அஜந்த புல்லிங்க³ ப்ரகரணம்

११६ अर्थवदधातुरप्रत्ययः प्रातिपदिकम्॥ १ | २ | ४५ ॥

धातुं प्रत्ययं प्रत्ययान्तं च वर्जयित्वा अर्थवच्छब्दस्वरूपं प्रातिपदिकसंज्ञं स्यात्॥

116 அர்த²வத³தா⁴துரப்ரத்யய​: ப்ராதிபதி³கம்|| 1 | 2 | 45 ||

தா⁴தும்ʼ ப்ரத்யயம்ʼ ப்ரத்யயாந்தம்ʼ ச வர்ஜயித்வா அர்த²வச்ச²ப்³த³ஸ்வரூபம்ʼ ப்ராதிபதி³கஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத்||

தா⁴தும்ʼ ப்ரத்யயம்ʼ = வேர்ச்சொல், ப்ரத்யயங்கள் (suffix),
ப்ரத்யயாந்தம்ʼ ச = மற்றும் ப்ரத்யயத்தில் முடியும் சொற்கள்
வர்ஜயித்வா = இவற்றை விலக்கி
அர்த²வத் = அர்த்தமுள்ளதாக உள்ள
ஶப்³த³ஸ்வரூபம்ʼ = வடிவம் கொண்ட சொல்
ப்ராதிபதி³கஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத் = ப்ராதிபதிகம் என்னும் ஸம்ஜ்ஞா ஆகும்

வினைச்சொற்களின் வேர்ச்சொற்கள் (Roots), ப்ரத்யயங்கள் (Suffix – பெயர்விகுதி, வினை விகுதி ஆகியவை), ப்ரத்யயத்தை இறுதியாகக் கொண்ட சொற்கள் ஆகியவற்றை விலக்கி மீதமுள்ளவற்றில் அர்த்தமுள்ள சொற்கள் ப்ராதிபதிகம் எனப்படும்.

இதில் ஒரு கேள்வி எழும். தாதுவிலிருந்து கூட பெயர்ச்சொற்கள் உருவாகலாம். அவை ப்ராதிபதிகம் ஆகுமா ஆகாதா என்ற கேள்விக்கு அடுத்த சூத்திரம் பதிலளிக்கிறது.


११७ कृत्तद्धितसमासाश्च॥ १ | २ | ४६ ॥

कृत्तद्धितान्तौ समासाश्च तथा स्युः॥

117 க்ருʼத்தத்³தி⁴தஸமாஸாஶ்ச|| 1 | 2 | 46 ||

க்ருʼத்தத்³தி⁴தாந்தௌ ஸமாஸாஶ்ச ததா² ஸ்யு​:||

க்ருʼத் தத்³தி⁴தாந்தௌ = க்ருத், தத்தித்த ஒட்டுக்களுடன் முடியும் சொற்கள்
ஸமாஸாஶ்ச = ஸமாஸமும்
ததா² ஸ்யு​: = அவ்வாறு ஆகட்டும்

க்ருத், தத்தித ஒட்டுகள் (Suffix) சேர்ந்த சொற்கள், ஸமாஸ சொற்கள் ஆகியவையும் ப்ராதிபதிகம் எனப்படும்.

க்ருதந்த சொற்களுக்கு உதாரணம்
कर्ता, हर्ता, कारक:, पाचक:
கர்தா,ஹர்தா, காரக:, பாசக:

தத்திதாந்த சொற்களுக்கு உதாரணம்
औपगव:, पाणिनीय: शालीय:
ஔபக³வ:, பாணிநீய: ஶாலீய:

ஸமாஸ சொற்களுக்கு உதாரணம்
राजपुरुष: रामकृष्ण:
ராஜபுருஷ: ராமக்ருʼஷ்ண:


११८ स्वौजसमौट्छष्टाभ्याम्भिस्ङेभ्याम्भ्यस्ङसिभ्याम्भ्यस्ङसोसाम्ङ्योस्सुप् || ४ | १ | २ ||

सु औ जस् इति प्रथमा।
अम् औट् शस् इति द्वितीया।
टा भ्याम् भिस् इति तृतीया।
ङे भ्याम् भ्यस् इति चतुर्थी।
ङसि भ्याम् भ्यस् इति पञ्चमी।
ङस् ओस् आम् इति षष्ठी।
ङि ओस् सुप् इति सप्तमी॥

118 ஸ்வௌஜஸமௌட்ச²ஷ்டாப்⁴யாம்பி⁴ஸ்ஙேப்⁴யாம்ப்⁴யஸ்ஙஸிப்⁴யாம்ப்⁴யஸ்ஙஸோஸாம்ங்யோஸ்ஸுப் || 4 | 1 | 2 ||

ஸு ஔ ஜஸ் இதி ப்ரத²மா|
அம் ஔட் ஶஸ் இதி த்³விதீயா|
டா ப்⁴யாம் பி⁴ஸ் இதி த்ருʼதீயா|
ஙே ப்⁴யாம் ப்⁴யஸ் இதி சதுர்தீ²|
ஙஸி ப்⁴யாம் ப்⁴யஸ் இதி பஞ்சமீ|
ஙஸ் ஓஸ் ஆம் இதி ஷஷ்டீ²|
ஙி ஓஸ் ஸுப் இதி ஸப்தமீ||

இவற்றை ஸ்வாதி (svaadi) ப்ரத்யயம் (ஸு ஆதி = ஸ்வாதி) என்று அழைக்கப் படுகிறது. இந்த இருபத்தியோரு ப்ரத்யயங்களும் விபக்தி (வேற்றுமை) உருவாக்குவதற்கு பயன்படுகின்றன. ஸு, ஔ முதலான ஒவ்வொரு ப்ரத்யயத்திலும் இத் எழுத்துக்களை நீக்கினால் ஸ், ஔ, அஸ் (முதல் வேற்றுமை), அம், ஔ அஸ் (இரண்டாம் வேற்றுமை), ஆ, ப்⁴யாம், பி⁴ஸ் (மூன்றாம் வேற்றுமை), ஏ ப்⁴யாம் ப்⁴யஸ் (நான்காம் வேற்றுமை), அஸ் ப்⁴யாம் ப்⁴யஸ் (ஐந்தாம் வேற்றுமை), அஸ் ஓஸ், ஆம் (ஆறாம் வேற்றுமை), இ ஒஸ் ஸு (ஏழாம் வேற்றுமை) என்று ஆகும்.

இவ்வாறு மூன்று வசநங்கள், ஏழு வேற்றுமைகள் மொத்தம் இருபத்தியோரு வகை சொற்களை இந்த சூத்திரம் விதிக்கிறது. இதை சரியாக புரிந்து கொள்ள இந்த சூத்திரம் எந்த அதிகார சூத்திரங்களின் கீழ் அமைகிறது என்று பார்க்க வேண்டும். இவை அடுத்து விளக்கப் படுகின்றன.


११९ ङ्याप्प्रातिपदिकात्॥ ४ | १ | १ ॥

119 ங்யாப்ப்ராதிபதி³காத்|| 4 | 1 | 1 ||

ஙீப் அந்தமும் ஆப் அந்தமும் ப்ராதிபதிகத்தோடு இறுதியில் ப்ரத்யயம் ஆகும். இவை ஸ்திரீ ப்ரத்யயங்களைக் குறிக்கும்..

இவற்றைக் குறித்து விரிவாக ஸ்திரீப்ரத்யய ப்ரகரணத்தில் பார்ப்போம்.


१२० प्रत्ययः॥ ३ | १ | १ ॥

120 ப்ரத்யய​:|| 3 | 1 | 1 ||

அதிகார சூத்திரம். மூன்று, நான்கு, ஐந்து அத்தியாயங்களில் கூறப்படுவது அனைத்தும் ப்ரத்யயம் என்ற பெயர் அடையும். ப்ரத்யயம் என்பதை சொல்லின் இறுதியில் சேர்க்கப் படும் விகுதி என்று புரிந்து கொள்ளலாம். இது சொல்லின் ஆரம்பத்தில் சேர்க்க வேண்டுமா அல்லது இறுதியில் சேர்க்க வேண்டுமா என்பது அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்.


