ஹல் ஸந்தி⁴ ப்ரகரணம்

६२ स्तोः श्चुना श्चुः | ८ | ४ | ४० ॥

सकारतवर्गयोः शकारचवर्गाभ्यां योगे शकारचवर्गौ स्तः। रामश्शेते। रामश्चिनोति। सच्चित्। शार्ङ्गिञ्जय॥

62 ஸ்தோ​: ஶ்சுனா ஶ்சு​:​: | 8 | 4 | 40||

ஸகாரதவர்க³யோ​: ஶகாரசவர்கா³ப்⁴யாம்ʼ யோகே³ ஶகாரசவர்கௌ³ ஸ்த​::| ராமஶ்ஶேதே | ராமஶ்சினோதி | ஸச்சித் | ஶார்ங்கி³ஞ்ஜய ||

ஸகாரதவர்க³யோ​: – ஸ-காரம், மற்றும் த-வர்க்க எழுத்துக்களுக்கு
ஶகாரசவர்கா³ப்⁴யாம்ʼ – ஶகாரம் மற்றும் ச-வர்க்கங்களுடன்
யோகே³ – சேர்க்கையில்
ஶகாரசவர்கௌ³ ஸ்த​: – ஶகாரம் மற்றும் சவர்க்கம் ஆதேசம் ஆகும்.

ஶ மற்றும் ச-வர்க்கத்தினைக் கொண்ட எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் ஸ காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு (त, थ, द, ध) பதிலாக ஶகாரம் மற்றும் ச-வர்க்கம் (च, छ, ज, झ) ஆதேசம் ஆகும். இதற்கு முன்புள்ள அச் சந்தி ப்ரகரணத்தில் பார்த்த சூத்திரங்களில் மாறும் எழுத்து பூர்வ, பர ஏகாதேசங்களாக இருந்தன – அதாவது சந்தியில் சொல்லின் முன்புள்ள எழுத்தோ, இறுதியில் உள்ள எழுத்தோ, இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாகவோ மட்டுமே மாறி வந்தது. ஆனால் இந்த சூத்திரப்படி ஸ மற்றும் த வர்க்கம் சொல்லின் இறுதியில் இருந்தாலும் துவக்கத்தில் இருந்தாலும் அதன் மீதே மாற்றம் நிகழும்.

இதில் ஶகாரம் மற்றும் ச-வர்க்கத்தின் எந்த எழுத்துக்கள் ஸ காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு பதிலாக வரும் என்று எப்படி அறிவது? இந்த இடத்தில் யதா²ஸங்க்²யமனுதே³ஸ² ஸமாநாம்‌ (1.3.10) என்ற சூத்திரத்தை நினைவு கூற வேண்டும். அதன் படி

ஸ = ஶ,
த = ச,
த² = ச²
த³ = ஜ
த⁴ = ஜ²
ந = ஞ

என்றும் மாறுகிறது. அதாவது பல்லினால் ஒலிக்கும் ஸ,த-வர்க்க ஒலிகள், மேலண்ணத்தில் தொட்டு ஒலிக்கும் ஶ-கார, ச-கார ஒலிகளாக மாறுகின்றன. இதில் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் ஸ்தாநிக்கும் (மாற்றம் நிகழும் எழுத்து) ஆதேசத்துக்கும் மட்டுமே பொருந்தும். சந்தி ஏற்படும் (சம்பந்தத்துக்கு) அல்ல. அதாவது ஸ-காரத்தைத் தொடர்ந்து ஶ காரம் இருக்கும் நிலையில் தான் இந்த சூத்திரம் பொருந்தும் என்பது தவறு. ஸ-கார அல்லது த-வர்க்கத்தைத் தொடர்ந்து ஶ அல்லது ச-வர்க்க எழுத்துக்கள் எது இருந்தாலும் ஸ அல்லது த-வர்க்க எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறே மாறும்.

