அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3

४४ सर्वत्र विभाषा गो । ६ । १ । १२२ ॥

लोके वेदे चैङन्तस्य गोरति वा प्रकृतिभाव पदान्ते । गोअग्रम्‌, गोऽग्रम्‌ । एङन्तस्य किम्‌ ? चित्रग्वग्रम्‌ । पदान्ते किम्‌? गो ।।

லோகே வேதே³ சைஙந்தஸ்ய கோ³ரதி வா ப்ரக்ருʼதிபா⁴வ பதா³ந்தே | கோ³அக்³ரம்‌, கோ³(அ)க்³ரம்‌ | ஏஙந்தஸ்ய கிம்‌ ? சித்ரக்³வக்³ரம்‌ | பதா³ந்தே கிம்‌? கோ³ ||

லோகே வேதே³ ச = பொது மற்றும் வேத பிரயோகங்களில்
பதா³ந்தே = சொல்லின் முடிவில்
ஏங் அந்தஸ்ய கோ³ = கோ³ என்கிற ஏங் ப்ரத்யாஹார எழுத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து
அதி = ஹ்ரஸ்வ அ-காரம் வந்தால்
வா = விகல்பத்துடன்
ப்ரக்ருʼதிபா⁴வ: = இயல்பு நிலையிலேயே மாற்றமில்லாமல் இருக்கலாம்

வேத பிரயோகத்திலும், உலக வழக்கிலும் ஹ்ரஸ்வ அ-காரம் தொடர்ந்து வரும் “கோ³” என்கிற சொல் விகல்பத்துடன் எந்த மாற்றமும் இல்லாமல் ப்ரகிருதிபா⁴வத்தில் இருக்கலாம்.

உதாரணம்:

गो अग्रम्

கோ³ + அக்³ரம் = கோ³ அக்³ரம்

இந்த சூத்திரம் பதாந்தமாக (பதத்தின் இறுதியாக) வரும் கோ- என்கிற பதத்துக்கு மட்டுமே பிரயோகிக்க முடியும். அபதாந்தமான (பதத்தின் இறுதியாக இல்லாத) கோ சப்தத்துக்கு பிரயோகிக்க இயலாது.


४५ अनेकाल्‌ शित्सर्वस्य । १ । १ । ५५ ॥

इति प्राप्ते ।।.

अनेकाल् शिच्चादेशो सर्वस्य स्थाने भवत: ||

45 அநேகால்‌ ஶித்ஸர்வஸ்ய | 1 | 1 | 55 ||

அனேகால் ஶிச்சாதே³ஶோ ஸர்வஸ்ய ஸ்தா²னே ப⁴வத: ||

அநேக அல் = ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்,மெய் எழுத்துக்கள்
ஶித் = ஶ் என்கிற ஶ-காரம் இத் ஆக உள்ள போது
ஸர்வஸ்ய = எல்லா எழுத்துக்களுக்கும் பதிலாக இடம் பெற வேண்டும்

சூத்திரங்களில் ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல் என்று விதிக்கப் படும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்,மெய் எழுத்துக்கள் அல்லது ஶ-காரம் இத் ஆக உள்ள போது, அந்த சொல் முழுவதையும் மாற்றி புதிய சொல் (ஆதேசம்) இடம் பெற வேண்டும்.

உதாரணம்:
राम + भिस् (अतो भिस् ऐस्)
ராம + பி⁴ஸ் (அதோ பி⁴ஸ் ஐஸ்) |

இதில் ஐஸ் என்பது அநேக அல் ஆகும். அது பி⁴ஸ் என்கிற சொல் முழுவதையும் நீக்கி இடம் பெறுகிறது.


४६ ङिच्च । १ । १ । ५३ ॥

ङिदनेकालप्यन्त्यस्ययैव स्यात्‌ ।।.

46 ஙிச்ச | 1 | 1 | 53 ||

ஙித³னேகாலப்யந்த்யஸ்யயைவ ஸ்யாத்‌ || .

ஙித் = கடைசியாக உள்ள ‘இத்’ ஆனா ங் எழுத்து
அநேக அல் அபி = ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டிருக்கையில்
அந்த்யஸ்ய ஏவ ஸ்யாத்‌ = கடைசி எழுத்துக்கு மட்டுமே (ஆதேசம் ஆகவேண்டும்).