१२१ परश्च॥ ३ | १ | २ ॥

इत्यधिकृत्य । ङ्‌यन्तादाबन्तात्प्रातिपदिकाच्च परे स्वादय प्रत्यया स्यु ।।

121 பரஶ்ச|| 3 | 1 | 2 ||

இத்யதி⁴க்ருʼத்ய | ங்‌யந்தாதா³ப³ந்தாத்ப்ராதிபதி³காச்ச பரே ஸ்வாத³ய ப்ரத்யயா ஸ்யு ||

ங்‌யந்தாத் = ஙீப் அந்ததிலிருந்து,
ஆப³ந்தாத் = ஆப் அந்தத்திலிருந்து
ப்ராதிபதி³காத் ச = ப்ராதிபதிகத்திலிருந்து
பரே ஸ்வாத³ய = பின்னால் ஸு முதலிய
ப்ரத்யயா ஸ்யு = ப்ரத்யயங்கள் உண்டாகும்

ப்ரத்யயமானது சொல்லின் முடிவில் உண்டாகும். ஆக இந்த மூன்று சூத்திரங்கள் சொல்ல வருவது, ஸ்திரீ ப்ரத்யயங்களுடன் சேர்த்து மூன்று, நான்கு, ஐந்து ஆகிய அத்தியாங்களில் சொல்லப் படுபவை அனைத்தும் சொல்லின் இறுதியில் சேர்க்கப் படும் ப்ரத்யயங்கள் ஆகும்.

மேலே சொன்ன ஙீப் அந்தம் ஆபந்தம், மற்றும் ப்ராதிபதிகத்தினைத் தொடர்ந்து ஸு முதலிய ப்ரத்யயங்கள் ஆனது உண்டாகும்.


१२२ सुपः॥ १ | ४ | १०३ ॥

सुपस्त्रीणि त्रीणि वचनान्येकश एकवचनद्विवचनबहुवचनसंज्ञानि स्युः॥

122 ஸுப​:|| 1 | 4 | 103 ||

ஸுபஸ்த்ரீணி த்ரீணி வசநாந்யேகஶ ஏகவசந த்³விவசந ப³ஹுவசந ஸஞ்ஜ்ஞாநி ஸ்யு​:||

ஸுப: = ஸுப் என்று குறிக்கப் படுபவை
த்ரீணி த்ரீணி வசநாநி = மூன்று மூன்றாக பிரித்த வசனங்கள்
ஏகஶ = முறையாக (ஒரே போல)
ஏகவசந த்³விவசந ப³ஹுவசந = ஏக வசநம், த்³வி வசநம், பஹுவசநம்
ஸஞ்ஜ்ஞாநி ஸ்யு​: = ஸம்ஜ்ஞாக்கள் ஆகும்

ஸுப் என்பது ஸு ஔ ஜஸ்… துவங்கி ஙி ஓஸ் ஸுப் என்று முடிவதில் முதல் எழுத்தான ஸு-வும், கடைசி எழுத்தான ப் என்கிற எழுத்தையும் சேர்த்து ஸுப் என்கிற (ப்ரத்யாஹாரம் போன்ற) சொல்லானது, ஏழு விபக்திகளை குறிக்கிறது. இவற்றை ஸு ஔ ஜஸ் இதி ப்ரதமா, அம் ஔட் ஶஸ் இதி த்³விதீயா என்று ஒவ்வொரு வேற்றுமையாக (விபக்தியாக) ஏற்கனவே விளக்கப் பட்டது. இந்நிலையில் இவற்றில் ஒவ்வொரு விபக்தியிலும், இந்த ஒவ்வொரு சொல்லையும் ஏக வசநம், த்³வி வசநம், பஹுவசநம் ஆகியவற்றுக்கான ஸம்ஜ்ஞா என்று இந்த சூத்திரம் விளக்குகிறது.

அதாவது ஸு என்பது ப்ரதமா விபக்தி ஏக வசநம். ஔ என்பது ப்ரதமா விபக்தி த்³வி வசநம்.. இவ்வாறு ஒவ்வொரு ப்ரத்யயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.


१२३ द्व्येकयोर्द्विवचनैकवचने॥ १ | ४ | २२ ॥

द्वित्वैकत्वयोरेते स्तः॥

123 த்³வ்யேகயோர்த்³விவசநைகவசநே|| 1 | 4 | 22 ||

த்³வித்வைகத்வயோரேதே ஸ்த​:||

த்³வித்வ-ஏகத்வயோ: = இருமை மற்றும் ஒருமைக்கு
ஏதே ஸ்த: = இவை ஆகும்.

இருமை மற்றும் ஒருமைக்கு முறையே த்³விவசநம் மற்றும் ஏகவசநம் ஆகும்.


१२४ विरामो ऽवसानम्॥ १ | ४ | ११० ॥

वर्णानामभावो ऽवसानसंज्ञः स्यात्। रुत्वविसर्गौ। रामः॥

124 விராமோ (அ)வஸாநம்|| 1 | 4 | 110 ||

வர்ணாநாமபா⁴வோ (அ)வஸாநஸஞ்ஜ்ஞ​: ஸ்யாத்| ருத்வவிஸர்கௌ³| ராம​:||

வர்ணாநாம் அபா⁴வ: = வர்ணங்களின் இன்மை
அவஸாநஸஞ்ஜ்ஞ​: ஸ்யாத் = அவஸாந ஸம்ஜ்ஞா ஆகும்
ருத்வவிஸர்கௌ³ = ருத்வம் மற்றும் விஸர்க³ம்

வர்ணங்களின் இன்மைக்கு, அதாவது எந்த எழுத்தும் இல்லாமல் இருத்தல் அவஸாந ஸம்ஜ்ஞா ஆகும்.

உதாரணம்:
ராம என்பது ப்ராதிபதிகம். இதனுடம் ஸு ஔ ஜஸ் 21 முதலிய வேற்றுமை உருபுகள் (விபக்திகள்) இணைக்கப் படலாம்.

உதாரணத்திற்கு ஸு என்கிற ப்ரதமா விபக்தி ஏகவசநத்தை எடுத்துக் கொள்வோம்.

प्रातिपदिकं: राम
(११८ स्वौजसमौ…) राम + सु
(२८ उपदेशेऽजनुनासिक इत्‌) राम + स्
(१०५ स सजुषो रुः) राम + र्
(९३ खरवसानयो: विसर्जनीय:) राम:

ப்ராதிபதி³கம்ʼ: ராம
இந்நிலையில் இது பதமாக (சொல்லாக) ஆகவில்லை. இதனுடன் பெயர் விகுதி (விபக்தி) அல்லது வினை விகுதியைச்

சேர்த்தால் தான் சொல் அல்லது பதம் எனப்படும். (14 ஸுப்திஙந்தம்ʼ பத³ம்‌)

(118 ஸ்வௌஜஸமௌ…) ராம + ஸு
ஸு-வில் உ என்பது இத். (உண்மையில் ஸு என்பது सुँ என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள उँ என்பது அநுநாசிகம் ஆகையால் இத் ஆகி விடும்.)

(28 உபதே³ஸே²(அ)ஜநுநாஸிக இத்‌) ராம + ஸ்
ராமஸ் என்கிற நிலையில் ஸுப் சேர்த்ததால் இது பதமாக (சொல்லாக) ஆகி விட்டது.
பதமாக ஆன பின்னர் கீழ்கண்ட சூத்திரம் பயன்படுத்த முடியும்.

(105 ஸ ஸஜுஷோ ரு​:) ராம + ரு = ராமர்
ரு வில் உ என்பது இத். ஆகவே ராமர் என்கிற நிலை அடைகிறது.

(93 க²ரவஸாநயோ: விஸர்ஜநீய:) ராம:
இதன் பிறகு கடைசி எழுத்தான ர்-க்கு பிறகு வேறு எழுத்து எதுவும் இல்லாத நிலை அவஸாநம். அந்நிலையில் அது

விஸர்க³மாகி பிரதமா விபக்தி ஏகவசந ரூபமாந ராம: (சொல்லும் போது ராமஹ) என்று ஆகிறது.


१२५ सरूपाणामेकशेष एकविभक्तौ॥ १ | २ | ६४ ॥

एकविभक्तौ यानि सरूपाण्येव दृष्टानि तेषामेक एव शिष्यते॥

125 ஸரூபாணாமேகஸே²ஷ ஏகவிப⁴க்தௌ|| 1 | 2 | 64 ||

ஏகவிப⁴க்தௌ யாநி ஸரூபாண்யேவ த்³ருʼஷ்டாநி தேஷாமேக ஏவ ஸி²ஷ்யதே||

ஏகவிப⁴க்தௌ = ஒரு விகதியை இணைக்கும் போது
யாநி = எந்த சொற்கள்
ஸரூபாணி எவ த்³ருʼஷ்டாநி = ஒரே வடிவத்தைக் கொண்டு காணப்பட்டால்
தேஷாம் – அவற்றில்
ஏக ஏவ – ஒன்று மட்டுமே
ஸி²ஷ்யதே – மீதம் இருக்கும்

ஒரு விபக்தியை இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைக்கும் போது, அவை வடிவத்தில் ஒரே போல காணப்பட்டால் அவற்றில் ஒன்று மட்டுமே மீதம் இருக்கும்.

