்யாத் = ஸம் என்பதில் உள்ள ம் என்பது அனுஸ்வாரம் ஆகாது

க்விப் பிரத்யயம் ராஜ் தாதுவுடன் சேரும் பொது அது ராட் என்று ஆகும். இந்நிலையில் அது ஸம் என்கிற உபசர்க்கத்துடன் சேரும் போது, ஸம் என்கிற உபசர்க்கத்தில் உள்ள ம் என்பது அப்படியே இருக்கும்
இது இதற்கு முன் பார்த்த மோ (அ)நுஸ்வார​: சூத்திரத்திற்கு அபவாதம் ஆகும்.


८२ हे मपरे वा॥ | ८ | ३ | २६॥

मपरे हकारे परे मस्य मो वा। किम् ह्मलयति, किं ह्मलयति। (यवलपरे यवला वा)/ किंय्ह्यः, किं ह्यः। किंव्ह्वलयति, किं ह्वलयति। किंल् ह्लादयति, किं ह्लादयति॥

82 ஹே மபரே வா|| | 8 | 3 | 26||

மபரே ஹகாரே பரே மஸ்ய மோ வா ஸ்யாத்| கிம் ஹ்மலயதி, கிம்ʼ ஹ்மலயதி| (யவலபரே யவலா வா)/ கிம்ʼய்ஹ்ய​:, கிம்ʼ ஹ்ய​:| கிம்ʼவ்ஹ்வலயதி, கிம்ʼ ஹ்வலயதி| கிம்ʼல் ஹ்லாத³யதி, கிம்ʼ ஹ்லாத³யதி||

மபரே = மகாரத்தினைத் தொடர்ந்து
ஹகாரே பரே = ஹ-காரம் வரும் போது
மஸ்ய மோ வா ஸ்யாத் = ம-காரம் அனுஸ்வரம் ஆகாமல் இருக்கலாம்

ம் என்பதில் முடியும் சொல்லைத் தொடர்ந்து ஹ-வில் ஆரம்பிக்கும் சொல் வரும் போது, அங்கே சந்தி நிகழ்ந்தால் ம் என்பதை அனுஸ்வரம் ஆக்கக் கூடாது.

உதாரணம்:

किम् ह्मलयति = किं ह्मलयति

यवलपरे यवला वा

யவலபரே யவலா வா

யவலபரே = ய, வ, ல ஆகிய எழுத்துக்களைத் தொடர்ந்து
யவலா வா = ய, வ, ல ஆகியவற்றின் அனுநாசிக வடிவங்கள் வரலாம் (ஹ தொடர்ந்திருக்கையில்)

ஹே மபரே வா – சூத்திரத்தில் மகாரத்துடன் நின்றதை நீட்டித்து ய, வ, ல ஆகியவற்றுக்கும் கூறுகிறார் ஆசிரியர். இதில் ய, வ, ல ஆகியவறைத் தொடர்ந்து ஹ வருகையில், இவை அனுநாசிக வடிவம் அதாவது यँ वँ लँ என்று ஆகும்.

உதாரணம்:

किम् + ह्य: = किय्ँह्य: / किं ह्य:
किम् + हवलयति = किव्ँहवलयति / किं हवलयति

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)