ஙித் என்கிற ப்ரத்யாஹாரம் பல எழுத்துக்களைக் கொண்ட போதிலும் இறுதி எழுத்துக்கு மட்டுமே பதிலீடாக (ஆதேசமாக) வரும். உதாரணமாக, அவங் (अवङ्) என்பது ஆதேசமாக வரும்போது, அதில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் (அநேக அல்) இருப்பது கவனிக்கத் தக்கது. இவ்வாறு இருக்கையில் கோ³ என்கிற பதத்துக்கு ஆதேசமாக ‘அவங்’ விதிக்கப் படும் போது (“அநேக அல்” விதிப்படி அமைந்தாலும்) ங-காரத்தில் முடிவதால் க்³ + ஓ என்பதில் ஓ என்கிற இறுதி எழுத்துக்கு மட்டுமே பதிலியாக (ஆதேசமாக) வரும் என்று இந்த ஙிச்ச விதி கூறுகிறது.


४७ अवङ्‌ स्फोटायनस्य । ६ । १ । १२३ ॥

पदान्ते एङन्तस्य गोरवङ्‌ वाऽचि । गवाग्रम्‌, गोऽग्रम्‌ । पदान्ते किम्‌ ? गवि ।।.

47 அவங்‌ ஸ்போ²டாயனஸ்ய | 6 | 1 | 123 ||

பதா³ந்தே ஏஙந்தஸ்ய கோ³ரவங்‌ வா(அ)சி | க³வாக்³ரம்‌, கோ³(அ)க்³ரம்‌ | பதா³ந்தே கிம்‌ ? க³வி || .

ஸ்போ²டாயனஸ்ய = ஸ்போடாயனருடைய விதி
பதா³ந்தே = பதத்தின் (சொல்லின்) முடிவில்
ஏஙந்தஸ்ய கோ³ = ஏங் ப்ரத்யஹார எழுத்துக்களில் முடியும் கோ³ என்ற பதத்துக்கு
அவங்‌ வா = விகல்பத்துடன் பதிலீடாக அவங் இடம்பெறலாம்
அசி = அச் தொடர்ந்து இருக்கையில்

ஸ்போடாயனரின் கருத்துப் படி, ஏங் ப்ரத்யஹார எழுத்துக்களில் முடியும் கோ³ என்ற பதத்துக்கு அச் தொடர்ந்து இருக்கையில் விகல்பத்துடன் பதிலீடாக ‘அவங்’ இடம்பெறலாம்.

உதாரணமாக, கோ³ + அக்³ரம் (गो + अग्रम्) => க்³ ஓ + அக்³ரம் => க்³ + அவங் + அக்³ரம்
ங் என்பது இத் ஆகி ஹலந்த்யம் சூத்திரப்படி லோபம் ஆகி விடுகிறது. ஆகையால்,

க்³ + அவ + அக்³ரம் = க³வ + அக்³ரம் => அக: சவர்ணே தீர்க³: சூத்திரப்படி => க³வாக்³ரம் (பசுக்களின் கூட்டம்)

இந்த விதி விகல்பத்துடன் விதிக்கப் படுகிறது. அதாவது இந்த விதியை உபயோகப் படுத்தலாம் – உபயோகிக்காமலும் கூட இருக்கலாம்.

அதோடு ஸர்வத்ர விபா⁴ஷா கோ³ சூத்திரப்படி ஹ்ரஸ்வ அ-காரம் தொடர்ந்து வரும் “கோ³” என்கிற சொல் விகல்பத்துடன் எந்த மாற்றமும் இல்லாமல் ப்ரகிருதிபா⁴வத்தில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ள படியால்,

கோ³ அக்³ரம் என்று தனித் தனி சொற்களாக இருப்பதும் உண்டு.


४८ इन्द्रे च । ६ । १ । १२४ ॥

गोरवङ्‌ स्यादिन्द्रे । गवेन्द्र ।।.

48 இந்த்³ரே ச | 6 | 1 | 124 ||

கோ³ரவங்‌ ஸ்யாதி³ந்த்³ரே | க³வேந்த்³ர || .

இந்த்³ரே = இந்த்ர என்ற சொல் தொடர்ந்து வரும் போது
கோ³ரவங்‌ = கோ³ வின் இறுதி எழுத்துக்கு ‘அவங்’ பதிலீடாக வரும்

இந்த்ர என்ற சொல் தொடர்ந்து வரும் போது கோ³ வின் இறுதி எழுத்துக்கு ‘அவங்’ பதிலீடாக வரும்.