இரு ராமர்கள் என்கிற நிலையில், த்விவசநத்துக்குரிய விபக்தி சேரும் போது ராம + ராம + ஔ எனும் போது ஒரு ராம என்கிற சொல் மட்டுமே விபக்தியுடன் சென்றது அமையும். மற்றொன்று மறையும். ராமௌ என்கிற சொல்லில் மற்றொரு ராமனும் மறைந்துள்ளது. இதன் மூலம் ஒரே சொல்லில் இரண்டு பொருட்களைக் குறிக்க முடியும்.

ராம + ஔ என்பது அதற்குள் வ்ருத்தி ஸந்தி என்று முடிக்காமல் மேலும் சில சூத்திரங்கள் உபயோகப் படுத்த இடமிருக்கிறது.


१२६ प्रथमयोः पूर्वसवर्णः॥ ६ | १ | १०२ ॥

अकः प्रथमाद्वितीययोरचि पूर्वसवर्णदीर्घ एकादेशः स्यात्। इति प्राप्ते॥

126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:|| 6 | 1 | 102 ||

அக​: ப்ரத²மாத்³விதீயயோரசி பூர்வஸவர்ணதீ³ர்க⁴ ஏகாதே³ஶ​: ஸ்யாத்| இதி ப்ராப்தே||

அக​: = அக் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு
ப்ரத²மாத்³விதீயயோ = முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமைகளில்
அசி = அச் ப்ரத்யாஹார எழுத்து தொடர்ந்து உள்ள நிலையில்
பூர்வஸவர்ணதீ³ர்க⁴ = முந்தைய எழுத்துக்களின் (அக் = அ, இ. உ ரு, ல்ரு) தீர்க்க வடிவம்
ஏகாதே³ஶ​: ஸ்யாத் = ஏகாதேசமாக (இரண்டுக்கும் பதிலாக) அமையும்

முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமைகளில், சொல்லின் இறுதியில் உள்ள அக் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கும், அதனைத் தொடர்ந்து வரும், அச் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கும் பதிலாக முந்தைய எழுத்துக்களின் (அக் = அ, இ. உ ரு, ல்ரு) தீர்க்க வடிவம் அமையும்.

ராம + ஔ (த்விவசநம்)

இந்நிலையில் (126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) பயன் படுத்தினால் ராம் + அ + ஔ = ராமா என்று அ- ஆ-வாக வந்தாலும் சரியான வடிவமான ராமௌ என்கிற வடிவம் கிடைக்காது. ஏனெனில் அடுத்த சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்.


१२७ नादिचि॥ ६| १ | १०४ ॥

आदिचि न पूर्वसवर्णदीर्घः। वृद्धिरेचि। रामौ॥

127 நாதி³சி|| 6 | 1 | 104 ||

ஆதி³சி ந பூர்வஸவர்ணதீ³ர்க⁴​:| வ்ருʼத்³தி⁴ரேசி| ராமௌ||

ஆத் = அ-வர்ணத்தைத் தொடர்ந்து
இசி = இச் ப்ரத்யஹாரம் இருக்குமாயின்
ந பூர்வஸவர்ணதீ³ர்க⁴​: = முந்தைய எழுத்தின் ஸவர்ண தீர்க்க வடிவம் ஆகாது

அ-வர்ணத்தைத் தொடர்ந்து இச் ப்ரத்யஹார எழுத்தில் துவங்கும் வேற்றுமை உருபு இருக்குமாயின், முந்தைய சூத்திரத்தில் சொன்ன படி (126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) முந்தைய எழுத்தின் ஸவர்ண தீர்க்க வடிவம் ஆகாது.

முந்தைய சூத்திரத்தில் (126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) அக் + அச் எனும் போது அக் ப்ரத்யாஹார எழுத்துக்களின் தீர்க்க வடிவம் இரண்டு எழுத்துக்களுக்கும் பதிலாக வரும் என்று விதித்தது. இந்த சூத்திரம் அதிலிருந்து அ-வர்ணத்தை (அ, ஆ) மட்டும் விடுவிக்கிறது.

ஆகவே இப்போது வ்ருத்தி ஸந்தி செய்ய வாய்ப்பு மறுபடி ஏற்படுகிறது.

ஆகவே,
राम + राम + औ
(१२५ सरूपाणामेकशेष एकविभक्तौ॥) राम + औ
(३३ वृद्धिरेचि ) राम् + अ + औ = रामौ

ராம + ராம + ஔ
(125 ஸரூபாணாமேகஸே²ஷ ஏகவிப⁴க்தௌ|| ) ராம + ஔ
(33 வ்ருʼத்³தி⁴ரேசி ) ராம் + அ + ஔ = ராமௌ


१२८ बहुषु बहुवचनम्॥ १ | ४ | २१॥

बहुत्वविवक्षायां बहुवचनं स्यात्॥

128 ப³ஹுஷு ப³ஹுவசநம்|| 1 | 4 | 21||

ப³ஹுத்வவிவக்ஷாயாம்ʼ ப³ஹுவசநம்ʼ ஸ்யாத்||

ப³ஹுத்வ = பன்மை
விவக்ஷாயாம்ʼ = பன்மையைப் பொறுத்தவரை
ப³ஹுவசநம்ʼ ஸ்யாத் = பஹுவசநம் ஆகும்

பன்மையைப் பொறுத்தவரை மூன்று வசநங்களில் பஹுவசநம் என்று சொல்லப்பட்ட ப்ரத்யயங்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஸு ஔ ஜஸ் என்பதில் ஜஸ் என்கிற ப்ரத்யயத்தை இரண்டுக்கு மேற்பட்ட பன்மையைக் குறிக்கும் போது பயன்படுத்த வேண்டும்.


१२९ चुटू॥ १ | ३ | ७ ॥

प्रत्ययाद्यौ चुटू इतौ स्तः॥

129 சுடூ|| 1 | 3 | 7 ||

ப்ரத்யயாத்³யௌ சுடூ இதௌ ஸ்த​:||

ப்ரத்யய ஆத்³யௌ = ப்ரத்யயத்துக்கு ஆரம்பத்தில்
சுடு – ச-கார வரிசையும், ட-கார வரிசையும்
இதௌ ஸ்த: = இத் ஆகும்

ஸு ஔ ஜஸ் முதலியவற்றில் இறுதியில் உள்ள ச-கார வரிசை (ச் ச்² ஜ் ஜ்² ஞ்) மற்றும் ட-கார வரிசை (ட் ட்² ட்³ ட்⁴ ண்) ஆகியவை இத் ஆகும்.

இதன் படி ராம + ஜஸ் என்று பன்மைக்கு ஸந்தி செய்யும் போது ஜ் என்பது இத் ஆகி விடும்.

राम + जस् = राम + अस्
ராம + அஸ் என்று ஆகிறது. இதில் (1 ஹலந்தயம்) ஸ் என்பது இத் அல்ல. ஏன் என்று மேலே பார்க்கலாம்.


१३० विभक्तिश्च॥ १ | ४ | १०४ ॥

सुप्तिङौ विभक्तिसंज्ञौ स्तः॥

130 விப⁴க்திஸ்²ச|| 1 | 4 | 104 ||

ஸுப்திஙௌ விப⁴க்திஸஞ்ஜ்ஞௌ ஸ்த​:||

ஸுப்திஙௌ = ஸுப் திங் ஆகியவை
விப⁴க்தி ஸஞ்ஜ்ஞௌ ஸ்த: = விபக்தி என்னும் ஸம்ஜ்ஞா ஆகும்

ஸு ஔ ஜஸ் முதலியவற்றுக்கு முன்பு ப்ரத்யய: என்று ஒரு பெயர் கொடுத்திருந்தார். பின்னர் ஏகவசநம், த்விவசநம் என்று பெயர் தரப்பட்டது. இப்போது விபக்தி என்னும் பெயரும் இணைகிறது. ஸுப் என்பது இருபத்தியொரு விகுதிகளும், திங் எனப்படும் வினைவிகுதிகளும் விபக்தி என்ற பெயர் பெரும்.


१३१ न विभक्तौ तुस्माः॥ १ | ३ | ४ ॥

विभक्तिस्थास्तवर्गसमा नेतः। इति सस्य नेत्त्वम्। रामाः॥

131 ந விப⁴க்தௌ துஸ்மா​:|| 1 | 3 | 4 ||

விப⁴க்திஸ்தா²ஸ்தவர்க³ஸமா நேத​:| இதி ஸஸ்ய நேத்த்வம்| ராமா​:||

விப⁴க்திஸ்தா²: = விபக்தியில் உள்ள
தவர்க³ஸமா = தவர்க்கம், ஸ-காரம் மற்றும் ம-காரம்
ந இத: = இத் ஆகாது.

