அஜந்த புல்லிங்க³ ப்ரகரணம் – 2

१५१ सर्वादीनि सर्वनामानि | १ | १ | २७ ||

सर्व विश्व उभ उभय डतर डतम अन्य अन्यतर इतर त्वत्‌ त्व नेम सम सिम । पूर्वपरावरदक्षिणोत्तरापराधराणि व्यवस्थायामसंज्ञायाम्‌ ।
स्वमज्ञातिधनाख्यायाम्‌ । अन्तरं बहिर्योगोपसंव्यानयो । त्यद् तद् यद् एतद् इदम्‌ अदस्‌ एक द्वि युष्मद् अस्मद् भवतु किम्‌ ।।

151 ஸர்வாதீ³னி ஸர்வனாமானி | 1 | 1 | 27 ||

ஸர்வ விஶ்வ உப⁴ உப⁴ய ட³தர ட³தம அன்ய அன்யதர இதர த்வத்‌ த்வ நேம ஸம ஸிம | பூர்வபராவரத³க்ஷிணோத்தராபராத⁴ராணி வ்யவஸ்தா²யாமஸஞ்ஜ்ஞாயாம்‌ |
ஸ்வமஜ்ஞாதித⁴னாக்²யாயாம்‌ | அந்தரம்ʼ ப³ஹிர்யோகோ³பஸம்ʼவ்யானயோ | த்யத்³ தத்³ யத்³ ஏதத்³ இத³ம்‌ அத³ஸ்‌ ஏக த்³வி யுஷ்மத்³ அஸ்மத்³ ப⁴வது கிம்‌ ||

ஸர்வ விஶ்வ உப⁴ உப⁴ய ட³தர ட³தம அன்ய அன்யதர இதர த்வத்‌ த்வ நேம ஸம ஸிம = ஸர்வ என்று துவங்கும் இந்த தொகுப்பு ஸர்வநாம என்ற பெயர் பெறும்
பூர்வ அபர அவர த³க்ஷிண உத்தர அபர அத⁴ராணி= காலத்தையும் இடத்தையும் குறிக்கும் சொற்களும் ஸர்வநாம என்ற பெயர் பெறும்
ஸ்வமஜ்ஞாதித⁴னாக்²யாயாம்‌ = ஸ்வ என்கிற சொல் உறவினர், செல்வம் ஆகியவற்றைக் குறிக்காத போது
அந்தரம்ʼ ப³ஹிர்யோகோ³பஸம்ʼவ்யானயோ = அந்தர என்கிற சொல் ‘வெளியே உள்ளே’ என்று இடத்தையும், உள்ளாடையையும் குறிக்கும் போது
த்யத்³ தத்³ யத்³ ஏதத்³ இத³ம்‌ அத³ஸ்‌ ஏக த்³வி யுஷ்மத்³ அஸ்மத்³ ப⁴வது கிம்‌ = ஆகியவையும் ஸர்வநாமங்கள் ஆகும்.

ஸர்வ (எல்லாம்) என்ற தொகுப்பில் உள்ள சொற்கள் (ஸர்வ விஶ்வ உப⁴ உப⁴ய ட³தர ட³தம அன்ய அன்யதர இதர த்வத்‌ த்வ நேம ஸம ஸிம) ஆகியவை ஸர்வநாமங்கள் ஆகும். அதே போல (பூர்வ, பர அவர த³க்ஷிண உத்தர அபர அத⁴ர) ஆகிய சொற்களும் திசைகளை அல்லது இடத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப் படும் போது ஸர்வநாமங்கள். ஸ்வ என்ற சொல்லை சொந்த உறவினர், அல்லது தனக்கு சொந்தமான செல்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் போது ஸர்வநாமம் ஆகும். அந்தர என்ற சொல் வெளியே என்பதன் தொடர்பாக பயன்படுத்தப் படும் போது ஸர்வநாமன் ஆகும். அதே போல, த்யத்³ தத்³ யத்³ ஏதத்³ இத³ம்‌ அத³ஸ்‌ ஏக த்³வி யுஷ்மத்³ அஸ்மத்³ ப⁴வது கிம் ஆகிய சொற்களும் ஸர்வநாமன் ஆகும்.


१५२ जस शी | ७ | १ | १७ ||

अदन्तात्सर्वनाम्नो जस शी स्यात्‌ । अनेकाल्त्वात्सर्वादेश । सर्वे ।।

152 ஜஸ ஶீ | 7 | 1 | 17 ||

அத³ந்தாத்ஸர்வனாம்னோ ஜஸ ஶீ ஸ்யாத்‌ | அனேகால்த்வாத்ஸர்வாதே³ஶ | ஸர்வே ||

அத³ந்தாத் = அ-காரத்தில் முடியும்
ஸர்வனாம்ன: = ஸர்வநாமத்துக்கு
ஜஸ ஶீ ஸ்யாத் = ஜஸ் என்பது ஶீ ஆக மாறும்

அ-காரத்தில் முடியும் ஸர்வ நாமத்துக்கு முதல் இரண்டு வசநங்கள் ராம போன்ற அ-காராந்த பும்லிங்க சொற்களைப் போன்றதே. அ-காரத்தில் முடியும் ஸர்வ நாமத்துக்கு முதல் வேற்றுமை பன்மைக்கான ப்ரத்யயம் (ப்ரதமா விபக்தி பஹுவசநம்) ஜஸ் ஆனது ஶீ என்று ஆகும்.