உதாரணம்:
राम: + शेते = रामस् + शेते = रामश्शेते |
ராம: + ஶேதே = ராமஸ் + ஶேதே = ராமஶ்ஶேதே (ராமஸ் என்கிற ரூபம் தான் ராம: (ராமஹ) என்று ஆகிறது)

रामस् + चिनोति = रामश्चिनोति।
ராமஸ் + சினோதி = ராமஶ்சினோதி

सत् + चित् = सच्चित्
ஸத் + சித் = ஸச்சித்

शार्ङ्गिन् + जय: = शार्ङ्गिञ्जय
ஶார்ங்கி³ந் + ஜய: = (ந் => ஞ்) ஶார்ங்கி³ஞ்ஜய

याच् + ना = याच्ज्ञा
யாச் + நா = யாச்ஞா

இவ்வாறு ஸ-கார, த-வர்க்கங்கள் மாறுதல் அடைவதை ‘ஶ்சுத்வம்’ என்று அழைக்கப் படுகிறது. ஒரு எழுத்து ஶ்சுத்வம் அடைந்தது என்றால் இந்த சூத்திரம் பிரயோகிக்கப் பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.


६३ शात् | ८ | ४ | ४४ ॥

शात्परस्य तवर्गस्य चुत्वं न स्यात् । विश्नः। प्रश्नः॥

63 ஶாத் | 8 | 4 | 44 ||

ஶாத்பரஸ்ய தவர்க³ஸ்ய சுத்வம்ʼ ந ஸ்யாத் | விஶ்ந​:: | ப்ரஶ்ந​:||

ஶாத்பரஸ்ய = ஶ-காரத்திற்குப் பின்
தவர்க³ஸ்ய = த-வர்க்கத்திற்கு
சுத்வம்ʼ ந ஸ்யாத் = சத்வம் ஆகாது.

ஶகாரத்தினைத் தொடர்ந்து வரும் த-வர்க்கத்திற்கு சுத்வம் ஆகாது. இது முந்தைய சூத்திரத்தை இந்த நிலையில் நிஷேதம் செய்கிறது – மறுக்கிறது.

உதாரணம்:
விஶ் + ந: = விஶ்ந: (विश् + न: = विश्न:)
ப்ரஶ் + ந: = ப்ரஶ்ந: (प्रश् + न: = प्रश्न:)


६४ ष्टुना ष्टु | ८ | ४ | ४१ |

स्तो ष्टुना योगे ष्टु स्यात्‌ । रामष्षष्ठ । रामष्टीकते । पेष्टा । तट्टीका । चक्रिण्ढौकसे ।।

64 ஷ்டுனா ஷ்டு | 8 | 4 | 41 |

ஸ்தோ ஷ்டுனா யோகே³ ஷ்டு ஸ்யாத்‌ | ராமஷ்ஷஷ்ட² | ராமஷ்டீகதே | பேஷ்டா | தட்டீகா | சக்ரிண்டௌ⁴கஸே ||

ஸ்தோ ஷ்டுனா யோகே³ = ஸ-கார, த-வர்க்கம் – ஷ-கார, ட-வர்க்கத்துடன் இணைந்து வரும்போது
ஷ்டு ஸ்யாத்‌ = ஷ்டுத்வம் அடையும்

ஷ மற்றும் ட-வர்க்கத்தினைக் கொண்ட எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் ஸ காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு (त, थ, द, ध) பதிலாக ஷகாரம் மற்றும் ட-வர்க்கம் (च, छ, ज, झ) ஆதேசம் ஆகும். (முதல் சூத்திரம் போலவே)

உதாரணம்:
रामस् + षष्ठ => रामष् + षष्ठ => रामष्षष्ठ
ராமஸ் + ஷஷ்ட² => ராமஷ் + ஷஷ்ட² = ராமஷ்ஷஷ்ட²

रामस् + टीकते = रामष्टीकते
ராமஸ் + டீகதே => ராமஷ் + டீகதே = ராமஷ்டீகதே

पेष् + ता = पेष्टा
பேஷ் + தா = பேஷ்டா (இதில் த-காரம் தொடர்ந்து வந்து ட-காரம் ஆகிறது)

तत् + टीका = तट्टीका
தத் + டீகா = தட்டீகா (த் என்பது ட் ஆகிறது)

चक्रिन् + ढौकसे = चक्रिण्ढौकसे
சக்ரிந் + டௌ⁴கஸே = சக்ரிண்டௌ⁴கஸே (ந-காரம் ண-காரம் ஆகிறது)