விபக்தியில் உள்ள த-வர்க்கம் (த் த்² த்³ த்⁴ ந்) மற்றும் ஸ-காரம் மற்றும் ம-காரம் இத் ஆகாது.

राम + जस्
(१२९ चुटू) राम + अस्
(१२६ प्रथमयोः पूर्वसवर्णः) = राम् + आ + स्
(२०५ स सजुषो रु:) रामार्
(९३ खरवसानयो: विसर्जनीय:) रामा:

ராம + ஜஸ்
(129 சுடூ) ராம + அஸ்
(126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) = ராம் + ஆ + ஸ்
(205 ஸ ஸஜுஷோ ரு:) ராமார்
(93 க²ரவஸாநயோ: விஸர்ஜநீய:) ராமா:

ராமா: என்கிற பன்மை கிடைத்து விட்டது.


१३२ एकवचनं सम्बुद्धिः॥ २ | ३ |४९ ॥

सम्बोधने प्रथमाया एकवचनं सम्बुद्धिसंज्ञं स्यात्॥

132 ஏகவசநம்ʼ ஸம்பு³த்³தி⁴​:|| 2 | 3 | 49 ||

ஸம்போ³த⁴நே ப்ரத²மாயா ஏகவசநம்ʼ ஸம்பு³த்³தி⁴ஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத்||

ஸம்போ³த⁴நே = அழைப்பில் (விளித்தலில்)
ப்ரத²மாயா ஏகவசநம்ʼ = முதல் வேற்றுமையின் (ப்ரதமா விபக்தியின்) ஒருமையானது
ஸம்பு³த்³தி⁴ ஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத் = ஸம்பு³த்³தி⁴ என்ற பெயரை அடையும்.

ப்ரதமா ஏக வசநம் (முதல் வேற்றுமையின் ஒருமை) மட்டுமே ஸம்பு³த்³தி⁴ என்கிற பெயரடையும்.


१३३ यस्मात्प्रत्ययविधिस्तदादि प्रत्यये ऽङ्गम्॥ १ | ४ | १३ ॥

यः प्रत्ययो यस्मात् क्रियते तदादिशब्दस्वरूपं तस्मिन्नङ्गं स्यात्॥

133 யஸ்மாத்ப்ரத்யயவிதி⁴ஸ்ததா³தி³ ப்ரத்யயே (அ)ங்க³ம்|| 1 | 4 | 13 ||

ய​: ப்ரத்யயோ யஸ்மாத் க்ரியதே ததா³தி³ஶப்³த³ஸ்வரூபம்ʼ தஸ்மிந்நங்க³ம்ʼ ஸ்யாத்||

ய​: ப்ரத்யயோ = எந்த ப்ரத்யயமானது
யஸ்மாத் க்ரியதே = எதனோடு சேர்க்க விதிக்கப் பட்டதோ
ததா³தி³ஶப்³த³ஸ்வரூபம்ʼ = அந்த சப்த ஸ்வரூபத்தின் (சொல்லின்) முதற்பகுதியில் பகுதியாக இருக்கிறதோ
தஸ்மிந்நங்க³ம்ʼ ஸ்யாத் = அதற்கு அங்கம் என்று பெயர் உண்டாகும்

எந்த சொல்லைத் தொடர்ந்து ப்ரத்யயம் சேர்க்க விதிக்கப் பட்டுள்ளதோ, அந்த முழுச் சொல்லின் ஆதியானது / அல்லது துவக்கமானது அங்கம் எனப்படும்.


१३४ एङ्ह्रस्वात्सम्बुद्धेः॥ ६ | १ | ६९ ॥

एङन्ताद्ध्रस्वान्ताच्चाङ्गाद्धल्लुप्यते सम्बुद्धेश्चेत्। हे राम। हे रामौ। हे रामाः॥

134 ஏங்ஹ்ரஸ்வாத்ஸம்பு³த்³தே⁴​:|| 6 | 1 | 69 ||

ஏஙந்தாத்³த்⁴ரஸ்வாந்தாச்சாங்கா³த்³த⁴ல்லுப்யதே ஸம்பு³த்³தே⁴ஸ்²சேத்| ஹே ராம| ஹே ராமௌ| ஹே ராமா​:||

ஏஙந்தாத் ஹ்ரஸ்வாந்தாத் ச = ஏங் ப்ரத்யாஹாரத்திலோ, ஹ்ரஸ்வத்திலோ முடியும் போது
அங்கா³த் = உள்ள அங்கத்தினைத் தொடர்ந்து
ஹல்லுப்யதே = ஹல் ப்ரத்யாஹார எழுத்து லோபம் ஆகும்
ஸம்பு³த்³தே⁴ சேத் = ஸம்பு³த்³தி⁴யில் இருந்தால்

ஸம்பு³த்³தி⁴யில், ஏங் ப்ரத்யாஹாரத்திலோ (ஏ ஓ), குறிலாக உள்ள உயிர் எழுத்திலோ முடியும் அங்கத்தினைத் தொடர்ந்து வரும் ஹல் ப்ரத்யாஹார எழுத்து (வேற்றுமை உருபு எழுத்துக்கள்) லோபம் ஆகும் ராம ஸப்தத்தில் ஸம்பு³த்³தி⁴யில் (அழைப்பில்) இப்படி ஆகும்

राम + सुँ
राम + स्
(२०५ स सजुषो रु:) राम + र्
(१३४ एङ्ह्रस्वात्सम्बुद्धेः) राम

ராம + ஸும் ̐
ராம + ஸ்
(205 ஸ ஸஜுஷோ ரு:) ராம + ர்
(134 ஏங்ஹ்ரஸ்வாத்ஸம்பு³த்³தே⁴​:) ராம

இதே போல ராமௌ என்பதில் ஹல் ப்ரத்யாஹார எழுத்து சேராத நிலையில் ஸம்பு³த்³தி⁴யிலும் ஹே ராமௌ என்றே ஆகும். அதே போலவே பல ராமர்களை, பஹு வசநத்தில் அழைக்கும் போதும் மாற்றமின்றி ஹே ராமா: என்றே ஆகும்.

ஸம்பு³த்³தி⁴யில், ஹே என்ற சொல்லை முன்னால் சேர்ப்பது அது அழைப்பு என்று காட்டவே.


१३५ अमि पूर्वः॥ ६ | १ | १०७ ॥

अको ऽम्यचि पूर्वरूपमेकादेशः। रामम्। रामौ॥

135 அமி பூர்வ​:|| 6 | 1 | 107 ||

அகோ (அ)ம்யசி பூர்வரூபமேகாதே³ஶ​:| ராமம்| ராமௌ||

அக: = அக் ப்ரத்யாஹாரத்துக்கு,
அமி = இரண்டாவது வேற்றுமை ஏக வசனமான அம் ப்ரத்யயத்தினுடைய
அசி = உயிர் எழுத்து தொடருகையில்
பூர்வரூபம் = முந்தைய எழுத்தின் ரூபம்
ஏகாதே³ஶ​: = ஏகாதேசம் ஆகும்

இரண்டாவது வேற்றுமை (த்விதீயா விபக்தி ஏகவசனம்) அம் என்பதில் உள்ள அச் ப்ரத்யாஹார எழுத்துக்கள் (உயிர் எழுத்துக்கள்) தொடருகையில், அதற்கு முன்னால் உள்ள அக் ப்ரத்யாஹார எழுத்துக்கள் ஏகாதேஸமாக, ஸந்தியில் உள்ள இரண்டு எழுத்துகளுக்கும் பதிலாக அமையும்.

ராம என்பதில் ராம் + அ என்று பிரித்தால் அ என்கிற எழுத்து அக் ப்ரத்யாஹாரத்தைச் சேர்ந்தது. அதனுடன் இரண்டாவது வேற்றுமையில் அமைக்கும் போது ராம் + அ + அம் = இதில் அம் என்பதில் அ உயிர் எழுத்தாக உள்ள படியால் இரண்டு அ-காரங்களுக்கும் பதிலாக ராம என்பதில் இறுதியில் உள்ள அகாரமே ஏகாதேசமாக அமைந்து ராமம் என்று ஆகிறது.