உதாரணம்
सर्व + जस्
(१५२ जस शी) सर्व + शी
(१४४ स्थाऩिवदादेशोऽनल्विधौ) सर्व + श् + ई
(४५ अनेकाल्‌ शित्सर्वस्य, १४४ स्थानिवदादेशोऽनल्विधौ, १३६ लशक्वतद्धिते) सर्व + ई = सर्वे

ஸர்வ + ஜஸ்
(152 ஜஸ ஶீ) ஸர்வ + ஶீ – இங்கே ஸு ஔ ஜஸ் ஆகியவற்றில் இல்லாததால் ஶீ ப்ரத்யயமாக கருத இடமில்லை.
(144 ஸ்தா²னிவதா³தே³ஸோ²(அ)நல்விதௌ⁴) ஸர்வ + ஶ் + ஈ = ஸ்தாநி போன்று ஆவதால் ஶ் என்பது ப்ரத்யயம் ஆகும்
(45 அநேகால்‌ ஸி²த்ஸர்வஸ்ய, 144 ஸ்தா²னிவதா³தே³ஸோ²(அ)நல்விதௌ⁴, 136 லஶக்வதத்³தி⁴தே) ஸர்வ + ஈ = ஸர்வே

முதலில் ஶீ என்பது ப்ரத்யய: (3.1.1) என்ற அதிகார சூத்திரத்தின் வரம்புக்குள் வராததால், லஶக்வதத்³தி⁴தே (1.3.8) சூத்திரத்தை பயன்படுத்த இயலாது. ஆனால் அதற்கு பதிலாக அநேகால்‌ ஸி²த்ஸர்வஸ்ய (1.3.8) என்கிற சூத்திரம் வந்து, ஜஸ் முழுவதையும் ஶீ பதிலியாக வரப்பெறுகிறது. இந்நிலையில் ஸ்தா²னிவதா³தே³ஸோ²(அ)நல்விதௌ⁴ (1.1.56) சூத்திரத்தின் படி, ஶீ என்பது ஸ்தாநியாகி விடுவதால் ப்ரத்யயம் ஆன நிலையில் லஶக்வதத்³தி⁴தே (1.3.8) சூத்திரம் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனால் ஶ் என்பது இத் ஆகி லோபம் ஆவதால், ஸர்வ + ஈ என்று ஆகி ஸர்வே என்கிற ரூபம் கிடைக்கிறது.

ஸர்வ: ஸர்வௌ ஸர்வே


१५३ सर्वनाम्न स्मै | ७ | १ | १४ ||

अत: सर्वनाम्नो ङे स्मै । सर्वस्मै ।।

153 ஸர்வநாம்ந ஸ்மை | 7 | 1 | 14 ||

அத: ஸர்வநாம்நோ ஙே ஸ்மை | ஸர்வஸ்மை ||

அத: = அகாரத்தில் முடியும்
ஸர்வநாம்ந: = ஸர்வநாமத்துக்கு
ஙே = ஙே ஆனது
ஸ்மை = ஸ்மை ஆகும்

அகாரத்தில் முடியும் ப்ராதிபதிகத்தைக் கொண்ட, ஸர்வநாமத்துக்கு, ஙே எனப்படும் நான்காம் வேற்றுமை முதல் வசன உருபு ஸ்மை ஆகும். இது ஆர்ஷப் பிரயோகம் எனப்படும் ரிஷிகளின் பயன்பாடு. ரிஷிகள் ஸர்வ சப்தத்தில் நான்காம் வேற்றுமை ஏக வசனத்தில் இவ்வாறே பயன்படுத்தி உள்ளனர்.

सर्व + ङे = सर्वस्मै
ஸர்வ + ஙே = ஸர்வஸ்மை


१५४ ङसिङ्‌यो स्मात्स्मिनौ ७ | १ | १५ ||

अत सर्वनाम्न एतयोरेतौ स्त । सर्वस्मात्‌ ।। .

154 ஙஸிங்‌யோ ஸ்மாத்ஸ்மிநௌ | 7 | 1 | 15 ||

அத: ஸர்வநாம்ந ஏதயோரேதௌ ஸ்த | ஸர்வஸ்மாத்‌ ||

அத: = அ-காரத்தைத் தொடர்ந்து
ஸர்வநாம்ந = ஸர்வநாமத்துக்கு
ஏதயோரேதௌ ஸ்த = ஙஸி மற்றும் ஙி ஆகியவற்றுக்கு பதிலாக முறையே ஸ்மாத் மற்றும் ஸ்மின் ஆகியவை வரும்

சர்வநாம விபக்தி சொற்களில், ஸுபந்த ப்ரத்யயங்களான ஙஸி மற்றும் ஙி ஆகியவை அ-காரத்தைத் தொடர்ந்து வரும்போது, அவற்றுக்கு பதிலாக முறையே ஸ்மாத் மற்றும் ஸ்மின் ஆகியவை ஆதேசமாக வரும். இந்நிலையில் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஸர்வ + ஙஸி என்பது ஸர்வ + ஸ்மாத் என்று ஆகி ஸர்வஸ்மாத் என்கிற ரூபம் கிடைக்கிறது.
ஐந்தாம் வேற்றுமையில் இருமை மற்றும் பன்மை, ஆறாம் வேற்றுமையில் ஒருமை மற்றும் இருமை, ராம சப்தத்தைப் போன்றே அமைகின்றது. ஆறாம் வேற்றுமையில் பன்மையானது ஸர்வ + ஆம் என்ற நிலையில் அடுத்த சூத்திரம் பார்க்க வேண்டும்.