६५ न पदान्ताट्टोरनाम्‌ |८ | ४ | ४२॥

पदान्ताट्टवर्गात्परस्यानाम स्तो ष्टुर्न स्यात्‌ । षट् सन्त । षट् ते । पदान्तात्किम्‌ ? ईट्टे । टो किम्‌ ? सर्पिष्टमम्‌ । (अनाम्नवतिनगरीणामिति वाच्यम्‌) । षण्णवति । षण्णगर्य्य ।।

65 ந பதா³ந்தாட்டோரனாம்‌ | 8 | 4 | 42||

பதா³ந்தாத் டவர்கா³த் பரஸ்ய அனாம ஸ்தோ ஷ்டுர்ன ஸ்யாத்‌ | ஷட் ஸந்த | ஷட் தே | பதா³ந்தாத்கிம்‌ ? ஈட்டே | டோ கிம்‌ ? ஸர்பிஷ்டமம்‌ | (அனாம்னவதினக³ரீணாமிதி வாச்யம்‌) | ஷண்ணவதி | ஷண்ணக³ர்ய்ய ||

பதா³ந்தாத் டவர்கா³த் = சொல்லின் இறுதியில் உள்ள டவர்க்கத்திற்கு பின்
பரஸ்ய ஸ்தோ: = தொடர்ந்து வரும் ஸ-கார, த-வர்க்கத்துக்கு
அனாம = ‘னாம்’ எண்ணும் ஓட்டுச் சொல்லைத் தவிர்த்து (ஆறாம் வேற்றுமை பன்மை)
ஷ்டு ந ஸ்யாத்‌ = ஷ்டுத்வம் அடையாது

சொல்லின் இறுதியில் உள்ள ட-வர்க்கத்தினைத் தொடர்ந்து வரும் ஸ-காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு, ஷ காரம் மற்றும் தவர்க்கம் ஆதேசம் ஆவது தடுக்கப் படுகிறது. “னாம்” என்னும் ஓட்டு தொடர்ந்து வரும் போது மட்டும் இந்த மாற்றம் நிகழும்.

உதாரணம்:
षट् + सन्त = षट् सन्त
ஷட் + ஸந்த = ஷட் ஸந்த (மாற்றம் ஏதும் இல்லை)

பதாந்தம் என்று ஏன் சொல்ல வேண்டும் (பதா³ந்தாத்கிம்‌ ?) – அதற்கு ஒரு உதாரணம்:

ईट् + ते = ईट्टे
ஈட் + தே = (ஷ்டுநா ஷ்டு:) = ஈட்டே

ட-வர்க்கம் என்று ஏன் சொல்ல வேண்டும்? (டோ கிம்‌ ?)

सर्पिष् + तमम् = सर्पिष्टमम्‌
ஸர்பிஷ் + தமம் = ஸர்பிஷ்டமம்

वा॰ अनाम्नवतिनगरीणामिति

அனாம்னவதினக³ரீணாமிதி வாச்யம்

நாம், நவதி, நகரி ஆகிய (த-வர்க்கத்து ந-காரத்தில் துவங்கும்) சொற்கள் ட-வர்க்கத்தை தொடர்ந்து வந்தால் ஷ-கார, ட-வர்க்க எழுத்துக்கள் ஆதேசம் ஆவது கட்டாயம் ஆகும் என்று வார்த்திகம் கூறுகிறது.

உதாரணம்:
ஷட் + நவதி = ஷண்ணவதி
ஷட் + நகர்ய்ய = ஷண்ணக³ர்ய்ய


६६ तो षि | ८ | ४ | ४३ ||

तवर्गस्य षकारे परे न ष्टुत्वम्‌ । सन्षष्ठ ।। .

66 தோ ஷி | 8 | 4 | 43 ||

தவர்க³ஸ்ய ஷகாரே பரே ந ஷ்டுத்வம்‌ | ஸந்ஷஷ்ட² ||

தவர்க³ஸ்ய = த-வர்க்கத்துக்கு
ஷகாரே பரே = ஷ-காரத்தின் முன்னால் இருக்கும் பொது
ந ஷ்டுத்வம்‌ = ஷ்டுத்வம் ஆகாது.

த-வர்க்கத்தைத் தொடர்ந்து ஷ-காரம் வரும் நிலையில் ஷ்டுத்வம் நிகழாது,.