உதாரணம்
गो + इन्द्र = ग् + अवङ् + इन्द्र = ग् + अव + इन्द्र = गव् + अ +इ + न्द्र = गव् + ए + न्द्र = गवेन्द्र:

கோ³ + இந்த்³ர = க்³ + அவங் + இந்த்³ர = க்³ + அவ + இந்த்³ர = க³வ் + அ +இ + ந்த்³ர = க³வ் + ஏ + ந்த்³ர = க³வேந்த்³ர:


४९ दूराद्धूते च । ८ । २ । ८४ ॥

दूरात्सम्बोधने वाक्यस्य टे प्लुतो वा ।।.

49 தூ³ராத்³தூ⁴தே ச | 8 | 2 | 84 ||

தூ³ராத்ஸம்போ³த⁴னே வாக்யஸ்ய டே ப்லுதோ வா ||

தூ³ராத் = தூரத்திலிருந்து
ஸம்போ³த⁴னே = கூப்பிடுகையில்
வாக்யஸ்ய டே ப்லுதோ வா = வாக்கியத்தின் கடைசி உயிர் எழுத்து (டி) ப்லுத ஸ்வரத்துடன் ஒலிக்கும்

தூரத்திலிருந்து கூப்பிடுகையில் வாக்கியத்தின் கடைசி உயிர் எழுத்து (டி) ப்லுத ஸ்வரத்துடன் ஒலிக்கும்.

உதாரணம்:
आगच्छ कृष्ण3
ஆக³ச்ச² க்ருʼஷ்ண3


५० प्लुतप्रगृह्या अचि नित्यम्‌ । ६ । १ । १२५ ॥

एतेऽचि प्रकृत्या स्यु । आगच्छ कृष्ण ३ अत्र गौश्चरति ।।.

50 ப்லுதப்ரக்³ருʼஹ்யா அசி நித்யம்‌ | 6 | 1 | 125 ||

ஏதே(அ)சி ப்ரக்ருʼத்யா ஸ்யு | ஆக³ச்ச² க்ருʼஷ்ண 3 அத்ர கௌ³ஶ்சரதி || .

ஏதே = இந்த இரண்டும்
அசி = அச் (உயிர் எழுத்துக்கள்) தொடர்ந்து இருக்கையில்
ப்ரக்ருʼத்யா ஸ்யு = இயல்பிலேயே இருக்கும்

ப்லுதத்தினை தொடர்ந்து வரும் உயிர் எழுத்து எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் இயல்பிலேயே இருக்கும்.

உதாரணம்:
आगच्छ कृष्ण3 अत्र गौश्चरति
ஆக³ச்ச² க்ருʼஷ்ண3 அத்ர கௌ³ஶ்சரதி

இதில் கிருஷ்ண் + அ3 + அ + த்ர = இரண்டு அ-வும் சேர்ந்து அக: ஸவர்ணே தீர்க: சூத்திரம் பிரயோகிப்பதை இந்த சூத்திரம் தடுக்கிறது.


५१ ईदूदेद् द्विवचनं प्रगृह्यम्‌ १ | १ | ११

ईदूदेदन्तं द्विवचनं प्रगृह्यं स्यात्‌ । हरी एतौ । विष्णू इमौ । गङ्‌गे अमू ।।.

51 ஈதூ³தே³த்³ த்³விவசனம்ʼ ப்ரக்³ருʼஹ்யம்‌ 1 | 1 | 11

ஈதூ³தே³த³ந்தம்ʼ த்³விவசனம்ʼ ப்ரக்³ருʼஹ்யம்ʼ ஸ்யாத்‌ | ஹரீ ஏதௌ | விஷ்ணூ இமௌ | க³ங்‌கே³ அமூ || .

ஈதூ³தே³த³ந்தம்ʼ த்³விவசனம்ʼ = ஈத், ஊத், ஏத் ஆகிய ப்ரத்யாஹார எழுத்துக்களில் முடியும், இருமை சொற்கள்
ப்ரக்³ருʼஹ்யம்ʼ ஸ்யாத்‌ = ப்ரக்³ருʼஹ்யம்ʼ எனப்படும்.

இது ஒரு சம்ஜ்ஞா சூத்திரம். ஈ, ஊ, ஏ ஆகிய எழுத்துக்களை முடிவாகக் கொண்ட இருமைச்சொற்கள் ப்ரக்ருஹ்யம் எனப்படும். இதனைத் தொடர்ந்து வரும் சூத்திரங்களில் ப்ரக்ருஹ்யம் என்று கருதப் படும் சொற்கள் விளக்கப் படுகிறது. இவ்வாறு அமையும் இருமைச் சொற்கள் சந்தியில் இன்னொரு சொல்லுடன் இணையாது.