இரண்டாவது வேற்றுமை த்விவசநத்தில் ராம + ஔட் என்று சேர்க்கப் படுகிறது. இதில் ட் என்பது ஹலந்த்யம் என்பதால் அது இத் ஆகி லோபம் ஆகி விடும். ராம + ஔ என்பது முதல் விபக்தி த்விவசனத்தைப் போன்றதே தான். (பார்க்க 125 ஸரூபாணாமேகஸே²ஷ ஏகவிப⁴க்தௌ). ஆகவே இரண்டாவது வேற்றுமையில் த்விவசனம் முதல் விபக்தியைப் போன்றே ராமௌ என்றே அமைகிறது.

இரண்டாவது வேற்றுமை பஹுவசநத்தில், ராம + ஶஸ் என்று சேர்க்கை நிகழ்கிறது. இதில் இறுதியில் உள்ள ஸ் என்பது இத் எழுத்தாகி லோபம் ஆகாது ஏனெனில் (131 ந விப⁴க்தௌ துஸ்மா​:) என்கிற சூத்திரம் அதைத் தடுக்கிறது.

அப்படியானால் த்விதீயா விபக்தி பஹுவசனம் எப்படி அமையும்? அடுத்த சூத்திரத்தைப் பார்ப்போம்.


१३६ लशक्वतद्धिते॥ १ | ३ | ८ ॥

तद्धितवर्जप्रत्ययाद्या लशकवर्गा इतः स्युः॥

136 லஶக்வதத்³தி⁴தே|| 1 | 3 | 8 ||

தத்³தி⁴தவர்ஜப்ரத்யயாத்³யா லஶகவர்கா³ இத​: ஸ்யு​:||

தத்³தி⁴த வர்ஜ = தத்திதம் என்னும் வகையில் அடங்காத
ப்ரத்யய ஆத்³யா = ப்ரத்யயங்களின் ஆதியில்
லஶகவர்கா³ = ல-கார, ஶ-கார, க-வர்க்க எழுத்துக்களில் துவங்குபவை
இத​: ஸ்யு​: = இத் ஆகும்

பலவகையான ப்ரத்யயங்களில் தத்திதம் என்ற வகையில் வராத ப்ரத்யயங்கள், அவற்றில் ல-கார, ஶ-கார, க-வர்க்க எழுத்துக்களில் துவங்குபவையாக இருந்து, அவற்றை சேர்க்கும் போது அந்த ல-கார, ஶ-கார, க-வர்க்க எழுத்துக்கள் இத் ஆகும்.

राम + शस्
(लशक्वतद्धिते) राम + स्

ராம + ஶஸ்
(லஶக்வதத்³தி⁴தே) ராம + அஸ்

ஶஸ் என்பதில் இந்த சூத்திரத்தினால் ஶ் என்கிற எழுத்து இத் ஆகி லோபம் ஆகி விட்டது. இந்நிலையில் (126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) சூத்திரம் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதன்படி

(१२६ प्रथमयोः पूर्वसवर्णः) राम् + आ + स्
ராம் + ஆ + ஸ்

இந்நிலையில் அடுத்த சூத்திரத்தைப் பார்ப்போம்.


१३७ तस्माच्छसो नः पुंसि॥ ६ | १ | १०३ ॥

पूर्वसवर्णदीर्घात्परो यः शसः सस्तस्य नः स्यात्पुंसि॥

137 தஸ்மாச்ச²ஸோ ந​: பும்ʼஸி|| 6 | 1 | 103 ||

பூர்வஸவர்ணதீ³ர்கா⁴த்பரோ ய​: ஶஸ​: ஸஸ்தஸ்ய ந​: ஸ்யாத்பும்ʼஸி||

பூர்வ ஸவர்ண தீ³ர்கா⁴த் பர: = முன்னால் உள்ள எழுத்து தீர்க்கமாக மாற்றப் பட்ட பின்னர்
ய​: ஶஸ​: = எந்த ஶஸ் உள்ளதோ
ஸஸ்தஸ்ய = அந்த ஸ-காரத்திற்கு ந-காரம் ஆகும்
பும்ʼஸி = புல்லிங்கத்தில்

முன்னால் உள்ள எழுத்து தீர்க்கமாக மாற்றப் பட்ட பின்னர், புல்லிங்கத்தில் எந்த ஶஸ் உள்ளதோ அந்த ஸ-காரத்திற்கு ந-காரம் ஆகும். இது முந்தைய சூத்திரத்தின் தொடர்ச்சி. ஆகவே

राम + शस्
(लशक्वतद्धिते) राम + स्
(१२६ प्रथमयोः पूर्वसवर्णः) राम् + आ + स्
(१३७ तस्माच्छसो नः पुंसि) राम् + आ + न् = रामान्

ராம + ஶஸ்
(லஶக்வதத்³தி⁴தே) ராம + ஸ்
(126 ப்ரத²மயோ​: பூர்வஸவர்ண​:) ராம் + ஆ + ஸ்
(137 தஸ்மாச்ச²ஸோ ந​: பும்ʼஸி) ராம் + ஆ + ந் = ராமாந்

ராமாந் என்பது த்விதீயா விபக்தி பஹுவசந ரூபம் கிடைத்து விட்டது. இந்நிலையில் இறுதியில் ந-காரம் வரும் நிலையில் அதை ண-காரமாக மாற்றச் சொல்லும் வேறு சில சூத்திரங்கள் இங்கே பயன்படாது என்று தெரிவிக்க அடுத்த சூத்திரத்தைப் பார்ப்போம்.


१३८ अट्कुप्वाङ्नुम्व्यवाये ऽपि॥ ८ | ४ | २ ॥

अट् कवर्गः पवर्गः आङ् नुम् एतैर्व्यस्तैर्यथासंभवं मिलितैश्च व्यवधाने ऽपि रषाभ्यां परस्य नस्य णः समानपदे। इति प्राप्ते॥

138 அட்குப்வாங்னும்வ்யவாயே (அ)பி|| 8 | 4 | 2 ||

அட் கவர்க³​: பவர்க³​: ஆங் நும் ஏதைர்வ்யஸ்தைர்யதா²ஸம்ப⁴வம்ʼ மிலிதைஶ்ச வ்யவதா⁴னே (அ)பி ரஷாப்⁴யாம்ʼ பரஸ்ய

நஸ்ய ண​: ஸமானபதே³| இதி ப்ராப்தே||

அட் = அட் ப்ரத்யாஹாரம்
கவர்க³​: பவர்க³​: = க வர்க்கம், ப வர்க்கம்
ஆங் நும் = ஆங் ப்ரத்யாஹாரம், மற்றும் நும்
ஏதை: வ்யஸ்தை: = இவைகள் தனித்திருந்தோ
யதா² ஸம்ப⁴வம்ʼ மிலிதை: ச = கூடி இருந்தோ
வ்யவதா⁴னே அபி = பிரித்தாலும்
ரஷாப்⁴யாம்ʼ பரஸ்ய நஸ்ய = ரேபம் அல்லது ஷ-காரம் தொடர்ந்து வரும் ந-காரமானது
ண​: ஸமானபதே³ = ண-காரம் ஆகும் ஒரே பதத்தில் உள்ள பொழுது.

ஒரே பதத்தில், அட் ப்ரத்யாஹாரம் க வர்க்கம், ப வர்க்கம், ஆங் ப்ரத்யாஹாரம், மற்றும் நும், இவைகள் தனித்திருந்தோ கூடி இருந்தோ பிரித்தாலும் ரேபம் அல்லது ஷ-காரம் தொடர்ந்து வரும் ந-காரமானது ண-காரம் ஆகும்.

ராமாந் என்பதில் ர் + ஆ – ம் + ஆ + ந் என்று பிரித்தால் அதில் ஆ என்பது அட் ப்ரத்யாஹாரத்தில் வரும். ம-காரம் ப-வர்க்கத்தில் சேரும். ஆகவே ரேபத்தையும் ந-காரத்தையும் பிரித்திருப்பதால் ந-காரம் ண-காரம் ஆக வேண்டும். அப்படி ஆனால் ராமாண் என்கிற தவறான ரூபம் கிடைக்கும். இதை தவிர்க்க அடுத்த சூத்திரம் பார்க்க வேண்டும்.


१३९ पदान्तस्य॥ ८ | ४ | ३७ ||

नस्य णो न। रामान्॥

139 பதா³ந்தஸ்ய|| 8 | 4 | 37 ||

நஸ்ய ணோ ந| ராமாந் ||

நஸ்ய = ந-காரத்திற்கு
ணோ – ண-காரம்
ந – ஆகாது

சொல்லின் இறுதியில் உள்ள ந-காரத்திற்கு ண-காரம் ஆகாது. (14 ஸுப்திஙந்தம்ʼ பத³ம்‌) என்ற சூத்திரப் படி ஸுப் ப்ரத்யயங்கள் சேர்க்கப்பட்டவை பதம் எனப்படும். அந்த பதத்தின் இறுதியில் உள்ள ந-காரம் ண-காரம் ஆகாது என்று இந்த சூத்திரம் விதிக்கிறது. ஆகவே ராமாண் என்று ஆகாது. ராமாந் என்ற ரூபமே இருக்கும்.