१५५ आमि सर्वनाम्न सुट् | ७ | १ | ५२ ||

अवर्णान्तात्परस्य सर्वनाम्नो विहितस्याम सुडागम । एत्वषत्वे । सर्वेषाम्‌ । सर्वस्मिन्‌ । शेषं रामवत्‌ । एवं विश्वादयोऽप्यदन्ता ।। उभशब्दो नित्यं द्विवचनान्त । उभौ २ । उभाभ्याम्‌ ३ । उभयो २ । तस्येह पाठोऽकजर्थ । उभयशब्दस्य द्विवचनं नास्ति । उभय । उभये । उभयम्‌ । उभयान्‌ । उभयेन । उभयै । उभयस्मै । उभयेभ्य । उभयस्मात्‌ । उभयेभ्य । उभयस्य । उभयेषाम्‌ । उभयस्मिन्‌ । उभयेषु ।। डतरडतमौ प्रत्ययौ, प्रत्ययग्रहणे तदन्तग्रहणमिति तदन्ता ग्राह्या ।। नेम इत्यर्धे ।। सम सर्वपर्यायस्तुल्यपर्यायस्तु न, यथासंख्यमनुदेश समानामिति ज्ञापकात्‌ ।।

155 ஆமி ஸர்வனாம்ன ஸுட் | 7 | 1 | 52 ||

அவர்ணாந்தாத்பரஸ்ய ஸர்வனாம்னோ விஹிதஸ்யாம ஸுடா³க³ம | ஏத்வஷத்வே | ஸர்வேஷாம்‌ | ஸர்வஸ்மின்‌ | ஶேஷம்ʼ ராமவத்‌ | ஏவம்ʼ விஶ்வாத³யோ(அ)ப்யத³ந்தா || உப⁴ஶப்³தோ³ நித்யம்ʼ த்³விவசனாந்த | உபௌ⁴ 2 | உபா⁴ப்⁴யாம்‌ 3 | உப⁴யோ 2 | தஸ்யேஹ பாடோ²(அ)கஜர்த² | உப⁴யஶப்³த³ஸ்ய த்³விவசனம்ʼ நாஸ்தி | உப⁴ய | உப⁴யே | உப⁴யம்‌ | உப⁴யான்‌ | உப⁴யேன | உப⁴யை | உப⁴யஸ்மை | உப⁴யேப்⁴ய | உப⁴யஸ்மாத்‌ | உப⁴யேப்⁴ய | உப⁴யஸ்ய | உப⁴யேஷாம்‌ | உப⁴யஸ்மின்‌ | உப⁴யேஷு || ட³தரட³தமௌ ப்ரத்யயௌ, ப்ரத்யயக்³ரஹணே தத³ந்தக்³ரஹணமிதி தத³ந்தா க்³ராஹ்யா || நேம இத்யர்தே⁴ || ஸம ஸர்வபர்யாயஸ்துல்யபர்யாயஸ்து ந, யதா²ஸங்க்²யமனுதே³ஶ ஸமானாமிதி ஜ்ஞாபகாத்‌ ||

அவர்ணாந்தாத் = அ-வர்ணத்தில் முடியும்
பரஸ்ய ஸர்வநாம்ந: = தொடர்ந்து வரும் ஸர்வநாமத்திற்கு
விஹிதஸ்ய ஆம: = விதிக்கப்பட்டுள்ள ஆம்-மிற்கு
ஸுடா³க³ம = ஸுட் ஆகமம் ஆகும்

இங்கே ஸுட் என்பது ஆகமம் ஆகிறது.

ஸர்வ + ஆம்
ஸர்வ + ஸுட் + ஆம்
(84 ஆத்³யந்தௌ டகிதௌ) ஸர்வ + ஸ + ஆம் = ஸர்வ + ஸாம்

இந்நிலையில் இந்த பரிபாஷா கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.

यदागम: तद्गुणिभूता: तद्ग्रहणेन गृह्यन्ते |
யதா³க³ம: தத்³கு³ணிபூ⁴தா: தத்³க்³ரஹணேன க்³ருʼஹ்யந்தே |

இதன் அர்த்தம்: எதற்கு ஆகமம் சேர்க்கப் படுகிறதோ, அது அந்த ஆகமம் சேர்ந்த நிலையையே குறிக்கும்.

இங்கே ஆம் என்பது ஜல் அல்ல, ஆனால் ஸாம் என்பது ஜல் பிரத்யாஹாரத்தில் வரும்.