५२ अदसो मात्‌ । १ । १ । १२ ।

अस्मात्परावीदूतौ प्रगृह्यौ स्त । अमी ईशा । रामकृष्णावमू आसाते । मात्किम्‌ ? अमुकेऽत्र ।।

52 அத³ஸோ மாத்‌ | 1 | 1 | 12 |

அஸ்மாத்பராவீதூ³தௌ ப்ரக்³ருʼஹ்யௌ ஸ்த | அமீ ஈஶா | ராமக்ருʼஷ்ணாவமூ ஆஸாதே | மாத்கிம்‌ ? அமுகே(அ)த்ர ||

அஸ்மாத் (அதஸ:) = அதஸ: என்னும் மாற்றுப் பெயர்களில் முடிவில் “ம்” என்ற எழுத்துக்கு
பரா ஈத் உதௌ = பிறகு வரும் ஈ மற்றும் ஊ
ப்ரக்³ருʼஹ்யௌ ஸ்த = ப்ரக்ருஹ்யம் ஆகும்

“அது” என்ற அர்த்தத்தில் வரும் அமூ, அமீ ஆகிய சொற்களில் இறுதியில் ம் என்ற எழுத்துடன் இணைந்து வரும் ஊ, ஈ ஆகிய எழுத்துக்கள் ப்ரக்ருஹ்யம் ஆகும். அமீ + ஈஸ: என்று சந்தி சேரும் போது இச்சொற்கள் ப்ரக்ருஹ்யம் ஆகையால் சந்தி சேர்ந்து ஒரே சொல்லாக மாறாமல் தனித்தனி சொற்களாகவே இருக்கும்.

கவனிக்க: மாத் கிம்‌? (ஏன் “மாத்” என்று ம்-க்கு பின்னால் வரும் எழுத்து என்று சொல்ல வேண்டும்?) – இந்த கேள்வியை லகுகௌமுதியின் ஆசிரியரே கேட்டு விடையும் கூறுகிறார். இவ்வாறு செய்வதற்கு பெயர் பதக்ருத்யம் எனப்படும். தெளிவாக்குதல். இருமை சொற்களின் இறுதியில் வரும் ஈ, ஊ. ஏ ஆகிய எழுத்துக்கள் ப்ரக்ருஹ்யம் என்று கூறப்பட்டாலும் இந்த சூத்திரம் (அதஸோ மாத்) அதஸ: எனப்படும் சொற்களில் ம் என்கிற எழுத்துக்கு பின் வரும் ஈ, ஊ ஆகிய எழுத்துக்களே ப்ரக்ருஹ்யம் ஆகும். உதாரணமாக அமுகே + அத்ர = அமுகேऽத்ர என்று சேரும் (अमुकेऽत्र ).


५३ चादयोऽसत्वे | १ | ४ | ५७

अद्रव्यार्थाश्चादयो निपाता स्यु ।।.

53 சாத³யோ(அ)ஸத்வே | 1 | 4 | 57

அத்³ரவ்யார்தா²ஶ்சாத³யோ நிபாதா ஸ்யு ||

ச ஆத³ய: = ச முதலிய சொற்கள்
அத்³ரவ்யார்தா² = பொருட்களை (த்ரவ்யம்) குறிப்பிடும் அர்த்தத்தில் வராத போது
நிபாதா ஸ்யு: = நிபாதம் எனப்படும்

கணபாடத்தில் (பெயர்சொற்களின் தொகுப்பு நூல்) சாதிகணம் எனப்படும் ச முதலிய சொற்கள். ஸத்வமிதி த்³ரவ்யமுச்யதே , லிங்க³ஸங்க்²யான்விதம் த்³ரவ்யம் (सत्वमिति द्रव्यमुच्यते , लिङ्गसंख्यान्वितम् द्रव्यम्) – த்ரவ்யம் என்பது உயிருள்ளவை மற்றும் எண்ணிக்கை (எண்கள்) ஆகும். ச முதலிய சொற்கள் உயிருள்ளவை மற்றும் எண்ணிக்கையை குறிப்பிடாத போது நிபாதம் எனப்படும். நிபாதம் என்பது மாறிலி ஆகும். எந்த வேற்றுமை உருபு, காலம், ஒருமை பன்மை ஆகிய மாற்றங்கள் அற்றவை.


५४ प्रादय । १ । ४ । ५८ ॥

एतेऽपि तथा ।।.