१४० टाङसिङसामिनात्स्याः॥ ७ | १ | १२ ||

अदन्ताट्टादीनामिनादयः स्युः। णत्वम्। रामेण॥

140 டாஙஸிஙஸாமினாத்ஸ்யா​:|| 7 | 1 | 12 ||

அத³ந்தாட்டாதீ³னாமினாத³ய​: ஸ்யு​:| ணத்வம்| ராமேண||

அத³ந்தாத் = அ-காரத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து
டாதீ³னாம் = டா-முதலியவைக்கு
இனாத³ய​: = இந் முதலியவை
ஸ்யு​: = ஆகும்

டா, ஙஸி, ஙஸ் இவைகளுக்கு இந், ஆத் மற்றும் ஸ்ய ஆதேசம் ஆகும். இப்போது மூன்றாம் வேற்றுமை ஏகவசனத்தைப் பார்ப்போம். த்ருதீயா விபக்தி ஏகவசனத்துக்கு டா என்கிற ப்ரத்யயம் சேர்க்கப் படவேண்டும்.

राम + टा
(१४० टाङसिङसामिनात्स्याः) राम + इन = राम् + आ + इ + न
(२७ आद्गुण:) राम् + ए + न
(१३८ अट्कुप्वाङ्नुम्व्यवाये ऽपि) राम् + ए + ण = रामेण

ராம + டா
(140 டாஙஸிஙஸாமினாத்ஸ்யா​:) ராம + இன = ராம் + ஆ + இ + ந
(27 ஆத்³கு³ண:) ராம் + ஏ + ந
(138 அட்குப்வாங்னும்வ்யவாயே (அ)பி) ராம் + ஏ + ண = ராமேண


१४१ सुपि च॥ ७ | ३ | १०२ ॥

यञादौ सुपि अतो ऽङ्गस्य दीर्घः। रामाभ्याम्॥

141 ஸுபி ச|| 7 | 3 | 102 ||

யஞாதௌ³ ஸுபி அதோ (அ)ங்க³ஸ்ய தீ³ர்க⁴​:| ராமாப்⁴யாம்||

யஞாதௌ³ = யஞ் ப்ரத்யாஹார எழுத்துக்களை துவக்கமாக உடைய
ஸுபி = ஸுப் தொடருகையில்
அத: அங்க³ஸ்ய = அங்கத்தில் உள்ள அ-காரம்
தீ³ர்க⁴​: = தீர்க்கம் ஆகும்

யஞ் ப்ரத்யாஹார எழுத்துக்களை துவக்கமாக உடைய ஸுப் தொடருகையில், அங்கத்தில் உள்ள அ-காரம் தீர்க்கம் ஆகும். மூன்றாவது வேற்றுமை த்விவசனத்துக்கு ப்⁴யாம் என்கிற ப்ரத்யயம் சேர்க்க வேண்டும்.

राम + भ्याम्
(१४१ सुपि च) राम् + अ + भ्याम् = राम् + आ + भ्याम् = रामाभ्याम्

இதில் தீர்க்கம் ஆகவேண்டியது அங்கத்தில் உள்ள கடைசி எழுத்து என்பதை (21 அலோ(அ)ந்த்யஸ்ய) என்கிற பரிபாஷா சூத்திரத்தில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.


१४२ अतो भिस ऐस्॥ ७ | १ | ९ ॥

अदन्ताद् अङ्गात् परस्य भिस ऐस् स्यात् | अनेकाल्शित्सर्वस्य। रामै:॥

142 அதோ பி⁴ஸ ஐஸ்|| 7 | 1 | 9 ||

அத³ந்தாத்³ அங்கா³த் பரஸ்ய பி⁴ஸ ஐஸ் ஸ்யாத்| அனேகால்ஶித்ஸர்வஸ்ய| ராமை:||

அத³ந்தாத்³ அங்கா³த் = அகாரத்தை அங்கமாக உடைய சொல்லில் இருந்து
பரஸ்ய பி⁴ஸ = பரத்தில் உள்ள பி⁴ஸ் என்கிற ப்ரத்யயத்திற்கு
ஐஸ் ஸ்யாத் = ஐஸ் ஆதேசம் ஆகும்

அகாரத்தை அங்கமாக உடைய சொல்லில் இருந்து பரத்தில் உள்ள பி⁴ஸ் என்கிற ப்ரத்யயத்திற்கு ஐஸ் ஆதேசம் ஆகும்.

இந்த சூத்திரத்தின் படி, மூன்றாம் வேற்றுமை பன்மையில் (த்ருதீயா விபக்தி பஹுவசனம்) பி⁴ஸ் என்கிற ப்ரத்யயத்தைச் சேர்க்கும் போது, அது சென்று சேரும் அங்கமானது அ-காரத்தில் முடியுமானால் அப்போது பி⁴ஸ் என்பது ஐஸ் என்று மாறும்.

ஏன் மொத்தமாக பி⁴ஸ் என்பதை மாற்ற வேண்டும்? பார்க்க (45 அநேகால்‌ ஸி²த்ஸர்வஸ்ய)

(१४२ अतो भिस ऐस्) राम + भिस् = राम् + अ + ऐस्
(३३ वृद्धिरेचि) रामैस्
(९३ खरवसानयोर्विसर्जनीयः) रामै:

(142 அதோ பி⁴ஸ ஐஸ்) ராம + பி⁴ஸ் = ராம் + அ + ஐஸ்
(33 வ்ருʼத்³தி⁴ரேசி) ராமைஸ்
(93 க²ரவஸானயோர்விஸர்ஜனீய​:) ராமை:


१४३ ङेर्यः॥ ७ | १ | १३ ||

अतो ऽङ्गात्परस्य ङेर्यादेशः॥

143 ஙேர்ய​:|| 7 | 1 | 13 ||

அதோ (அ)ங்கா³த்பரஸ்ய ஙேர்யாதே³ஶ​:||

அத: அங்கா³த் = அ-வர்ணத்தை இறுதியாகக் கொண்ட அங்கத்திற்கு பிறகு
பரஸ்ய ஙே = அடுத்து வரும் ஙே என்கிற ப்ரத்யயத்துக்கு
ய ஆதே³ஶ​: = ய என்பது ஆதேசமாக வரும்

அ-வர்ணத்தை இறுதியாகக் கொண்ட அங்கத்திற்கு பிறகு அடுத்து வரும் ஙே என்கிற ப்ரத்யயம் ய என்பது ஆதேசமாக வரும்.

சதுர்த்தி விபக்தி (நான்காம் வேற்றுமை) ஏக வசனத்தில்,

राम + ङे = राम् + अ + ङे
(१४३ ङेर्यः) राम् + अ + य

ராம + ஙே = ராம் + அ + ஙே
(143 ஙேர்ய​:) ராம் + அ + ய

இப்போதும் நான்காம் வேற்றுமைக்குறிய வடிவம் கிடைக்கவில்லை. ய என்பது ஸுப் ப்ரத்யயத்தில் இல்லாததால் (141 ஸுபி ச) பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. அதற்கு அடுத்த சூத்திரத்தில் தீர்வு உள்ளது.


१४४ स्थानिवदादेशोऽनल्विधौ॥ १ | १ | ५६ ॥

आदेशः स्थानिवत् स्यात् न तु स्थान्यलाश्रयविधौ। इति स्थानिवत्त्वात् सुपि चेति दीर्घः। रामाय। रामाभ्याम्॥

144 ஸ்தா²னிவதா³தே³ஸோ²(அ)நல்விதௌ⁴|| 1 | 1 | 56 ||

ஆதே³ஶ​: ஸ்தா²னிவத் ஸ்யாத் ந து ஸ்தா²ன்யலாஸ்²ரயவிதௌ⁴| இதி ஸ்தா²னிவத்த்வாத் ஸுபி சேதி தீ³ர்க⁴​:| ராமாய| ராமாப்⁴யாம்||

ஆதே³ஶ​: = ஆதேசமானது
ஸ்தா²னிவத் = ஸ்தாநியைப் போன்று
ஸ்யாத் = இருக்கும்
அலாஸ்²ரய விதௌ⁴ = அல் எழுத்தைக் கொண்டு செய்யப் படும் நிலையில்
ந து ஸ்தா²நி = ஸ்தாநியைப் போன்று ஆகாது
இதி ஸ்தா²னிவத்த்வாத் = ஆகவே ஸ்தா²னியைப் போன்று இருப்பதால்
ஸுபி ச இதி தீ³ர்க⁴​: = ஸுபி ச என்கிற சூத்திரம் பயன்படுத்தி தீர்க்கம் ஆகிறது

அல்விதி என்பதை ஸமாஸமாகக் கொண்டு அதை நான்கு விதமான தத்புருஷ ஸமாசமாக பிரித்து அர்த்தம் கொடுத்து தீர்மானம் செய்யப் படுகிறது.