இதனால், ப³ஹுவசனே ஜ²ல்யேத் (7.3.103) சூத்திரம் பிரயோகம் ஆகும் நிலை ஏற்படுகிறது.

(145 ப³ஹுவசனே ஜ²ல்யேத் ) ஸர்வ் + ஏ + ஸாம் = ஸர்வே + ஸாம்
(150 ஆதே³ஶப்ரத்யயயோ​:) ஸர்வே + ஷாம் = ஸர்வேஷாம் (மூர்த⁴ன்ய எழுத்தான ஷ காரம் ஸ-காரத்திற்கு பதிலாக அமைகிறது).

அடுத்து ஸர்வ சப்தத்தின் ஏழாம் வேற்றுமை உருபு ஸர்வஸ்மின் என்று ஆகிறது. ஶேஷம்ʼ ராமவத் என்று மீதம் உள்ளவை ராம சப்தத்தைப் போன்று அமைகிறது.

இவ்வாறு ஸர்வ சப்தம் முற்றியது.

ஏவம்ʼ விஶ்வாத³யோ(அ)ப்யத³ந்தா = இதே போலவே அ-காரத்தில் முடியும் விஶ்வ முதலிய சப்தங்களும் அமையும்
உப⁴ஶப்³தோ³ நித்யம்ʼ த்³விவசனாந்த = உப⁴ சப்தத்தில் எப்போதும் இருமை மட்டுமே

முதல் இரண்டு வேற்றுமைகள் உபௌ⁴. வேற்றுமை உருபுகள் மூன்றும் நான்கும் உபா⁴ப்⁴யாம்‌ என்று ஆகும். உப⁴யோ என்பது ஆறாம் ஏழாம் வேற்றுமையை குறிக்கும்.

உப⁴யஶப்³த³ஸ்ய த்³விவசனம்ʼ நாஸ்தி = உப⁴ய சப்தத்திற்கு இருமை இல்லை.
ட³தரட³தமௌ ப்ரத்யயௌ = ட³தர, ட³தம என்பவை ப்ரத்யயங்கள்
ப்ரத்யயக்³ரஹணே தத³ந்தக்³ரஹணமிதி தத³ந்தா க்³ராஹ்யா = ட³தர, ட³தம எதனுடன் சேர்க்கப் படுகிறதோ, அப்போது, இவற்றின் இறுதி சொற்களை (ட³தர, ட³தம வில் ட நீங்கி தர, தம ஆகியவை) சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு, எட்டு ஸர்வநாம சொற்கள் உருவாகின்றன, கதர (இரண்டில் எது), கதம (பலவற்றில் எது), யதர (இரண்டில் எது), யதம (பலவற்றில் எது), ததர (அந்த இரண்டில் ஒன்று), ததம (அவற்றில் ஒன்று), ஏகதர (இரண்டில் ஒன்று), ஏகதம (பலவற்றில் ஒன்று). இவை அனைத்துக்கும் ஸர்வ சப்தத்தைப் போன்றே வேற்றுமைகள் அமையும்.

அடுத்து அந்ய (வேறு/other), அந்யதர (வேறு/another), இதர (மற்ற), த்வத் (மற்ற), த்வ (மற்ற) ஆகிய சொற்களும் ஸர்வ சப்தத்தைப் போன்றவையே.

நேம இத்யர்தே⁴ = நேம என்ற சொல் பாதி என்ற அர்த்தத்தில் வரும்போது, ஸர்வநாமமாகக் கொண்டு, ஸர்வ சப்தத்தைப் போல வேற்றுமைகள் அமையும்.

ஸம ஸர்வபர்யாயஸ்துல்யபர்யாயஸ்து ந = ஸம என்ற சொல், எல்லாம் என்ற அர்த்தத்திலும் வரும், சமம் என்ற அர்த்தத்திலும் வரும். ‘எல்லாம்’ என்ற அர்த்தத்தில் வரும்போது, அது ஸர்வ சப்தத்தைப் போலவே வேற்றுமைகள் பெறும். யதா²ஸங்க்²யமனுதே³ஶ ஸமானாம் என்ற சூத்திரத்தில் சமம் என்ற அர்த்தத்தில் வருவதால் ஸமானாம் என்று வேற்றுமை பெற்றது, எல்லாம் என்ற அர்த்தத்தில் வந்திருந்தால், சமேஶாம் என்று ஆகி இருக்கும்.

ஸிம என்ற சொல்லும் எல்லாம் என்ற அர்த்தத்தை உடையது, இதுவும் ஸர்வ சப்தத்தைப் போன்றே வேற்றுமைகள் பெறும்.