54 ப்ராத³ய | 1 | 4 | 58 ||

ஏதே(அ)பி ததா² = இதுவும் அவ்வாறே

ப்ராதிகணம் எனப்படும் ப்ர முதலிய சொற்களும் முந்தைய சூத்திரத்தில் சொன்னவாறே உயிரற்ற (எண்களையும் குறிக்காத போது) நிபாதம் ஆகும்.


५५ निपात एकाजनाङ्‌ १ | १ | १४

एकोऽज्‌ निपात आङ्‌वर्ज प्रगृह्य स्यात्‌ । इ इन्द्र । उ उमेश । ’वाक्यस्मरणयोरङित्‌; आ एवं नु मन्यसे । आ एवं किल तत्‌ । अन्यत्र ङित्‌ ; आ ईषदुष्णम्‌ ओष्णम्‌ ।।

55 நிபாத ஏகாஜனாங்‌ 1 | 1 | 14

ஏகோ(அ)ஜ்‌ நிபாத ஆங்‌வர்ஜ ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ | இ இந்த்³ர | உ உமேஶ | ’வாக்யஸ்மரணயோரஙித்‌; ஆ ஏவம்ʼ நு மன்யஸே | ஆ ஏவம்ʼ கில தத்‌ | அன்யத்ர ஙித்‌ ; ஆ ஈஷது³ஷ்ணம்‌ ஓஷ்ணம்‌ ||

ஏகோ(அ)ச் நிபாத: = ஓரெழுத்தில் அமையும் அச் (உயிர்) எழுத்துக்கள் கொண்ட நிபாதங்களும்
ஆங்‌வர்ஜ: = ஆங் அல்லது ஆ-வைத் தவிர்த்து
ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ = ப்ரக்ருஹ்யம் ஆகும்

ஒரே உயிர் எழுத்தில் அமையும் நிபாத (மாறிலி) சொற்கள் – அ, ஆ போன்றவை, ஆங் தவிர மற்றவை ப்ரக்ருஹ்யம் ஆகும்.


५६ ओत्‌ । १ । १ । १५ ॥

ओदन्तो निपात प्रगृह्य स्यात्‌ । अहो ईशा ।।

56 ஓத்‌ | 1 | 1 | 15 ||

ஓத³ந்தோ நிபாத ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ | அஹோ ஈஶா ||

ஓத³ந்தோ நிபாத = ஓ என்கிற எழுத்தில் முடியும் நிபாதம் (மாறிலி)
ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ = ப்ரக்ருஹ்யம் ஆகும்

சா-திகணத்தில் ஓ என்கிற எழுத்தில் முடியும் ஓ, அஹோ, உதாஹோ, அதோ² ஆகிய சொற்களில் ஓரெழுத்து சொல்லான ஓ என்கிற நிபாத சொல் ப்ரக்ருஹ்யம் என்று முந்தைய நிபாத ஏகாஜனாங்‌ சூத்திரத்தில் கண்டோம். இந்த சூத்திரம் ஓ-வில் முடியும் மற்ற நிபாத சொற்களும் ப்ரக்ருஹ்யம் என்று விதிக்கிறது.


५७ सम्बुद्धौ शाकल्यस्येतावनार्षे | १ । १ । १६ ||

सम्बुद्धिनिमित्तक ओकारो वा प्रगृह्योऽवैदिके इतौ परे । विष्णो इति, विष्ण इति, विष्णविति ।।

57 ஸம்பு³த்³தௌ⁴ ஶாகல்யஸ்யேதாவனார்ஷே | 1 | 1 | 16 ||

ஸம்பு³த்³தி⁴னிமித்தக ஓகாரோ வா ப்ரக்³ருʼஹ்யோ(அ)வைதி³கே இதௌ பரே | விஷ்ணோ இதி, விஷ்ண இதி, விஷ்ணவிதி ||

ஸம்பு³த்³தி⁴னிமித்தக ஓகார: = விளிச் சொல்லாக உபயோகிக்கப் படும் ஓ என்கிற எழுத்து
ப்ரக்³ருʼஹ்ய: வா = விகல்பத்துடன் ப்ரக்ருஹ்யம் ஆகலாம்
அவைதி³கே = வேத மொழியல்லாத பொது மொழியில்
இதோ பரே = இதி என்கிற சொல் தொடர்ந்திருக்கையில்

ஸாகல்யரின் கருத்துப் படி, விளிச்சொற்களில் ஓ என்ற எழுத்து அமைந்து இதி என்கிற சொல் தொடர்ந்து வரும் போது வேத மொழியல்லாத பொது வழக்கில் ப்ரக்ருஹ்யம் ஆகலாம்.
உதாரணம்:
வாயோ இதி (ஸாகல்யரின் கருத்துப் படி)
வாயவிதி (மற்றவரின் கருத்துப்படி)


५८ मय उञो वो वा | ८ । ३ । ३३ ||

मय परस्य उञो वो वाऽचि । किम्वुक्तम्‌, किमु उक्तम्‌ ।।.