த்ருதீயா தத்புருஷ: – அலா விதி: = அல்-எழுத்துக்களைக் கொண்டு செய்யும் கார்யம்
பஞ்சமி தத்புருஷ: – அல: (பரஸ்ய) விதி: = அல்-எழுத்துக்களைத் தொடர்ந்து செய்யும் கார்யம்
ஷஷ்டி தத்புருஷ: – அல: (ஸ்தாநே) விதி: = அல்-எழுத்துக்களுக்கு பதிலாக செய்யும் கார்யம்
ஸப்தமி தத்புருஷ: – அலி (பரே) விதி: = அல்-எழுத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில் செய்யும் கார்யம்

ஸமாஸங்கள் குறித்த ப்ரகரணத்தில் தத்புருஷ ஸமாஸம் குறித்துப் பார்க்கலாம். இங்கே இந்த நான்கு விதமாக பொருள் கொண்டாலும், விளைவு ஒன்றே. அல்விதி என்பது ஒரே ஒரு எழுத்தைக் கொண்ட விதி. அவ்வாறு இல்லாத நிலையில் ஸ்தாநியின் எல்லா பண்புகளையும் ஆதேசமாகிற ப்ரத்யயமும் பெறும்.

ராம + ஙே = ராம் + அ + ஙே
(143 ஙேர்ய​:) ராம் + அ + ய

ய என்பது ய் + அ என்று ஒன்றுக்கு மேற்பட்ட அல்-ஆக இருப்பதால் (அல் விதியில் அடங்காது) இது ஸ்தானியாகிய ஙே-வின் பண்புகளைப் பெறுகிறது. ஙே என்பது ஸுப்-பில் ஒன்று என்பதால் அதனிடத்தில் ஆதேசமாகிற ய-காரமும் ஸுப்-பில் ஒன்றாகவே கருதப் படவேண்டும் என்று இந்த சூத்திரத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் (141 ஸுபி ச) சூத்திரத்தை ய-காரத்திற்கும் பயன்படுத்தி ராமாய என்கிற ரூபம் கிடைக்கிறது.

சதுர்த்தி விபக்தி த்விவசனம் ராமாப்யாம் என்பது த்ருதீயா விபக்தி த்விவசனம் போன்றதே.


१४५ बहुवचने झल्येत्॥ ७ | ३ | १०३ ॥

झलादौ बहुवचने सुप्यतो ऽङ्गस्यैकारः। रामेभ्यः। सुपि किम् ? पचध्वम्॥

145 ப³ஹுவசனே ஜ²ல்யேத்|| 7 | 3 | 103 ||

ஜ²லாதௌ³ ப³ஹுவசனே ஸுப்யதோ (அ)ங்க³ஸ்யைகார​:| ராமேப்⁴ய​:| ஸுபி கிம் ? பசத்⁴வம்||

ஜ²லாதௌ³ = ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்துக்களை துவக்கமாகக் கொண்ட
ப³ஹுவசனே ஸுபி = பன்மை வேற்றுமையில் உள்ள ஸுப் தொடருகையில்
அத: அங்க³ஸ்ய = அங்கத்தின் இறுதியில் உள்ள அ-காரம்
ஏ-கார: = ஏ-காரம் ஆதேசம் ஆகும்

ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்துக்களை துவக்கமாகக் கொண்ட பன்மை வேற்றுமையில் உள்ள ஸுப் தொடருகையில் அங்கத்தின் இறுதியில் உள்ள அ-காரம் ஏ-காரம் ஆதேசம் ஆகும். நான்காம் வேற்றுமை பன்மையில் (சதுர்த்தீ விபக்தி பஹுவசனம்)

राम् + अ + भ्यस् = राम् + ए + भ्यस् = रामेभ्यस् = (२०५ स सजुषो रु:) रामेभ्यर् = (९३ खरवसानयो: विसर्जनीय:) = रामेभ्य:
ராம் + அ + ப்⁴யஸ் = ராம் + ஏ + ப்⁴யஸ் = ராமேப்⁴யஸ் = (205 ஸ ஸஜுஷோ ரு:) ராமேப்⁴யர் = (93 க²ரவஸானயோ: விஸர்ஜனீய:) = ராமேப்⁴ய:

ஸுபி கிம் ? பசத்⁴வம்
இந்த சூத்திரத்தில் இன்னொரு விசாரம் இருக்கிறது. ஸுப் என்று ஏன் சொல்ல வேண்டும்?

பசத்⁴வம் என்பது “சமைப்பீர்களாக” என்று பன்மையில் கூறும் வினைச்சொல். இதனை பச + த்⁴வம் என்று சேர்க்கும் போது இந்த சூத்திரத்தில் ஸுப் என்று விதிக்காவிட்டால் பசேத்⁴வம் என்று ஆகி இருக்கும். ஸுப் ப்ரத்யயங்களுக்கு மட்டும் என்று இந்த சூத்திரத்தை குறுக்கியதால் அவ்வாறு பாதிக்காது.


१४६ वावसाने॥ ८ | ४ | ५६ ॥

अवसाने झलां चरो वा। रामात्, रामाद्। रामाभ्याम्। रामेभ्यः। रामस्य॥

146 வாவஸானே|| 8 | 4 | 56 ||

அவஸானே ஜ²லாம்ʼ சரோ வா| ராமாத், ராமாத்³| ராமாப்⁴யாம்| ராமேப்⁴ய​:| ராமஸ்ய||

அவஸானே = வேறு எந்த எழுத்துக்களும் தொடராத நிலையில் (அவஸாநத்தில்)
ஜ²லாம்ʼ = இறுதியில் உள்ள ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்துக்கு
சர் வா = சர் ஆதேசம் ஆகலாம்

வேறு எந்த எழுத்துக்களும் தொடராத நிலையில் (அவஸாநத்தில்), இறுதியில் உள்ள ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்துக்கு சர் ஆதேசம் ஆகலாம்.

ஐந்தாம் வேற்றுமை ஒருமையில் (பஞ்சமீ விபக்தி ஏக வசனம்)

राम + ङसि
(१४० टाङसिङसामिनात्स्याः) राम् + अ + आत्
(४२ अक सवर्णे दीर्घ) रामात्
(१४६ वावसाने) रामात्
(६७ झलां जशोऽन्ते ) रामाद्

ராம + ஙஸி
(140 டாஙஸிஙஸாமினாத்ஸ்யா​:) ராம் + அ + ஆத்
(42 அக ஸவர்ணே தீ³ர்க⁴) ராமாத்
(146 வாவஸானே) ராமாத்
(67 ஜ²லாம்ʼ ஜஸோ²(அ)ந்தே ) ராமாத்³

ஐந்தாம் வேற்றுமை இருமை மற்றும் பன்மை நான்காம் வேற்றுமையைப் போன்றதே. ஆறாம் வேற்றுமை ஒருமையைப் பார்ப்போம்.