१५६ पूर्वपरावरदक्षिणोत्तरापराधराणि व्यवस्थायामसंज्ञायाम्‌ १ | १ | ३४ ||

एतेषां व्यवस्थायामसंज्ञायां च सर्वनामसंज्ञा गणसूत्रात्सर्वत्र या प्राप्ता सा जसि वा स्यात्‌ । पूर्वे, पूर्वा । असंज्ञायां किम्‌ ? उत्तरा कुरव । स्वाभिधेयापेक्षावधिनियमो व्यवस्था । व्यवस्थायां किम्‌ ? दक्षिणा गाथका, कुशला इत्यर्थ ।।

156 பூர்வபராவரத³க்ஷிணோத்தராபராத⁴ராணி வ்யவஸ்தா²யாமஸஞ்ஜ்ஞாயாம்‌ 1 | 1 | 34 ||

ஏதேஷாம்ʼ வ்யவஸ்தா²யாமஸஞ்ஜ்ஞாயாம்ʼ ச ஸர்வனாமஸஞ்ஜ்ஞா க³ணஸூத்ராத்ஸர்வத்ர யா ப்ராப்தா ஸா ஜஸி வா ஸ்யாத்‌ | பூர்வே, பூர்வா | அஸஞ்ஜ்ஞாயாம்ʼ கிம்‌ ? உத்தரா: குரவ | ஸ்வாபி⁴தே⁴யாபேக்ஷாவதி⁴னியமோ வ்யவஸ்தா² | வ்யவஸ்தா²யாம்ʼ கிம்‌ ? த³க்ஷிணா கா³த²கா, குஶலா இத்யர்த² ||

ஏதேஷாம்ʼ = இவைகளுக்கு
வ்யவஸ்தா²யாம் அஸஞ்ஜ்ஞாயாம்ʼ = ஒன்றுடன் மற்றொன்றை தொடர்பு படுத்தும் நிலையிலும் , ஸஞ்ஜ்ஞா அல்லாத நிலையிலும்
ஸர்வனாமஸஞ்ஜ்ஞா = ஸர்வ ஸஞ்ஜ்ஞாவானது
க³ணஸூத்ராத் = கண சூத்திரத்தின் மூலமாக
ஸர்வத்ர யா ப்ராப்தா = பொதுவாக அடையப்பட்டது என்றாலும்
ஸா ஜஸி வா ஸ்யாத் = அதற்கு ஜஸ் தொடரும் போது ஸர்வனாமஸஞ்ஜ்ஞா ஆகலாம்

இந்த ஏழு சொற்கள், பூர்வ, பர, அவர, த³க்ஷிண, உத்தர, அபர, அத⁴ர ஆகியவை, கண சூத்திரத்தில் ஸர்வ நாம சப்தமாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஒன்றுடன் மற்றொன்றை தொடர்பு படுத்தும் நிலையிலும் , ஸஞ்ஜ்ஞா அல்லாத நிலையிலும் அவற்றுக்கு ஜஸ் சேர்க்கப் படலாம். இது விகல்பமாக வா என்று குறிப்பிட்டுள்ளதால் பூர்வா என்றும் பூர்வே என்று ரூபம் அமைக்கப் படலாம்.

அஸஞ்ஜ்ஞாயாம்ʼ கிம்‌ ? உத்தரா: குரவ:
ஸஞ்ஜ்ஞா அல்லாத நிலை என்று ஏன் சொல்ல வேண்டும். உதாரணமாக உத்தரா: குரவ என்று சொல்லும் இடத்தில், உத்தரா என்பது குரு என்னும் தேசத்தின் சிறப்பு பண்பாக அமைந்துள்ளது.

ஸ்வ அபி⁴தே⁴ய அபேக்ஷா அவதி⁴ நியம வ்யவஸ்தா²
வ்யவஸ்தா² என்பதற்கான விளக்கம் இது. எது சுட்டிக்காட்டப்படுகிறதோ, அதற்கு சம்பந்தமான பொருளை (தொடர்பு படுத்திக் கூறுவது) வ்யவஸ்தா² எனப்படும். அவதி⁴ என்பது காலத்திலும்/நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட இடம்.

வ்யவஸ்தா²யாம்ʼ கிம்‌ ?
வ்யவஸ்தை²யில் என்று ஏன் சொல்ல வேண்டும்?

த³க்ஷிணா கா³த²கா, குஶலா இத்யர்த² |
த³க்ஷிணா கா³த²கா என்ற வாக்கியத்தில் திறமை உள்ளவன் என்று சொல்லப் படுகிறது. இங்கே த³க்ஷிணா என்பது திசை அல்ல.


१५७ स्वमज्ञातिधनाख्यायाम्‌ १ | १ | ३५ ||

ज्ञातिधनान्यवाचिन स्वशब्दस्य प्राप्ता संज्ञा जसि वा । स्वे, स्वा; आत्मीया, आत्मान इति वा । ज्ञातिधनवाचिनस्तु, स्वा; ज्ञातयोऽर्था वा ।।

157 ஸ்வமஜ்ஞாதித⁴னாக்²யாயாம்‌ 1 | 1 | 35 ||

ஜ்ஞாதித⁴னான்யவாசின ஸ்வஶப்³த³ஸ்ய ப்ராப்தா ஸஞ்ஜ்ஞா ஜஸி வா | ஸ்வே, ஸ்வா; ஆத்மீயா, ஆத்மான இதி வா | ஜ்ஞாதித⁴னவாசினஸ்து, ஸ்வா; ஜ்ஞாதயோ(அ)ர்தா² வா ||