58 மய உஞோ வோ வா | 8 | 3 | 33 ||

மய பரஸ்ய உஞோ வோ வா(அ)சி | கிம்வுக்தம்‌, கிமு உக்தம்‌ || .

மய பரஸ்ய உஞ: = மய் ப்ரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து வரும் உ என்கிற எழுத்து
வ: வா அசி = அச் தொடர்ந்து இருக்கையில் வ் ஆகலாம் (விகல்பத்துடன்)

மய் ப்ரத்யாஹார எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் உ என்கிற எழுத்து அச் (உயிர் எழுத்துக்கள்) தொடர்ந்து இருக்கையில் வ் அல்லது வ ஆகலாம். உதாரணம்: கிமு + உக்தம் = கிம்வுக்தம்


५९ इकोऽसवर्णे शाकल्यस्य ह्रस्वश्च | ६ । १ । १२७ ||

पदान्ता इको ह्रस्वा वा स्युरसवर्णेऽचि । ह्रस्वविधिसामर्थ्यान्न स्वरसन्धि । चक्रि अत्र, चक्रय्त्र । पदान्ता इति किम्‌ ? गौर्यौ

59 இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச | 6 | 1 | 127 ||

பதா³ந்தா இகோ ஹ்ரஸ்வா வா ஸ்யுரஸவர்ணே(அ)சி | ஹ்ரஸ்வவிதி⁴ஸாமர்த்²யான்ன ஸ்வரஸந்தி⁴ | சக்ரி அத்ர, சக்ரய்த்ர | பதா³ந்தா இதி கிம்‌ ? கௌ³ர்யௌ

பதா³ந்தா இக: = இக் ப்ரத்யாஹார எழுத்தை பதத்தின் முடிவாகக் கொண்டு
ஹ்ரஸ்வா வா ஸ்யு = ஹ்ரஸ்வம் ஆகலாம் (விகல்பத்துடன்)
அஸவர்ணே அசி பரே= ஸவர்ணம் அல்லாத வேறொரு உயிர் எழுத்து தொடர்ந்து இருக்கையில்

இது ஸாகல்யரின் கருத்து. இக் ப்ரத்யாஹார எழுத்தை பதத்தின் முடிவாகக் கொண்டு உள்ள சொல்லைத் தொடர்ந்து அந்த எழுத்துக்கு ஸவர்ணம் அல்லாத வேறொரு உயிர் எழுத்து தொடர்ந்து இருக்கையில் அந்த இக் ப்ரத்யாஹார எழுத்து ஹ்ரஸ்வம் ஆகலாம்.

உதாரணம்:

சக்ரீ + அத்ர = சக்ரி அத்ர (चक्री + अत्र = चक्रि अत्र )

ஹ்ரஸ்வவிதி⁴ஸாமர்த்²யான்ன ஸ்வரஸந்தி⁴ = இதன் பிறகும் சந்தி எதுவும் நிகழக் கூடாது.

பதா³ந்தா இதி கிம்‌ ? = பதத்தின் முடிவில் என்று சொல்வது ஏன்? பதமாக (ஸுப், திங் ஆகியவையே பதங்கள் – அதாவது வினைச்சொல் அல்லது வேற்றுமை உறுபுடன் சேர்ந்த பெயர்ச்சொல்) இல்லாத சொற்களுக்கு இந்த விதி பொருந்தாது.

உதாரணம்:
கௌ³ரீ + ஔ = கௌ³ர் + ஈ + ஔ = கௌ³ர் + ய் + ஓ = கௌ³ர்யௌ
गौरी + औ = गौर् + ई + औ = गौर् + य् + ओ = गौर्यौ

கௌரீ என்பது ஔ என்கிற எழுத்துடன் (வேற்றுமை) சேர்ந்து இருமை (இரு கௌரிகள்) ஆகும் நிலையில் அது பதமாக இல்லாத காரணத்தால் இந்த சூத்திரம் பொருந்துவதில்லை.