राम + ङस्
(१४० टाङसिङसामिनात्स्याः) राम् + अ + स्य = रामस्य

ராம + ஙஸ்
(140 டாஙஸிஙஸாமினாத்ஸ்யா​:) ராம் + அ + ஸ்ய = ராமஸ்ய


१४७ ओसि च॥ ७,३.१०४ ॥

अतोऽङ्गस्यैकारः। रामयोः॥

147 ஓஸி ச|| 7,3.104 ||

அதோ(அ)ங்க³ஸ்யைகார​:| ராமயோ​:||

அத: அங்க³ஸ்ய = அ-காரத்தை அந்தமாக உடைய அங்கத்திற்கு
ஏகார: = ஏ-காரம் ஆதேசம் ஆகும்

அ-காரத்தை அந்தமாக உடைய அங்கத்திற்கு ஏ-காரம் ஆதேசம் ஆகும்.
ஆறாம் வேற்றுமை இருமையில்

राम + ओस् = राम् + अ + ओस्
(१४७ ओसि च) = राम् + ए + ओस्
(२२ एचोऽयवायाव) = राम् + अय् + ओस् = रामयोस्
(२०५ स सजुषो रु:) = रामयोर्
(९३ खरवसानयो: विसर्जनीय:) = रामयो:

ராம + ஓஸ் = ராம் + அ + ஓஸ்
(147 ஓஸி ச) = ராம் + ஏ + ஓஸ்
(22 ஏசோ(அ)யவாயாவ) = ராம் + அய் + ஓஸ் = ராமயோஸ்
(205 ஸ ஸஜுஷோ ரு:) = ராமயோர்
(93 க²ரவஸானயோ: விஸர்ஜனீய:) = ராமயோ:


१४८ ह्रस्वनद्यापो नुट्॥ ७ | १ | ५४ ॥

ह्रस्वान्तान्नद्यन्तादाबन्ताच्चाङ्गात्परस्यामो नुडागमः॥

148 ஹ்ரஸ்வனத்³யாபோ நுட்|| 7 | 1 | 54 ||

ஹ்ரஸ்வாந்தான்னத்³யந்தாதா³ப³ந்தாச்சாங்கா³த்பரஸ்யாமோ நுடா³க³ம​:||

ஹ்ரஸ்வாந்தாத் = குறில் உயிர் எழுத்துக்களில் முடிகிற
நத்³யந்தாதாத் = நதி³ என்கிற ஸம்ஜ்ஞாவில் முடிகிற
ஆப³ந்தாத் ச = ஆப் என்கிற ப்ரத்யயத்தில் முடிகிற
அங்காத் = அங்கத்திலிருந்து
பரஸ்ய அம: = இறுதியில் சேர்ந்து கொள்ளும் அம் என்கிற ஸுப் விகுதிக்கு
நுடா³க³ம​: = நுட் ஆகமம் ஆகும்

ஆகமம் என்பது புதியதாக வந்து சேரும் எழுத்து. குறில் உயிர் எழுத்துக்களில் முடிகிற, நதி³ என்கிற ஸம்ஜ்ஞாவில் முடிகிற, ஆப் என்கிற ப்ரத்யயத்தில் முடிகிற அங்கத்திலிருந்து இறுதியில் சேர்ந்து கொள்ளும் அம் என்கிற ஸுப் விகுதிக்கு நுட் ஆகமம் ஆகும்.

நதி என்பது இ-காரம் மற்றும் ஊ-காரத்தில் முடியும் பெண்பாற் சொற்களைக் குறிக்கும்.

ஆறாம் வேற்றுமை பன்மையில் (ஷஷ்டி விபக்தி பஹுவசனத்தில்) ஆம் என்கிற ப்ரத்யயத்தைச் சேர்க்க வேண்டும்.

राम + आम्
(८४ आद्यन्तौ टकितौ) राम + नुट् + आम् (न् + उ + ट्) = राम + न् + आम् = राम + नाम्

ராம + ஆம்
(84 ஆத்³யந்தௌ டகிதௌ) ராம + நுட் + ஆம் (ந் + உ + ட்) = ராம + ந் + ஆம் = ராம + நாம்

நுட் என்பதில் உ மற்றும் ட் என்பவை இத் ஆகையால் லோபம் ஆகி விடும். இந்நிலையில் அடுத்த சூத்திரத்தைப்

பார்க்க வேண்டும்.


१४९ नामि॥ ६,४.३ ॥

अजन्ताङ्गस्य दीर्घः। रामाणाम्। रामे। रामयोः। सुपि – एत्त्वे कृते॥

149 நாமி|| 6,4.3 ||

அஜந்தாங்க³ஸ்ய தீ³ர்க⁴​:| ராமாணாம்| ராமே| ராமயோ​:| ஸுபி – ஏத்த்வே க்ருʼதே||

அஜந்த = அச் என்னும் உயிர் எழுத்துக்களில் முடிகிற
அங்க³ஸ்ய = அங்கத்தின் இறுதிக்கு
தீ³ர்க⁴​: = நெடில் ஆகலாம்.

அங்கத்தின் இறுதியில் உள்ள அச் ப்ரத்யாஹார எழுத்துக்கள், நாம் தொடர்ந்து இருக்கும் போது, நெடில் ஆகலாம். சென்ற சூத்திரத்தில் ஆறாம் வேற்றுமை பன்மை வடிவத்தின் தொடர்ச்சி

राम + नाम्
(१४९ नामि) रामा + नाम्
(१३८ अट्कुप्वाङ्नुम्व्यवाये ऽपि) रामाणाम्

ராம + நாம்
(149 நாமி) ராமா + நாம்
(138 அட்குப்வாங்னும்வ்யவாயே (அ)பி) ராமாணாம்

இனி ஸப்தமீ விபக்தி ஏகவசநத்தைப் பார்ப்போம்.

राम + ङि
ராம + ஙி

ஙி என்பதில் ங் + இ என்று பிரித்தால் ங் என்பது இத் ஆகி விடும். (பார்க்க 136 லஶக்வதத்³தி⁴தே).

राम + इ
(२७ आद्गुण:) रामे

ராம + இ
(27 ஆத்³கு³ண:) ராமே

ஸப்தமீ விபக்தி த்விவசனம், ஷஷ்டி விபக்தி த்விவசனம் போலவே தான்.

அடுத்து ஸப்தமீ விபக்தி பஹுவசனத்தில் ஸுப் என்கிற ப்ரத்யயம் சேர்க்க வேண்டும்.

राम + सुप् (प् = इत्) = राम + सु
(१४५ बहुवचने झल्येत्) रामे + सु

ராம + ஸுப் (ப் = இத்) = ராம + ஸு
(145 ப³ஹுவசனே ஜ²ல்யேத்) ராமே + ஸு

இந்நிலையில் அடுத்த சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்.


१५० आदेशप्रत्यययोः॥ ८ | ३ | ५९ ॥

इण्कुभ्यां परस्यापदान्तस्यादेशस्य प्रत्ययावयवस्य यः सस्तस्य मूर्धन्यादेशः। ईषद्विवृतस्य सस्य तादृश एव षः। रामेषु। एवं कृष्णादयो ऽप्यदन्ताः॥

150 ஆதே³ஶப்ரத்யயயோ​:|| 8 | 3 | 59 ||

இண்குப்⁴யாம்ʼ பரஸ்யாபதா³ந்தஸ்யாதே³ஶஸ்ய ப்ரத்யயாவயவஸ்ய ய​: ஸஸ்தஸ்ய மூர்த⁴ன்யாதே³ஶ​:|

ஈஷத்³விவ்ருʼதஸ்ய ஸஸ்ய தாத்³ருʼஶ ஏவ ஷ​:| ராமேஷு| ஏவம்ʼ க்ருʼஷ்ணாத³யோ (அ)ப்யத³ந்தா​:||

இண்குப்⁴யாம்ʼ = இண் ப்ரத்யாஹாரம் மற்றும் க-வர்க்கம்
பரஸ்ய அபதா³ந்தஸ்ய = இறுதியில் பதம் இல்லாத
ஶஸ்ய = ஶ-காரத்துக்கு
ஆதே³ஶஸ்ய ப்ரத்யய அவயவஸ்ய = ஆதேஸமானதோ, ப்ரத்யயமானதோ
ய​: ஸ: தஸ்ய = எந்த ஸ-காரம் உள்ளதோ அதற்கு
மூர்த⁴ன்ய ஆதே³ஶ​: = மூர்த⁴ன்ய எழுத்து ஆதேசம் ஆகும்
ஈஷத்³விவ்ருʼதஸ்ய = ஈஷத்³விவ்ருʼதமான
ஸஸ்ய = ஸ-காரத்திற்கு
தாத்³ருʼஶ ஏவ ஷ​: = அதே போலவே ஷ-காரம் ஆகும்

இண் ப்ரத்யாஹாரம் மற்றும் க-வர்க்கம் இறுதியில் பதம் இல்லாத ஶ-காரத்துக்கு ஆதேஸமானதோ, ப்ரத்யயமானதோ எந்த ஸ-காரம் உள்ளதோ அதற்கு மூர்த⁴ன்ய எழுத்து ஆதேசம் ஆகும். ஈஷத்³விவ்ருʼதமான ஸ-காரத்திற்கு அதே போலவே ஷ-காரம் ஆகும்.

ஆகவே ராமே + ஸு என்பது ராமேஷு என்று ஆகும்.

இத்துடன் அகாராந்த ராம சப்தம் நிறைவடைகிறது. இதைப்போலவே இதர அகாராந்த சொற்களான க்ருஷ்ண: முதலியவையும் வேற்றுமை உருபுகளைப் பெறுகின்றன.

(தொடரும்)

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)