ஜ்ஞாதி த⁴ன அன்யவாசின: = சொந்தம் மற்றும் சொத்து என்ற பொருளில் அல்லாத
ஸ்வஶப்³த³ஸ்ய = ஸ்வ என்கிற சொல்லுக்கு
ப்ராப்தா ஸஞ்ஜ்ஞா = கொடுக்கப் பட்ட ஸஞ்ஜ்ஞா (ஸர்வநாம ஸஞ்ஜ்ஞா )
ஜஸி வா = ஜஸ் தொடருகையில் ஆகலாம்

ஸ்வ என்ற சொல், சொந்தம் மற்றும் சொத்து ஆகியவற்றைக் குறிக்காத போது, அதனைத் தொடர்ந்து ஜஸ் பிரத்யயம் சேரும்போது, ஸர்வநாமம் ஆகலாம். ஆகவே ஸர்வ சப்தத்தைப் போன்றே விபக்திகளைப் பெறும். அவ்வாறு இல்லாமல், சொந்தம் மற்றும் சொத்து ஆகியவற்றைக் குறிக்கும்போது, ராம சப்தத்தைப் போன்று அமையும்.


१५८ अन्तरं बहिर्योगोपसंव्यानयो १ | १ | ३६ ||

बाह्ये परिधानीये चार्थेऽन्तरशब्दस्य प्राप्ता संज्ञा जसि वा । अन्तरे, अन्तरा वा गृहा; बाह्या इत्यर्थ । अन्तरे, अन्तरा वा शाटका; परिधानीया इत्यर्थ ।।

158 அந்தரம்ʼ ப³ஹிர்யோகோ³பஸம்ʼவ்யானயோ 1 | 1 | 36 ||

பா³ஹ்யே பரிதா⁴னீயே சார்தே²(அ)ந்தரஶப்³த³ஸ்ய ப்ராப்தா ஸஞ்ஜ்ஞா ஜஸி வா | அந்தரே, அந்தரா வா க்³ருʼஹா; பா³ஹ்யா இத்யர்த² | அந்தரே, அந்தரா வா ஶாடகா; பரிதா⁴னீயா இத்யர்த² ||

பா³ஹ்யே = வெளியில்
பரிதா⁴னீயே ச அர்தே² = (மற்றும்) அரையில் அணியும் ஆடை போன்ற அர்த்தத்தில்
அந்தரஶப்³த³ஸ்ய = அந்தர என்கிற சொல்லுக்கு
ப்ராப்தா ஸஞ்ஜ்ஞா = கொடுக்கப் பட்ட ஸஞ்ஜ்ஞா (ஸர்வநாம ஸஞ்ஜ்ஞா )
ஜஸி வா = ஜஸ் தொடருகையில் ஆகலாம்
அந்தரே, அந்தரா வா க்³ருʼஹா பா³ஹ்யா இத்யர்த² = வெளியில் உள்ள வீடு என்று அர்த்தம்
அந்தரே, அந்தரா வா ஶாடகா: பரிதா⁴னீயா இத்யர்த² = அரையில் அணியும் ஆடை என்று அர்த்தம்

‘வெளியில்’ மற்றும் ‘அரையில் அணியும் ஆடை’ என்கிற அர்த்தத்தில் அந்தர என்கிற சொல் பயன்படுத்தப் படும்போது, அதனைத் தொடர்ந்து ஜஸ் பிரத்யயம் சேரும்போது, அது ஸர்வநாம ஸஞ்ஜ்ஞா ஆகலாம்.


१५९ पूर्वादिभ्यो नवभ्यो वा ७ | १ | १६ ||

एभ्यो ङसिङ्‌यो स्मात्स्मिनौ वा स्त । पूर्वस्मात्‌, पूर्वात्‌ । पूर्वस्मिन्‌, पूर्वे । एवं परादीनाम्‌ । शेषं सर्ववत्‌ ।।

159 பூர்வாதி³ப்⁴யோ நவப்⁴யோ வா 7 | 1 | 16 ||

ஏப்⁴யோ ஙஸிங்‌யோ ஸ்மாத்ஸ்மினௌ வா ஸ்த | பூர்வஸ்மாத்‌, பூர்வாத்‌ | பூர்வஸ்மின்‌, பூர்வே | ஏவம்ʼ பராதீ³னாம்‌ | ஶேஷம்ʼ ஸர்வவத்‌ ||

பூர்வாதி³ப்⁴யோ நவப்⁴யோ = பூர்வம் ஆதியாக உடைய ஒன்பது சொற்கள்
ஏப்⁴யோ ஙஸிங்‌யோ = இவைகளுக்கு ஙஸி மற்றும் ஙீ ஆகியவை (ஐந்தாம் மற்றும் ஏழாம் வேற்றுமை)
ஸ்மாத்ஸ்மினௌ = ஸ்மாத் மற்றும் ஸ்மின்
வா ஸ்த = ஆகலாம்

பூர்வ முதலிய ஒன்பது சொற்கள், (பூர்வ, பர, அவர, த³க்ஷிண உத்தர அபர அத⁴ர, ஸ்வ, அந்தர) – இவற்றுக்கு, ஐந்தாம் மற்றும் ஏழாம் விபக்தி பிரத்யயங்களான ஙஸி மற்றும் ஙீ ஆகியவை ஸ்மாத் மற்றும் ஸ்மின் ஆகலாம்.