உதாரணம்:
सन् + षष्ठ = सन्षष्ठ
ஸந் + ஷஷ்ட²: = ஸந்ஷஷ்ட²:


६७ झलां जशोऽन्ते | ८ | २ | ३९ ||

पदान्ते झलां जश स्यु । वागीश ।।.

67 ஜ²லாம்ʼ ஜஸோ²(அ)ந்தே | 8 | 2 | 39 ||

பதா³ந்தே ஜ²லாம்ʼ ஜஸ² ஸ்யு | வாகீ³ஸ² ||

பதா³ந்தே = சொல்லின் இறுதியில்
ஜ²லாம்ʼ = ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு பதிலாக
ஜஸ²: ஸ்யு = ஜஸ்² பிரத்யாஹார எழுத்துக்கள் ஆதேசம் ஆகும்.

ஜ²ல் பிரத்யாஹார எழுத்து சொல்லின் இறுதியில் இருந்தால் அது ஜஸ் பிரத்யாஹார எழுத்தாக மாறும்.

உதாரணம்:
वाक् + ईश: = वागीश:
வாக் + ஈஸ²: = வாகீ³ஸ²

चित् + आनन्द: = चिदानन्द:
சித் + ஆனந்த³: = சிதா³னந்த³:


६८ यरो ऽनुनासिके ऽनुनासिको वा॥ | ८ | ४ | ४५॥

यरः पदान्तस्यानुनासिके परे ऽनुनासिको वा स्यात्। एतन्मुरारिः, एतद् मुरारिः। (प्रत्यये भाषायां नित्यम्)। तन्मात्रम्। चिन्मयम्॥

68 யரோ (அ)நுனாஸிகே (அ)நுனாஸிகோ வா|| | 8 | 4 | 45||

யர​: பதா³ந்தஸ்யானுனாஸிகே பரே (அ)நுனாஸிகோ வா ஸ்யாத்| ஏதன்முராரி​:, ஏதத்³ முராரி​:| (ப்ரத்யயே பா⁴ஷாயாம்ʼ நித்யம்)| தன்மாத்ரம்| சின்மயம்||

பதா³ந்தஸ்ய யர: = சொல்லின் இறுதியில் உள்ள யர் பிரத்யாஹார எழுத்து
அனுனாஸிகே பரே = அனுநாசிக எழுத்து தொடரும் போது
அநுனாஸிகோ வா ஸ்யாத் = அனுநாசிக எழுத்து ஆதேசம் ஆகலாம்.

“யர்” பிரத்யாஹார எழுத்துக்கள் (ஹ-வைத் தவிர்த்து மற்ற மெய்யெழுத்துக்கள்) ஒரு சொல்லின் இறுதியில் வருகையில் அதனைத் தொடர்ந்து அநுநாசிக (மூக்கொலிகள்) இருந்தால், விகல்பத்துடன் அனுநாசிக எழுத்தாக அந்த மெய்யெழுத்துக்கு மாறலாம். இது பதாந்த யர் எழுத்துக்களுக்குத் தான் பொருந்தும். அபதாந்த எழுத்துக்களுக்கு (அதாவது வேற்றுமை உருபோ, வினைச் சொல்லாகவோ இல்லாத சொற்களுக்கு) பொருந்தாது.

உதாரணம்:
एतद् + मुरारिः = एतन्मुरारिः
ஏதத்³ + முராரி​: = ஏதன்முராரி​:

वा॰ प्रत्यये भाषायां नित्यम्

ப்ரத்யயே பா⁴ஷாயாம்ʼ நித்யம்

அதே சமயம் பிரத்யயங்கள் சொல்லுடன் சேரும் போது எப்போதும் (விகல்பம் இன்றி) அநுநாசிக மாற்றம் ஏற்படும் என்று இந்த வார்த்திகம் கூறுகிறது.