वा॰ न समासे

வா॰ ந ஸமாஸே

அஸவர்ண அச் (உயிர்) எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில், ஸமாஸத்தில் இருக்கும் சொல்லின் இறுதியில் இருக்கும் இக் எழுத்துக்களுக்கு ஹர்ஸ்வ அல்லது ப்ரக்ருதிபாவமோ ஏற்படாது.

உதாரணம்:

वापी + अश्व: = वाप्यश्व:

வாபீ + அஶ்வ: = வாப்யஶ்வ: (கிணற்றில் இருக்கும் குதிரை)

இதில் ஸமாஸத்தில் இருப்பதால் இந்த விதி பொருந்தாது. ஆகவே இகோ யணசி சூத்திரம் பிரயோகிக்கப் பட்டு வாப்யஶ்வ: என்று ஆகி விட்டது.


६० अचो रहाभ्यां द्वे | ८ । ४ । ४६ ||

अच पराभ्यां रेफहकाराभ्यां परस्य यरो द्वे वा स्त । गौर्य्यौ । (न समासे) । वाप्यश्व ।।

60 அசோ ரஹாப்⁴யாம்ʼ த்³வே | 8 | 4 | 46 ||

அச பராப்⁴யாம்ʼ ரேப²ஹகாராப்⁴யாம்ʼ பரஸ்ய யரோ த்³வே வா ஸ்த | கௌ³ர்ய்யௌ | (ந ஸமாஸே) | வாப்யஶ்வ ||

அச: பராப்⁴யாம்ʼ = அச் எழுத்தைத் தொடர்ந்து
ரேப²ஹகாராப்⁴யாம்ʼ = ரேப²ம் மற்றும் ஹ-காரம் ஆகிய எழுத்துக்கள்
பரஸ்ய யர: = யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில்
த்³வே வா ஸ்த: = இரட்டிப்பு ஆகலாம்

ஹ-வைத் தவிர்த்த மற்ற எல்லா மெய் எழுத்துக்களும் (யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள்), ஓர் உயிரெழுத்துக்குப் பின் நிற்கும் ர மற்றும் ஹ எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போது இரட்டிப்பு ஆகலாம்.
கௌ³ரீ + ஔ = கௌ³ர் + ஈ + ஔ = கௌ³ர் + ய் + ஓ = கௌ³ர்யௌ / கௌ³ர்ய்யௌ
गौरी + औ = गौर् + ई + औ = गौर् + य् + ओ = गौर्यौ / गौर्य्यौ


६१ ऋत्यक: | ६ । १ । १२८ ||

ऋति परे पदान्ता अक: प्राग्वद्वा । ब्रह्म ऋषि । ब्रह्मर्षि । पदान्ता किम्‌ ? आर्च्र्छत्‌ ।।.

61 ருʼத்யக: | 6 | 1 | 128 ||

ருʼதி பரே பதா³ந்தா அக: ப்ராக்³வத்³வா | ப்³ரஹ்ம ருʼஷி | ப்³ரஹ்மர்ஷி: | பதா³ந்தா கிம்‌ ? ஆர்ச்ச²த்‌ ||

ருʼதி பரே = ஹ்ரஸ்வ ரு’ காரத்தை தொடர்ந்திருக்கையில்
பதா³ந்தா அக: = பதாந்தத்தில் உள்ள அக் ப்ரத்யஹார எழுத்து ஆதேசம் ஆகலாம்
ப்ராக்³வத்³வா = முன்பு சொல்லப் பட்டது போல

“அக்- ப்ரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து (அ, இ, உ, ரு’, ல்ரு) ரு-காரம் இருக்கையில்” என்பது மட்டுமே ருʼத்யக: என்று சூத்திரத்தில் காணப்படுகிறது. வ்ருத்தியில் காணப்படும் சொற்கள் வேறு சூத்திரங்களில் இருந்து அனுவ்ருத்தி ஆனவை. ஏங: பதா³ந்தாத³தி (43) என்ற சூத்திரத்தில் இருந்து “பதாந்த” என்ற சொல் அனுவ்ருத்தி ஆகி இருக்கிறது. இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) என்ற சூத்திரத்தில் இருந்து “ஶாகல்யஸ்ய” “ஹ்ரஸ்வ” ஆகிய சொற்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். “முன்பு சொன்னது போல” என்பது இதற்கு முன்பு பார்த்த “இகோ(அ)ஸவர்ணே…” (59) சூத்திரத்தையே குறிக்கும்.