பூர்வஸ்மாத்‌, பூர்வாத்‌ மற்றும் பூர்வஸ்மின்‌, பூர்வே ஆகிய ரூபங்கள் உருவாகும். இதே போன்று பரஸ்மாத், பராத் போன்ற ரூபங்களும் மற்ற சொற்களில் சித்தம் ஆகும்.


१६० प्रथमचरमतयाल्पार्द्धकतिपयनेमाश्च १ | १ | ३३ ||

एते जसि उक्तसंज्ञा वा स्यु । प्रथमे, प्रथमा ।। तय प्रत्यय । द्वितये, द्वितया । शेषं रामवत्‌ ।। नेमे, नेमा । शेषं सर्ववत्‌ ।। (तीयस्य ङित्सु वा) । द्वितीयस्मै, द्वितीयायेत्यादि । एवं तृतीय ।। निर्जर ।।

160 ப்ரத²மசரமதயால்பார்த்³த⁴கதிபயநேமாஶ்ச 1 | 1 | 33 ||

ஏதே ஜஸி உக்தஸஞ்ஜ்ஞா வா ஸ்யு | ப்ரத²மே, ப்ரத²மா || தய ப்ரத்யய | த்³விதயே, த்³விதயா | ஶேஷம்ʼ ராமவத்‌ || நேமே, நேமா | ஶேஷம்ʼ ஸர்வவத்‌ || (தீயஸ்ய ஙித்ஸு வா) | த்³விதீயஸ்மை, த்³விதீயாயேத்யாதி³ | ஏவம்ʼ த்ருʼதீய || நிர்ஜர ||

ஏதே ஜஸி = ஜஸ் தொடருகையில்
உக்தஸஞ்ஜ்ஞா = ஸர்வநாம ஸஞ்ஜ்ஞா
வா ஸ்யு = ஆகலாம்

ப்ரத²ம (முதல்), சரம (கடைசி), தய (தயப் ப்ரத்யயத்தை இறுதியாகக் கொண்ட ஙசொற்கள்), அல்ப (சிறிதளவு), அர்த்³த⁴ (பாதி), கதிபய (சில), நேம (பாதி) ஆகிய ஏழு சொற்களும் ஜஸ் தொடருகையில், ஸர்வநாம ஸஞ்ஜ்ஞா ஆகலாம்.

ப்ரதமே, ப்ரதமா: என்று இரண்டு ரூபங்கள் கிடைக்கும். தயப் என்னும் பின்னொட்டு கொண்ட சொல்லுக்கு உதாரணம் த்விதயா: த்விதயே ஆகிய இரண்டு ரூபங்கள். இதைப்போன்று மற்ற சொற்களும் அமையும். ப்ரதம முதலிய இந்த ஏழு சொற்களும், ப்ரதமா விபக்தி பஹுவசனத்தில் மட்டும் இவ்வாறு இரண்டு ரூபங்கள் பெறுகின்றன. நேம சப்தத்தைத் தவிர்த்து மற்ற சொற்களுக்கு ராம சப்தத்தைப் போலவே விபக்திகள் அமையும். நேம சப்தத்திற்கு ஸர்வ சப்தத்தைப் போன்று விபக்திகள் அமையும்.

வார்த்திகம்: தீயஸ்ய ஙித்ஸு வா

வார்த்திகத்தில், தீய என்னும் பின்னொட்டு கொண்ட சொற்களும், ங-வை இத்தாக உடைய விபக்தி ப்ரத்யயங்கள் தொடருகையில், ஸர்வநாமமாக கருதலாம் என்று கூறுகிறார்.

ஸு ஔ ஜஸ் ஆகிய விபக்தி ப்ரத்யயங்களில் ஙே, ஙஸி, ஙஸ், ஙீ ஆகிய நான்கு விபக்திகள் ஙகாரத்தை இத்தாக உடையவை. இவற்றில் ஙஸ் என்பதற்கு ஸர்வநாம சப்த விதிகள் எதுவும் இல்லை.

(153) ஸர்வநாம்ந ஸ்மை மற்றும் (154) ஙஸிங்‌யோ ஸ்மாத்ஸ்மிநௌ ஆகிய இரு சூத்திரங்களின் படி, தீய என்று முடியும் சொற்களான த்விதீய, த்ருதீய ஆகிய சொற்கள் அமையும்.

ஆகவே, த்விதீயாய, த்விதீயஸ்மை என்றும், த்விதீயாத், த்விதீயஸ்மாத், த்விதீயே, த்விதீயஸ்மின் என்றும் அமையும். ‘த்ருதீய’ சப்தத்தில், த்ருதீயாய, த்ருதீயஸ்மை என்றும், த்ருதீயாத், த்ருதீயஸ்மாத், த்ருதீயே, த்ருதீயஸ்மின் என்றும் அமையும்.

நிர்ஜர என்னும் சொல்லைக் குறித்து அடுத்த சூத்திரத்தினைப் பார்க்க வேண்டும்.