ப்ரத்யயே = பிரத்யயம் தொடர்ந்து வரும் போது
பாஷாயாம்’ = பொது வழக்கில் உள்ள மொழியில்
நித்யம் = கட்டாயம் ஆகும்

உதாரணம்:
तत् + मात्रम् = तन्मात्रम्
தத் + மாத்ரம் = தன்மாத்ரம்

चित् + मयम् = चिन्मयम्
சித் + மயம் = சின்மயம்


६९ तोर्लि | ८ | ४ | ६०॥

तवर्गस्य लकारे परे परसवर्णः। तवर्गस्य लकारे परे परसवर्णः। तल्लयः। विद्वांल्लिखति। नस्यानुनासिको लः।

69 தோர்லி | 8 | 4 | 60||

தவர்க³ஸ்ய லகாரே பரே பரஸவர்ண​:| தல்லய​:| வித்³வாம்ʼல்லிக²தி| நஸ்யானுனாஸிகோ ல​:|

தவர்க³ஸ்ய = த-வர்க்கத்துக்கு
லகாரே பரே = லகார எழுத்து தொடர்ந்து வரும் போது
பரஸவர்ண​:: == அடுத்து வரும் எழுத்தின் (அதாவது ல-காரம்) சவர்ண எழுத்து ஆதேசம் ஆகும்

தவர்க்கத்தைத் தொடர்ந்து ல-காரம் வரும் பொது, அந்த த-வர்க்க எழுத்துக்கு பதிலாக ல-காரம் ஆதேசம் ஆகும்.

உதாரணம்:
तत् + लय: = तल्लयः
தத் + லய: = தல்லய​:

विद्वान् + लिखति = विद्वाँल्लिखति
வித்³வான் + லிக²தி = வித்³வாம்ʼல்லிக²தி


७० उदः स्थास्तम्भोः पूर्वस्य॥ | ८ | ४ | ६१ ॥

उदः परयोः स्थास्तम्भोः पूर्वसवर्णः॥

70 உத³​: ஸ்தா²ஸ்தம்போ⁴​: பூர்வஸ்ய|| | 8 | 4 | 61||

உத³​: பரயோ​: ஸ்தா²ஸ்தம்போ⁴​: பூர்வஸவர்ண​: ||

உத³​: பரயோ​: = உத் என்கிற உபசர்க்கத்தினைத் தொடர்ந்து வரும்
ஸ்தா²ஸ்தம்போ⁴​: = ஸ்தா² மற்றும் ஸ்தம்ப்⁴ தாதுக்களுக்கு
பூர்வஸவர்ண​: = முன்னுள்ள எழுத்தின் சவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகும்.

உத் என்கிற உபசர்க்கத்தினைத் தொடர்ந்து வரும் ஸ்தா² மற்றும் ஸ்தம்ப்⁴ தாதுக்களுக்கு முன்னுள்ள எழுத்தின் சவர்ண ஒலி எழுத்து ஆதேசம் ஆகும். இதில் உத் உபசர்க்கத்திற்கு எந்த பக்கம் (முன் அல்லது பின்) ஸ்தா² மற்றும் ஸ்தம்ப்⁴ தாதுக்களை சேர்க்கவேண்டும் என்று குழப்பம் எழலாம். அதனை அடுத்த சூத்திரம் தீர்த்து வைக்கிறது.


७१ तस्मादित्युत्तरस्य॥ | १ | १ | ६७॥

पञ्चमीनिर्देशेन क्रियमाणं कार्यं वर्णान्तरेणाव्यवहितस्य परस्य ज्ञेयम्॥

71 தஸ்மாதி³த்யுத்தரஸ்ய|| | 1 | 1 | 67||

பஞ்சமீனிர்தே³ஸே²ன க்ரியமாணம்ʼ கார்யம்ʼ வர்ணாந்தரேணாவ்யவஹிதஸ்ய பரஸ்ய ஜ்ஞேயம்||

பஞ்சமீ நிர்தே³ஸே²ன = ஐந்தாம் வேற்றுமையால் குறிப்பிடப் படும்
க்ரியமாணம்ʼ கார்யம்ʼ = நிகழும் (சந்தி) காரியம்
வர்ணாந்தரேண அவ்யவஹிதஸ்ய = இடைவெளி அற்ற இரு எழுத்துக்களில்
பரஸ்ய ஜ்ஞேயம் = பின்னால் வரும் எழுத்தின் மீது என்று அறிய வேண்டும்