இவ்வாறு இந்த சூத்திரத்தின் அர்த்தம்: ஹ்ரஸ்வ ரு’கார எழுத்து, அக்-ப்ரத்யாஹார எழுத்தை இறுதியாகக் கொண்ட பதத்தினைத் தொடர்ந்து இருக்கையில், அந்த அக்-ப்ரத்யாஹார எழுத்துக்கு பதிலாக அதே அக்-ப்ரத்யாஹாரத்தைச் சேர்ந்த ஹ்ரஸ்வ எழுத்து அமையும்.

உதாரணம்:
ப்³ரஹ்மா ருʼஷி (ब्रह्मा ऋषि:) = ப்³ரஹ்ம ருʼஷி(ब्रह्म ऋषि:)

மேலே “இகோ(அ)ஸவர்ணே…” சூத்திரத்திலே குறிப்பிட்டது போல (ஹ்ரஸ்வவிதி⁴ ஸாமர்த்²யாந்ந ஸ்வரஸந்தி⁴) இதற்கு மேல் சந்தி எதுவும் நிகழாது. ப்ரக்ருதி பா⁴வமே நிலவும். இவ்வாறு இந்த சூத்திரம் ப்ரயோகப் படுத்தப் படவில்லை எனில் என்ன ஆகும்? ஆத் கு³ண: சூத்திரப்படி கு³ண அக்ஷரம் ஆதேசம் ஆகவேண்டும். ஆகவே அ-காரத்தைத் தொடர்ந்து ரு’காரம் வருகையில் உரண் ரபர: சூத்திரம் பிரயோகம் செய்யத் தகுந்ததாக ஆகிறது. ரு-காரம் “அர்” ஆகி, அது ஆதேசம் ஆவதால் ப்³ரஹ்மர்ஷி: என்று ஆகிறது.

இந்த சூத்திரம் பதாந்தத்தில் உள்ள அக்-ப்ரத்யாஹார எழுத்தின் மீதே செயல்படும் என்பதை பதா³ந்தா கிம்‌? என்று கேட்டு பத³க்ருத்யம் செய்கிறார் ஆசிரியர். அதற்கு உதாரணமாக ஆர்ச்ச²த் என்ற சொல் தரப்பட்டுள்ளது. இது ருச்² (ऋछ्) தா⁴துவின் இறந்தகால படர்கைச் சொல்.

ஆ + ருச்ச²த் = என்று வரும் போது இங்கே ஆகாரம் பதா³ந்தத்தில் இல்லை. அதாவது சொல்லின் இறுதியில் இல்லை. நடுவில் இருப்பதால் இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகாது. அதற்கு பதிலாக ஆத் கு³ண: மற்றும் உரண் ரபர: சூத்திரப்படி ஆ + ருச்ச²த் => ஆர் + ச்ச²த் = ஆர்ச்ச²த் என்று ஆகி விடும்.
ப்ரகிருதி பா⁴வ சந்தி⁴க்குரிய சூத்திரம் இது. இந்த சூத்திரத்துக்கான அவசியம் என்ன என்று பார்த்தால், ஏற்கனவே இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) சூத்திரம் அஸவர்ண எழுத்துக்களுக்கிடையே ஏற்படும் ஸந்தி⁴ குறித்து மட்டுமே விதிக்கப் பட்டுள்ளது. இரு ரு’காரங்கள் (ஸவர்ண எழுத்துக்களுக்குள்) ஸந்தி⁴ செய்ய வேண்டி வரும்போது இந்த சூத்திரம் பயன்படுகிறது. உதாரணமாக ஹோத்ரு’ ரு’கார: என்னும் இடத்தில் ப்ரக்ருதி பா⁴வம் ஏற்படுவதை இந்த சூத்திரம் மூலமாகவே விளக்க முடியும். அதோடு இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) சூத்திரம் ஸமாசத்தில் ப்ரயோகம் ஆகாது என்று நிஷேதம் செய்யப் பட்டது இந்த சூத்திரத்துக்கு பொருந்தாது. ஸப்த + ருஷீணாம் என்ற ஸமாஸத்தில் இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகும் போது ஸப்தருஷீணாம் என்று ப்ரக்ருதி பா⁴வம் ஏற்படுகிறது. இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகாவிட்டால் ஸப்தர்ஷீணாம் என்று உரண் ரபர: சூத்திரத்தின் படி கு³ண சந்தி ஆகும்.


इति अच्संधिप्रकरणम्

2 Comments அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3

  1. Pingback: விளிகள் – ஸம்போதநம் | சங்கதம்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)