१६१ जराया जरसन्यतरस्याम्‌ ७ | २ | १०१ ||

अजादौ विभक्तौ । (प.) पदाङ्‌गाधिकारे तस्य च तदन्तस्य च । (प.) निर्दिश्यमानस्यादेशा भवन्ति । (प.) एकदेशविकृतमनन्यवत्‌, इति जरशब्दस्य जरस्‌ । निर्जरसौ । निर्जरस इत्यादि । पक्षे हलादौ च रामवत्‌ ।। विश्वपा ।।

161 ஜராயா ஜரஸன்யதரஸ்யாம்‌ 7 | 2 | 101 |

அஜாதௌ³ விப⁴க்தௌ | (ப.) பதா³ங்‌கா³தி⁴காரே தஸ்ய ச தத³ந்தஸ்ய ச | (ப.) நிர்தி³ஶ்யமானஸ்யாதே³ஶா ப⁴வந்தி | (ப.) ஏகதே³ஶவிக்ருʼதமனன்யவத்‌, இதி ஜரஶப்³த³ஸ்ய ஜரஸ்‌ | நிர்ஜரஸௌ | நிர்ஜரஸ இத்யாதி³ | பக்ஷே ஹலாதௌ³ ச ராமவத்‌ || விஶ்வபா ||

அஜாதௌ³ விப⁴க்தௌ = அச் என்கிற ப்ரத்யாஹார எழுத்துக்களில் துவங்கும் விபக்திகளில்,
ஜராயா ஜரஸ அன்யதரஸ்யாம் = ஜரா என்னும் அங்கமானது ஜரஸ் என்று ஆகலாம்

அச் ப்ரத்யாஹாரம் என்பது அ, ஆ முதலிய ஸ்வர எழுத்துக்கள் (உயிர் எழுத்துக்கள்). ஸு முதலிய விபக்தி ப்ரத்யயங்களில் ஸ்வர எழுத்துக்களை துவக்கமாகக் கொண்டுள்ள விபக்திகளில், ஜரா என்பது ஜரஸ் என்று ஆகலாம். இதில் நிர்ஜர என்று ஏன் தனியாக ஒரு சொல்லுக்குச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு பதா³ங்‌கா³தி⁴காரே தஸ்ய ச தத³ந்தஸ்ய ச என்ற பரிபாஷா விதியைக் கூறுகிறார். அதாவது, பத மற்றும் அங்க அதிகாரத்தில் சொல்லப் படும் ஒரு சொல்லுக்கும், மற்றும் அதனை இறுதியாகக் கொண்ட சொற்களுக்கும், அங்கம் என்கிற நிலை கருதப்பட வேண்டும்.

பதஸ்ய என்கிற விதி 8.1.16 ல் துவங்கி 8.3.54 வரை அமைந்துள்ளது. அங்கஸ்ய என்னும் விதி 6.4.1 ல் துவங்குகிறது. ஆகவே இந்த சூத்திரம் அங்கஸ்ய என்ற விதியின் அதிகார எல்லைக்குள் இருப்பதால், ஜரா என்னும் சொல்லுக்கு உள்ள அங்க நிலை, நிர்ஜர என்னும் சொல்லுக்கும் பொருந்தும்.

இந்நிலையில், நிர்ஜர என்ற முழுச்சொல்லையுமே ஜரஸ் என்று மாற்ற வேண்டுமா (45 அநேகால் ஷித் ஸர்வஸ்ய) என்றால், நிர்தி³ஶ்யமானஸ்யாதே³ஶா ப⁴வந்தி என்ற பரிபாஷையின் படி, விதியில் சொல்லப் பட்டது மட்டுமே மாற்றம் அடையும் என்கிறார். இங்கே ஜரா என்பதற்கு பதில் ஜரஸ் ஆக வேண்டும் என்று விதியில் குறிப்பிட்டுள்ளதால் நிர்ஜர என்பதில் ஜர பகுதி மட்டுமே மாற்றம் அடையும்.

இன்னொரு கேள்வி, நிர்ஜர என்பது ஜர என்று தானே முடிகிறது, ஜரா என்ற சொல்லப் பட்டுள்ள விதி எப்படி பொருந்தும் என்றால், அதற்கு ஏகதே³ஶவிக்ருʼதமனன்யவத்‌ என்கிற பரிபாஷா விதி பதில் அளிக்கிறது. ஒரு சொல் அதன் ஒரு பகுதியில் சில மாற்றங்களை அடைந்தாலும், அந்த சொல் வேறொன்றாக ஆகி விடுவதில்லை. ஆகவே ஜரஸ் என்பது ஜர என்ற சொல்லுக்கு பதிலாயாக அமைகிறது. ஆகவே உயிர் எழுத்து விபக்திகளில் நிர்ஜரஸௌ, நிர்ஜரஸ: என்று ஆகிறது. இது விகல்பமாக கொடுக்கப் பட்டுள்ளதால், மற்றொரு ரூபம் ராம சப்தத்தைப் போன்று அமையும்.

இத்துடன் அகார அந்த சொற்களின் விபக்தி முடிவுற்றது.