இது ஒரு பரிபாஷா சூத்திரம். தஸ்மாத் என்று ஐந்தாம் வேற்றுமையால் குறிப்பிடப் படும் சொல்லினைத் தொடர்ந்து இடைவெளி இன்றி வரும் சொல்லின் முதல் எழுத்தின் மீதே சந்தி காரியம் நடைபெறவேண்டும் என்று கூறுகிறது. இந்த சூத்திரத்தினை வைத்து தற்கு முந்தைய சூத்திரத்துக்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்…

उद् + स्थानम्
उद् + स्तम्भनम्

இதில் स्थानम् மற்றும் स्तम्भनम् ஆகியவற்றின் மீது சந்தி காரியம் நிகழ வேண்டும். இந்நிலையில் அலோ(அ)ந்த்யஸ்ய சூத்திரத்தின் படி உத³: என்று ஆறாம் வேற்றுமையில் குறிக்கப் படும் சொல்லின் முடிவில் உள்ள எழுத்தின் சவர்ண ஒலி எழுத்தே சந்தியில் அமையவேண்டும் என்று ஆகும். ஆனால் இப்போது அடுத்து வரும் சூத்திரம் அலோ(அ)ந்த்யஸ்ய சூத்திரத்தை மறுதலிக்கிறது.


७२ आदेः परस्य॥ | १ | १ | ५४॥

परस्य यद्विहितं तत्तस्यादेर्बोध्यम्। इति सस्य थः॥

72 ஆதே³​: பரஸ்ய|| | 1 | 1 | 54||

பரஸ்ய யத்³விஹிதம்ʼ தத்தஸ்யாதே³ர்போ³த்⁴யம்| இதி ஸஸ்ய த²​:||
பரஸ்ய யத்³விஹிதம்ʼ = அடுத்த எழுத்துக்கு என்று சொல்லப் படுவது
தத் தஸ்ய ஆதே³ போ³த்⁴யம் = அதற்கு அடுத்த சொல்லின் முதல் எழுத்தில் என்று அறியவேண்டும்

ஐந்தாம் வேற்றுமையில் குறிப்பிடப் படும் சொல்லைத் தொடர்ந்து அடுத்த சொல்லின் மீது சந்தி காரியம் நிகழ வேண்டும் என்று கூறும் போது, அதன் அர்த்தம் அடுத்து தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்தின் மீதே அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்று அறிய வேண்டும்.

उद् + स्थानम् = उ द् + स् थ् आनम्
उद् + स्तम्भनम् = उ द् + स् त् अम्भनम्

இதன் மீது உத³​: ஸ்தா²ஸ்தம்போ⁴​: பூர்வஸ்ய என்கிற சூத்திரம் பிரயோகிக்கப் படும் போது, ஐந்தாம் வேற்றுமையில் குறிக்கப் பட்ட உத்-ஐத் தொடர்ந்து வரும் முதல் எழுத்தான ஸ் மீது செயல் படுகிறது. அப்போது த³-காரத்தின் ஸவர்ண எழுத்தாக ஸ-காரம் மாற வேண்டும். இந்நிலையில் त, थ, द, ध, न ஆகிய எழுத்துக்களில் எந்த எழுத்தைத் தேர்ந்தெடுப்பது?

இந்நிலையில் ஸ்தாநே அந்தரதம: சூத்திரத்தின் படி குணக்ருத ஸாத்ருஸ்யத்தின் படி த(थ) எழுத்தே ஸவர்ண எழுத்தாகும்.

இவ்வாறு,

उ द् + स् थ् आनम् = उ द् + थ् + थ् आनम्
उ द् + स् त् अम्भनम् = उ द् + थ् + त् + अम्भनम्

2 Comments ஹல் ஸந்தி⁴ ப்ரகரணம்

  1. vasanthasyamalam

    பிரத்யாஹரத்தைப் பற்றி குறிப்பிடும் போது அந்த ப்ரத்யாஹாரத்திலுள்ள் எழுத்துக்களை bracket டில் ஒரு முறை குறிப்பிட்டால் வாசகர்களுக்கு நினைவு வரும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டால தான் படிப்பவர்களுக்கு உடனே நினைவும் வந்து விடும். புரிந்து கொள்ள வசதியாகவும் இருக்கும் .

  2. Lakshmi

    உங்கள் வலைத்தளம் மிக உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி. விசர்க சந்தி மற்றும் சுவாதி சந்தி பற்றிய பாடங்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)